13 முறை போக்குவரத்து விதிகளை மீறிய முதல்வரின் கான்வாய் கார்கள்.. அபராதமும் செலுத்தவில்லை..

மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸின் கான்வாய் கார்கள், 13 முறை போக்குவரத்து விதிமுறைகளை மீறியிருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

By Arun

மகாராஷ்டிர மாநிலத்தில், பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அக்கட்சியை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக உள்ளார். இவரது கான்வாய் கார்கள், 13 முறை போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக தற்போது புகார் எழுந்துள்ளது.

13 முறை போக்குவரத்து விதிகளை மீறிய முதல்வரின் கான்வாய் கார்கள்.. அபராதமும் செலுத்தவில்லை..

தேவேந்திர பட்னாவிஸின் கான்வாயில் பயன்படுத்தப்படும் ஒரு கார், கடந்த ஜனவரி மாதம் 12ம் தேதி மற்றும் ஆகஸ்ட் மாதம் 12ம் தேதிக்கு இடையே மொத்தம் 5 முறை, நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை காட்டிலும் அதிக வேகத்தில் சென்றுள்ளது.

13 முறை போக்குவரத்து விதிகளை மீறிய முதல்வரின் கான்வாய் கார்கள்.. அபராதமும் செலுத்தவில்லை..

இதே காலகட்டத்தில், மற்றொரு கார் 8 முறை அதிக வேகத்தில் பயணித்துள்ளது. ஆக மொத்தம் ஜனவரி 12 முதல் ஆகஸ்ட் 12ம் தேதி வரை, தேவேந்திர பட்னாவிஸின் கான்வாயில் பயன்படுத்தப்படும் 2 கார்கள், ஒட்டுமொத்தமாக 13 முறை போக்குவரத்து விதிமுறைகளை மீறியுள்ளன.

13 முறை போக்குவரத்து விதிகளை மீறிய முதல்வரின் கான்வாய் கார்கள்.. அபராதமும் செலுத்தவில்லை..

ஒவ்வொரு முறை போக்குவரத்து விதிமுறையை மீறியதற்காகவும் செலுத்த வேண்டிய அபராத தொகை 1,000 ரூபாய். அந்த வகையில், 13 முறைக்கு மொத்தம் 13,000 ரூபாய் அபராத தொகை செலுத்த வேண்டியுள்ளது. ஆனால் அந்த தொகை இன்னும் செலுத்தப்படவில்லை.

13 முறை போக்குவரத்து விதிகளை மீறிய முதல்வரின் கான்வாய் கார்கள்.. அபராதமும் செலுத்தவில்லை..

மும்பையை சேர்ந்த ஷகீல் அகமது என்பவர் தாக்கல் செய்திருந்த தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மனு மூலமாக, தேவேந்திர பட்னாவிஸின் கான்வாய் கார்கள் போக்குவரத்து விதிமுறைகளை மீறியிருப்பது தெரியவந்துள்ளது. ஆனால் இதற்கு போக்குவரத்து போலீசார் விளக்கம் ஒன்றை அளித்துள்ளனர்.

13 முறை போக்குவரத்து விதிகளை மீறிய முதல்வரின் கான்வாய் கார்கள்.. அபராதமும் செலுத்தவில்லை..

இதுகுறித்து போக்குவரத்து போலீசார் கூறுகையில், ''விதிமுறைகளை மீறும் வாகனங்களை கண்காணிக்க, மும்பையில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் வாகனங்களை இந்த கேமராக்கள் கண்டறிந்து, ஆட்டோமெட்டிக்காக இ-சலான்களை ஜெனரேட் செய்து விடும்.

13 முறை போக்குவரத்து விதிகளை மீறிய முதல்வரின் கான்வாய் கார்கள்.. அபராதமும் செலுத்தவில்லை..

இதன்படி மும்பையில் உள்ள பந்த்ரா வொர்லி சீலிங்க் (Bandra Worli Sealink) பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள், முதல்வர் தேவேந்திர பட்னாவிஸின் கான்வாய் கார்கள் 13 முறை, அதிக வேகத்தில் பயணித்ததை கண்டறிந்துள்ளன.

13 முறை போக்குவரத்து விதிகளை மீறிய முதல்வரின் கான்வாய் கார்கள்.. அபராதமும் செலுத்தவில்லை..

இதனால் சலான்கள் ஆட்டோமெட்டிக்காக ஜெனரேட் ஆகிவிட்டது. ஆனால் முதல்வரின் கான்வாய் கார்களுக்கு, பாதுகாப்பு கருதி வேக கட்டுப்பாட்டில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. எனவே சலான்களை ஜெனரேட் செய்யும் சாப்ட்வேரில் உள்ள இது போன்ற குறைகளை களைய நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றனர்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Devendra Fadnavis' Two Official Convoy Cars Violated Traffic Rules. Read in Tamil
Story first published: Tuesday, August 14, 2018, 19:14 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X