டுவிட்டரால் பிரகாசமான மாற்று திறனாளியின் வாழ்க்கை... சிறப்பு தகவல்...!

டுவிட்டரால் மாற்று திறனாளி இளைஞர் ஒருவரின் வாழ்க்கை பிரகாசமாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

டுவிட்டரால் பிரகாசமான மாற்று திறனாளியின் வாழ்க்கை... சிறப்பு தகவல்...!

பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் இந்தியாவின் ஒவ்வொரு முக்கிய நகரத்தின் சாலையிலும், கருப்பு, சிவப்பு, ஆரஞ்சு போன்ற வண்ண உடைகளில் குறுக்கும் நெடுக்குமாக, முதுகில் ஒரு பையை சுமந்தவாறு, பைக்குகளில் பறந்துக் கொண்டிருப்பவர்களை நாம் கண்டிருப்போம்.

டுவிட்டரால் பிரகாசமான மாற்று திறனாளியின் வாழ்க்கை... சிறப்பு தகவல்...!

இவர்கள், முகம் தெரியாத யாரோ ஒரு நபருக்காக, சொற்ப அளவில் கிடைக்கும் கமிஷனுக்காக, வெயில், மழை என எதுவும் பாராமல் உணவுகளை உரியவரிடம் கொண்டு சேர்க்கும் 'டெலிவரி பாய்ஸ்'-கள் தான் அவர்கள்.

டுவிட்டரால் பிரகாசமான மாற்று திறனாளியின் வாழ்க்கை... சிறப்பு தகவல்...!

சாலையில் எந்த வாகனத்தைப் பார்க்கிறோமோ இல்லையோ குறைந்தது ஒரு ஃபுட் டெலிவரி பாயை-யாவது பார்த்துவிடலாம். அந்த அளவிற்கு தேன் கூட்டைச் மொய்த்துக்கொண்டிருக்கும் தேனீக்களைப் போன்று இங்கும் அங்குமாக, ஒவ்வொரு உணவு விடுதிக்கு முன்பாகவும், சாலையிலும் எப்போதும் திறிந்துக் கொண்டே இருப்பார்கள்.

டுவிட்டரால் பிரகாசமான மாற்று திறனாளியின் வாழ்க்கை... சிறப்பு தகவல்...!

அண்மைக் காலங்களாக ஏற்பட்டு வரும் வேலையில்லா திண்டாட்டத்தின் காரணமாக, பெருவாரியான இளைஞர்கள் ஒரு பைக்கை இஎம்ஐ-யில் வாங்கிக் கொண்டு, சாப்பாட்டினை டெலிவரிச் செய்ய பணியில் சேர்ந்து விடுகின்றனர்.

டுவிட்டரால் பிரகாசமான மாற்று திறனாளியின் வாழ்க்கை... சிறப்பு தகவல்...!

இதில் கிடைப்பது என்னமோ, சொற்ப வருமானம்தான். இருப்பினும், தன் கையை எதிர்பார்த்து நிற்கும் குடும்பத்தினருக்கு கணிசமான தொகையை வழங்கியாவது, குடும்ப பாரத்தை சுமக்கும் நினைக்கும் இளைஞர்கள் இதில் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.

டுவிட்டரால் பிரகாசமான மாற்று திறனாளியின் வாழ்க்கை... சிறப்பு தகவல்...!

அவ்வாறு, படித்தவர்கள், படிக்காதவர்கள் என பல தரப்பட்ட இளைஞர்கள் இதில் இணைந்து பணியாற்றி வருகின்றனர். அவ்வாறு, இந்தியாவின் நம்பர்-1 ஃபுட் டெலிவரி சர்வீஸ் என கூறப்படும் சொமேட்டோவில் இணைந்து பணியாற்றி வரும் இளைஞர் ஒருவர், ஓவர் நைட் ஒபமா-வைப் போன்று பிரபலமாகியுள்ளார். இதுகுறித்த செய்தியை என்டிடிவி ஆங்கில இணையதளம் வெளியிட்டுள்ளது.

MOST READ: மேஜிக் டெக்னாலஜி உடன் மாருதி சுஸுகி பலேனோ கார்... என்னவென்று தெரியுமா?

டுவிட்டரால் பிரகாசமான மாற்று திறனாளியின் வாழ்க்கை... சிறப்பு தகவல்...!

ராஜஸ்தான் மாநிலம், பெவார் பகுதியைச் சேர்ந்தவர் ராமு சாஹு. பிறவிலேயே மாற்றுத்திறனாளியான இவர், அண்மையில் சொமேட்டோவில் ஃபுட் டெலிவரி பாயாக பணிக்கு சேர்ந்துள்ளார். குடும்பத்தின் வருமையான சூழ்நிலை காரணமாக பணிக்குச் சேர்ந்த இவர், கைகளால் இயக்கப்படும் டிரை சைக்கிளை நம்பியே உணவுகளை டெலிவரி செய்து வந்துள்ளார்.

அவ்வாறு, ஓர் நாள் டெலிவரி செய்ய கைகளால் இயக்கப்படும் டிரை சைக்கிளில் ராமு சென்றுள்ளார். இதனைக் கண்ட இளைஞர் ஒருவர், வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார். அதில், டுவிட்டரில் பதிவிட்ட வீடியோ, மிக வேகமாய் வைரலாகியது.

மாற்றுத் திறனாளியாக இருந்தாலும், உழைத்து உண்ண வேண்டும் என்ற அவரின் செயல் பலரிடையே பாராட்டைப் பெற்றது. மேலும், பலர் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

டுவிட்டரால் பிரகாசமான மாற்று திறனாளியின் வாழ்க்கை... சிறப்பு தகவல்...!

இந்த வீடியோவானது, சொமேட்டோ கேப்சனுடன் அதிகம் பரப்பப்பட்டதால், அந்த நிறுவனத்தின் சிஇஓ-வுக்கு இதுகுறித்த தகவல் தெரியவந்தது. உடனே, சொமேட்டோ நிர்வாகம் சார்பாக, ராமு சாஹு-வுக்கு பேட்டரியால் இயங்கும் மூன்று சக்கர வாகனம் பரிசாக வழங்கப்பப்பட்டது. இதனை, அந்த நிருவனத்தின் சிஇஓ தீபிந்தர் கோயல், ராமுவுக்கு பரிசாக வழங்க உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

மேலும், ராமு சாஹுவின் தன்னம்பிக்கையையும், மனு உறுதியையும் ஊக்குவிக்கும் வகையில் இதை செய்திருப்பதாக சொமேட்டோ சிஇஓ கோயல், அவரது டுவிட்டர் பதிவிட்டுள்ளார். இத்துடன் ராமு சாஹு அந்த எலக்ட்ரிக் சைக்கிளை இயக்குவதைப் போன்ற வீடியோ ஒன்றையும் அவர் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோக்கள் தற்போது இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Differently Abled Delivery Boy Gets Electric Vehicle From Zomatto. Read In Tamil.
Story first published: Thursday, May 30, 2019, 16:54 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X