எல்லாமே ஏமாத்து வேலையா? டயர்களில் நைட்ரஜன் காற்றைப் பிடிப்பதால் எந்த பயனும் இல்லை... உண்மையாக நடப்பது இதுதான்.

வாகனங்களில் டயர்களில் சாதாரண காற்று பிடிப்பதற்கும், நைட்ரஜன் காற்று பிடிப்பதற்கும் என்ன வித்தியாசம்? இதனால் என்ன பலன் கிடைக்கும்? இது குறித்த முழு விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

எல்லாமே ஏமாத்து வேலையா . . . டயர்களில் நைட்ரஜன் காற்றைப் பிடிப்பதால் எந்த பயனும் இல்லை . . . உண்மையாக நடப்பது இதுதான் . . .

நாம் தினந்தோறும் வாகனங்களைப் பயன்படுத்துகிறோம். ஏந்த வாகனமாக இருந்தாலும் அதற்கு ஏர்பிடிப்பது என்பது மிகவும் அவசியமானது. டயர் என்ற ஒரு விஷயத்திற்கு மற்றும் மாற்று வரவேயில்லை. பல ஆண்டுகளுக்கு முன்பும் டயரைதான் பயன்படுத்தினர். இன்றும் ஒரு வாகனத்திற்கு முக்கியமானது டயர்தான். இந்த டயரை சரியான பராமரிக்க வேண்டியது நம் பொறுப்பு இல்லை என்றால் நம்மை நடு வழியில் நிறுத்திவிடும்.

எல்லாமே ஏமாத்து வேலையா . . . டயர்களில் நைட்ரஜன் காற்றைப் பிடிப்பதால் எந்த பயனும் இல்லை . . . உண்மையாக நடப்பது இதுதான் . . .

பொதுவாக டயருக்கு காற்று என்பது மிகவும் முக்கியம். காற்று மட்டும் இல்லை என்றால் டயரும் வேஸ்ட் தான். இப்படியா நாம் நம் வாகனங்களுக்குக் காற்று ஏற்றுவது என்பது முக்கியமானது. இன்று மார்கெட்டில் கம்பிரஷர் ஏர் மற்றும் நைட்ரஜன் ஏர் ஆகிய 2 விதமான ஏர்கள் உள்ளன. இந்த இரண்டிற்கும் என்ன வித்தியாசம் ஏது எப்படிச் செயல்படும்? இதனால் என்னென்ன நன்மைகள் ஏற்படும்? இதைப் பற்றிக் காணலாம்.

எல்லாமே ஏமாத்து வேலையா . . . டயர்களில் நைட்ரஜன் காற்றைப் பிடிப்பதால் எந்த பயனும் இல்லை . . . உண்மையாக நடப்பது இதுதான் . . .

பொதுவாக கம்பிரஷர் ஏர் என்றால் நாமை சுற்றியுள்ள சாதாரண காற்று தான். இந்த கம்பிரஷர் காற்றை கம்பிரஷர் மோட்டாரை ஓட விட்டு அதிலிருந்து ஏரை எடுத்து டயருக்கு காற்று அடிக்கின்றனர். பொதுவாக டயருக்குள் இருக்கும் காற்றின் அழுத்தம் தான் ஒரு வாகனத்தையே தாங்கி செல்கிறது. இந்த காற்று டயருக்குள் நீண்ட நாட்களுக்கு இருக்காது குறிப்பிட்ட நாளுக்கு ஒரு முறை காற்று இறங்கிக்கொண்டே இருக்கும். இறங்க இறங்க மீண்டும் காற்றை அடைக்க வேண்டும்.

எல்லாமே ஏமாத்து வேலையா . . . டயர்களில் நைட்ரஜன் காற்றைப் பிடிப்பதால் எந்த பயனும் இல்லை . . . உண்மையாக நடப்பது இதுதான் . . .

சாதாரண காற்றில் 78 சதவீதம் நைட்ரஜன், 21 சதவீதம் ஆக்ஸிஜன், மற்றது நீராவி, கார்பன் டை ஆக்ஸைடு, மற்றும் சிறிய அளவில் நோபல் கேஸ் உள்ளிட்ட வை கலந்தது தான் கம்பிரஷர் ஏர், இதில் நைட்ரஜன் தான் அதிகமாக இருக்கிறது. இதுவே தற்போது டயர்களுக்கு நைட்ரஜன் ஏர் பிடிப்பது என்பது தற்போது டிரெண்டாகிவிட்டது. அதாவது கம்பிரஷர் ஏர் போல இல்லாமல் முழுமையாக நைட்ரஜன் காற்று மட்டும் கொண்ட வாயுவை டயரில் அடைத்தால் நன்மை என் பேச்சு நிலவி வருகிறது.

எல்லாமே ஏமாத்து வேலையா . . . டயர்களில் நைட்ரஜன் காற்றைப் பிடிப்பதால் எந்த பயனும் இல்லை . . . உண்மையாக நடப்பது இதுதான் . . .

முதலில் சாதாரண காற்றை அடைப்பதால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படுகிறது என்பதைப் பார்ப்போம். ஒரு டயரில் காற்றை நிரப்பி விட்டால் அது குறிப்பிட்ட நாளுக்குள் வாகனத்தைப் பயன்படுத்தினாலும் படுத்தாவிட்டாலும் இறங்கிவிடும். இது ஒரு பிரச்சனை மற்றது நீண்ட நாட்களாக டயருக்குள் காற்று இருக்கும் போது காற்றில் உள்ள வாயுக்கள் கொஞ்ச நாளில் சுற்றியுள்ள டியூப் அல்லது டியூப்லெஸ் டயர்களில் மாற்றங்களை ஏற்படுத்தத் துவங்கிவிடும் இதனால் டியூப் அல்லது டயர்கள் வலுவிழந்துவிடும்.

எல்லாமே ஏமாத்து வேலையா . . . டயர்களில் நைட்ரஜன் காற்றைப் பிடிப்பதால் எந்த பயனும் இல்லை . . . உண்மையாக நடப்பது இதுதான் . . .

இந்த பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கத் தான் நைட்ரஜன் ஏர் கொண்டு வரப்பட்டது. நைட்ரஜன் ஏர் சாதாரண காற்றை விட 40 சதவீதம் குறைவாகவே வெளியேறும். அதே போல நைட்ரஜன் வாயு ரப்பர்களில் அதிகம் பாதிப்பை ஏற்படுத்தாது. இது தான் நைட்ரஜன் காற்றைப் பயன்படுத்துவதற்கான காரணம். ஆனால் சாதாரண காற்றுக்குள் நைட்ரஜன் காற்றும் ஒரு டயரின் வாழ்நாள் மற்றும் செயல்திறனை ஒப்பிடும் போது இரண்டும் பெரிய அளவில் பாதிப்பில்லை.

எல்லாமே ஏமாத்து வேலையா . . . டயர்களில் நைட்ரஜன் காற்றைப் பிடிப்பதால் எந்த பயனும் இல்லை . . . உண்மையாக நடப்பது இதுதான் . . .

அதாவது சரியாக டயரை பராமரிப்பவர்களுக்கு இரண்டு விதமான காற்றும் ஒரே மாதிரியான செயல்திறன் மற்றும் உழைப்பையே வழங்குகிறது. ஆக நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் வாகனத்தில் சாதாரண காற்றுக்கும் நைட்ரஜன் காற்றுக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது. சாதாரண பயன்பாட்டு வாகனத்தில் சாதாரண காற்றை அடித்தாலே போதுமானது தான். ஆனால் முறையாகப் பராமரிப்பு வேண்டும். முறையான பராமரிப்பு இல்லாதவர்களுக்கு நைட்ரஜன் ஏர் சற்று கூடுதலான பலனைத் தரலாம்.

எல்லாமே ஏமாத்து வேலையா . . . டயர்களில் நைட்ரஜன் காற்றைப் பிடிப்பதால் எந்த பயனும் இல்லை . . . உண்மையாக நடப்பது இதுதான் . . .

ஆனால் ரேஸ் கார்கள் அப்படியல்ல. ரேஸ் கார்களில் டயர்களில் நைட்ரஜன் காற்று தான் அவசியம். இது போட்டியின் முடிவையே மாற்றியமைக்கும் அளவிற்கு வித்தியாசமான செயல் திறனை வழங்கும். அதனால் ரேஸ் கார்களில் நைட்ரஜன் காற்று அடைக்கப்பட்ட டயர்களை மட்டும் தான் பயன்படுத்துவார்கள். இப்பொழுது பலருக்கு தோன்றால் ஏன் நைட்ரஜன் காற்று ரேஸ் கார்களில் மட்டும் முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. ஆனால் சாதாரண கார்களில் முக்கியத்துவம் இல்லாததாகிறது எனத் தோன்றலாம் அதற்கான காரணமும் இருக்கிறது.

எல்லாமே ஏமாத்து வேலையா . . . டயர்களில் நைட்ரஜன் காற்றைப் பிடிப்பதால் எந்த பயனும் இல்லை . . . உண்மையாக நடப்பது இதுதான் . . .

பொதுவாக டயர்களுக்குள் இருக்கும் காற்று வெப்ப சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றம் பெறும். உதாரணமாக அதிக வெப்பமாக இருக்கும் போது விரிவடையும், குளிராக இருக்கும் போது சுருங்கும். ரேஸ் கார்களில் டயர்கள் மிக வேகமாகச் செயல்படும் என்பதால் அதில் வெப்பம் அதிகமாகும். இதனால் சூட்டில் டயருக்குள் இருக்கும் காற்று விரிவடையும். இதுவே சாதாரண காற்றாக இருந்தால் அதில் உள்ள ஆக்ஸிஜன் வேகமாக விரிவடையும். இதனால் முழுமையாக டைட்டாக காற்று அடைக்கப்பட்டிருப்பதால் டயர் வெடிக்கவும் வாய்ப்பு இருக்கிறது.

எல்லாமே ஏமாத்து வேலையா . . . டயர்களில் நைட்ரஜன் காற்றைப் பிடிப்பதால் எந்த பயனும் இல்லை . . . உண்மையாக நடப்பது இதுதான் . . .

இதுவே முழுமையாக நைட்ரஜன் காற்று என்றால் சூடாகும் போது காற்று விரிவடைவது குறையும் இதனால் டயருக்கு ஏற்படும் பாதிப்பிற்கான வாய்ப்பு குறைவாக இருக்கும். ஆனால் சாதாரண கார்களில் நாம் அவ்வளவு வேகத்தில் செல்லப்போவதில்லை. அதனால் இது மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தப்போவதில்லை. இந்த நைட்ரஜன் ஏர் குறித்த பல்வேறு புரளிகளும் வலம் வந்து கொண்டு தான் இருக்கிறது.

எல்லாமே ஏமாத்து வேலையா . . . டயர்களில் நைட்ரஜன் காற்றைப் பிடிப்பதால் எந்த பயனும் இல்லை . . . உண்மையாக நடப்பது இதுதான் . . .

பலர் நைட்ரஜன் ஏரை டயர்களில் பிடித்தால் வாகனத்தில் வேகமாக பயணிக்கலாம் எனச் சொல்லுவார்கள். சிலர் நைட்ரஜன் ஏரை பிடிப்பதால் வாகனத்தின் மைலேஜ் கூடும் எனச் சொல்லுவார்கள். இது எல்லாம் முற்றிலும் புரளி காற்றின் அழுத்தத்தின் அளவு மட்டுமே இதில் முக்கிய இடம் பிடிக்குமே தவிர எந்த காற்று என்பதில் இந்த வித்தியாசம் ஏற்படாது. இதனால் இதை நம்ப வேண்டாம். நைட்ரஜன் ஏர் பிடிப்பதால் சாதாரணமாகப் பயன்படுத்தப்படும் வாகனங்களுக்குப் பெரிய மாற்றங்கள் எதுவும் ஏற்படப்போவதில்லை என்பதே உண்மை

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Difference between nitrogen and compressor air
Story first published: Saturday, September 24, 2022, 17:15 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X