ரிக்ஸாவை அதிகாரிகள் தூக்கியதால் குழந்தை போல் அழுத மனிதர்... வீடியோ வைரல் ஆனதால் நடந்த ஆச்சரியம்...

ரிக்ஸாவை அதிகாரிகள் பறிமுதல் செய்ததால், குழந்தை போல் தேம்பி தேம்பி அழுத மனிதருக்கு உதவி செய்ய பலரும் முன்வந்து கொண்டுள்ளனர்.

ரிக்ஸாவை அதிகாரிகள் தூக்கியதால் குழந்தை போல் அழுத மனிதர்... வீடியோ வைரல் ஆனதால் நடந்த ஆச்சரியம்...

வங்கதேச தலைநகர் டாக்கா என்றாலே, நம் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது ரிக்ஸாக்கள்தான். டாக்காவை, 'ரிக்ஸாக்களின் நகரம்' என பலரும் வர்ணிக்கின்றனர். ஆனால் மிகவும் மெதுவாக இயங்கும் ரிக்ஸாக்களால், டாக்கா சாலைகளில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. அந்த பிரச்னைகளை களையும் விதமாக தற்போது அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ரிக்ஸாவை அதிகாரிகள் தூக்கியதால் குழந்தை போல் அழுத மனிதர்... வீடியோ வைரல் ஆனதால் நடந்த ஆச்சரியம்...

இதன்படி டாக்கா நகரில், இன்ஜின் மூலம் இயங்க கூடிய மற்றும் பேட்டரி மூலம் இயங்க கூடிய என பல்வேறு வகையான ரிக்ஸாக்களுக்கு தற்போது அதிரடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது. டிஎஸ்சிசி (DSCC - Dhaka South City Corporation) பகுதியில் உள்ள சாலைகளில், தடை விதிக்கப்பட்ட ரிக்ஸாக்களை இயக்கும் நபர்கள் மீது தற்போது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

ரிக்ஸாவை அதிகாரிகள் தூக்கியதால் குழந்தை போல் அழுத மனிதர்... வீடியோ வைரல் ஆனதால் நடந்த ஆச்சரியம்...

போக்குவரத்து நெரிசல் பிரச்னையில் சிக்கி தவித்து வரும் டாக்கா சாலைகளில், ஒழுங்கை கொண்டு வரும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, அதிகாரிகள் இந்த நடவடிக்கையை எடுத்து வருவதாக தெரிகிறது. ஆனால் அதிகாரிகளின் இந்த அதிரடி நடவடிக்கை காரணமாக, ரிக்ஸா ஓட்டுனர்கள் பலரும் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

ரிக்ஸாவை அதிகாரிகள் தூக்கியதால் குழந்தை போல் அழுத மனிதர்... வீடியோ வைரல் ஆனதால் நடந்த ஆச்சரியம்...

அவர்களில் ஃபஜ்லுர் ரகுமானும் ஒருவர். கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக ஃபஜ்லுர் ரகுமான் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தார். ஆனால் ஊரடங்கிற்கு பின் ஒரு கடையில் அவர் வேலைக்கு சேர்ந்தார். எனினும் அந்த வேலையையும் ஒரு சில காரணங்களால் அவர் இழக்க நேரிட்டது. எனவே ரிக்ஸா ஓட்டலாம் என்று ஃபஜ்லுர் ரகுமான் முடிவு செய்தார்.

ரிக்ஸாவை அதிகாரிகள் தூக்கியதால் குழந்தை போல் அழுத மனிதர்... வீடியோ வைரல் ஆனதால் நடந்த ஆச்சரியம்...

இதன்பின்னர் எப்படியோ 80 ஆயிரம் ரூபாய் கடன் பெற்று, பேட்டரியில் இயங்க கூடிய ரிக்ஸா ஒன்றை அவர் வாங்கினார். ஆனால் புதிய விதிமுறைகளின்படி, அந்த ரிக்ஸாவை அதிகாரிகள் தற்போது பறிமுதல் செய்து விட்டனர். இதனால் ஃபஜ்லுர் ரகுமான் மனமுடைந்து போனார். அதிகாரிகளின் நடவடிக்கையால், அவர் கண்ணீர் விட்டு கதறி அழும் காணொளி சமூக வலை தளங்களில் வெளியானது.

ரிக்ஸாவை அதிகாரிகள் தூக்கியதால் குழந்தை போல் அழுத மனிதர்... வீடியோ வைரல் ஆனதால் நடந்த ஆச்சரியம்...

முகநூல், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வரும் இந்த காட்சிகளை பார்த்த பலரும் வருத்தம் அடைந்துள்ளனர். ஆனால் அவர்களில் பலர், ஏதேனும் ஒரு வழியிலாவது ஃபஜ்லுர் ரகுமானுக்கு உதவி செய்வதற்கு முன்வந்து கொண்டுள்ளனர். இதன்படி ஃபஜ்லுர் ரகுமானுக்கு உதவுவதற்கு ஒரு நல்ல மனிதர் முன் வந்திருக்கும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அஹ்ஸன் பூயியன் என்பவர்தான் அந்ந நல்ல மனிதர். ஃபஜ்லுர் ரகுமானுக்கு ஒரு புதிய ரிக்ஸாவை பரிசாக வழங்குவதற்கான நடவடிக்கையை அவர் எடுத்துள்ளார். ஃபஜ்லுர் ரகுமானின் புகைப்படத்தை முகநூலில் வெளியிட்டுள்ள அவர், ''தேவை என்றால், நம்மால் விஷயங்களை மாற்ற முடியும். ஒரு புதிய ரிக்ஸாவை வாங்கியபின் வீட்டிற்கு சென்று கொண்டுள்ளேன்'' என கூறியுள்ளார்.

இதற்காக அஹ்ஸன் பூயியனுக்கும் சமூக வலை தளங்களில் பலர் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். சமூக வலை தளங்களில் இத்தகைய காணொளிகள் வெளியாகி, பாதிக்கப்பட்டவர்களுக்கு முகம் தெரியாத மனிதர்களிடம் இருந்து உதவி கிடைப்பது இது முதல் முறை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த காலங்களிலும் இதுபோன்ற நிகழ்வுகள் பல முறை நடந்துள்ளன.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Dhaka Government Officials Seize Man's Rickshaw, Stranger Comes Forward To Help Him - Details. Read in Tamil
Story first published: Friday, October 9, 2020, 15:20 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X