உலகிலேயே இந்த சாதனையை முதல் முறையாக நிகழ்த்தியிருப்பது இந்தியாதான்... ரயில் கட்டணம் குறைய வாய்ப்பு

உலகில் வேறு எந்த நாடுகளாலும் நிகழ்த்த முடியாத சாதனை ஒன்றை, இந்திய ரயில்வே நிகழ்த்தி காட்டியுள்ளது. இதனால் டிக்கெட் கட்டணம் குறைவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

உலகில் வேறு எந்த நாடுகளாலும் நிகழ்த்த முடியாத சாதனை ஒன்றை, இந்திய ரயில்வே நிகழ்த்தி காட்டியுள்ளது. இதனால் டிக்கெட் கட்டணம் குறைவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அப்படி என்ன சாதனை? என தெரிந்தால், இந்திய ரயில்வேவை நீங்கள் நிச்சயமாக பாராட்டுவீர்கள்.

உலகிலேயே இந்த சாதனையை முதல் முறையாக நிகழ்த்தியிருப்பது இந்தியாதான்.. ரயில் கட்டணம் குறைய வாய்ப்பு

உலகிலேயே மிகப்பெரிய ரயில்வே துறைகளில் ஒன்று இந்திய ரயில்வே. நாடு முழுவதும் சுமார் 1.22 லட்சம் கிலோ மீட்டர் தூரத்திற்கு தண்டவாளங்களை அமைத்து, நூற்றுக்கணக்கான ரயில்களை இயக்கி வருகிறது இந்திய ரயில்வே. இந்திய ரயில்வேயில் சுமார் 15 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர்.

உலகிலேயே இந்த சாதனையை முதல் முறையாக நிகழ்த்தியிருப்பது இந்தியாதான்.. ரயில் கட்டணம் குறைய வாய்ப்பு

இந்த சூழலில், உயிருக்கே ஆபத்தை விளைவிக்க கூடிய கார்பன் டை ஆக்ஸைடு வாயு வெளியேற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காக, இந்திய ரயில்வே துறையை 100 சதவீதம் எலெக்ட்ரிக் மயமாக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

உலகிலேயே இந்த சாதனையை முதல் முறையாக நிகழ்த்தியிருப்பது இந்தியாதான்.. ரயில் கட்டணம் குறைய வாய்ப்பு

புவி வெப்பமயமாதல் மற்றும் பல்வேறு காலநிலை சார்ந்த பிரச்னைகளுக்கு மிக முக்கிய காரணம் பசுமை இல்ல வாயுக்கள் அதிகளவில் வெளியேற்றப்படுவதுதான். பசுமை இல்ல வாயுக்களிலேயே மிக அதிக அளவில் வெளியேற்றப்படுவது கார்பன் டை ஆக்ஸைடு.

உலகிலேயே இந்த சாதனையை முதல் முறையாக நிகழ்த்தியிருப்பது இந்தியாதான்.. ரயில் கட்டணம் குறைய வாய்ப்பு

எனவேதான் கார்பன் டை ஆக்ஸைடு வெளியேற்றத்தை குறைக்க, இந்திய ரயில்வே பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக எடுக்கப்பட்ட ஓர் நடவடிக்கையின் காரணமாக, இந்திய ரயில்வே தற்போது சர்வதேச அளவில் பாராட்டுக்களை குவித்து வருகிறது.

உலகிலேயே இந்த சாதனையை முதல் முறையாக நிகழ்த்தியிருப்பது இந்தியாதான்.. ரயில் கட்டணம் குறைய வாய்ப்பு

இந்திய ரயில்வே துறையானது, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை உண்டாக்கும் டீசல் இன்ஜின்களை (Diesel Engine) எலெக்ட்ரிக் இன்ஜின்களாக (Electric Engine) மாற்ற முடிவெடுத்துள்ளது. இதன்படி ஒரு டீசல் இன்ஜின் தற்போது எலெக்ட்ரிக் இன்ஜினாக மாற்றம் செய்யப்பட்டு, உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது.

உலகிலேயே இந்த சாதனையை முதல் முறையாக நிகழ்த்தியிருப்பது இந்தியாதான்.. ரயில் கட்டணம் குறைய வாய்ப்பு

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி நகரில் உள்ள டீசல் லோகோமோட்டிவ் ஒர்க்ஸ் (Diesel Locomotive Works-DLW) நிறுவனம்தான் இந்த சாதனையை படைத்துள்ளது. இது இந்திய ரயில்வேவிற்கு சொந்தமான ஒரு நிறுவனம் ஆகும்.

உலகிலேயே இந்த சாதனையை முதல் முறையாக நிகழ்த்தியிருப்பது இந்தியாதான்.. ரயில் கட்டணம் குறைய வாய்ப்பு

டீசல், எலெக்ட்ரிக் லோகோமோட்டிவ்கள் அதாவது இன்ஜின்கள் மற்றும் அதன் ஸ்பேர் பார்ட்ஸ்களை தயாரிப்பதுதான் இதன் பணி. ஆனால் தற்போது டீசல் இன்ஜின் ஒன்றை, எலெக்ட்ரிக் இன்ஜினாக மாற்றம் செய்து சாதனை படைத்துள்ளது வாரணாசி டீசல் லோகோமோட்டிவ் ஒர்க்ஸ் நிறுவனம்.

உலகிலேயே இந்த சாதனையை முதல் முறையாக நிகழ்த்தியிருப்பது இந்தியாதான்.. ரயில் கட்டணம் குறைய வாய்ப்பு

இதற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நாட்கள் எவ்வளவு தெரியுமா? வெறும் 69 நாட்கள்தான். இதுகுறித்து இந்திய ரயில்வே துறையை சேர்ந்த உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ''டீசல் இன்ஜின் ஒன்றை எலெக்ட்ரிக் இன்ஜினாக மாற்றம் செய்திருப்பது உலகிலேயே இதுதான் முதல் முறை.

உலகிலேயே இந்த சாதனையை முதல் முறையாக நிகழ்த்தியிருப்பது இந்தியாதான்.. ரயில் கட்டணம் குறைய வாய்ப்பு

இதன் மூலம் இந்திய ரயில்வே வரலாற்றில் இடம்பிடித்து விட்டது. இந்த உலக சாதனையை படைக்க வெறும் 69 நாட்கள்தான் தேவைப்பட்டது என்பதும் பெருமைக்குரிய விஷயம். 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ், முழுக்க முழுக்க உள்நாட்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வெற்றி காணப்பட்டுள்ளது'' என்றார்.

உலகிலேயே இந்த சாதனையை முதல் முறையாக நிகழ்த்தியிருப்பது இந்தியாதான்.. ரயில் கட்டணம் குறைய வாய்ப்பு

டீசலில் இருந்து எலெக்ட்ரிக்காக மாற்றம் செய்யப்பட்ட இன்ஜின் தற்போது பயன்பாட்டிற்கு வந்து விட்டது என்பதும் குறிப்பிடத்தகுந்த விஷயம். இந்த எலெக்ட்ரிக் இன்ஜினை, கடந்த டிசம்பர் 3ம் தேதி முதல், வடக்கு ரயில்வே பயன்படுத்தி கொண்டுள்ளது.

உலகிலேயே இந்த சாதனையை முதல் முறையாக நிகழ்த்தியிருப்பது இந்தியாதான்.. ரயில் கட்டணம் குறைய வாய்ப்பு

இந்த உலக சாதனையில் நிகழ்த்தப்பட்டிருக்கும் இதர அம்சங்களும் நமக்கு ஆச்சரியம் அளிக்க கூடியவை. இதுகுறித்து இந்திய ரயில்வே உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ''வாழ்நாள் முடிந்து விட்ட தருவாயில் உள்ள டீசல் இன்ஜினிற்கு மறுவாழ்வு அளிக்க 6 கோடி ரூபாய் வரை தேவைப்படும்.

உலகிலேயே இந்த சாதனையை முதல் முறையாக நிகழ்த்தியிருப்பது இந்தியாதான்.. ரயில் கட்டணம் குறைய வாய்ப்பு

ஆனால் டீசல் இன்ஜினை எலெக்ட்ரிக் இன்ஜினாக மாற்றம் செய்ய வெறும் 2.5 கோடி ரூபாய்தான் செலவு ஆனது. இதன்மூலம் சுமார் 3.5 கோடி ரூபாயை, அதாவது சுமார் 50 சதவீத தொகையை இந்திய ரயில்வே மிச்சம் பிடித்துள்ளது. அத்துடன் உலக சாதனையும் நிகழ்த்தப்பட்டுள்ளது.

உலகிலேயே இந்த சாதனையை முதல் முறையாக நிகழ்த்தியிருப்பது இந்தியாதான்.. ரயில் கட்டணம் குறைய வாய்ப்பு

WDG3-கிளாஸ் 2,600 HP (Horse Power) டீசல் இன்ஜினைதான், வாரணாசி டீசல் லோகோமோட்டிவ் ஒர்க்ஸ் எலெக்ட்ரிக் இன்ஜினாக மாற்றம் செய்துள்ளது. இதன்மூலம் 5,000 HP சக்தியை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இந்த இன்ஜின் உருமாற்றம் பெற்றுள்ளது.

உலகிலேயே இந்த சாதனையை முதல் முறையாக நிகழ்த்தியிருப்பது இந்தியாதான்.. ரயில் கட்டணம் குறைய வாய்ப்பு

பழைய டீசல் இன்ஜினை காட்டிலும் இதன் சக்தி 92 சதவீதம் அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது. டீசலில் இருந்து எலெக்ட்ரிக்காக மாற்றம் செய்யப்பட்டுள்ள இந்த இன்ஜின் 5,000 டன்னுக்கும் (50 லட்சம் கிலோ) அதிகமாக சரக்குகளை இழுத்து செல்லக்கூடிய திறன் வாய்ந்தது.

உலகிலேயே இந்த சாதனையை முதல் முறையாக நிகழ்த்தியிருப்பது இந்தியாதான்.. ரயில் கட்டணம் குறைய வாய்ப்பு

இது நிரூபணம் செய்யப்பட்ட ஒன்றாகும். இந்த எலெக்ட்ரிக் இன்ஜின், வாரணாசியில் இருந்து பஞ்சாப் மாநிலம் லூதியானாவிற்கு, தனது முதல் பயணத்தை மேற்கொண்டது. அப்போது அனுமதிக்கப்பட்ட வேகமான மணிக்கு 75 கிலோ மீட்டர் என்ற வேகத்தில், 5,200 டன் சரக்குகளை இழுத்து சென்றது.

உலகிலேயே இந்த சாதனையை முதல் முறையாக நிகழ்த்தியிருப்பது இந்தியாதான்.. ரயில் கட்டணம் குறைய வாய்ப்பு

5,200 டன் என்பது 52 லட்சம் கிலோவாகும். இத்தகைய இன்ஜின்கள் மூலம் எரிபொருளுக்காக செலவிடப்படும் தொகை படிப்படியாக குறையும். அத்துடன் சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும். டீசல் இன்ஜினை எலெக்ட்ரிக் இன்ஜினாக மாற்றலாம் என்ற கான்செப்ட், 2017ம் ஆண்டு டிசம்பர் 22ம் தேதிதான் தோன்றியது.

உலகிலேயே இந்த சாதனையை முதல் முறையாக நிகழ்த்தியிருப்பது இந்தியாதான்.. ரயில் கட்டணம் குறைய வாய்ப்பு

ஆனால் நடப்பாண்டு பிப்ரவரி 28ம் தேதியன்று பணிகள் முடிக்கப்பட்டு விட்டது. அதாவது டீசல் இன்ஜினை எலெக்ட்ரிக் இன்ஜினாக மாற்றம் செய்வது என்ற திட்டத்தை கான்செப்ட் அளவில் இருந்து நடைமுறைக்கு கொண்டு வர வெறும் 69 நாட்கள் மட்டும்தான் தேவைப்பட்டன.

உலகிலேயே இந்த சாதனையை முதல் முறையாக நிகழ்த்தியிருப்பது இந்தியாதான்.. ரயில் கட்டணம் குறைய வாய்ப்பு

பின்னர் பல சோதனைகள் நடத்தப்பட்ட பின், கடந்த டிசம்பர் 3ம் தேதியன்று, இந்த எலெக்ட்ரிக் இன்ஜின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு விட்டது. தற்போது வாரணாசி-லூதியானா இடையே, அனுமதிக்கப்பட்ட வேகமான மணிக்கு 75 கிமீ என்ற வேகத்தில் இந்த இன்ஜின் இயக்கப்பட்டு வருகிறது'' என்றார்.

உலகிலேயே இந்த சாதனையை முதல் முறையாக நிகழ்த்தியிருப்பது இந்தியாதான்.. ரயில் கட்டணம் குறைய வாய்ப்பு

உலகிலேயே முதல் முறையாக, அதுவும் மிகவும் குறைவான செலவில், டீசல் இன்ஜின் ஒன்றை எலெக்ட்ரிக் இன்ஜினாக மாற்றி, அதனை வெற்றிகரமாக பயன்பாட்டிற்கும் கொண்டு வந்த இந்திய ரயில்வே துறைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்த சாதனையை படைத்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயலும் பாராட்டியுள்ளார்.

உலகிலேயே இந்த சாதனையை முதல் முறையாக நிகழ்த்தியிருப்பது இந்தியாதான்.. ரயில் கட்டணம் குறைய வாய்ப்பு

இதுபோன்ற இன்ஜின்களை அதிக அளவில் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால், ரயில்வே துறைக்கு ஏற்படும் செலவு வெகுவாக குறையும். இதன்மூலமாக டிக்கெட் கட்டணங்களையும் குறைக்க முடியும். எனவே அதற்கான நடவடிக்கைகளை இந்திய ரயில்வே துரிதப்படுத்தினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

உலகிலேயே இந்த சாதனையை முதல் முறையாக நிகழ்த்தியிருப்பது இந்தியாதான்.. ரயில் கட்டணம் குறைய வாய்ப்பு

இதனிடையே டீசல் இன்ஜினை எலெக்ட்ரிக் இன்ஜினாக மாற்றம் செய்து, இந்திய ரயில்வே படைத்த உலக சாதனை குறித்து ஃபைனான்சியல் எக்ஸ்பிரஸ் உருவாக்கி வெளியிட்டுள்ள வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

நன்கு வளர்ச்சியடைந்த நாடுகளே திணறி கொண்டிருக்கும் ஒரு தொழில்நுட்பத்தை இந்திய ரயில்வே செயல்படுத்தி, அந்த நாடுகளை எல்லாம் மூக்கின் மேல் விரல் வைக்க செய்துள்ளது. ஆனால் சேவை தரத்தில் இந்திய ரயில்வே இன்னும் பின்தங்கியுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே சேவை தரத்தை மேம்படுத்தினால், இந்திய ரயில்வே துறையை மக்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Diesel Locomotive Converted To Electric Engine: Indian Railways Create World Record. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X