டெல்லி போலீசாருக்கு 1000 கோடியில் அதிநவீன கருவிகள்.. எதற்காக???....

டெல்லி வாகன நெரிசலை கட்டுப்படுத்தவும் மற்றும் வாகன விதிமீறல்களை கண்டறியவும் டெல்லி டிராபிக் போலீசாருக்கு 1000 கோடி ரூபாய் செலவில் அதிநவீன கருவிகளை வாங்க டெல்லி அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

டெல்லி போலீசாருக்கு 1000 கோடியில் அதிநவீன கருவிகள்.. எதற்காக???....

உலகின் மற்ற பகுதிகளை ஒப்பிடும் போது இந்தியாவில் டிராபிக் அதிகம்தான். இங்கு திறமையாக கார் ஒட்டுபவர்கள் கூட சில நேரங்களில் திணற நேரிடும். குறிப்பாக டெல்லி, பெங்களூரு, மும்பை, சென்னை, கோல்கட்டா ஆகிய நகரங்களில் கடும் வாகன நெரிசல்களுக்கு இடையே வாகனம் ஓட்டுதல் சற்று சவாலான விஷயம் தான்.

டெல்லி போலீசாருக்கு 1000 கோடியில் அதிநவீன கருவிகள்.. எதற்காக???....

டெல்லியில் வாகன எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. இதனால் அங்கு அதிக மாசு கட்டுப்பாடு நிலவிவருவதை தடுக்க டெல்லி அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் டெல்லியில் அதிக வாகன எண்ணிக்கை காரணமாக வாகன நெரிசல் கட்டுப்படுத்த முடியாக நிலையில் உள்ளது. இதனால் அதிகப்படியான சாலை விதிமீறல்களை மக்கள் மேற்கொள்கின்றனர்.

டெல்லி போலீசாருக்கு 1000 கோடியில் அதிநவீன கருவிகள்.. எதற்காக???....

செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவது, குடிபோதையில் வாகனம் ஓட்டுவது, ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களை இயக்குவது என போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதே டெல்லியில் பெரும்பாலான சாலை விபத்துக்களுக்கு மிக முக்கியமான காரணமாக உள்ளது.

MOST READ: வாடிக்கையாளர் சேவையை வேற லெவலுக்கு மாற்றிய மாருதி அரேனா கார் ஷோரூம்கள்...!!

டெல்லி போலீசாருக்கு 1000 கோடியில் அதிநவீன கருவிகள்.. எதற்காக???....

எனவே சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்பதற்காக, போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க 1000 கோடி ரூபாய் செலவில் Red Light Violation Detection Camera (RLVD), Over Speed Detection, Penalty Recovery System போன்ற அதிநவீன கருவிகளை வாங்க டெல்லி அரசு முடிவு செய்துள்ளது.

டெல்லி போலீசாருக்கு 1000 கோடியில் அதிநவீன கருவிகள்.. எதற்காக???....

Red Light Violation Detection Camera (RLVD):

இந்த கருவி சிக்னல் சிகப்பு விளக்கினை மீறி செல்பவர்களை 3டி ரேடார் மூலம் கண்டறிந்து வாகன எண்ணை போலீசாருக்கு எஸ்எம்எஸ் மூலம் தகவல் அனுப்பும் தொழில்நுட்பம் வாய்ந்தது. இதனால் சிக்னலை மீறி செல்வபவர்கள் யாரும் இனி தப்ப முடியாது. இந்த கருவியை டெல்லியில் உள்ள முக்கிய 24 டிராபிக் சிக்கனல்களில் பொறுத்தவுள்ளனர்.

டெல்லி போலீசாருக்கு 1000 கோடியில் அதிநவீன கருவிகள்.. எதற்காக???....

Over Speed Detection:

அதிவேகமாக வாகனம் ஓட்டுதல் பெரும்பாலான சாலை விபத்துகளுக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. எனவே டெல்லியில் அதிவேகமாக வாகனம் ஒட்டி வருபர்வர்களை கண்டறிய இந்த கருவி டெல்லி சாலைகளில் 100 இடங்களில் பொறுத்தப்படவுள்ளன. இந்த கருவி வாகனங்களின் வேக அளவை ரேடார் மூலம் துல்லியமாக கண்காணிக்கும் தொழில்நுட்பம் கொண்டது.

டெல்லி போலீசாருக்கு 1000 கோடியில் அதிநவீன கருவிகள்.. எதற்காக???....

Penalty Recovery System:

இந்த கருவி தேசிய தகவல் மைய்ய உதவியுடன் உருவக்கபட்டுள்ளது. இதன் மூலம் சாலை விதி மீறலில் ஈடுபட்டோர் மீது அபராதம் விதிக்கும்போது அவர்களின் ஓட்டுநர் உரிம எண் அல்லது வாகன எண்ணை வைத்து அவர்களின் முழு விவரத்தை இந்த கருவி தந்துவிடும். இதன் மூலம் அபராதம் விதிக்கப்பட்டவர் இதற்குமுன் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டுள்ளாரா என எளிதில் கண்டறியலாம்.

டெல்லி போலீசாருக்கு 1000 கோடியில் அதிநவீன கருவிகள்.. எதற்காக???....

டெல்லி வாகன நெரிசலை கட்டுப்படுத்தவும் மற்றும் வாகன விதிமீறல்களை கண்டறியவும் இந்த திட்டங்கள் சுமார் 1000 கோடி ரூபாய் செலவில் மூன்று கட்டங்களாக பிரிக்கப்பட்டு 2019ம் ஆண்டு இறுதிக்குள் நடைமுறைக்கு வரும் என டெல்லி போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Most Read Articles
English summary
Delhi Traffic Police Deploying Cutting Edge Technology- Read in Tamil
Story first published: Tuesday, January 22, 2019, 11:49 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X