20 வயசுதான் ஆகுது... போலீஸ் யூனிஃபார்மில் இளம்பெண் செய்த காரியம்... என்னனு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க

20 வயது மட்டுமே ஆன இளம்பெண் ஒருவர், காவல் துறையினரின் சீருடையில் செய்த காரியம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

20 வயசுதான் ஆகுது... போலீஸ் யூனிஃபார்மில் இளம்பெண் செய்த காரியம்... என்னனு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க

இந்தியாவில் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனவே அன்றைய தினத்தில் இருந்து வாகனங்களை இயக்குவதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. விதிமுறைகளை மீறி தேவையில்லாமல் இயக்கப்பட்ட வாகனங்களை காவல் துறையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர். அத்துடன் வாகன உரிமையாளர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.

20 வயசுதான் ஆகுது... போலீஸ் யூனிஃபார்மில் இளம்பெண் செய்த காரியம்... என்னனு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க

இந்த வகையில், ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாக தமிழகம் முழுவதும், கடந்த 140 நாட்களில் (மார்ச் 24 - ஆகஸ்ட் 11) 6 லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்களை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். அத்துடன் வாகன ஓட்டிகளிடம் இருந்து சுமார் 20.16 கோடி ரூபாயை காவல் துறை அபராதமாக வசூலித்துள்ளது.

20 வயசுதான் ஆகுது... போலீஸ் யூனிஃபார்மில் இளம்பெண் செய்த காரியம்... என்னனு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க

தற்போது வாகனங்களை இயக்குவதற்கான கட்டுப்பாடுகள் ஓரளவிற்கு தளர்த்தப்பட்டிருந்தாலும், முக கவசம் அணிய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் வாகனங்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே பயணிகள் பயணம் செய்ய வேண்டும் எனவும், சமூக இடைவெளி பின்பற்றப்பட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

20 வயசுதான் ஆகுது... போலீஸ் யூனிஃபார்மில் இளம்பெண் செய்த காரியம்... என்னனு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க

இந்த உத்தரவை மீறும் வாகன ஓட்டிகள் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். வாகன ஓட்டிகள் மட்டுமல்லாது, வீடுகளில் இருந்து வெளியே வரும் பொதுமக்கள் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இல்லாவிட்டால் காவல் துறையினரிடம் நீங்கள் அபராதம் கட்ட நேரிடும்.

20 வயசுதான் ஆகுது... போலீஸ் யூனிஃபார்மில் இளம்பெண் செய்த காரியம்... என்னனு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட இளம்பெண் ஒருவர் காவல் துறையினரின் சீருடையை அணிந்து வசூல் வேட்டையில் ஈடுபட்டுள்ளார். மேற்கு டெல்லியில் உள்ள திலக் நகர் பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளது. டெல்லி காவல் துறை அதிகாரிகளை போல் வேடமிட்டு வசூல் வேட்டையில் ஈடுபட்ட இளம்பெண்ணுக்கு வெறும் 20 வயது மட்டுமே ஆகிறது.

20 வயசுதான் ஆகுது... போலீஸ் யூனிஃபார்மில் இளம்பெண் செய்த காரியம்... என்னனு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க

கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக பிறப்பிக்கப்பட்ட விதிமுறைகளை மீறியவர்களுக்கு, அவர் போலியாக ரசீது கொடுத்து அபராதம் வசூல் செய்துள்ளார். அவரது பெயர் தமன்னா ஜஹான். டெல்லியின் புறநகர் பகுதியான நங்லோயில் அவர் வசித்து வருகிறார். வேலையும், வருமானமும் இல்லாமல் தவித்து கொண்டிருந்த தமன்னா ஜஹான் எளிதாக பணம் சம்பாதிப்பதற்காக இதனை செய்துள்ளார்.

20 வயசுதான் ஆகுது... போலீஸ் யூனிஃபார்மில் இளம்பெண் செய்த காரியம்... என்னனு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க

முக கவசம் அணியாதவர்கள் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாதவர்கள் ஆகியோருக்கு போலியாக ரசீது கொடுத்து அவர் அபராதம் வசூலித்துள்ளார். காவல் துறை சீருடை அணிந்திருந்ததால் பலர் உண்மை என நம்பி விட்டனர். முக கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகள் உள்ளிட்டோரிடமும் அவர் கைவரிசையை காட்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

20 வயசுதான் ஆகுது... போலீஸ் யூனிஃபார்மில் இளம்பெண் செய்த காரியம்... என்னனு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க

கடந்த புதன்கிழமையன்று இச்சம்பவம் நடந்துள்ளது. அன்றைய தினம் தலைமை காவலர் சுமர் சிங் என்பவர் அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டார். அப்போது இளம்பெண் ஒருவர் காவல் துறை சீருடையில் வாகனங்களையும், மக்களையும் நிறுத்தி அபராதம் வசூலித்து கொண்டிருப்பதை அவர் பார்த்தார். இதன் காரணமாக அவருக்கு சந்தேகம் எழுந்தது.

20 வயசுதான் ஆகுது... போலீஸ் யூனிஃபார்மில் இளம்பெண் செய்த காரியம்... என்னனு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க

எனவே மற்றொரு காவலரை தொடர்பு கொண்ட அவர், சாதாரண உடையில் வந்து இது குறித்து விசாரணை செய்யும்படி கேட்டு கொண்டார். இதன்பேரில் அந்த காவலர் முக கவசம் அணியாமல் அந்த இளம்பெண் இருந்த பகுதிக்கு சென்றார். அப்போது அவரை நிறுத்திய அந்த இளம்பெண், அபராதம் செலுத்தும்படி வலியுறுத்தியுள்ளார்.

20 வயசுதான் ஆகுது... போலீஸ் யூனிஃபார்மில் இளம்பெண் செய்த காரியம்... என்னனு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க

ஆனால் அபராதம் செலுத்துவதற்கு முன், நீங்கள் எங்கே வேலை செய்கிறீர்கள்? என அந்த இளம்பெண்ணிடம், உண்மையான காவலர் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு அந்த இளம்பெண் திலக் நகர் காவல் நிலையம் என பதில் அளித்துள்ளார். இதன்பின் அடையாள அட்டையை காட்டும்படி அந்த இளம்பெண்ணிடம், காவலர் கேட்டுள்ளார்.

20 வயசுதான் ஆகுது... போலீஸ் யூனிஃபார்மில் இளம்பெண் செய்த காரியம்... என்னனு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க

திடீரென இப்படி ஒரு கேள்வி வந்ததால், அந்த இளம்பெண் பதற்றமடைந்து விட்டார். அத்துடன் அவர் எந்தவித ஆவணங்களையும் சமர்ப்பிக்கவில்லை. எனவே இந்த சம்பவம் குறித்து திலக் நகர் காவல் நிலையத்திற்கு, உண்மையான காவலர் தகவல் தெரிவித்தார். இதன்பேரில் திலக் நகர் காவல் துறையினர் அங்கு வந்து விசாரித்தனர்.

20 வயசுதான் ஆகுது... போலீஸ் யூனிஃபார்மில் இளம்பெண் செய்த காரியம்... என்னனு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க

இதில், காவல் துறை சீருடை அணிந்து அந்த பெண் வசூல் வேட்டையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனால் அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். குடும்ப சூழல் காரணமாக இந்த காரியத்தை செய்து விட்டதாக காவல் துறையினரிடம் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

20 வயசுதான் ஆகுது... போலீஸ் யூனிஃபார்மில் இளம்பெண் செய்த காரியம்... என்னனு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க

இது தொடர்பாக காவல் துறையினர் கூறுகையில், ''ஊரடங்கு அமலுக்கு வந்தது முதல் விதிமுறைகளை மீறும் நபர்களை கண்டறிந்து காவல் துறையினர் அபராதம் வசூலித்து வருகின்றனர். எனவே காவல் துறையினர் போல் வேடமிட்டு பணம் சம்பாதிப்பதற்காக அந்த பெண் இந்த காரியத்தை செய்துள்ளார்'' என்றனர். இதுகுறித்து புதிய தலைமுறை செய்தி வெளியிட்டுள்ளது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Delhi: 20-year-old Woman Arrested For Posing As Cop, Issuing Fake Challans For Violations. Read in Tamil
Story first published: Friday, August 14, 2020, 14:05 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X