விமானம், ஹெலிகாப்டர் இரண்டும் ஒரே எரிபொருளில் இயங்குமா?.. இத்தன ரக எரிபொருள் பயன்பாட்டுல இருக்கா!..

விமானம், ஹெலிகாப்டர் இவை இரண்டும் ஒரே எரிபொருளில் இயங்குமா என்கிற கேள்விக்கான பதிலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

என்ன மாதிரியான எரிபொருள் விமானங்களில் பயன்படுத்தப்படுகின்றன... ஹெலிகாப்டர் - விமானம் இரண்டிற்கு ஒரே மாதிரியான எரிபொருளை உபயோகிக்க முடியுமா?

விமானம், ஹெலிகாப்டர் வான்-வழியை பயன்படுத்தி பயணிகளை ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு அழைத்து செல்ல உதவுகின்றன. இந்த இரண்டின் இயக்கத்திற்கும் ஒரே மாதிரியான எரிபொருள்தான் பயன்படுத்துவதாக சில வதந்திகள் பரவிக் கொண்டிருக்கின்றன. அது உண்மைதானா என்கிற தகவலையே இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம்.

என்ன மாதிரியான எரிபொருள் விமானங்களில் பயன்படுத்தப்படுகின்றன... ஹெலிகாப்டர் - விமானம் இரண்டிற்கு ஒரே மாதிரியான எரிபொருளை உபயோகிக்க முடியுமா?

அதாவது, ஹெலிகாப்டர் - விமானம் ஆகிய இரண்டும் பறப்பதற்கு ஒரே மாதிரியான எரிபொருள்தான் உபயோகிக்கப்படுகின்றனவா என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

என்ன மாதிரியான எரிபொருள் விமானங்களில் பயன்படுத்தப்படுகின்றன... ஹெலிகாப்டர் - விமானம் இரண்டிற்கு ஒரே மாதிரியான எரிபொருளை உபயோகிக்க முடியுமா?

விமான துறையில் ஐந்துக்கும் மேற்பட்ட ஆயில் ரகங்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. ஆகையால், அவற்றின் பட்டியல் சற்று நீளமாக காணப்படுகின்றது. ஜெட் ஏ/ஏ-1 (Jet A/A-1), ஜெட் பி (Jet B), டிஎஸ்-1 (TS-1), அவ்கஸ் 100 (Avgas 100), அவ்கஸ் 100எல்எல் (Avgas 100LL) மற்றும் ஜிபி-1 முதல் ஜிபி-10 வரை (JP-1 to JP-10) என பன்முக ரக எரிபொருள்கள் விமான துறையில் உபயோகத்தில் உள்ளன.

என்ன மாதிரியான எரிபொருள் விமானங்களில் பயன்படுத்தப்படுகின்றன... ஹெலிகாப்டர் - விமானம் இரண்டிற்கு ஒரே மாதிரியான எரிபொருளை உபயோகிக்க முடியுமா?

இதில் ஜேபி-1 - ஜேபி 10 வரையிலான எரிபொருள் மிலிட்டரி விமானங்களுக்கு பயன்படுத்தப்படுகின்றன. இதேபோல், சிறிய ரக பிஸ்டன் பவர்டு பிரைவேட் ஜெட்களின் இயக்கத்திற்கு 100எல்எல் ஃப்யூவல் பயன்படுத்தப்படுகின்றது. இவ்வாறு, விமானங்களின் ரகத்திற்கு ஏற்ப மாறுபட்ட ஃப்யூவல் பயன்படுத்தப்படுகின்றது. பயணிகள் விமானங்களான போயிங் 737 மற்றும் 747 போன்ற டர்பைன் பவர்டு விமானங்களில் ஜெட்-ஏ ஏவியேஷன் ஃபயூவல் பயன்படுத்தப்படுகின்றது.

என்ன மாதிரியான எரிபொருள் விமானங்களில் பயன்படுத்தப்படுகின்றன... ஹெலிகாப்டர் - விமானம் இரண்டிற்கு ஒரே மாதிரியான எரிபொருளை உபயோகிக்க முடியுமா?

ஹெலிகாப்டர், ஏரோபிளேன் இரண்டும் ஒரே எரிபொருளில் இயங்குமா?

இப்பதான் முக்கியமான கேள்விக்குள்ள நுழைஞ்சிருக்கோம். இந்த கேள்விக்கான பதில் முடியும். ஆமாங்க, ஹெலிகாப்டர் மற்றும் விமானம் இரண்டும் ஒரே எரிபொருளில் இயங்கும். அதாவது, பிஸ்டன் பவர்டு விமானம் மற்றும் ஹெலிகாப்டர்களுக்கு 100எல்எல் எனப்படும் ஒரே மாதிரியான ஃப்யூவலே பயன்படுத்தப்படுகின்றது. இதேபோல், டர்பைன் பவர்டு ஹெலிகாப்டர்களும் பயன்பாட்டில் உள்ளன. இவற்றின் இயக்கத்திற்கு டர்பைன் பவர்டு விமானங்களின் இயக்கத்திற்கு பயன்படுத்தப்படும் ஜெட்-ஏ டர்பைன் ஃப்யூவலே பயன்படுத்தப்படுகின்றது.

என்ன மாதிரியான எரிபொருள் விமானங்களில் பயன்படுத்தப்படுகின்றன... ஹெலிகாப்டர் - விமானம் இரண்டிற்கு ஒரே மாதிரியான எரிபொருளை உபயோகிக்க முடியுமா?

விமானங்கள் எந்த அளவு எரிபொருளை உறிஞ்சும்?

விமானங்களின் உருவத்திற்கு ஏற்ப அவற்றின் எரிபொருள் உறிஞ்சும் தன்மையும் மாறுபட்டுக் காட்சியளிக்கின்றது. இதேபோல், ரேஞ்ஜ் உள்ளிட்டவையும் மாறுபட்டுக் காட்சியளிக்கின்றது.

என்ன மாதிரியான எரிபொருள் விமானங்களில் பயன்படுத்தப்படுகின்றன... ஹெலிகாப்டர் - விமானம் இரண்டிற்கு ஒரே மாதிரியான எரிபொருளை உபயோகிக்க முடியுமா?

பெரிய விமானங்கள்:

உதாரணமாக, போயிங் 747 விமானத்தை எடுத்துக் கொள்ளலாம். இந்த விமானம் தோராயமாக ஒவ்வொரு செகண்டிற்கும் ஒரு கேலன் (நான்கு லிட்டர்) எரிபொருளை உறிஞ்சுமாம். அதேவேலையில், 5 கேலன் எரிபொருளுக்கு ஒரு மைல் தூரம் பயணிக்கும். இந்த விமானம் லைண்டன் டூ கலிஃபோர்னியா பயணிக்கும் எனில் சுமார் 10 மணி நேரம் பயண காலம் ஆகும். இதற்கு சுமார் 1.50 லட்சம் லிட்டரை போயிங் 747 உபயோகப்படுத்தும்.

என்ன மாதிரியான எரிபொருள் விமானங்களில் பயன்படுத்தப்படுகின்றன... ஹெலிகாப்டர் - விமானம் இரண்டிற்கு ஒரே மாதிரியான எரிபொருளை உபயோகிக்க முடியுமா?

சிறிய விமானங்கள்:

சிறிய விமானம் அதன் உருவத்திற்கு ஏற்ப குறைவான அளவு எரிபொருளையே உபயோகிக்கும். உதாரணமாக செஸ்னா 172 விமானம், ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 6 முதல் 7 கேலன்கள் வரை எரிபொருளை பயன்படுத்தும். இதில் இரு டேங்க்கள் பயன்படுத்தப்பட்டிருக்கும். ஒவ்வொன்றிலும் 21.5 கேலன்கள் வரை எரிபொருளை நிரப்பிக் கொள்ள முடியும்.

என்ன மாதிரியான எரிபொருள் விமானங்களில் பயன்படுத்தப்படுகின்றன... ஹெலிகாப்டர் - விமானம் இரண்டிற்கு ஒரே மாதிரியான எரிபொருளை உபயோகிக்க முடியுமா?

எரிபொருளின் விலை:

விமானங்களின் எரிபொருளின் விலையும், வாகனங்களின் விலையைபோல் அவ்வப்போது ஏற்றப்பட்டு வருகின்றன. இதேபோல், அதன் டைப்பிற்கு ஏற்ப விலையும் மாறுபட்டுக் காட்சியளிக்கும். தற்போதைய நிலவரப்படி ஜெட் எரிபொருள் கிலோலிட்டர் ஒன்று ரூ. 1,25,599-க்கு விற்கப்படுகின்றது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Do airplanes helicopters can fly same type fuel
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X