ஆசிரியர்களுக்கு அதிரடி உத்தரவிட்ட தமிழக பள்ளிக் கல்வித்துறை: என்னனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

தமிழக பள்ளி கல்வித்துறை, ஆசிரியர்கள் மற்றும் அனைத்து பணியாளர்களுக்கும் ஓர் புதிய உத்தரவை விதித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

ஆசிரியர்களுக்கு அதிரடி உத்தரவிட்ட தமிழக பள்ளிக் கல்வித்துறை: என்னனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

ஹெல்மெட் விவகாரத்தில் நாடு முழுவதும் பல அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேசமயம், ஹெல்மெட் மட்டுமின்றி போக்குவரத்து விதிமீறலுக்கு எதிராகவும் பல்வேறு சட்டதிட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

ஆசிரியர்களுக்கு அதிரடி உத்தரவிட்ட தமிழக பள்ளிக் கல்வித்துறை: என்னனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

அந்தவகையில், போக்குவரத்து விதிமீறல்களை முழுமையாக ஒழித்துக்கட்டும்வகையில், முன்னதாக விதிக்கப்பட்டு வந்த போக்குவரத்து விதிமீறல் அபராதத்தொகையை பன்மடங்கு மத்திய அரசு உயர்த்தி அறிவித்தது.

அவ்வாறு, திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்ட மசோதாவை கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் மத்திய சாலை மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சகம் வெளியிட்டது.

ஆசிரியர்களுக்கு அதிரடி உத்தரவிட்ட தமிழக பள்ளிக் கல்வித்துறை: என்னனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

இச்சட்டத்தில், சாலை விதிமுறைகளை முறையாக கடைபிடிக்காத வாகன ஓட்டிகளிடம் இருந்து தற்போது வசூலிக்கப்பட்டு வரும் அபராதத்தை பத்து மடங்கு அதிகப்படுத்தி வசூலிக்க வழிவகைச் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு, நாட்டில் போக்குவரத்து விதிமீறலுக்கு எதிராக இரும்புக் கரம் ஓங்கியிருக்கும்நிலையில், அந்தந்த மாநில அரசுகளும் தங்கள் பங்காக சில கெடுபிடிகளை வாகன விதிமீறலுக்கு எதிராக எடுக்க ஆரம்பித்துள்ளது.

ஆசிரியர்களுக்கு அதிரடி உத்தரவிட்ட தமிழக பள்ளிக் கல்வித்துறை: என்னனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

இந்நிலையில், தமிழக அரசும் அம்மாதிரியான ஓர் அதிரடி நடவடிக்கை கையில் எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், இம்முறை வாகன ஓட்டிகள் மீது இல்லாமல், ஆசியர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. அந்தவகையிலான ஓர் புதிய அறிவிப்பைதான் தமிழக பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

ஆசிரியர்களுக்கு அதிரடி உத்தரவிட்ட தமிழக பள்ளிக் கல்வித்துறை: என்னனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

அது வெளியிட்டுள்ள அறிக்கையில், "இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு வரும் ஆசியர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணியவேண்டும். உடற்கல்வி ஆசிரியர்கள் தினம்தோறும் ஒரு மணி நேரம் போக்குவரத்தைச்சீர் செய்யும் பணியில் ஈடுபட வேண்டும்" என உத்தரவிட்டுள்ளது.

ஆசிரியர்களுக்கு அதிரடி உத்தரவிட்ட தமிழக பள்ளிக் கல்வித்துறை: என்னனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

இதுகுறித்து, தமிழக பள்ளிகல்வித் துறை இயக்குநர் எஸ்.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

ஆசிரியர்களுக்கு அதிரடி உத்தரவிட்ட தமிழக பள்ளிக் கல்வித்துறை: என்னனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

அதில், இந்திய தேசிய குற்றவியல் அறிக்கையின்படி, தமிழகத்தில் சாலை விபத்தில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 65 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இதில், 18 வயதுக்கு குறைந்தவர்களே அதிகமாக உள்ளனர். அது 569 ஆகும். சாலை விதிமுறை மீறலே இதற்கு முக்கிய காரணமாக இருக்கின்றது.

ஆசிரியர்களுக்கு அதிரடி உத்தரவிட்ட தமிழக பள்ளிக் கல்வித்துறை: என்னனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

18 வயதுக்கும் குறைந்தவர்கள் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனத்தை இயக்குவதன் காரணமாகவே உயிரிழப்புகள் அதிகரித்து வருவதாக கூறப்படுகின்றது. குறிப்பாக தலைக்கவசம் அணியாததும், போக்குவரத்து விதிமுறைகளை முறையாக கடைபிடிக்காதே முக்கிய காரணங்களாக உள்ளன.

ஆசிரியர்களுக்கு அதிரடி உத்தரவிட்ட தமிழக பள்ளிக் கல்வித்துறை: என்னனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

விபத்துகளைக் குறைப்பதில் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் பொறுப்புண்டு. ஆகையால், இதை உணர்ந்து தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் என அனைத்துப் பணியாளர்களும் தலைக்கவசம் அணிந்து பள்ளிக்கு வர வேண்டும். மாணவர்களுக்கு கல்வியறிவை வழங்குவது மட்டுமல்லாமல், முன்னோடியாக, தலைக்கவசம் அணிந்து வருவது மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும். சமூகத்தில் மாற்றம் செய்ய இது ஓர் முயற்சியாக இருக்கும்.

ஆசிரியர்களுக்கு அதிரடி உத்தரவிட்ட தமிழக பள்ளிக் கல்வித்துறை: என்னனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

அதேபோன்று பள்ளிகளில் இறைவணக்க கூட்டத்தின் போது சாலைப் பாதுகாப்பு விதிமுறைகள் பற்றி கூற வேண்டும். பேருந்தில் படிக்கட்டில் நின்று பயணம் செய்யக்கூடாது, சாலைகளை இருபுறமும் பார்த்து கடக்க வேண்டும் உள்ளிட்ட விழிப்புணர்வை மாணவர்களுக்கு எடுத்துக் கூற வேண்டும்.

ஆசிரியர்களுக்கு அதிரடி உத்தரவிட்ட தமிழக பள்ளிக் கல்வித்துறை: என்னனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

அனைத்து மாணவர்களையும் ஒரே நேரத்தில் பள்ளி முடிந்து அனுப்புவதால் தான் மாணவர்கள் பேருந்தில் நெரிசல் ஏற்பட்டு, தொங்கிய படி செல்கின்றனர். ஆகையால், சிறிது கால இடைவெளி விட்டு மாணவர்களை வெளியேற்ற வேண்டும்.

ஆசிரியர்களுக்கு அதிரடி உத்தரவிட்ட தமிழக பள்ளிக் கல்வித்துறை: என்னனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

இத்துடன்,மாணவ, மாணவிகளின் நலன் கருதி உடற்கல்வி ஆசிரியர்கள் பேருந்து நிறுத்தத்தில் ஒரு மணி நேரம் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட வேண்டும். இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு வந்தால் அவர்களை பள்ளிக்குள் அனுமதிக்கக் கூடாது. மேலும், அனைத்து வகையான பள்ளிகளிலும் சாலை பாதுகாப்பு மன்றத்தை தொடங்கி அதில் மாணவர்களை சேர்த்து சிறப்பாக செயல்படுத்த வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்களுக்கு அதிரடி உத்தரவிட்ட தமிழக பள்ளிக் கல்வித்துறை: என்னனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

தமிழக அரசின் இந்த அதிரடி உத்தரவு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கின்றது. இருசக்கர வாகன ஓட்டிகளின் பாதுகாப்பில், ஹெல்மெட் மிக முக்கிய பங்காற்றி வருகின்றது. இதன்காரணமாகவே, இந்தியாவில் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஏனென்றால், இருசக்கர வாகன விபத்தில் பெரும்பாலானோர் உயிரிழப்பதற்கு, ஹெல்மெட் அணியாமல் செல்வதே மிக முக்கிய காரணமாக இருக்கின்றது.

ஆசிரியர்களுக்கு அதிரடி உத்தரவிட்ட தமிழக பள்ளிக் கல்வித்துறை: என்னனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

ஆகையால், இருசக்கர வாகனத்தை இயக்குபவரும், பின்னால் அமர்ந்து செல்லுபவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இந்த புதிய உத்தரவினை தீவிரப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.

ஆசிரியர்களுக்கு அதிரடி உத்தரவிட்ட தமிழக பள்ளிக் கல்வித்துறை: என்னனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

ஆனால், பெரும்பாலான இருசக்கர வாகன ஓட்டிகள் இதனை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. ஆகையால், இதுபோன்று போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க, அரசு அவ்வப்போது புதிய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Directorate School Education Ordered To Wear Helmet Must School Teachers. Read In Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X