வரி உயர்வு காரணமாக டீசல் கார்களின் விலை அதிகரிக்கும்

By Balasubramanian

டீசல் காருக்கான வரி உயர்த்தப்படுவதால் காரின் விலை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. நீங்கள் டீசல் கார் வாங்கும் எண்ணத்தில் இருந்தால் உடனடியாக காரை வாங்கி விடுங்கள்.

வரி உயர்வு காரணமாக டீசல் கார் விலை அதிகரிக்கும்

அடுத்த மாதம் முதல் புதிய கார்களை பதிவு செய்வதற்கான சட்ட விதிமுறைகளில் மாற்றம் செய்யப்படுகிறது. இதன் படி டீசல் கார்களுக்கான வரியை 2 சதவீதம் அதிரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

வரி உயர்வு காரணமாக டீசல் கார் விலை அதிகரிக்கும்

பொதுவாகவே பெட்ரோல் கார்களை விட டீசல்கள் கார்கள் மார்கெட்டில் விலை அதிகமாக இருக்கும். ஒரு மாடலின் பெட்ரோல் காரை விட டீசல் கார் ரூ 1 லட்சம் வரை அதிகமாக இருக்கும்.

வரி உயர்வு காரணமாக டீசல் கார் விலை அதிகரிக்கும்

இந்நிலையில் அரசின் இந்த நடவடிக்கையால் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. உதாரணமாக மாருதி ஸ்விப்ட் பெட்ரோல் காரை விட டீசல் கார் ரூ 1 லட்சம் அதிகமான விலைக்கு விற்பனையாகி வருகிறது.

வரி உயர்வு காரணமாக டீசல் கார் விலை அதிகரிக்கும்

ஸ்கோடா ஆக்டவியா கார்கள் பெட்ரோல் காரை விட டீசல் கார் ரூ 1.92 லட்சம் அதிகமாக விற்பனையாகி வருகிறது. காரின் விலையில் மட்டும் அல்லாமல் சர்வீஸ் மற்றும் உதிரி பாகங்களின் விலையும் டீசல் காருக்கானதில் அதிகம் தான்.

வரி உயர்வு காரணமாக டீசல் கார் விலை அதிகரிக்கும்

இந்நிலையில் தற்போது அரசு எடுத்துள்ள நடவடிக்கையால் மாருதி ஸ்விப்ட் டீசல் கார் ரூ 13,000 வரை அதிகரிக்கும். அதே நேரத்தில் ஸ்கோடா ஆக்டவியா கார் ரூ 40,000 வரை அதிகரிக்கும்.

வரி உயர்வு காரணமாக டீசல் கார் விலை அதிகரிக்கும்

அதனால் நீங்கள் டீசல் காரை வாங்கும் எண்ணத்தில் இருந்தால் விரைவில் காரை வாங்கி விடுங்கள். வரி உயர்வை காரணம் காட்டி கார் நிறுவனங்களும் டீசல் காரின் விலையை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.

வரி உயர்வு காரணமாக டீசல் கார் விலை அதிகரிக்கும்

சிறிய ரக டீசல் கார்கள் ரூ 50,000 முதல் ரூ 70,000 வரை விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரி உயர்வுக்கான நடவடிக்கையை அரசு டீசல் கார் விற்பனையை கட்டுப்படுத்துவதற்காக எடுத்துள்ளது.

Most Read Articles

English summary
Diesel Cars Could Soon Become More Expensive. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X