உக்ரைனை உதறி தள்ளிவிட்டு சீனா பக்கம் சாயும் ரயில்வே; மோடி சொன்ன அந்த ஒரு வார்த்தைக்கு தான் இதெல்லாம் நடக்குது

ரஷ்யா உக்ரைன் போரால் சென்னையில் தயாராகும் ரயில்களுக்கான வீல்கள் கிடைக்கவில்லை. இதனால் வந்தே பாரத் ரயில்கள் தயாராவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இது குறித்த முழு தகவல்களைக் காணலாம் வாருங்கள்

உக்ரைனை உதறி தள்ளிவிட்டு சீனா பக்கம் சாயும் ரயில்வே ; மோடி சொன்ன அந்த ஒரு வார்த்தைக்கு தான் இதெல்லாம் நடக்குது

இந்தியாவிலேயே சென்னை பெரம்பலூரில்தான் ரயில்களுக்கான கோச்களை செய்யும் தொழிற்சாலை இருக்கிறது ஐசிஎஃப் அழைக்கப்படும் இந்த தொழிற்சாலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 18 மாதங்களில் தயார் செய்யப்பட்ட ரயில் 18 என்ற வகை ரயில்கள் தயார் செய்யப்படுகிறது.

உக்ரைனை உதறி தள்ளிவிட்டு சீனா பக்கம் சாயும் ரயில்வே ; மோடி சொன்ன அந்த ஒரு வார்த்தைக்கு தான் இதெல்லாம் நடக்குது

இந்த ரயில் மற்ற ரயில்களை விட வித்தியாசமானதாகவும், வெளிநாடுகளில் ஓடும் ரயில்களைப் போலவும் டிசைன் செய்யப்பட்டுள்ளது. இந்த ரயிலின் செயல்திறனும் மற்ற ரயில்களைக் காட்டிலும் மிக அதிகமாக இருக்கிறது. இந்த ரயில் மணிக்கு 180 கி.மீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. தற்போது இந்தியாவில் உள்ள தண்டவாளங்களின் கட்டுமானங்களால் ரயில்கள் அதிகபட்சமாக 160 கி.மீ வேகத்தில் மட்டுமே செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

உக்ரைனை உதறி தள்ளிவிட்டு சீனா பக்கம் சாயும் ரயில்வே ; மோடி சொன்ன அந்த ஒரு வார்த்தைக்கு தான் இதெல்லாம் நடக்குது

ரயில் 18 என்ற இந்த ரயில் இந்திய ரயில்வேயில் வந்தே பாரத் ரயில் என அழைக்கப்படுகிறது. முழுவதும் இந்தியாவிலேயே இந்த ரயில் தயார் செய்யப்படுகிறது. இந்த ரயிலுக்காகக் கிடைக்காத சில பாகங்களை மட்டும் வெளி நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இந்நிலையில் கடந்த 75வது சுதந்திர தினத்தில் பிரதமர் மோடி வந்தே பாரத் ரயில்கள் 75 நகரங்களில் இயங்கும் திட்டத்தைத் துவக்கி வைத்தார்.

உக்ரைனை உதறி தள்ளிவிட்டு சீனா பக்கம் சாயும் ரயில்வே ; மோடி சொன்ன அந்த ஒரு வார்த்தைக்கு தான் இதெல்லாம் நடக்குது

இந்த திட்டத்திற்காக 75 ரயில்களைத் தயாரிக்கும் பணி ஐசிஎஃப்-ல் துரிதமாக நடந்து வருகிறது. இந்நிலையில் தற்போது ரஷ்யா- உக்ரைன் இடையே நடந்துவரும் போர் இந்த ரயில் தயாரிப்பைப் பெரிய அளவில் பாதித்துள்ளது. தற்போது இந்த ரயிலுக்கான வீல்களை இந்தியாவில் தயாரிக்க வசதிகள் இல்லை. இவை உக்ரைன் நாட்டிலிருந்துதான் இறக்குமதி செய்யப்படுகின்றன.

உக்ரைனை உதறி தள்ளிவிட்டு சீனா பக்கம் சாயும் ரயில்வே ; மோடி சொன்ன அந்த ஒரு வார்த்தைக்கு தான் இதெல்லாம் நடக்குது

இப்படியாக இறக்குமதியாகும் ரயில்களின் வீல்களே இந்த ரயில்களில் பொருத்தப்பட்டு வந்தன. தற்போது போர் காரணமாக உக்ரைன் நாட்டிலிருந்து வீல்கள் இறக்குமதி செய்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த ரயில்களைத் தயாரிப்பதில் பிரச்சனை நிலவுகிறது. இந்த ரயில் இந்தியாவிலேயே தயார் செய்யப்படுவதால் மிகக் குறைவான விலையில் இந்த ரயிலைத் தயாரிக்க முடிகிறது.

உக்ரைனை உதறி தள்ளிவிட்டு சீனா பக்கம் சாயும் ரயில்வே ; மோடி சொன்ன அந்த ஒரு வார்த்தைக்கு தான் இதெல்லாம் நடக்குது

மத்திய அரசுத் திட்டத்தின்படி இந்த தொழிற்சாலையில் முதன்முதலில் இந்த ரயில்கள் இந்திய ரயில்வேவுக்காகத் தயாரிக்கப்படும். இங்குத் தேவைகள் தீர்ந்த பின்னர் இது வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் கவனம் செலுத்தப்படும் எனக் கூறியிருந்தது. தற்போது 75 ரயில்கள் தயாரிக்க முடியாமல் தாமதம் ஏற்பட்டுள்ளது.

உக்ரைனை உதறி தள்ளிவிட்டு சீனா பக்கம் சாயும் ரயில்வே ; மோடி சொன்ன அந்த ஒரு வார்த்தைக்கு தான் இதெல்லாம் நடக்குது

இந்நிலையில் இந்த பிரச்சனையைச் சமாளிக்க உக்ரைன் நிறுவனத்திடம் நடத்தி பேச்சு வார்த்தையில் அவர்களிடம் இரண்டு ரயில்களுக்கான வீல்கள் மட்டுமே தயாராக இருப்பதாகக் கூறினர். அவர்கள் அதில் ஒரு ரயிலுக்கான விலை ஏற்றுமதி செய்துவிட்ட நிலையில் இரண்டாம் ரயிலுக்கான வீலை ஏற்றுமதி செய்துள்ளனர்.இந்த இரண்டு வீல்களுடன் அந்த நிறுவனத்திற்கான ஒப்பந்தத்தைத் தற்காலிகமாக நிறுத்திவிட்டு தற்போது சீனாவிடமிருந்து இறக்குமதி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

உக்ரைனை உதறி தள்ளிவிட்டு சீனா பக்கம் சாயும் ரயில்வே ; மோடி சொன்ன அந்த ஒரு வார்த்தைக்கு தான் இதெல்லாம் நடக்குது

மேலும் இந்த வீல்களை இந்தியாவிலேயே தயாரிக்கும் யோசனையையும் உருவாக்கியுள்ளது. இதற்காக இரும்பு உருக்காலைகளை ஐசிஎஃப் தொடர்பு கொண்டு வருகிறது. அந்நிறுவனம் கேட்கும் முறையில் வீல்களை இந்தியாவிலேயே தயார் செய்ய முடிந்தால் அந்த வீல்கள் இந்தியாவிலேயே தொடர்ந்து தயார் செய்யப்படும். இதனால் வெளிநாடுகளிலிருந்து இந்த வீல்களை இறக்குமதி செய்யும் செலவும் குறையும் மேலும் குறைந்த விலையில் இந்த ரயில் உற்பத்தியாகும் என எதிர்பார்க்கலாம்.

உக்ரைனை உதறி தள்ளிவிட்டு சீனா பக்கம் சாயும் ரயில்வே ; மோடி சொன்ன அந்த ஒரு வார்த்தைக்கு தான் இதெல்லாம் நடக்குது

இதற்கிடையில் கடந்த பிப்ரவரி மாதம் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2022-23ம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் அடுத்த 3 ஆண்டுகளில் இந்தியாவில் 400 வந்தே பாரத் ரயில்கள் தயார் செய்யப்படும் என குறிப்பிட்டிருந்தார். இந்த இலக்கையும் இந்தியாவில் இந்த ரயில்களுக்கான வீல்களை தயார் செய்வது மூலமே சாதிக்க முடியும். இந்த பிரச்சனை சரியாகவிட்டால் விரைவில் இந்தியா முழுவதும் வந்தேபாரத் ரயில்களை நம்மால் காண முடியும்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Delay in manufacturing of vande baharat trains because of russia ukraine war
Story first published: Saturday, May 28, 2022, 15:31 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X