தமிழகத்தில் பணிபுரியும் ட்ரக் டிரைவர்களுக்கு வேக்சின்... டைம்லர் நிறுவனத்தின் செம்ம நடவடிக்கை!

தமிழகத்தில் பணிபுரியும் தனது ட்ரக் டிரைவர்களுக்கு டைம்லர் வாகன உற்பத்தி நிறுவனம் வைரஸ் தடுப்பு மருந்து செலுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

தமிழகத்தில் பணிபுரியும் ட்ரக் டிரைவர்களுக்கு வேக்சின்... டைம்லர் நிறுவனத்தின் செம்ம நடவடிக்கை!

பிரபல வர்த்தக வாகன உற்பத்தி நிறுவனமான டைம்லர் இந்தியா, உயிர் கொல்லி வைரஸ் கொரோனாவிடம் இருந்து தனது ட்ரக் டிரைவர்களைக் காப்பாற்றும் விதமாக இலவச நோய் தடுப்பு (COVID-19 vaccines) மருந்தை செலுத்தியிருக்கின்றது.

தமிழகத்தில் பணிபுரியும் ட்ரக் டிரைவர்களுக்கு வேக்சின்... டைம்லர் நிறுவனத்தின் செம்ம நடவடிக்கை!

சென்னையை அடுத்துள்ள ஒரகடம் உற்பத்தி ஆலையில் பணி புரியும் ட்ரக் டைரவர்களுக்கே நோய் எதிர்ப்பு மருந்து வழங்கப்பட்டிருக்கின்றது. முதல் நாளான நேற்று மட்டும் 60க்கும் மேற்பட்ட டிரைவர்களுக்கு இலவச தடுப்பூசி மருந்து போடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பணிபுரியும் ட்ரக் டிரைவர்களுக்கு வேக்சின்... டைம்லர் நிறுவனத்தின் செம்ம நடவடிக்கை!

முன்னதாக தனது உற்பத்தி ஆலையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இத்தடுப்பூசி போடும் பணியை டைம்லர் தொடங்கியது. இதன் வாயிலாக சுமார் 3000த்துக்கும் அதிகமான ஊழியர்களுக்கு தடுப்பூசியைப் போட்டுக் கொண்டனர். இதைத் தொடர்ந்து இன்னும் 3 ஆயிரம் பணியாளர்களுக்கு நோய் தடுப்பு மருந்து போட நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் பணிபுரியும் ட்ரக் டிரைவர்களுக்கு வேக்சின்... டைம்லர் நிறுவனத்தின் செம்ம நடவடிக்கை!

கான்ட்ராக்ட் ஊழியர்கள் மற்றும் சப்ளையர் ஊழியர்கள் இதன் மூலம் பலனடைய இருக்கின்றனர். இந்த நிலையிலேயே தனது டிரக் டிரைவர்களின் நலன் கருதி இவர்களுக்கான தடுப்பூசி முகாமை நேற்றைய தினம் டைம்லர் தொடங்கியிருக்கின்றது.

தமிழகத்தில் பணிபுரியும் ட்ரக் டிரைவர்களுக்கு வேக்சின்... டைம்லர் நிறுவனத்தின் செம்ம நடவடிக்கை!

கடந்த 2021 மே மாதம் டைம்லர் இந்தியா தனது உற்பத்தி ஆலையில் தடுப்பூசி மையத்தைத் தொடங்கியது. இதன் பின்னர் நிறுவனம் ஐந்து வாக்கினேஷன் மையங்களை திறந்து வைத்ததாக கூறியிருந்தது. நாள் ஒன்றிற்கு இதன் மூலம் 250 பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருவதாகவும் நிறுவனம் கூறியது.

தமிழகத்தில் பணிபுரியும் ட்ரக் டிரைவர்களுக்கு வேக்சின்... டைம்லர் நிறுவனத்தின் செம்ம நடவடிக்கை!

தனது ஊழியர்கள் அனைவரும் முதல் கட்ட தடுப்பூசியைப் பெற்றவர்கள் என்ற நிலையை உருவாக்கும் பொருட்டு இந்த பணியில் டைம்லர் களமிறங்கியிருக்கின்றது. தற்போது இரண்டாம் கட்ட தடுப்பூசியையும் அனைவரும் பெற்றிருக்க வேண்டும் என்ற நிலையை உருவாக்கும் வகையில் பணியை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளது.

இதனை மிக விரைவில் செய்து முடிக்க இருப்பதாக டைம்லர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இரண்டாம் அலையின்போது எண்ணற்ற உயிர்கள் கொரோனா தொற்றால் பரிதாபமாக பலியாகின. தற்போது மிக விரைவில் தாக்க இருப்பதாக கூறப்படும் மூன்றாம் அலை வைரஸ் பரவலில் இருந்து காத்துக்கொள்ள வைரஸ் தடுப்பு மருந்தே மிக்பெரிய நம்பிக்கையாக இருக்கின்றது.

தமிழகத்தில் பணிபுரியும் ட்ரக் டிரைவர்களுக்கு வேக்சின்... டைம்லர் நிறுவனத்தின் செம்ம நடவடிக்கை!

டைம்லர் நிறுவனம் கோவிட்டால் பாதிக்கப்பட்ட மற்றும் உயிரிழந்த ஊழியர்களுக்கு பல விதமாக உதவிகளைச் செய்து வருகின்றது. அந்தவகையில், மருத்துவ காப்பீடு, குடும்பத்திற்கு தேவையான நிதியுதவி, பிள்ளைகளின் படிப்பு செலவை ஏற்றல் உள்ளிட்டவற்றை நிறுவனம் செய்து வருவது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
DICV Begins Vaccination For Truck Drivers At Its Oragadam Plant. Read In Tamil.
Story first published: Wednesday, July 28, 2021, 12:54 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X