Just In
- 46 min ago
எக்ஸ்ட்ரா பம்பர் வரிசையில் அடுத்த அதிரடி! இனி இது இல்லாமல் டூவீலர் ஓட்டி பந்தா காட்ட முடியாது! என்ன தெரியுமா?
- 1 hr ago
2021 சஃபாரியின் வருகையில் எந்த தாமதமும் இல்லை!! மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தும் டாடா மோட்டார்ஸ்
- 2 hrs ago
2021 ஸ்கோடா சூப்பர்ப் செடான் கார் இந்தியாவில் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.31.99 லட்சம்
- 3 hrs ago
மீண்டும் ஒரு ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரை வாங்கிய முகேஷ் அம்பானி... எக்ஸ் ஷோரூம் விலையே இவ்வளவு கோடியா?
Don't Miss!
- News
அமெரிக்காவில் அதிர்ச்சி - மகள், மாமியரை சுட்டுக்கொன்று தற்கொலை செய்து கொண்ட இந்தியர்
- Movies
அம்மாவ பத்தி ஏன் பேசின.. நான் ஒண்ணும் ஸ்கூல் பொண்ணு கிடையாது.. பாலாஜியை வெளுத்து வாங்கிய ஷிவானி!
- Sports
அடுத்தடுத்த இடத்துல இருக்கற அணிகள் மோதும் 59வது போட்டி... வெற்றி யாருக்கு.. ரசிகர்கள் ஆர்வம்
- Finance
கலவரத்திற்கு முன் பிட்காயின் மூலம் பேமெண்ட்.. அமெரிக்காவில் நடந்த கொடூரம்..!
- Lifestyle
கோதுமை ரவை பாயாசம்
- Education
ரூ.1.13 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
திருந்த மாட்டாங்க... குடிபோதையில் எஸ்ஐ செய்த காரியம்... வீடியோ பாக்கறப்பவே ஒடம்பு நடுக்கம் எடுக்குது
போலீஸ் எஸ்ஐ ஒருவர் குடிபோதையில் செய்த காரியம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் வாகன ஓட்டிகள் பலர் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதால், மிக கொடூரமான சாலை விபத்துக்கள் அரங்கேறி வருகின்றன. அத்தகைய விபத்துக்கள் தொடர்பான வீடியோக்கள் வெளியாகி, வைரலாவதுடன், காண்பவர்களை அதிர்ச்சியிலும் ஆழ்த்துகின்றன. அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள ஒரு வீடியோ நம்மை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த வீடியோவில் கார் ஒன்று அதிவேகத்தில், தாறுமாறாக வருவதை நம்மால் காண முடிகிறது. அப்போது அவ்வழியாக வந்த ஒரு பெண் மீது அந்த கார் மோதுகிறது. இதனால் நிலைகுலைந்த அந்த பெண் கீழே விழுகிறார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், விபத்தில் சிக்கிய பெண்ணை மீட்பதற்காக ஓடி வருகின்றனர்.

அதற்கு பிறகு நடந்ததோ, அதிர்ச்சியின் உச்சம். விபத்தை ஏற்படுத்திய காரின் டிரைவர், மக்களிடம் இருந்து தப்பிப்பதற்காக கீழே விழுந்த கிடந்த பெண் மீதே மீண்டும் காரை ஏற்றினார். இதனால் அந்த பெண் சிறிது தூரம் இழுத்து செல்லப்பட்டார். இவ்வளவு களேபரங்களுக்கு பிறகுதான் அந்த கார் ஒருவழியாக நின்றது. ஆனால் அதற்குள் அந்த பெண் படுகாயம் அடைந்து விட்டார்.

எனவே பொதுமக்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். கிழக்கு டெல்லியில் இருக்கும் சில்லா கிராமத்தில், கடந்த வெள்ளிக்கிழமை மாலை (ஜூலை 3ம் தேதி) இந்த விபத்து நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்த கொடூர விபத்தில் சிக்கிய பெண் படுகாயமடைந்துள்ளார். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

இதில், மிக அதிர்ச்சிகரமான விஷயம் என்னவென்றால், இந்த விபத்திற்கு காரணமான காரை ஓட்டி வந்தது டெல்லி காவல் துறையில் பணியாற்றி வரும் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் என்பதுதான். அவர் குடிபோதையில் இருந்ததாக வெளியாகியுள்ள தகவல் அதை விட அதிர்ச்சி. இந்தியாவில் பெரும்பாலான சாலை விபத்துக்களுக்கு குடிபோதையில் வாகனங்களை ஓட்டுவதே முக்கிய காரணமாக உள்ளது.

அதை தடுக்க வேண்டிய காவல் துறையினரே, குடிபோதையில் வாகனங்களை ஓட்டி இத்தகைய கொடூரமான விபத்துக்களை ஏற்படுத்துவது நாம் கவலை கொள்ள வேண்டிய ஒரு விஷயம்தான். தற்போது அந்த எஸ்ஐ, காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், ''குற்றம் சாட்டப்பட்டவர் சப்-இன்ஸ்பெக்டர் ஆவார்.

விபத்து நடைபெற்றபோது, அவர் குடிபோதையில் இருந்துள்ளார். தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். காயமடைந்த பெண்ணுக்கு மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது'' என்றனர். தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வரும் அந்த கொடூரமான விபத்தின் வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.
குடிபோதையில் வாகனங்களை இயக்கினால் இத்தகைய விபத்துக்கள் நிகழ்வதற்கான வாய்ப்புகள் அதிகம். குடிபோதையில் இருக்கும்போது சிந்திக்கும் திறனையும், முடிவு எடுக்கும் திறனையும் இழந்து விடுவதால், இத்தகைய விபத்துக்கள் அரங்கேறி விடுகின்றன. எனவே குடிபோதையில் வாகனங்களை இயக்குவதை தவிர்ப்பது நல்லது.

குடிபோதையில் வாகனங்களை இயக்கினால், பாதிப்பு உங்களுக்கு மட்டுமல்ல. சாலையில் பயணம் செய்யும் மற்றவர்களும் சேர்ந்தே பாதிக்கப்படுவார்கள். உங்களுக்கு குடிபோதையில் வாகனம் இயக்கும் பழக்கம் இருக்கும்பட்சத்தில், இதனை மனதில் வைத்து, இன்றோடு அந்த பழக்கத்தை அடியோடு விட்டு விடுவது நல்லது.