Just In
- 1 hr ago
மாருதி அரேனா கார்களுக்கு ஆன்லைன் மூலமாக எளிதாக கடன் பெறும் திட்டம்!
- 1 hr ago
ரொம்ப பாதுகாப்பானது... 1 கோடி ரூபாய்க்கு வால்வோ கார் வாங்கிய பிரபல டிவி நடிகை... யார்னு தெரியுமா?
- 1 hr ago
2021 சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-எஸ்125 பைக் சர்வதேச சந்தையில் அறிமுகம்!! 125சிசி பைக்கிற்கு இவ்வளவு விலையா?!
- 4 hrs ago
இந்தியாவின் மலிவான க்ரூஸர் மோட்டார்சைக்கிள், பஜாஜ் அவென்ஜெர்ஸின் விலை அதிகரிப்பு!!
Don't Miss!
- Movies
'எனக்கு கொரோனா இல்லை, இல்லவே இல்லை, அதை நம்பாதீங்க..' பிரபல நடிகை திடீர் மறுப்பு!
- News
தடுப்பூசிகள் இரண்டுமே பாதுகாப்பானவைதான்.. வதந்திகளை நம்பாதீங்க... மோடி வேண்டுகோள்!
- Sports
அவ்ளோ ஈஸியா விட்டுற மாட்டோம்.. ஆஸி.வை சுருட்டிய 2 தமிழக வீரர்கள்!
- Lifestyle
இந்தியாவில் போடப்படும் கோவிட்-19 தடுப்பூசி பற்றி ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டியவைகள்!
- Education
தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை வேண்டுமா?
- Finance
கலவரத்திற்கு முன் பிட்காயின் மூலம் பேமெண்ட்.. அமெரிக்காவில் நடந்த கொடூரம்..!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஆணுறைகளுடன் வலம் வரும் டாக்ஸி டிரைவர்கள்... நீங்கள் நினைப்பது போல் 'அதுக்கு' இல்ல... காரணமே வேற...
டாக்ஸி டிரைவர்கள் ஆணுறைகளுடன் வலம் வர தொடங்கியுள்ளனர். ஆனால் நீங்கள் நினைப்பது போல் 'அதுக்கு' கிடையாது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மத்திய அரசின் புதிய மோட்டார் வாகன சட்டம், கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல், இந்தியாவில் அமலுக்கு வந்துள்ளது. இதில், போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகைகள் மிக கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளன. எனவே ஒரு சில வாகன ஓட்டிகள் மற்றும் வாகன உரிமையாளர்களுக்கு லட்சக்கணக்கான ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த செய்திகள் நாள்தோறும் தொடர்ச்சியாக வெளியாகி கொண்டே இருப்பதால், வாகன ஓட்டிகள் கலக்கமடைந்துள்ளனர். எனவே அபராதம் செலுத்துவதில் இருந்து தப்பிக்க வேண்டும் என்பதற்காக, பலர் போக்குவரத்து விதிகளை முறையாக பின்பற்ற தொடங்கி விட்டனர். இந்த சூழலில், டெல்லியை சேர்ந்த டாக்ஸி டிரைவர்கள் மத்தியில் தற்போது ஒரு தகவல் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.

டாக்ஸிகளில் வைக்கப்பட்டிருக்கும் முதலுதவி பெட்டிகளில் ஆணுறை இருப்பது கட்டாயம் என்பதுதான் அந்த தகவல். முதலுதவி பெட்டிகளில் ஆணுறை இல்லாவிட்டால், போலீசார் அபராதம் விதிப்பார்கள் என டாக்ஸி டிரைவர்கள் வலுவாக நம்ப தொடங்கியுள்ளனர். எனவே ஏராளமான டாக்ஸிகளின் முதலுதவி பெட்டிகளில், தற்போது ஆணுறை தவறாமல் இடம்பெறுகிறது.

டாக்ஸி டிரைவர்கள் மத்தியில் இப்படி ஒரு தகவல் வேகமாக பரவ காரணம் உள்ளது. டாக்ஸியின் முதலுதவி பெட்டியில், ஆணுறை இல்லாத காரணத்திற்காக போக்குவரத்து போலீசார் தனக்கு அபராதம் விதித்தனர் என்று தர்மேந்திரா எனும் டாக்ஸி டிரைவர் தெரிவித்தார். முதலுதவி பெட்டிகளில் ஆணுறை இருப்பது கட்டாயம் என்ற தகவல் வேகமாக பரவ இது முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து மற்றொரு டாக்ஸி டிரைவரான ரமேஷ் என்பவர் கூறுகையில், ''ஆணுறைகள் இருப்பது அவசியம் என்ற தகவலை நான் கேட்டேன். எனவே குறைந்தபட்சம் ஒரு ஆணுறையையாவது வைத்து கொள்கிறேன். ஆனால் இது தொடர்பாக தற்போது வரை என்னிடம் போக்குவரத்து போலீசார் எதுவுமே கேட்டதில்லை'' என்றார்.

அவர் மேலும் கூறுகையில், எனினும் பிட்னஸ் டெஸ்ட்களின்போது, காரில் ஆணுறை இருக்கிறதா? இல்லையா என டாக்ஸி டிரைவர்கள் பெரும்பாலான சமயங்களில் கேட்கப்பட்டுள்ளனர்'' என்றார். இதுபோல் பல்வேறு தகவல்கள் உலா வந்ததால், டாக்ஸிகளின் முதலுதவி பெட்டிகளில் எப்போது ஆணுறை வைத்திருப்பதை பெரும்பாலான டாக்ஸி டிரைவர்கள் பின்பற்ற தொடங்கி விட்டனர்.

ஆனால் முதலுதவி பெட்டிகளில் ஆணுறை இல்லாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்பது வெறும் வதந்தி மட்டுமே. போலீஸ் அதிகாரிகள் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. உபேந்திராவிற்கு அபராதம் விதித்து போலீசார் ரசீது வழங்கியுள்ளனர். அதில் அபராதத்திற்கான காரணம் அதிவேகம் என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து டெல்லி போலீஸின் சிறப்பு கமிஷனர் (போக்குவரத்து) தாஜ் ஹசன் கூறுகையில், ''ஆணுறைகள் தொடர்பாக, மோட்டார் வாகன சட்டத்தில் எதுவுமே குறிப்பிடப்படவில்லை. முதலுதவி பெட்டியில் ஆணுறை வைத்திருக்காத காரணத்திற்காக, டிரைவர்களுக்கு நாங்கள் எந்தவிதமான சலானையும் வழங்கவில்லை'' என்றார்.

இதுதொடர்பாக போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ''டிரைவர்கள் தங்கள் கார்களில் ஆணுறை வைத்திருக்க வேண்டும் என மோட்டார் வாகன சட்டத்தில் எந்த விதிமுறையும் இல்லை. அதேபோல் பிட்னஸ் டெஸ்ட்களின்போது, ஆணுறை இருக்கிறதா? என டிரைவர்களிடம் விசாரணையும் நடத்தப்பட்டதில்லை'' என்றனர்.

அதேபோல் ஆணுறை வைத்திருக்காத காரணத்திற்காக அபராதம் விதிக்கப்பட்டால், அதிகாரிகளை டாக்ஸி டிரைவர்கள் அணுக வேண்டும் எனவும் போக்குவரத்து போலீசார் கூறியுள்ளனர். அதேசமயம் வாகனங்களில் ஆணுறையை வைத்திருப்பதன் மூலம் சில நன்மைகள் கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக டெல்லி சர்வோதயா டிரைவர் சங்க தலைவர் கமல்ஜீத் கில் கூறுகையில், ''பொது வாகனங்கள் அனைத்தும், அனைத்து நேரங்களிலும் குறைந்தபட்சம் 3 ஆணுறைகளையாவது எடுத்து செல்ல வேண்டும்'' என்றார். ரத்த கசிவை நிறுத்துவதற்கோ அல்லது காயத்திற்கு சிகிச்சை அளிப்பதற்கோ ஆணுறைகளை பயன்படுத்தலாம் என கமல்ஜீத் கில் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ''யாருக்கேனும் எலும்பு முறிவு ஏற்பட்டால், அவர் மருத்துவமனையை அடையும் வரை ஆணுறையால் அந்த இடத்தில் கட்ட முடியும்'' என்றார். இதனிடையே பாதுகாப்பான உடலுறவு குறித்து டிரைவர்களுக்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பில், தொடர்ச்சியாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
டாக்ஸி டிரைவர்கள் காரில் காண்டம் வைத்திருக்க இதுவும் கூட ஒரு காரணமாக இருக்கலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.