கார் பைக்குகளில் இருப்பது போல ரயில் இன்ஜின்களிலும் கியர் இருக்குமா? இது எப்படிப் பயன்படுகிறது?

இந்திய ரயில் இன்ஜின்களில் கார், பைக்குகளில் உள்ளது போல கியர் இருக்குமா? அப்படி இருந்தால் அது எப்படிச் செயல்படுகிறது? அதை யார் மாற்ற வேண்டும்? இதற்குப் பின்னால் உள்ள தொழிற்நுட்பம் என்ன? விரிவான விபரங்களைக் காணலாம்

இந்திய ரயில்வே உலகின் மிகப்பெரிய ரயில்வே நெக்வொர்க்காகும். அமெரிக்கா, சீனா, ரஷ்யாவிற்கு அடுத்து அதிக நீளமான ரயில் பாதைகளைக் கொண்ட நாடு இந்தியா தான். இந்தியாவில் மொத்தம் 68 ஆயிரம் கி.மீ நீளம் ரயில்வே பாதை பயன்பாட்டில் உள்ளது. தினமும் சுமார் 13 ஆயிரம் ரயில்கள் இந்திய ரயில்வே சார்பில் இயக்கப்படுகிறது. இதில் லட்சக்கணக்கான பயணிகள் தினமும் பயணிக்கின்றனர். இப்படியான ரயில்வேயில் மக்கள் ஆச்சரியப்படும் படியான அல்லது மக்களுக்குப் பெரிதாகப் பரிட்சியம் இல்லாத பல விஷயங்கள் இருக்கிறது.

கார் பைக்குகளில் இருப்பது போல ரயில் இன்ஜின்களிலும் கியர் இருக்குமா? இது எப்படிப் பயன்படுகிறது?

இன்று நாம் கார், பைக்குகளை பயன்படுத்துகிறோம். இதில் கார் பைக்க வேகமாகப் பயன்படுத்த கியர்கள் இருக்கிறது. அது எல்லாம் நமக்குத் தெரிந்த விஷயம் தான் ஆனால் ரயில் இன்ஜின்களில் கியர்கள் இருக்குமா? அப்படி கியர் இருந்தால் அது எப்படி இயக்கப்படுகிறது. ரயிலில் நாம் பயணிக்கும் போது இந்த கியர் மாறுவதை நம்மால் உணர முடியுமா? இப்படியான பல சந்தேகங்கள் பலருக்கு இருக்கிறது. அதன் விளக்கத்தைக் காணலாம் வாருங்கள்.

ரயில் இன்ஜின்களிலும் கியர்கள் இருக்கிறது. ஆனால் அதற்குப் பெயர் கியர் கிடையாது. ஆனால் ஒரு காரின் கியர் என்ன வேலையைச் செய்கிறதோ அதே வேலையைத் தான் இதுவும் செய்கிறது. இதன் பெயர் ஒவ்வொரு இன்ஜின் வகைக்கும் மாறுபடும். டீசல் இன்ஜினை பொருத்தவரை அதற்குப் பெயர் நாட்ச் என அழைக்கப்படுகிறது. டீசல் இன்ஜின்களில் மொத்தம் 8 நாட்ச்கள் இருக்கும் ரயிலில் வேகம் அதிகமாக வேண்டும் என்றால் நாட்சை அதிகரித்துக்கொண்டே இருக்க வேண்டும்.

ஒரு டீசல் ரயில் இன்ஜின் தனது அதிகபட்ச வேகத்தை 8வது நாட்சில் தான் வெளிப்படுத்தும். அதே போல ரயிலின் வேகத்தைக் குறைக்கவேண்டும் என்றால் நாட்சை குறைத்துக்கொண்டே வர வேண்டும். அதே போல குறிப்பிட்ட வேகத்தில் ரயில் தொடர்ந்து சென்று கொண்டே இருக்க வேண்டும் என்றால் ரயிலின் நாட்சை மாற்றாமல் இருக்க வேண்டும். நாம் கார் பைக்கில் எப்படி கியரை மாற்றுகிறோமோ அதே போல தான் நாட்ச் அடுத்தடுத்து மாற்ற முடியாது குறிப்பிட்ட வேகத்தை ரயில் இன்ஜின் எட்டி பிடித்த பின்பு தான் அடுத்த நாட்சை மாற்ற முடியும் அதே போல வேகத்தைக் குறைக்கும் போதும் வேகம் குறிப்பிட்ட அளவு குறைந்த பின்புதான் நாட்சை குறைக்க வேண்டும்.

ஆனால் டீசல் இன்ஜினில் தான் இந்த நாட்ச் மேனுவலாக மாற்றும் படி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் எலெக்ட்ரிக் இன்ஜினில் இதை ஆட்டோமெட்டிக் செய்துவிட்டனர். இன்ஜின் பைலட் அதை மாற்ற வேண்டிய அவசியம் இருக்காது. ரயிலின் வேகம் மற்றும் பவர் செக்ஷனை பொருத்து நாட்ச் தானகவே மாறிக்கொள்ளும்.

பவர் செக்ஷன் என்றால் ரயிலின் தண்டவாளத்திற்கு மேலே உள்ள மின் கம்பி தான். இந்த கம்பியிலிருந்து தான் ரயில் இன்ஜின்கள் மின்சாரத்தை எடுத்து அதை வைத்து இன்ஜினை இயக்குகிறது. இதில் எல்லா மின் வயரிலும் ஒரே அளவிலான மின்சாரம் இருக்காது. ரயில் தண்டவாளத்தின் தரத்தை பொருத்தே மின்சாரம் இருக்கும். சில ரயில் தண்டவாளங்களில் ரயில் அதிகமான வேகத்தில் பயணிக்க முடியாது. சில ரயில் தண்டவாளங்களில் அதி வேக ரயில்கள் பயணிக்க முடியும்.

அதிகமான வேகத்தில் ரயில் பயணிக்க முடிகிற தண்டவாளம் என்றதால் அதிக மின்சாரம் இருக்கும். குறைவான வேகம் தான் என்றால் குறைவான மின்சாரம் இருக்கும். ரயில் இன்ஜின் தயாரிக்கும் போதே மின்சாரத்தை அளவை பொறுத்தே ரயிலின் அதிகபட்ச வேகம் இருக்க வேண்டும் என வடிவமைக்கப்பட்டிருக்கும் அதன்படி தான் இந்த ரயில்கள் இயங்கும். என்னதான் இன்ஜின் அதிவேகமாக இருந்தாலும் குறைந்த வேகத்தையே தாங்கும் டிராக்கில் அதன் வேகம் குறைந்துவிடும். இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Do Indian railways train engines have gear systems know full details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X