யாரும் எதிர்பார்க்காத அதிரடி... பழைய பெட்ரோல், டீசல் கார்களுக்கு சங்கு... திடீர் உத்தரவால் ஆடிப்போன மக்கள்

பழைய பெட்ரோல், டீசல் கார்களுக்கு செக் வைக்கும் வகையில் அதிரடி உத்தரவு ஒன்று வெளியாகியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

யாரும் எதிர்பார்க்காத அதிரடி... பழைய பெட்ரோல், டீசல் கார்களுக்கு சங்கு... திடீர் உத்தரவால் ஆடிப்போன மக்கள்

டெல்லி மாநில அரசு தற்போது அதிரடியான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இதன்படி 10 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வயதுடைய டீசல் கார்கள் மற்றும் 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பெட்ரோல் கார்களை சாலையில் இயக்குபவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதமாக விதிக்கப்படும். அல்லது அவர்களுடைய கார்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ஸ்கிராப் செய்யப்படும்.

யாரும் எதிர்பார்க்காத அதிரடி... பழைய பெட்ரோல், டீசல் கார்களுக்கு சங்கு... திடீர் உத்தரவால் ஆடிப்போன மக்கள்

டெல்லி மாநில அரசின் போக்குவரத்து துறை நேற்று (ஜூன் 15) இந்த அறிவிப்பை வெளியிட்டது. ஆயுள் முடியும் நிலையில் உள்ள வாகனங்களை சாலையில் இயக்குவது கண்டறியப்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் பழைய வாகனங்களை கண்டறிவதற்காக, சிறப்பு வாகன சோதனை எதுவும் உடனடியாக மேற்கொள்ளப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாரும் எதிர்பார்க்காத அதிரடி... பழைய பெட்ரோல், டீசல் கார்களுக்கு சங்கு... திடீர் உத்தரவால் ஆடிப்போன மக்கள்

உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி டெல்லி சாலைகளில் இயக்கப்படும் பழைய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ஸ்கிராப் செய்யப்பட வேண்டும். பழைய மோட்டார் வாகனங்களை ஸ்கிராப் செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை டெல்லி போக்குவரத்து துறை கடந்த 2018ம் ஆண்டு வெளியிட்டது. அத்துடன் முதல் ஸ்கிராப்பிங் மையத்திற்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

யாரும் எதிர்பார்க்காத அதிரடி... பழைய பெட்ரோல், டீசல் கார்களுக்கு சங்கு... திடீர் உத்தரவால் ஆடிப்போன மக்கள்

ஆனால் தற்போது அங்கீகாரம் பெற்ற ஸ்கிராப்பிங் மையங்களின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது. எனினும் தற்போது வரை வெறும் 2,879 பழைய வாகனங்கள் மட்டுமே ஸ்கிராப் செய்யப்பட்டுள்ளன. இது கடந்த மே 31ம் தேதி வரையிலான அரசின் தரவுகள் மூலம் தெரியவந்த அதிகாரப்பூர்வ தகவல் என்பது குறிப்பிடத்தக்கது.

யாரும் எதிர்பார்க்காத அதிரடி... பழைய பெட்ரோல், டீசல் கார்களுக்கு சங்கு... திடீர் உத்தரவால் ஆடிப்போன மக்கள்

எனினும் தற்போது வெளியிடப்பட்டுள்ள உத்தரவின் மூலம் வரும் நாட்களில் ஸ்கிராப் செய்யப்படும் பழைய வாகனங்களின் எண்ணிக்கை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாங்கள் ஏற்கனவே கூறியபடி, உடனடியாக சிறப்பு நடவடிக்கை எடுத்து வாகனங்களை பறிமுதல் செய்ய அதிகாரிகள் திட்டமிடவில்லை. எனினும் வாகன உரிமையாளர்களுக்கு இது ஒரு எச்சரிக்கையாக அமையும்.

யாரும் எதிர்பார்க்காத அதிரடி... பழைய பெட்ரோல், டீசல் கார்களுக்கு சங்கு... திடீர் உத்தரவால் ஆடிப்போன மக்கள்

இதை தொடர்ந்து வரும் நாட்களில் நடவடிக்கை தீவிரப்படுத்தப்படலாம். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ''டெல்லியில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை 1 கோடிக்கும் அதிகமாகும். ஆனால் சாலையில் இயக்கப்படும் வாகனங்களின் எண்ணிக்கை சுமார் 70 லட்சம். இதில், 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பெட்ரோல் வாகனங்களின் எண்ணிக்கை சுமார் 35 லட்சம்.

யாரும் எதிர்பார்க்காத அதிரடி... பழைய பெட்ரோல், டீசல் கார்களுக்கு சங்கு... திடீர் உத்தரவால் ஆடிப்போன மக்கள்

அதே நேரத்தில் 10 ஆண்டுகளுக்கு மேற்பட்ட டீசல் வாகனங்களின் எண்ணிக்கை சுமார் 3 லட்சம் ஆகும்'' என்றனர். டெல்லி தேசிய தலைநகர் பிராந்தியத்தில் 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பெட்ரோல் வாகனங்கள் மற்றும் 10 ஆண்டுகளுக்கு மேற்பட்ட டீசல் வாகனங்களை இயக்குவதை உச்ச நீதிமன்றம் கடந்த 2018ம் ஆண்டு அக்டோபர் 29ம் தேதி தடை செய்தது.

யாரும் எதிர்பார்க்காத அதிரடி... பழைய பெட்ரோல், டீசல் கார்களுக்கு சங்கு... திடீர் உத்தரவால் ஆடிப்போன மக்கள்

மேலும் இத்தகைய வாகனங்களை இயக்குவது கண்டறியப்பட்டால் பறிமுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கும்படியும் போக்குவரத்து துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேற்பட்ட டீசல் வாகனங்கள் மற்றும் 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பெட்ரோல் வாகனங்களின் பட்டியலை போக்குவரத்து துறை தனது இணையதளத்தில் வெளியிட்டது.

யாரும் எதிர்பார்க்காத அதிரடி... பழைய பெட்ரோல், டீசல் கார்களுக்கு சங்கு... திடீர் உத்தரவால் ஆடிப்போன மக்கள்

அத்துடன் பழைய வாகனங்களை பறிமுதல் செய்யும் பணிகளும் தொடங்கப்பட்டன. ஆனால் தொடர்ந்து தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. எனினும் தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு பிரச்னை அதிகரித்து கொண்டே வருவதால், வரும் நாட்களில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Delhi: Rs 10,000 Fine For Old Petrol, Diesel Cars - Check All Details Here. Read in Tamil
Story first published: Wednesday, June 16, 2021, 13:11 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X