Just In
- 1 hr ago
இந்தியாவின் மலிவான க்ரூஸர் மோட்டார்சைக்கிள், பஜாஜ் அவென்ஜெர்ஸின் விலை அதிகரிப்பு!!
- 8 hrs ago
எக்ஸ்ட்ரா பம்பர் வரிசையில் அடுத்த அதிரடி! இனி இது இல்லாமல் டூவீலர் ஓட்டி பந்தா காட்ட முடியாது! என்ன தெரியுமா?
- 9 hrs ago
2021 சஃபாரியின் வருகையில் எந்த தாமதமும் இல்லை!! மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தும் டாடா மோட்டார்ஸ்
- 10 hrs ago
2021 ஸ்கோடா சூப்பர்ப் செடான் கார் இந்தியாவில் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.31.99 லட்சம்
Don't Miss!
- News
கோவின் செயலியில் பதிவு செய்வது எப்படி?.. என்னென்ன ஆவணங்கள் தேவை?.. முழு விவரம் இதோ!
- Movies
சத்தியமங்கலத்தில் ஷுட்டிங்.. வெற்றிமாறன் இயக்கும் படம்.. சூரி ஜோடியாக இவர்தான் நடிக்கிறாராமே?
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 16.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் அவசர முடிவுகள் எடுக்காமல் இருப்பது நல்லது…
- Sports
அடுத்தடுத்த இடத்துல இருக்கற அணிகள் மோதும் 59வது போட்டி... வெற்றி யாருக்கு.. ரசிகர்கள் ஆர்வம்
- Finance
கலவரத்திற்கு முன் பிட்காயின் மூலம் பேமெண்ட்.. அமெரிக்காவில் நடந்த கொடூரம்..!
- Education
ரூ.1.13 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மரடோனாவின் ஃபெராரி எஃப்40 காருக்கு பின்னால் இப்படியொரு கதை இருக்கா!! அவர் பயன்படுத்திய வாகனங்கள்...
சமீபத்தில் மறைந்த கால்பந்து விளையாட்டின் ஜாம்பவான் டியாகோ மரடோனா பயன்படுத்திய வாகனங்களை பற்றிய விபரங்கள் கிடைத்துள்ளன. அவற்றை இந்த செய்தியில் இனி பார்ப்போம்.

புகழ்பெற்ற கால்பந்து வீரர் டியாகோ மரடோனா தனது 60 வயதில் இருதய கோளாறு காரணமாக கடந்த நவம்பர் 25ஆம் தேதி காலமானார். அவரது மரணம் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான அவரது ரசிகர்களுக்கும் கால்பந்து பிரியர்களுக்கும் பெரும் அதிர்ச்சியாக அமைந்தது.

உலகத் தலைவர்கள் கூட மரடோனாவிற்கு அஞ்சலி செலுத்தி தங்களது வருத்தத்தை வெளிப்படுத்தினர். அப்போதில் இருந்து இந்த செய்திதான் பல செய்திதளங்களில் முக்கிய செய்திகளாக இருந்து வருகிறது. இந்த வகையில் நாம் இந்த செய்தியில் மரடோனா பயன்படுத்திய வாகனங்களை சுருக்கமாக பார்க்க போகிறோம்.
ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

மரடோனா ஏகப்பட்ட லக்சரி கார்களையும் ஸ்போர்ட்ஸ் கார்களையும் வாங்கி குவித்து வைத்துள்ளார். அவற்றில் பெரும்பான்மையானவற்றை பற்றிய விபரங்கள் நமக்கு கிடைக்காமலே போய்விட்டன. துபாயில் புஜைரா கால்பந்து க்ளப்பின் தொழிற்நுட்ப இயக்குனராக இருந்தபோது இரு லக்சரி வாகனங்கள் மரடோனாவிற்கு பரிசாக வழங்கப்பட்டுள்ளன.

பெலாரஸில் டைனாமோஸ் ப்ரீஸ்ட் க்ளப்பின் தலைவராக இருந்தபோது ஹண்டா என்ற பெயரில் நீர் மற்றும் தரை என இரண்டிலும் இயங்கக்கூடிய வாகனத்தை மரடோனா பரிசாக பெற்றிருந்தார். இவற்றுடன் போர்ஷே 924 காரையும் அவர் பயன்படுத்தி வந்துள்ளார்.

இந்த போர்ஷே கார் மட்டுமின்றி ஃபெராரி டெஸ்டாரோஸ்ஸா மற்றும் ஸ்கானியா 113எச் ட்ரக் உள்ளிட்ட வாகனங்களையும் மரடோனா உபயோகப்படுத்தியுள்ளார் என தகவல்கள் கூறுகின்றன. ஆனால் இவற்றில் எத்தனை தற்போதும் அவரது கேரேஜில் உள்ளது என்பது தெரியவில்லை.

ஃபெராரி டெஸ்டாரோஸ்ஸாவை காட்டிலும் ஃபெராரி எஃப்40 காருக்கும் மரடோனோவிற்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. 1986 மெக்ஸிகோ உலக கோப்பை போட்டிகளில் பங்கேற்ற போது ஃபெராரி எஃப்40 ஸ்போர்ட்ஸ் காரை அவர் வாங்கியுள்ளார்.

மிகவும் குறைவான எண்ணிக்கையில் விருப்பப்பட்டு கேட்டவர்களுக்காக மட்டுமே விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட இந்த ஃபெராரி காரின் விலை அப்போதே 5 லட்ச டாலர்கள் ஆகும். இந்திய ரூபாயில் இதன் மதிப்பு கிட்டத்தட்ட ரூ.3.7 கோடியாகும்.

இந்த காரை கருப்பு நிற பெயிண்ட்டில் பெறவே அவர் விரும்பினார். அதன்படி, 1986 உலக கோப்பையை மெக்ஸிகோவில் அர்ஜெண்டினா அணி வென்ற பிறகு தாய் நாட்டிற்கு திரும்பிய மரடோனாவிற்காக ஃபெராரி எஃப்40 கார் கருப்பு நிறத்தில் விமான நிலையத்திற்கே கொண்டுவரப்பட்டது.

டியாகோ மரடோனா புதுமைகளை விரும்பக்கூடியவர். அதேநேரம் பழையதை கழற்றிவிடவும் இவர் தயங்கியதில்லை. இதனால் ஃபெராரி எஃப்40 போன்ற ஸ்போர்ட்ஸ் கார்களும், லக்சரி கார்களும் ஏகப்பட்டவை மரடோனாவை வந்தடைந்தன, பிறகு பிரிந்து சென்றுள்ளன. தற்போது மரடோனாவின் கேரேஜில் என்னென்ன நின்றுள்ளன என்பதை தெரியவில்லை.

ஃபெராரி டெஸ்டாரோஸ்ஸா காரை மரடோனா கருப்பு நிறத்தில் பெற்றார். இந்த ஃபெராரி காரின் விலை கிட்டத்தட்ட ரூ.3.2 கோடி என்றால், அதற்கு பெயிண்ட் செலவு மட்டும் ரூ.96 லட்சத்திற்கு ஆகியுள்ளது. இந்த செலவு மொத்தத்தையும் மரடோனாவிற்காக நபோலி கால்பந்து க்ளப்பின் தலைவர் கொராடோ ஃபெர்லினோ ஏற்று கொண்டார்.

மிக நெருக்கமாக இருந்த ஃபெராரி எஃப்-40 காரையும் முதலில் கருப்பு நிறத்தில் பெறவே மரடோனா விரும்பினார். ஆனால் அதற்கு ஃபெராரி நிறுவனம் ஒத்துக்கொள்ளவில்லை. ஃபெராரி எஃப்-40 முழுக்க முழுக்க ஸ்போர்ட்ஸ் காராக விளங்கியதால், அதில் மியுசிக் சிஸ்டம், ஏசி போன்ற எந்த வசதியும் வழங்கப்படவில்லை.

இதுகுறித்து மரடோனாவின் பிரதிநிதி கில்லர்மோ கொப்போலா அப்போது கருத்து தெரிவித்திருந்தார். அவர் கூறுகையில், டியாகோ ஸ்டீரியோவைப் பற்றி கேட்டார், நான் அவரிடம் சொன்னேன், அது ஒன்றும் இல்லை... அது ஒரு ரேஸ் கார். ஏர் கண்டிஷனிங் இல்லை, ஒன்றுமில்லை, அவர் சொன்னார் ‘சரி, இதையெல்லாம் உங்கள் விருப்பப்படி பொருத்துங்கள் என கூறியதாக கூறினார்.

மரடோனா வாங்கிய முதல் என்று பார்த்தால், 1982ல் அவர் வாங்கிய ஃபியாட் யூரோப்பா 128 சிஎல்எஸ் ஆகும். ஆனால் இதனை அவர் 1984ல் விற்றுவிட்டார். இது கடைசியாக 2009 ஆம் ஆண்டில் அர்ஜெண்டினா, புவெனஸ் அயர்ஸின் சால்டோ நகரத்தில் இருப்பதாக அறியப்பட்டது.

போர்ஷே 924 காரை வாங்கும்போது அவரது வயது 19 ஆகதான் இருந்துள்ளது. அதிகப்பட்சமாக 125 எச்பி என்ஜின் ஆற்றலில் இயங்கக்கூடிய இந்த ஸ்போர்ட்ஸ் காரை ஸ்பானிஷ் க்ளப்பான பார்சிலோனாவிற்கு மாறும்போது மரடோனா விற்றுவிட்டார். இந்த போர்ஷே கார் பல கார் சேகரிப்பாளர்களிடம் கைமாறியுள்ளது.

பிறகு மரடோனா பயன்படுத்திய மெர்சிடிஸ்-பென்ஸ் 500 எஸ்எல்சி கார் அவருக்கு பரிசாக வழங்கப்பட்டது. அதிகப்பட்சமாக 237 பிஎச்பி பவரில் இயங்கக்கூடியதாக இருந்தது. அதன்பின் 2011ல் எஸ்எல்சி சேகரிப்பாளர்களுக்கான காராகவும் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது.