இனி உங்களால் தப்பிக்கவே முடியாது: புதிய தொழில்நுட்பத்தை களமிறக்கிய காவல்துறை.. வச்சுட்டாங்களா ஆப்பு!

போக்குவரத்து விதிமீறல்களைக் குறைக்கும் விதமாக புதிய தொழில்நுட்பம் அடங்கிய கேமிராவைப் பயன்படுத்த இருப்பதாக தலைநகரத்தின் போக்குவரத்து போலீஸார் அறிவித்துள்ளனர். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

இனி உங்களால் தப்பிக்கவே முடியாது: புதிய தொழில்நுட்பத்தை களமிறக்கும் காவல்துறை... வச்சுட்டாங்கள அடுத்த ஆப்பு!!!

நாட்டின் பல முக்கியமான பிரச்னைகளில், தலையாய பிரச்னையாக போக்குவரத்து விதிமீறல்கள் பார்க்கப்படுகின்றன. ஆகையால், இதனை முற்றிலும் ஒழித்துகட்டும் விதமாக மத்திய அரசு, அண்மையில் புதிய (திருத்தப்பட்ட) மோட்டார் வாகன சட்டம் 2019-ஐ அறிமுகம் செய்தது.

இனி உங்களால் தப்பிக்கவே முடியாது: புதிய தொழில்நுட்பத்தை களமிறக்கும் காவல்துறை... வச்சுட்டாங்கள அடுத்த ஆப்பு!!!

இது, நாடு முழுவதும் கடந்த 1ம் தேதி அமலுக்கு கொண்டுவரப்பட்டது. இது அமலுக்கு வந்த நாள் முதல் பெரும் பரப்பையும், களோபரத்தையும் ஏற்படத்திய வண்ணம் உள்ளது. இதற்கு, புதிய மோட்டார் வாகன சட்டம் விதிக்கும் உச்சபட்ச அபராதத் தொகையே முக்கிய காரணமாக இருக்கின்றது.

இனி உங்களால் தப்பிக்கவே முடியாது: புதிய தொழில்நுட்பத்தை களமிறக்கும் காவல்துறை... வச்சுட்டாங்கள அடுத்த ஆப்பு!!!

இது, முன்னதாக போக்குவரத்து விதிமீறல்களுக்கு விதிக்கப்பட்டு வந்த, அதிகபட்ச அபராதத்தை பத்து மடங்கு உயர்த்தி வசூலிக்கும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஆகையால், இந்த திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவருவது குறித்தான பேச்சுவார்த்தையில் ஒரு மாநிலங்கள் ஈடுபட்டு வருகின்றன. அதேசமயம், டெல்லி மற்றும் ஹரியானா போன்ற ஒரு சில மாநிலங்கள் இதனை ஏற்கனவே நடைமுறைக்கு கொண்டு வந்துவிட்டன.

இனி உங்களால் தப்பிக்கவே முடியாது: புதிய தொழில்நுட்பத்தை களமிறக்கும் காவல்துறை... வச்சுட்டாங்கள அடுத்த ஆப்பு!!!

அவ்வாறு, அது நடைமுறைக்கு வந்த நாளில் இருந்து பெரும் பரபரப்பான மற்றும் சுவாரஷ்யமான தகவல்களே அந்த மாநிலங்களில் இருந்து வெளிவந்த வண்ணம் உள்ளன.

அதிலும், சமீபத்தில் விதிக்கப்பட்ட உச்சபட்ச அபராதம் குறித்த தகவல் நாடு முழுவதும் காட்டு தீயாய் பரவியது. இதற்கு, விதிமீறலில் ஈடுபட்டதாகக் கூறி லாரி ஒன்றிற்கு வழங்கப்பட்டிருந்த அதிகபட்ச அபராதமே முக்கிய காரணமாக இருக்கின்றது.

இனி உங்களால் தப்பிக்கவே முடியாது: புதிய தொழில்நுட்பத்தை களமிறக்கும் காவல்துறை... வச்சுட்டாங்கள அடுத்த ஆப்பு!!!

அந்தவகையில், உரிய ஓட்டுநர் உரிமம் இல்லாதது, பியூசி சான்று இல்லாதது, பெர்மிட் முறைகேடு, காப்பீடு இல்லாதது, மித மிஞ்சி சுமை மற்றும் சீட் பெல்ட் அணியவில்லை உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்களின் காரணமாக ரூ. 6,53,100-க்கான அபராத செல்லாண் வழங்கப்பட்டது. இதுவே இது நாடு முழுவதும் வைரலாகியதற்கு காரணம்.

இனி உங்களால் தப்பிக்கவே முடியாது: புதிய தொழில்நுட்பத்தை களமிறக்கும் காவல்துறை... வச்சுட்டாங்கள அடுத்த ஆப்பு!!!

இவ்வாறு, புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்குக் கொண்டுவரப்பட்டுள்ள மாநிலங்களில் போக்குவரத்து விதிமீறலுக்கு எதிராக போலீஸார் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், தலைநகர் புது டெல்லியிலும் விதிமீறல்களை தவிர்ப்பதற்காக சிறப்பு நடவடிக்கை ஒன்றை அம்மாநில காவல்துறை மேற்கொண்டுள்ளது.

இனி உங்களால் தப்பிக்கவே முடியாது: புதிய தொழில்நுட்பத்தை களமிறக்கும் காவல்துறை... வச்சுட்டாங்கள அடுத்த ஆப்பு!!!

அந்தவகையில், அதிகவேகமாக செல்லக்கூடிய வாகனங்களைக் கண்டறியும் தொழில்நுட்பம் கொண்ட கேமிராவை நகரின் சில முக்கிய சாலைகளில் பொருத்த டெல்லி காவல்துறை திட்டமிட்டுள்ளது.

இந்த கேமிராக்கள் அதிகவேகமாக செல்லும் வாகனங்களைக் கண்டறிவது மட்டுமின்றி அந்த வாகனத்தின் பதிவெண்ணை கண்டறிந்து, அபராத செல்லாணை அனுப்பி வைக்க உதவும்.

இனி உங்களால் தப்பிக்கவே முடியாது: புதிய தொழில்நுட்பத்தை களமிறக்கும் காவல்துறை... வச்சுட்டாங்கள அடுத்த ஆப்பு!!!

இத்தகைய திறன் கொண்ட 25 புத்தம் புதிய கேமிராக்களை நகரின் 12 முக்கிய பகுதிகளில் டெல்லி போலீஸார் கடந்த ஞாயிறன்று பொருத்தியுள்ளனர். இது அதிக வேக விதிமீறல் மட்டுமின்றி வேறு போக்குவரத்து விதிமீறல்களையும் கண்டறிய பயன்படும்.

இந்த கேமிராக்கள் தற்போது தேசிய நெடுஞ்சாலை 24ஐ சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தியிருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன.

இனி உங்களால் தப்பிக்கவே முடியாது: புதிய தொழில்நுட்பத்தை களமிறக்கும் காவல்துறை... வச்சுட்டாங்கள அடுத்த ஆப்பு!!!

இந்த பகுதி மட்டுமின்றி, நகரத்தின் முக்கிய இடங்களான ஐஎஸ்பிடி-ஐடிஓ, பூசா ரோட், தஹுலா-நரைனா, ஜேஎன்யூ பல்கலைக்கழகம், மசூத்பூர், நெல்சன் மண்டேலா சாலை, க்ராண்டி மார்க் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இனி உங்களால் தப்பிக்கவே முடியாது: புதிய தொழில்நுட்பத்தை களமிறக்கும் காவல்துறை... வச்சுட்டாங்கள அடுத்த ஆப்பு!!!

இதில், ஒரு சில பகுதிகளுக்கு மட்டும் கடந்த ஆகஸ்டு மாதத்திலேயே கேமிராக்கள் பொருத்தும் பணி தொடங்கப்பட்டுவிட்டது. ஆனால், அவை தற்போதுதான் முழுமையாக நிறைவடைந்துள்ளன.

இதுமட்டுமின்றி கூடுதலாக மேலும் சில பகுதிகளிலும் புதிதாக கேமிராக்கள் நிறுவும் பணி தொடங்கவிருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன.

இனி உங்களால் தப்பிக்கவே முடியாது: புதிய தொழில்நுட்பத்தை களமிறக்கும் காவல்துறை... வச்சுட்டாங்கள அடுத்த ஆப்பு!!!

இந்த பிரத்யேக தொழில்நுட்பம் அடங்கிய கேமிராக்கள் பொருத்தும் பணி மற்றும் இதற்கான செலவுகளை மாருதி உத்யோக் குழுமம் ஏற்றுக்கொண்டுள்ளது. இந்த செயலை இந்நிறுவனம், சிஎஸ்ஆர் எனப்படும் திட்டத்தின்கீழ் செய்து வருவது குறிப்பிடத்தகுந்தது.

இனி உங்களால் தப்பிக்கவே முடியாது: புதிய தொழில்நுட்பத்தை களமிறக்கும் காவல்துறை... வச்சுட்டாங்கள அடுத்த ஆப்பு!!!

புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்ததில் இருந்து நாட்டில் அபராத மழை பொழிந்த வண்ணம் உள்ளது. அதேசமயம், இதன் பாதிப்பாக வாகன ஓட்டிகள் தங்களது சொந்த வாகனங்களுக்கு பதிலாக பொதுவாகனங்களையே போக்குவரத்திற்காக பயன்படுத்தி வருகின்றனர். இதனால், போக்குவரத்து விதிமீறல்கள் கணிசமாக குறைந்திருப்பதாக தகவல் கூறப்படுகின்றது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Delhi police installs 25 New Speed Cameras to Catch Traffic Violators. Read In Tamil.
Story first published: Wednesday, September 18, 2019, 13:01 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X