கண்ணை மூடிட்டு நம்ப வேணாம்... அதிகாலையில் பெட்ரோல் போடுவதால் உண்மையில் என்ன நன்மைகள் கிடைக்கிறது?

வாகனங்களுக்கு பெட்ரோல் போடும் போது அதிகாலை அல்லது இரவு நேரங்களில் பெட்ரோல் போட்டால் தரமான பெட்ரோல் கிடைக்கும் என்றும், பகல் நேரத்தில் பெட்ரோல் தரமில்லாமல் போகும் என கூறுபடுவது குறித்துக் காணலாம்

புது தகவலா இருக்கே . . . அதிகாலையில் பெட்ரோல் போட்டால் வாகனங்களுக்கு நல்ல மைலேஜ் கிடைக்குமா . . . உண்மை என்ன . . .

நாம் எல்லோரும் இன்று பெட்ரோலை அன்றாடம் நேரடியாகவோ மறைமுகமாகவோ பயன்படுத்திக்கொண்டே இருக்கிறோம். ஸ்கூட்டர் முதல், பஸ், விமானம் எனப் பெரும்பான்மையான வாகனங்கள் பெட்ரோலில் இயங்கும் திறன் கொண்டது தான். இதனால் உலகம் முழுவதும் பெட்ரோலுக்கான தேவை மிகவும் அதிகமாக இருந்து கொண்டே தான் இருக்கிறது. இந்தியாவில் பயன்படுத்தப்படும் பெரும்பான்மையான பெட்ரோல் வெளிநாடுகளிலிருந்து வாங்கப்படும் கச்சா எண்ணெய்யிலிருந்தே பிரித்தெடுக்கப்படுகிறது.

புது தகவலா இருக்கே . . . அதிகாலையில் பெட்ரோல் போட்டால் வாகனங்களுக்கு நல்ல மைலேஜ் கிடைக்குமா . . . உண்மை என்ன . . .

இப்படியாக நாம் அனைவரும் ஒவ்வொரு விதமாக வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பும் பழக்கத்தைக் கொண்டிருப்போம். சிலர் தினமும் காலையில் வாகனத்தை எடுக்கும் போது அன்றைய தேவைக்காக பெட்ரோல் நிரப்புவார்கள். சிலர் மாலை நேரத்தில் மறுநாள் பயன்பாட்டிற்காக பெட்ரோல் நிரப்புவார்கள். சிலர் எப்பொழுது பெட்ரோல் நிரப்பினாலும் முழு டேங்க் பெட்ரோல் நிரப்புவார்கள். அது தீர்ந்த பின்பு மீண்டும் முழு டேங்க் பெட்ரோல் நிரம்புவார்கள். இப்படியாக ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பெட்ரோல் போடும் பழக்கம் இருக்கிறது.

புது தகவலா இருக்கே . . . அதிகாலையில் பெட்ரோல் போட்டால் வாகனங்களுக்கு நல்ல மைலேஜ் கிடைக்குமா . . . உண்மை என்ன . . .

இப்படியாக பெட்ரோல் போடும் போது ஒவ்வொரு நேரத்திற்கும் பெட்ரோல் போடும் போதும் அதன் தரம் மாறுபடுகிறது எனக் குற்றச்சாட்டைச் சிலர் எழுப்புகின்றனர். சிலர் அதிகாலை அல்லது இரவு நேரங்களில் பெட்ரோல் நிரப்பினால் அது அதிக தரமாக இருக்கிறது. இதனால் வாகனங்கள் நல்ல மைலேஜை தருகிறது. பகல் நேரத்தில் பெட்ரோல் நிரப்பினால் குறைந்த தரத்தில் இருக்கிறது. இதனால் குறைவான மைலேஜை தருகிறது என்ற பேச்சு பலர் மத்தியில் இருக்கிறது.

புது தகவலா இருக்கே . . . அதிகாலையில் பெட்ரோல் போட்டால் வாகனங்களுக்கு நல்ல மைலேஜ் கிடைக்குமா . . . உண்மை என்ன . . .

இதற்கான ஒரு அறிவியல் காரணத்தையும் முன் வைக்கிறார்கள். பெட்ரோல்கள் தண்ணீர் நிலையில் இருப்பதால் இது சூடான நேரத்தில் இதன் மாலிக்கியூல்கள் விரிவடையும், குளிர்ந்த நேரத்தில் இதன் மாலிக்கியூல்கள் சுருங்கும், இதன் காரணமாக அதிகாலை அல்லது இரவு நேரங்களில் பெட்ரோல் போடப்படும் போது அது அதிக அடர்த்தி கொண்டதாகவும், பகல் நேரங்களில் குறைவான அடர்த்துக் கொண்டதாகவும் இருக்கும் என விளக்கம் கொடுக்கிறார்கள்.

புது தகவலா இருக்கே . . . அதிகாலையில் பெட்ரோல் போட்டால் வாகனங்களுக்கு நல்ல மைலேஜ் கிடைக்குமா . . . உண்மை என்ன . . .

இந்த விளக்கம் அறிவியல் படி சரியா என்று பார்த்தால் முற்றிலும் இது சரியானது தான். அறிவியலின்படி சூடான நேரத்தில் பெட்ரோல் விரிவடைந்து அதன் அடர்த்தி குறையும், குளிரான நேரத்தில் பெட்ரோல் சுருங்கி அதன் அடர்த்தி அதிகமாகும் என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மைதான். அப்பொழுது அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் தான் பெட்ரோல் போட வேண்டும் எனச் சொல்வது சரிதானா என நீங்கள் கேட்கலாம். ஆனால் இந்த காரணத்தில் ஒரு மிகப்பெரிய பிரச்சனை இருக்கிறது.

புது தகவலா இருக்கே . . . அதிகாலையில் பெட்ரோல் போட்டால் வாகனங்களுக்கு நல்ல மைலேஜ் கிடைக்குமா . . . உண்மை என்ன . . .

அதாவது இந்த அர்த்தி குறைவது மற்றும் அதிகமாகும் பிரச்சனையை பெட்ரோல் பங்க் எளிமையாகச் சரி செய்து விட்டது. பொதுவாக பெட்ரோல் பங்க் தான் தங்களிடம் உள்ள கையிருப்பு உள்ள பெட்ரோல்களை பம்ப் இருக்கும் பகுதிக்குக் கீழே ஒரு மிகப்பெரிய டேங்க் அமைத்து அதில் தான் சேமித்து வைப்பார்கள். இந்த டேங்க் கட்டப்படும் போது சுற்றிலும் மிகத் தடிமனான கான்கிரீட்கள் கொண்டு இந்த தொட்டி அமைக்கப்படும்.

புது தகவலா இருக்கே . . . அதிகாலையில் பெட்ரோல் போட்டால் வாகனங்களுக்கு நல்ல மைலேஜ் கிடைக்குமா . . . உண்மை என்ன . . .

இப்படியாக அமைக்கப்படும் தொட்டிக்குள் பெட்ரோல் இருக்கும் போது அது வெளிப்புறத்தில் உள்ள வெப்ப நிலை மாற்றத்தை டேங்க் உள்ளே கடத்தாது. உள்ளே பெரும்பாலான நேரங்களில் ஒரே மாதிரியான வெப்ப நிலை தான் இருக்கும். இதனால் பெட்ரோல் பங்க்கில் இருக்கும் பெட்ரோல்கள் வெப்பநிலை மாற்றத்தால் சுருங்கி விரிவது என்பது நடக்காத விஷயம் அதனால் பெட்ரோல் பங்க்களில் இரவு, அதிகாலை, பகல் என எந்த நேரத்தில் பெட்ரோல் போட்டாலும் ஒரே தரத்தில் தான் இருக்கும்.

புது தகவலா இருக்கே . . . அதிகாலையில் பெட்ரோல் போட்டால் வாகனங்களுக்கு நல்ல மைலேஜ் கிடைக்குமா . . . உண்மை என்ன . . .

சிலர் பெட்ரோல் டேங்கிற்குள் ஒரே நிலையில் வெப்பம் இருந்தாலும் பெட்ரோல் பம்ப் வழியாகத் தானே வருகிறது. அதில் வெப்ப நிலை மாற்றம் ஏற்படும், அந்த பம்பிலேயே சில லிட்டர் பெட்ரோல்கள் இருக்கும். நாமும் சில லிட்டர் பெட்ரோல்களை தான் பைக்குகளுக்கு போடுவோம். அதனால் அதில் வெப்ப நிலை மாற்றம் ஏற்பட்டுபெட்ரோல் தரம் குறையலாம் எனக் கூறப்படுகிறது. இதுவும் சரியான வாதம் தான்.

புது தகவலா இருக்கே . . . அதிகாலையில் பெட்ரோல் போட்டால் வாகனங்களுக்கு நல்ல மைலேஜ் கிடைக்குமா . . . உண்மை என்ன . . .

ஆனால் பகல் நேரங்களில் பெரும்பாலான பெட்ரோல் பங்க்களில் தொடர்ந்து வாகனங்களுக்கு பெட்ரோல் போட்டுக்கொண்டே இருப்பார்கள். இதனால் வெப்ப நிலை மாற்றம் என்பதுபெட்ரோலை தாக்கும் அளவிற்கு பெட்ரோல் பங்க்கின் பம்ப்களில் பெட்ரோல் இருக்காது. அதற்கும் அது வாகனத்தின் டேங்க்களுக்குள் சென்றுவிடும் திரும்ப பம்பிற்கு வேறு ஒரு பெட்ரோல் டேங்கிலிருந்து வந்துவிடும். இது எந்த வித மாற்றத்தையும் ஏற்படுத்தாது.

புது தகவலா இருக்கே . . . அதிகாலையில் பெட்ரோல் போட்டால் வாகனங்களுக்கு நல்ல மைலேஜ் கிடைக்குமா . . . உண்மை என்ன . . .

அதனால் அதிகாலையில் பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் போடுவதால் தரமான பெட்ரோல் கிடைக்கும், பகல் நேரங்களில் பெட்ரோலின் தரம் குறைந்துவிடும் எனக் கூறுவது முற்றிலும் தவறானது. பெட்ரோலுக்காக அரசு கொண்டு வந்துள்ள தரக்கட்டுப்பாட்டை எந்த பெட்ரோல் பங்க்கில் வேண்டுமானாலும், பரிசோதனை செய்து கொள்ளலாம். இதற்காக பெட்ரோல் பங்கில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்பது கூடுதல் தகவல்

Most Read Articles
English summary
Does fueling your vehicle early morning gives more mileage
Story first published: Sunday, September 25, 2022, 13:48 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X