ஆடி ஏ8 மாடலுக்கு இணையாக உருவாகிய மஹிந்திரா மராஸ்ஸோ... சிறப்பு தகவலை வெளியிட்ட திலிப் சாப்ரியா...!

1.5 கோடி ரூபாய் விலையில் விற்கப்பட்டு வரும் ஆடி ஏ8 மாடல் காருக்கு இணையாக உருவாகிய மஹிந்திரா நிறுவனத்தின் மராஸ்ஸோ காரை மாடிஃபை செய்தது குறித்த சிறப்பு தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

ரூ. 1.5 கோடி விலையுள்ள ஆடி ஏ8 மாடலுக்கு இணையாக உருவாகிய மஹிந்திரா மராஸ்ஸோ... சிறப்பு தகவலை வெளியிட்ட திலிப் சாப்ரியா...!

மஹிந்திரா நிறுவனம், மாராஸ்ஸோ எனப்படும் எம்பிவி ரக காரை இந்தியா உள்பட சில நாடுகளில் விற்பனைச் செய்து வருகின்றது. கணிசமான விற்பனை வளர்ச்சியைப் பெற்று வரும் இந்த காரை, கடந்த ஆண்டுதான் மஹிந்திரா நிறுவனம் அறிமுகம் செய்திருந்தது.

ரூ. 1.5 கோடி விலையுள்ள ஆடி ஏ8 மாடலுக்கு இணையாக உருவாகிய மஹிந்திரா மராஸ்ஸோ... சிறப்பு தகவலை வெளியிட்ட திலிப் சாப்ரியா...!

ஒவ்வொரு மாதமும், இந்த மராஸ்ஸோவின் விற்பனை சொற்ப அளவில் கூடிக் கொண்டே வருவதாக தகவல் தெரிவிக்கின்றன. இது மாருதி சுஸுகி நிறுவனத்தின் எர்டிகா காருக்கு போட்டியாக இந்தியச் சந்தையில் களமிறக்கப்பட்ட மாடலாகும்.

ரூ. 1.5 கோடி விலையுள்ள ஆடி ஏ8 மாடலுக்கு இணையாக உருவாகிய மஹிந்திரா மராஸ்ஸோ... சிறப்பு தகவலை வெளியிட்ட திலிப் சாப்ரியா...!

மஹிந்திரா மராஸ்ஸோவின் அறிமுகத்தின்போது, பிரபல டிசி எனப்படும், கார் மாடிஃபிகேஷன் நிறுவனம், இந்த மாடலை பயங்கரமான மாடிஃபிகேஷன் உட்படுத்தியிருந்தது. அவ்வாறு, அந்த காரை, ரூ. 1.5 கோடி விலையில் விற்பனைச் செய்யப்பட்டு வரும் ஆடி நிறுவனத்தின் ஏ8 காருக்கு இணையாக, டிசி நிறுவனம் தயார் செய்திருந்தது. மேலும், இந்த காரை மராஸ்ஸோ அறிமுகத்தின்போது, காட்சிப்படுத்தவும் அங்கு வைக்கப்பட்டது.

ரூ. 1.5 கோடி விலையுள்ள ஆடி ஏ8 மாடலுக்கு இணையாக உருவாகிய மஹிந்திரா மராஸ்ஸோ... சிறப்பு தகவலை வெளியிட்ட திலிப் சாப்ரியா...!

இந்நிலையில், இந்த மாடிஃபை செய்யப்பட்ட மராஸ்ஸோ கார் குறித்த சிறப்பு தகவலை, டிசி நிறுவனத்தின் தலைவர் திலிப் சாப்ரியா வீடியோவாக வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது, மராஸ்ஸோ காரின் அறிமுகத்திற்கு முன்னர், தானே முன் சென்று, அந்த காரை மாடிஃபை செய்ய விருப்பம் தெரிவித்ததாகவும், அந்த கார் பார்ப்பதற்கு நல்ல தோற்றத்தைக் கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த வீடியோவைக் கீழே காணலாம்.

அதேபோன்று, 20 முதல் 25 லட்சம் வரை மட்டுமே செலவு செய்து, அந்த காரை 4-5 கோடி ரூபாய் விலையில் விற்பனைச் செய்யப்பட்டு வரும் சொகுசு கார்களுக்கு இணையாக தயார் செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில், காரின் உட்பகுதியில் சிற்பத்தைச் செதுக்குவதைப் போன்று, ஒவ்வொரு பகுதியையும் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

ரூ. 1.5 கோடி விலையுள்ள ஆடி ஏ8 மாடலுக்கு இணையாக உருவாகிய மஹிந்திரா மராஸ்ஸோ... சிறப்பு தகவலை வெளியிட்ட திலிப் சாப்ரியா...!

அவ்வாறு, காருக்கு லெதர், குரோம் மற்றும் மரத்தினாலான பினிஷிங் வழங்கப்பட்டுள்ளது. இந்த மூன்று பொருட்களால், மஹிந்திரா மராஸ்ஸோவின் தோற்றம் மிக சொகுசான கார்களைக் கூட எளிதில் தோற்றடிக்கும் வகையில் அமைந்துள்ளது. அதேசமயம், இந்த காரின் உட்பகுதியை மாடிஃபை செய்ய மட்டுமே ஐந்து வாரங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டதாக அவர் திலிப் சாப்ரியா தெரிவித்துள்ளார்.

ரூ. 1.5 கோடி விலையுள்ள ஆடி ஏ8 மாடலுக்கு இணையாக உருவாகிய மஹிந்திரா மராஸ்ஸோ... சிறப்பு தகவலை வெளியிட்ட திலிப் சாப்ரியா...!

மேலும், அந்த பணியில் 25 பேர் கொண்ட குழு, தினமும் 12 மணி நேரங்கள் செலவு செய்து இதனைப் பூர்த்தி செய்துள்ளனர். இதனால், மஹிந்திரா மராஸ்ஸோ கார், மிக அதிக சொகுசு வசதிகளைக் கொண்டதாக இருக்கும் ஹை-என்ட் கார்களின் சிறப்பம்சத்தை இந்த கார் பெற்றுள்ளது. அவ்வாறு, காரின் இருக்கைகளை எலக்ட்ரானிக் மூலம் அட்ஜெஸ்ட் செய்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ரூ. 1.5 கோடி விலையுள்ள ஆடி ஏ8 மாடலுக்கு இணையாக உருவாகிய மஹிந்திரா மராஸ்ஸோ... சிறப்பு தகவலை வெளியிட்ட திலிப் சாப்ரியா...!

மேலும், இந்த இருக்கையை சாய்த்துக்கொண்டு, கால்களுக்கு நல்ல ரெஸ்ட்டினை வழங்கும் வகையில் ஃபுட் ரெஸ்டுகள் இருக்கையின் கீழ் வழங்கப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து, 7 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஃபிரிட்ஜ், டச் ஸ்கிரீன் திறை வசதி கொண்ட ஆன்ட்ராய்டு டிவி, ஐபாட்/ஐபேட் உள்ளிட்டவையும் வழங்கப்பட்டுள்ளன.

ரூ. 1.5 கோடி விலையுள்ள ஆடி ஏ8 மாடலுக்கு இணையாக உருவாகிய மஹிந்திரா மராஸ்ஸோ... சிறப்பு தகவலை வெளியிட்ட திலிப் சாப்ரியா...!

இத்துடன், மடித்து வைத்துக்கொள்ளும் வகையிலான நெக் அணை இருக்கைகளில் பொருத்தப்பட்டுள்ளன. இது, நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு, சொகுசான பயண அனுபவத்தை வழங்கும்.

ரூ. 1.5 கோடி விலையுள்ள ஆடி ஏ8 மாடலுக்கு இணையாக உருவாகிய மஹிந்திரா மராஸ்ஸோ... சிறப்பு தகவலை வெளியிட்ட திலிப் சாப்ரியா...!

தொடர்ந்து, பயணிகள் தங்களின் செல்போனை சார்ஜ் செய்துகொள்ள ஏதுவாக, 12வோல்ட் திறன்கொண்ட சார்ஜிங் போர்ட்டும் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, மஹிந்திரா மராஸ்ஸோ காரை மாடிஃபை செய்வதற்கான செலவு குறித்த தகவலை, இரு நிறுவனங்களும் வெளியிடவில்லை.

ரூ. 1.5 கோடி விலையுள்ள ஆடி ஏ8 மாடலுக்கு இணையாக உருவாகிய மஹிந்திரா மராஸ்ஸோ... சிறப்பு தகவலை வெளியிட்ட திலிப் சாப்ரியா...!

இருப்பினும், மராஸ்ஸோ காரில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் மாடிஃபிகேஷன்களை வைத்து பார்க்கையில் குறைந்தது, ரூ. 20 லட்சம் முதல் 25 லட்சம் வரை செலவு செய்யப்பட்டிருக்கலாம் என தெரியவருகின்றது.

ரூ. 1.5 கோடி விலையுள்ள ஆடி ஏ8 மாடலுக்கு இணையாக உருவாகிய மஹிந்திரா மராஸ்ஸோ... சிறப்பு தகவலை வெளியிட்ட திலிப் சாப்ரியா...!

மஹிந்திரா நிறுவனம், இந்த காரை ரூ. 9.99 லட்ச ரூபாய் எக்ஸ் ஷோரூம் விலையில் விற்பனைச் செய்து வருகின்றது. இந்த கார் டீசல் எஞ்ஜின் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கின்றது. அதேசமயம், வாடிக்கையாளர்கள் மத்தியில் ஏற்பட்டு வரும் ஆவலைத் தொடர்ந்து, 2019ம் ஆண்டின் இறுதிக்குள் மஹிந்திரா மராஸ்ஸோ மாடலில் பெட்ரோல் வேரியண்ட் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ. 1.5 கோடி விலையுள்ள ஆடி ஏ8 மாடலுக்கு இணையாக உருவாகிய மஹிந்திரா மராஸ்ஸோ... சிறப்பு தகவலை வெளியிட்ட திலிப் சாப்ரியா...!

இதற்கான 1.2 லிட்டர் முதல் 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்ஜின்கள் தயார் செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அதே சமயம், ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் 1.2 லிட்டர் டி-ஜிடிஐ எஞ்ஜினையும் இந்த கார் பயன்படுத்தலாம் என கூறப்படுகிறது. இந்த எஞ்ஜின்தான் எக்ஸ்யூவி300 மாடலில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

ரூ. 1.5 கோடி விலையுள்ள ஆடி ஏ8 மாடலுக்கு இணையாக உருவாகிய மஹிந்திரா மராஸ்ஸோ... சிறப்பு தகவலை வெளியிட்ட திலிப் சாப்ரியா...!

தற்போது விற்பனையில் இருக்கும் மஹிந்திரா மராஸ்ஸோ காரில், 1.5 லிட்டர் டீசல் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 120 பிஎச்பி பவரையும், 300 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இத்துடன் இந்த காரில், 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
English summary
DC Modified Mahindra Marazzo: Dilip Chhabria Video. Read In Tamil.
Story first published: Monday, June 17, 2019, 15:54 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X