இந்தியாவிலேயே சிறந்த விமான நிலையம் எது தெரியுமா...? தரவரிசை வெளியீடு...!

உலகின் பெரும்பாலான அனைத்து நாடுகளின் விமானங்களும் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வானில் பறக்காமல் தரையில் தான் உள்ளன. இதனால் பெரியளவில் எந்த வேலையும் இல்லாமல் பொழுதை கழித்து கொண்டிருக்கும் விமான நிலைய ஊழியர்களை குஷிப்படுத்தும் விதமாக உலகின் சிறந்த டாப் 10 விமான நிலையங்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்தியாவிலேயே சிறந்த விமான நிலையம் எது தெரியுமா...? தரவரிசை வெளியீடு...!

இந்த தகவலை வழக்கம் போல் இங்கிலாந்தில் இருந்து செயல்பட்டு வரும் ஸ்கைட்ராக்ஸ் என்ற ஏர்லைன் விமான ஆய்வு மற்றும் தரவரிசை தளம் வெளியிட்டுள்ளது. இதில் முதல் இடத்தை பிடித்து உலகின் சிறந்த விமான நிலையம் என்ற பெயரை சிங்கப்பூரில் உள்ள சாங்கி ஏர்போர்ட் பெற்றுள்ளது.

இந்தியாவிலேயே சிறந்த விமான நிலையம் எது தெரியுமா...? தரவரிசை வெளியீடு...!

சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம் தொடர்ச்சியாக எட்டாவது முறையாக இந்த விருதை பெறுகிறது. இதற்கு காரணம், சாங்கி விமான நிலையம் கோல்டன் தரத்திலான பல அம்சங்களை தனக்குள் வைத்துள்ளது. அதாவது மலர்கள் மற்றும் வண்ணத்துப்பூச்சிகளை கொண்ட தோட்டங்கள் மற்றும் விமான நிலையத்தின் மேற்கூரையில் நீச்சல் குளம் போன்றவை உள்ளன.

இந்தியாவிலேயே சிறந்த விமான நிலையம் எது தெரியுமா...? தரவரிசை வெளியீடு...!

இருப்பினும் கடந்த ஆண்டில் இந்த விமான நிலையத்திற்கும் இதற்கு போட்டி விமான நிலையங்களுக்கும் இடையே மிக பெரிய அளவில் இடைவெளி இருந்தது. இந்த இடைவெளியில் ஜ்வெல் சாங்கி விமான நிலையம் திறப்பு மற்றும் கண்ணாடிகளால் வடிவமைக்கப்பட்ட காம்ப்ளக்ஸ் உள்ளிட்டவை இருந்தன.

இந்தியாவிலேயே சிறந்த விமான நிலையம் எது தெரியுமா...? தரவரிசை வெளியீடு...!

இதில் கண்ணாடி காம்ப்ளக்ஸ், வாழும் மழைக்காடுகள், உட்புறத்தில் நடப்பதற்கு ஏதுவான ட்ரைல்ஸ் மற்றும் உலகின் உயரமான உட்புற நீர்வீழ்ச்சி மற்றும் 40 மீட்டர்களில் மழை சூழல் போன்றவற்றை கொண்டிருந்தது. ஆனால் இவற்றை தற்போது பெரும்பான்மையான விமான நிலையங்களில் பார்க்க முடிகிறது.

இந்தியாவிலேயே சிறந்த விமான நிலையம் எது தெரியுமா...? தரவரிசை வெளியீடு...!

சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்திற்கு அடுத்து இரண்டாவது இடத்தில் ஜப்பான் தலைநகர் டோக்கியோ ஹனேடா விமான நிலையமும், மூன்றாம் இடத்தில் ஹமாத் சர்வதேச விமான நிலையமும் உள்ளன. ஹமாத் விமான நிலையம் குவாடாரில் அமைந்துள்ளது.

இந்தியாவிலேயே சிறந்த விமான நிலையம் எது தெரியுமா...? தரவரிசை வெளியீடு...!

இவற்றிற்கு அடுத்து நான்கில் இருந்து 9ஆம் இடம் வரை முறையே இஞ்சேன் சர்வதேச விமான நிலையம், முனிச் விமான நிலையம், ஹாங்காங் சர்வதேச விமான நிலையம், நரிடா சர்வதேச விமான நிலையம், மத்திய ஜப்பான் சர்வதேச விமான நிலையம், ஆம்ஸ்டர்டம் சச்சிபோல் விமான நிலையம் உள்ளிட்டவை உள்ளன.

இந்தியாவிலேயே சிறந்த விமான நிலையம் எது தெரியுமா...? தரவரிசை வெளியீடு...!

இந்த வரிசையில் கடைசி பத்தாவது இடத்தில் கன்சாய் சர்வதேச விமான நிலையம் உள்ளது. டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் தான் இந்தியாவின் சிறந்த விமான நிலையம் என ஸ்கைட்ராக்ஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவிலேயே சிறந்த விமான நிலையம் எது தெரியுமா...? தரவரிசை வெளியீடு...!

இந்தியா மட்டுமில்லாமல் மத்திய ஆசியாவிலேயே சிறந்த விமான நிலையம் என்றால் அது இந்திரா காந்தி விமான நிலையம் தான் எனவும் கூறியுள்ளது. டெல்லி விமான நிலையத்துடன் பெங்களூர் சர்வதேச விமான நிலையம் இந்தியா மற்றும் மத்திய ஆசியாவில் சிறந்த பிராந்திய விமான நிலையம் என்ற பெயரை பெற்றுள்ளது.

இந்தியாவிலேயே சிறந்த விமான நிலையம் எது தெரியுமா...? தரவரிசை வெளியீடு...!

முன்னதாக இந்த விழாவை கடந்த ஏப்ரல் மாத 1ஆம் தேதியில் நடத்த ஸ்கைட்ராக்ஸ் நிறுவனம் திட்டமிட்டு இருந்தது. ஆனால் கொரோனாவில் ரத்து செய்யப்பட்ட நிகழ்ச்சிகளில் ஒன்றாக இதுவும் அமைந்துவிட்டது.

Most Read Articles
மேலும்... #ஆட்டோ #auto news
English summary
Delhi Airport Ranked Best in India and Central Asia, Bengaluru Ranks High in Regional Category
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X