வெறும் 19 வயது தான்!! ராயல் என்பீல்டு பைக்குகளை பழுதுப்பார்ப்பதில் புகுந்து விளையாடும் கேரள இளம்பெண்!

இந்தியா மட்டுமல்ல, உலகளவில் பிரபலமான மோட்டார்சைக்கிள் பிராண்டை எடுத்து பார்த்தோமேயானால், நிச்சயம் அதில் ராயல் என்பீல்டின் பெயரும் இருக்கும். அந்த அளவிற்கு ராயல் என்பீல்டு பைக்குகளுக்கு ரசிகர் கூட்டம் உள்ளது.

வெறும் 19 வயது தான்!! ராயல் என்பீல்டு பைக்குகளை பழுதுப்பார்ப்பதில் புகுந்து விளையாடும் கேரள இளம்பெண்!

சென்னையில் தொழிற்சாலை அமைத்து செயல்பட்டு வரும் ராயல் என்பீல்டு நிறுவனம் ரெட்ரோ-ஸ்டைல் மோட்டார்சைக்கிள்கள் மூலமாக மற்ற மோட்டார்சைக்கிள் தயாரிப்பு நிறுவனங்களில் இருந்து தனித்து தெரிகிறது. குறிப்பாக இந்த நிறுவனத்தின் புல்லட் & கிளாசிக் பைக்குகளுக்கு உலகளவில் ரசிகர்கள் உள்ளனர்.

வெறும் 19 வயது தான்!! ராயல் என்பீல்டு பைக்குகளை பழுதுப்பார்ப்பதில் புகுந்து விளையாடும் கேரள இளம்பெண்!

அதேபோல் ராயல் என்பீல்டு பைக்குகளுக்கு உயிரை கொடுக்க கூட தயாராக இருக்கும் மெக்கானிக்குகளும் இருக்கின்றனர். அத்தகையவர்களில் சிலர் ராயல் என்பீல்டு பைக்குகளை மட்டுமே பழுது பார்ப்பது என்கிற நெறிமுறைகளை கொண்டிருப்பது உண்டு. அத்தகைய மெக்கானிக்குகளுள் ஒருவரை பற்றி தான் இந்த செய்தியில் பார்க்க போகின்றோம்.

வெறும் 19 வயது தான்!! ராயல் என்பீல்டு பைக்குகளை பழுதுப்பார்ப்பதில் புகுந்து விளையாடும் கேரள இளம்பெண்!

இந்த மெக்கானிக்கை மட்டுமே குறிப்பிட்டு பார்ப்பதற்கு காரணம், இவர் வெறும் 19 வயதான இளம்பெண் ஆவார். கேரளா, கோட்டயம் மாவட்டத்தை சேர்ந்த இவர் ராயல் என்பீல்டு பைக்குகளை தாமாகவே கழற்றி, மாட்டி பழுது பார்ப்பது, பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இது தொடர்பாக மீடியாஒன் டிவி நேரலை என்கிற யுடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவினை கீழே காணலாம்.

Image Courtesy: MediaoneTV Live

சுற்றுவட்டார பகுதிகளை ஆச்சிரியத்திற்கு உள்ளாக்கி இருக்கும் இந்த இளம்பெண்ணின் பெயர் தியா ஆகும். தந்தையுடன் இணைந்து அவரது மெக்கானிக் கடையில் அவ்வப்போது ராயல் என்பீல்டு பைக்குகளை பழுதுப்பார்ப்பாராம். இதனாலேயே தியாவின் தந்தை வைத்திருக்கும் இந்த மெக்கானிக் கடை ராயல் என்பீல்டு பைக்குகளை பழுது பார்ப்பதில் நிபுணத்துவம் வாய்ந்ததாக அங்குள்ளவர்களால் கூறப்படுகிறது.

வெறும் 19 வயது தான்!! ராயல் என்பீல்டு பைக்குகளை பழுதுப்பார்ப்பதில் புகுந்து விளையாடும் கேரள இளம்பெண்!

தியாவிற்கு ஒரு 15 வயது இருக்கும் அப்போது தான் தனது தந்தையிடம் தனக்கும் ராயல் என்பீல்டு பைக்குகளை பழுது பார்க்க விருப்பமாக உள்ளதாக தெரிவித்து இருக்கிறார். அப்போதில் இருந்துதான் எல்லாமே ஆரம்பமானது. மற்ற பைக்குகளுடன் ஒப்பிடுகையில் ராயல் என்பீல்டு பைக்குகளை பழுது பார்ப்பது சற்று கடினம், சற்று வேறுப்பட்டது என்றுகூட சொல்லலாம்.

வெறும் 19 வயது தான்!! ராயல் என்பீல்டு பைக்குகளை பழுதுப்பார்ப்பதில் புகுந்து விளையாடும் கேரள இளம்பெண்!

ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள் பற்றி தனது தந்தையும், கேரேஜில் உள்ள மற்ற தொழிலாளர்களும் கற்பித்ததாக தியா வீடியோவில் கூறுவதை கேட்கலாம். இத்தனை வருடங்களில் ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள்கள் பற்றி தியா கிட்டத்தட்ட அனைத்தையும் தெரிந்து கொண்டுவிட்டார். இதனாலேயே அவர் அவற்றை பழுது பார்க்க அத்தனை விதங்களில் தகுதியானவராக இருக்கிறார்.

வெறும் 19 வயது தான்!! ராயல் என்பீல்டு பைக்குகளை பழுதுப்பார்ப்பதில் புகுந்து விளையாடும் கேரள இளம்பெண்!

கடந்த வருடங்களில் பல ராயல் என்பீல்டு பைக்குகளை பழுது பார்த்துள்ள தியா, பாலின வேறுபாடு இன்றி எவரொருவரும் ராயல் என்பீல்டு பிராண்டின் மீது காதல் கொண்டிருக்கலாம் என்பதற்கு மிக சிறந்த உதாரணம் எனவும், தியா இந்த வேலைக்காக தன்னை மனதளவில் உறுதியாக தயார்படுத்தி கொண்டுள்ளார் எனவும் தியாவின் தந்தையின் நண்பர் ஜோசப் என்பவர் வீடியோவில் தெரிவித்துள்ளார்.

வெறும் 19 வயது தான்!! ராயல் என்பீல்டு பைக்குகளை பழுதுப்பார்ப்பதில் புகுந்து விளையாடும் கேரள இளம்பெண்!

ராயல் என்பீல்டு பைக்குகள் மீது இந்த தீராத காதல் குறித்து தியா பேசுகையில், ரெட்ரோ தோற்றம், புல்லட்டின் அடையாளமான உறுமும் எக்ஸாஸ்ட் சத்தம் இவை தான் தன்னை ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள் பக்கம் சாய்ந்தன என்கிறார். தியாவிற்கு குறிப்பாக ராயல் என்பீல்டு தண்டர்பேர்டு மாடல் மிகவும் பிடித்ததாக உள்ளது.

வெறும் 19 வயது தான்!! ராயல் என்பீல்டு பைக்குகளை பழுதுப்பார்ப்பதில் புகுந்து விளையாடும் கேரள இளம்பெண்!

பள்ளி படிப்பை நிறைவு செய்துள்ள தியா கல்லூரியில் சேருவதற்கு தயாராகி வருகிறார். எதிர்காலத்தில் படிப்பையும், ராயல் என்பீல்டு பைக்குகள் மீதான ஃபேஷனையும் சமமாக பார்க்க திட்டமிட்டுள்ளதாக தியா இந்த வீடியோவில் தெரிவித்துள்ளார். ராயல் என்பீல்டு நிறுவனம் சமீபத்தில் தான் அதன் கிளாசிக் 350 பைக்கை புதிய தலைமுறைக்கு அப்கிரேட் செய்தது உங்களில் சிலருக்கு நினைவிருக்கலாம்.

வெறும் 19 வயது தான்!! ராயல் என்பீல்டு பைக்குகளை பழுதுப்பார்ப்பதில் புகுந்து விளையாடும் கேரள இளம்பெண்!

ஐந்து விதமான வேரியண்ட்களில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ள 2021 கிளாசிக் 350 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.1.84 லட்சத்தில் இருந்து ரூ.2.15 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. தோற்றத்தில் முந்தைய தலைமுறை கிளாசிக் 350 பைக்குடன் ஒப்பிடுகையில் பெரிய அளவில் எந்த மாற்றம் இல்லை என்றாலும், மீட்டியோர் 350 பைக்கை உருவாக்க பயன்படுத்தப்பட்ட புதிய ஜே-ப்ளாட்ஃபாரத்தில் புதிய தலைமுறை கிளாசிக் உருவாக்கப்பட்டுள்ளது.

வெறும் 19 வயது தான்!! ராயல் என்பீல்டு பைக்குகளை பழுதுப்பார்ப்பதில் புகுந்து விளையாடும் கேரள இளம்பெண்!

இதனால் திருத்தியமைக்கப்பட்ட இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரை பெற்றுள்ள 2021 கிளாசிக் 350 பைக்கில் மீட்டியோர் 350-இல் அறிமுகப்படுத்தப்பட்ட 350சிசி, சிங்கிள்-சிலிண்டர், ஃப்யுல்-இன்ஜெக்டட் என்ஜினை ராயல் என்பீல்டு நிறுவனம் வழங்கியுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 20.2 பிஎச்பி மற்றும் 27 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

Most Read Articles
English summary
Diya 19 year old girl repairs royal enfield motorcycles
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X