ஹைப்ரிட் காருக்கும், எலெக்ட்ரிக் காருக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்னனு தெரியுமா?

ஹைப்ரிட் காருக்கும், எலெக்ட்ரிக் காருக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

ஹைப்ரிட் காருக்கும், எலெக்ட்ரிக் காருக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்னனு தெரியுமா?

இந்தியாவில் தற்போது ஹைப்ரிட் கார்கள் வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகின்றன. ஆனால் ஹைப்ரிட் கார்களுக்கும், எலெக்ட்ரிக் கார்களுக்கும் இடையே உள்ள வித்தியாசங்கள் பற்றி வாடிக்கையாளர்கள் பலருக்கு பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. அந்த சந்தேகங்களுக்கான விளக்கத்தை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

ஹைப்ரிட் காருக்கும், எலெக்ட்ரிக் காருக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்னனு தெரியுமா?

ஒரு பெட்ரோல் மற்றும் ஒரு எலெக்ட்ரிக் என 2 இன்ஜின்களில் ஹைப்ரிட் கார்கள் இயங்கும். சக்கரங்களுக்கு சுழல்வதற்கான சக்தியை அளிப்பதற்கு இவை இரண்டுமே ஒன்றோடு ஒன்று செயல்படும். எனவே குறைந்த அளவு பெட்ரோல் மட்டுமே எரிக்கப்படும் என்பதால், எரிபொருள் சிக்கனத்தில் ஹைப்ரிட் கார்கள் தலைசிறந்து விளங்குகின்றன.

ஹைப்ரிட் காருக்கும், எலெக்ட்ரிக் காருக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்னனு தெரியுமா?

மேலும் மாசு உமிழ்வும் குறைவாக இருக்கும் என்பது ஹைப்ரிட் கார்களின் கூடுதல் சிறப்பம்சம். அத்துடன் ஹைப்ரிட் கார்களின் பேட்டரி ஆற்றலை வழங்கும் அதே நேரத்தில், கார் ஓடும்போது ரீசார்ஜ் ஆகி கொள்ளும் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் எலெக்ட்ரிக் கார்களின் பேட்டரியை நாம் தனியாக ரீசார்ஜ் செய்ய வேண்டும்.

ஹைப்ரிட் காருக்கும், எலெக்ட்ரிக் காருக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்னனு தெரியுமா?

ஹைப்ரிட் கார்கள் வழக்கமான ஐசி இன்ஜின் மற்றும் குறைந்தபட்சம் ஒரு எலெக்ட்ரிக் மோட்டாரில் இருந்து சக்தியை பெறுகின்றன. ஹைப்ரிட் கார்களுக்கும், எலெக்ட்ரிக் கார்களுக்கும் உள்ள முக்கியமான வித்தியாசம் என்னவெனில், ஹைப்ரிட் கார்கள் ஐசி இன்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார்களை பெற்றிருக்கும்.

ஹைப்ரிட் காருக்கும், எலெக்ட்ரிக் காருக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்னனு தெரியுமா?

எலெக்ட்ரிக் மோட்டார்களின் எண்ணிக்கை மாறுபடலாம். ஆனால் எலெக்ட்ரிக் கார்கள் வாகனத்தை செலுத்துவதற்கான சக்தியை எலெக்ட்ரிக் மோட்டார்களிடம் இருந்து மட்டுமே பெறுகின்றன. அதாவது எலெக்ட்ரிக் கார்களில் பெட்ரோல் அல்லது டீசல் இன்ஜினுக்கு பதிலாக எலெக்ட்ரிக் மோட்டார் மட்டுமே இடம்பெற்றிருக்கும்.

ஹைப்ரிட் காருக்கும், எலெக்ட்ரிக் காருக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்னனு தெரியுமா?

எனவே ஹைப்ரிட் கார்களை போலவே, எலெக்ட்ரிக் கார்களும் சுற்றுச்சூழலுக்கு உகந்தவையாக பார்க்கப்படுகின்றன. ஹைப்ரிட் கார்கள் எல்இவி (LEV - Low Emissions Vehicles) வகையின் கீழ் வரும். அதாவது குறைந்த அளவு உமிழ்வை மட்டுமே இந்த கார்கள் வெளிப்படுத்தும். அதே சமயம் எலெக்ட்ரிக் கார்கள் இஸட்இவி (ZEV - Zero Emissions Vehicles) வகையின் கீழ் வரும்.

ஹைப்ரிட் காருக்கும், எலெக்ட்ரிக் காருக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்னனு தெரியுமா?

அதாவது எலெக்ட்ரிக் கார்களில் உமிழ்வே இருக்காது. அதே சமயம் எரிபொருளுக்கான செலவே ஏற்படாது என்பதால், எலெக்ட்ரிக் கார்களை இயக்குவதற்கான செலவு மிகவும் குறைவு. ஆனால் ஹைப்ரிட் கார்கள் விஷயத்தில், இயக்குவதற்கான செலவு மிகவும் குறைவு என்பதில் உண்மையில். எலெக்ட்ரிக் கார்களுடன் ஒப்பிடும்போது, ஹைப்ரிட் கார்களை இயக்குவதற்கு அதிகமாக செலவு ஆகும்.

ஹைப்ரிட் காருக்கும், எலெக்ட்ரிக் காருக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்னனு தெரியுமா?

உலகளவில் மிகவும் பிரபலமாக உள்ள ஒரு சில ஹைப்ரிட் கார்களை கீழே காணலாம்.

  • டொயோட்டா ப்ரையஸ்
    • ஃபோர்டு ஃப்யூசன் ஹைப்ரிட்
      • டொயோட்டா கேம்ரி
        • ஹோண்டா அக்கார்டு
          • பிஎம்டபிள்யூ ஐ8
          • இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள ஒரு சில எலெக்ட்ரிக் கார்களை கீழே காணலாம்.

            • டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி
              • எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி
                • ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி
Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Difference Between Hybrid And An Electric Car. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X