எக்ஸ்ட்ரா பம்பர் வரிசையில் அடுத்த அதிரடி! இனி இது இல்லாமல் டூவீலர் ஓட்டி பந்தா காட்ட முடியாது! என்ன தெரியுமா?

2 போக்குவரத்து விதிமுறைகளை காவல் துறையினர் தற்போது தீவிரமாக அமல்படுத்த தொடங்கியுள்ளனர். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

எக்ஸ்ட்ரா பம்பர் வரிசையில் அடுத்த அதிரடி! இனி இது இல்லாமல் டூவீலர் ஓட்டி பந்தா காட்ட முடியாது! என்ன தெரியுமா?

கார்களின் பின் இருக்கையில் அமர்ந்திருக்கும்போது சீட் பெல்ட் அணியாதவர்கள் மற்றும் ரியர் வியூ மிரர்கள் இல்லாமல் இரு சக்கர வாகனங்களை இயக்குபவர்கள் மீது மேற்கு டெல்லி போக்குவரத்து காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க தொடங்கியுள்ளனர். இதற்காக அவர்கள் 10 நாள் சிறப்பு வாகன தணிக்கையை நடத்தவுள்ளனர்.

எக்ஸ்ட்ரா பம்பர் வரிசையில் அடுத்த அதிரடி! இனி இது இல்லாமல் டூவீலர் ஓட்டி பந்தா காட்ட முடியாது! என்ன தெரியுமா?

வாகனங்களை இயக்குபவர்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. கார்களின் பின் இருக்கையில் அமர்ந்திருந்தாலும் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்றும், ரியர் வியூ மிரர்களை கழற்றி வைத்து விட்டு இரு சக்கர வாகனங்களை இயக்க கூடாது என்றும் மேற்கு டெல்லி போக்குவரத்து காவல் துறையினர் கண்டிப்புடன் உத்தரவிட்டுள்ளனர்.

எக்ஸ்ட்ரா பம்பர் வரிசையில் அடுத்த அதிரடி! இனி இது இல்லாமல் டூவீலர் ஓட்டி பந்தா காட்ட முடியாது! என்ன தெரியுமா?

இந்த எச்சரிக்கையை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படவுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ''சாலை விபத்துக்கள் மற்றும் சாலை விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த நடவடிக்கையை நாங்கள் மேற்கொள்கிறோம். இதன் மூலம் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படும்.

எக்ஸ்ட்ரா பம்பர் வரிசையில் அடுத்த அதிரடி! இனி இது இல்லாமல் டூவீலர் ஓட்டி பந்தா காட்ட முடியாது! என்ன தெரியுமா?

கார்களின் பின் இருக்கையில் அமர்ந்து பயணிக்கும்போது சீட் பெல்ட் அணிய வேண்டியதில்லை என சிலர் நினைக்கின்றனர். மேலும் ரியர் வியூ மிரர்கள் இல்லாமல் இரு சக்கர வாகனங்களை இயக்குவது விதிமுறை மீறல் என்பதையும் பெரும்பாலானோர் உணர்வதில்லை. எனவே இந்த விதிமுறை மீறல்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கையை எடுக்க திட்டமிட்டுள்ளோம்'' என்றனர்.

எக்ஸ்ட்ரா பம்பர் வரிசையில் அடுத்த அதிரடி! இனி இது இல்லாமல் டூவீலர் ஓட்டி பந்தா காட்ட முடியாது! என்ன தெரியுமா?

மத்திய மோட்டார் வாகன சட்டத்தின் பிரிவு 5 மற்றும் 7-ன்படி அனைத்து வாகனங்களிலும் ரியர் வியூ மிரர்கள் கட்டாயம் இருக்க வேண்டும். ஆனால் பெரும்பாலானோர் இதனை மதிக்காமல், அழகிற்காக வாகனங்களில் இருந்து ரியர் வியூ மிரர்களை அகற்றி விடுகின்றனர். ரியர் வியூ மிரர்கள் இல்லை என்றால், இரு சக்கர வாகனங்கள் ஸ்டைலாக இருக்கும் என பலர் நினைக்கின்றனர்.

எக்ஸ்ட்ரா பம்பர் வரிசையில் அடுத்த அதிரடி! இனி இது இல்லாமல் டூவீலர் ஓட்டி பந்தா காட்ட முடியாது! என்ன தெரியுமா?

ஆனால் இப்படி நினைப்பது நல்ல விஷயம் கிடையாது. தனக்கு பின்னால் என்ன உள்ளது? என்பதை இரு சக்கர வாகன ஓட்டி அறிந்து கொள்வது மிகவும் முக்கியமானது. ரியர் வியூ மிரர்கள் இல்லாததால் சில சமயங்களில் இரு சக்கர வாகன ஓட்டிகள் பின்னால் பார்க்காமலேயே லேன் மாறுகின்றனர். இது உங்களுக்கும், உங்கள் பின்னால் வருபவர்களுக்கும் நல்லதல்ல.

எக்ஸ்ட்ரா பம்பர் வரிசையில் அடுத்த அதிரடி! இனி இது இல்லாமல் டூவீலர் ஓட்டி பந்தா காட்ட முடியாது! என்ன தெரியுமா?

பின்னால் வரும் வாகனங்களை பார்க்காமல் நீங்கள் திடீரென லேன் மாறினால், அந்த வாகனங்கள் உங்கள் மீது மோதுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதே சமயம் ரியர் வியூ மிரர் இல்லாமல் இரு சக்கர வாகனங்களை இயக்கும் இன்னும் சிலர், தலையை திருப்பி பின்னால் வாகனங்கள் எதுவும் வருகிறதா? என பார்ப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.

எக்ஸ்ட்ரா பம்பர் வரிசையில் அடுத்த அதிரடி! இனி இது இல்லாமல் டூவீலர் ஓட்டி பந்தா காட்ட முடியாது! என்ன தெரியுமா?

இதுவும் நல்ல செயல்முறை கிடையாது. ஏனெனில் நீங்கள் முன் பகுதியில் இருந்து பார்வையை எடுக்கும்போது விபத்துக்கள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் ரியர் வியூ மிரர் இருந்தால், இந்த பிரச்னைகளை எல்லாம் தவிர்த்து விடலாம். பொதுவாக மேற்கண்ட 2 விதிமுறை மீறல்களையும் காவல் துறையினர் அவ்வளவாக கண்டு கொள்வதில்லை.

எக்ஸ்ட்ரா பம்பர் வரிசையில் அடுத்த அதிரடி! இனி இது இல்லாமல் டூவீலர் ஓட்டி பந்தா காட்ட முடியாது! என்ன தெரியுமா?

ஆனால் டெல்லி போக்குவரத்து காவல் துறையினர் தற்போது அதிரடி நடவடிக்கை எடுக்க தொடங்கியுள்ளனர். இதை தொடர்ந்து இந்தியாவின் மற்ற பகுதிகளிலும், காரில் பின் இருக்கை பயணிகள் சீட் பெல்ட் அணியாமல் இருந்தாலோ அல்லது இரு சக்கர வாகனங்களில் ரியர் வியூ மிரர்கள் இல்லாமல் இருந்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படலாம்.

எக்ஸ்ட்ரா பம்பர் வரிசையில் அடுத்த அதிரடி! இனி இது இல்லாமல் டூவீலர் ஓட்டி பந்தா காட்ட முடியாது! என்ன தெரியுமா?

தமிழகத்தில் தற்போது எக்ஸ்ட்ரா பம்பர் பொருத்தப்பட்டுள்ள வாகனங்களுக்கு எதிராக காவல் துறையினர் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக டெல்லி போக்குவரத்து காவல் துறையை போல் தமிழகத்திலும் மேற்கண்ட 2 விதிமுறை மீறல்களுக்கு எதிராகவும் கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Delhi Traffic Police To Fine Two Wheelers Without Rear View Mirrors - Details. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X