ஆளே இல்லாத கார் திடீரென பின்னோக்கி நகர்ந்த மர்மம் இதுதான்... வீடியோவை பார்த்து திடுக்கிட்ட மக்கள்...

ஆளே இல்லாத கார் திடீரென பின்னோக்கி நகர்ந்து சென்று விபத்துக்குள்ளான வீடியோ வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஆளே இல்லாத கார் திடீரென பின்னோக்கி நகர்ந்த வீடியோ வேகமாக பரவுகிறது... திடுக்கிட வைக்கும் காரணம்...

உலகம் முழுவதும் தினந்தோறும் ஏராளமான சாலை விபத்துக்கள் நடைபெற்று வருகின்றன. அவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு காரணங்கள் இருக்கும். குடிபோதையில் வாகனம் ஓட்டுவது, அதிவேகத்தில் வாகனம் ஓட்டுவது போன்ற போக்குவரத்து விதிமுறை மீறல்களே பெரும்பாலான சாலை விபத்துக்களுக்கு மிக முக்கியமான காரணங்களாக உள்ளன.

ஆளே இல்லாத கார் திடீரென பின்னோக்கி நகர்ந்த வீடியோ வேகமாக பரவுகிறது... திடுக்கிட வைக்கும் காரணம்...

இந்த சூழலில் அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் உள்ள ஸ்லைடெல் நகரில் நடைபெற்றுள்ள ஒரு சாலை விபத்து உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அனைவராலும் பரவலாக பேசப்பட்டு வரும் இந்த விபத்து கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றுள்ளது. சம்பவத்தன்று ஹூண்டாய் சாண்ட்டா எஃப்இ (Hyundai Santa Fe) காரில், கணவன், மனைவி கேஷ் ஸ்டேஷனுக்கு சென்றுள்ளனர்.

ஆளே இல்லாத கார் திடீரென பின்னோக்கி நகர்ந்த வீடியோ வேகமாக பரவுகிறது... திடுக்கிட வைக்கும் காரணம்...

ஹூண்டாய் சாண்ட்டா எஃப்இ எஸ்யூவி ரக கார் ஆகும். இந்த சூழலில் கேஷ் ஸ்டேஷனில் நிறுத்தப்பட்டிருந்த அந்த கார் திடீரென பின்னோக்கி சென்றது. இதை கண்டதும் அந்த காருக்கு சொந்தமான பெண், உடனடியாக காரை நிறுத்துவதற்காக ஓடினார். ஆனால் அவர் கீழே விழுந்து காயமடைந்ததுதான் மிச்சம். அவரால் காரை நிறுத்த முடியவில்லை.

ஆளே இல்லாத கார் திடீரென பின்னோக்கி நகர்ந்த வீடியோ வேகமாக பரவுகிறது... திடுக்கிட வைக்கும் காரணம்...

இதன்பின் அந்த கார் பிஸியான 4 லேன் சாலைக்குள் நுழைந்து விட்டது. ஒரு சில வினாடிகளுக்கு பிறகு ஒரு வழியாக அந்த சாலையில் இருந்த மற்றொரு கேஷ் ஸ்டேஷனின் பேரியர் மீது மோதி அந்த கார் நின்றது. ஆனால் இந்த விபத்தால் அதிர்ஷ்டவசமாக யாரும் பெரிய அளவில் காயமடையவில்லை. அதே போல் பொருட்சேதமும் ஏற்படவில்லை.

ஆளே இல்லாத கார் திடீரென பின்னோக்கி நகர்ந்த வீடியோ வேகமாக பரவுகிறது... திடுக்கிட வைக்கும் காரணம்...

இந்த விபத்து குறித்து ஸ்லைடெல் நகர போலீசார் விசாரணை நடத்தினர். இதில், பரபரப்பான தகவல்கள் தெரியவந்துள்ளன. அதாவது சம்பவத்தன்று கணவன், மனைவி இருவரும் தங்கள் வீட்டில் வளர்த்து வரும் நாயுடன் காரில் கேஷ் ஸ்டேஷனுக்கு சென்றுள்ளனர். ஆனால் அஜாக்கிரதையாக நாயை காருக்கு உள்ளேயே விட்டு விட்டு அவர்கள் இருவரும் கீழே இறங்கி விட்டனர்.

MOST READ: காசை கரி ஆக்காதீங்க... பல லட்சம் கொட்டி கொடுத்து கார் வாங்குவதை விட பைக்தான் பெஸ்ட்... ஏன் தெரியுமா?

ஆளே இல்லாத கார் திடீரென பின்னோக்கி நகர்ந்த வீடியோ வேகமாக பரவுகிறது... திடுக்கிட வைக்கும் காரணம்...

அது Chihuahua எனும் இனத்தை சேர்ந்த நாய் ஆகும். இந்த சூழலில் அந்த காரில் ஏற்கனவே ஒரு சில தொழில்நுட்ப கோளாறுகள் இருந்துள்ளன. அதாவது கிளட்ச்சை பிரஷ் செய்யாமலேயே கியர் மாறும் வகையிலான கோளாறு இருந்துள்ளது. இப்படிப்பட்ட சூழலில்தான் அவர்கள் நாயை காருக்கு உள்ளேயே விட்டு விட்டு கீழே இறங்கியுள்ளனர்.

MOST READ: போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து விட்டு பைக்கில் நைசாக எஸ்கேப் ஆன இளைஞர்... காத்திருந்த பெரிய ஷாக்...

ஆளே இல்லாத கார் திடீரென பின்னோக்கி நகர்ந்த வீடியோ வேகமாக பரவுகிறது... திடுக்கிட வைக்கும் காரணம்...

அப்போது நாய் தவறுதலாக ரிவர்ஸ் கியரை போட்டுள்ளது. இதன் காரணமாகதான் கார் திடீரென பின்னோக்கி சென்றது தெரியவந்துள்ளது. பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது பேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்கள் வாயிலாக உலகம் முழுக்க வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

ஆனால் இப்படி ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடைபெறுவது இது முதல் முறையல்ல என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் நடைபெறுவதற்கு சரியாக ஒரு நாள் முன்னதாக, அதாவது கடந்த வியாழக்கிழமையன்றும் நாய் ஒன்று இதேபோல் தற்செயலாக ரிவர்ஸ் கியரை போட்டு காரை இயக்கியது. இந்த சம்பவமும் கூட அமெரிக்காவில்தான் நடைபெற்றிருந்தது.

MOST READ: இருந்த இடத்திலிருந்து காருக்கான ஃபாஸ்ட் டேக்கை ஈஸியா வாங்கலாம்!

ஆளே இல்லாத கார் திடீரென பின்னோக்கி நகர்ந்த வீடியோ வேகமாக பரவுகிறது... திடுக்கிட வைக்கும் காரணம்...

அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் முதல் சம்பவம் நடைபெற்ற மறுநாளே லூசியானா மாகாணத்தில் அடுத்த சம்பவம் நடைபெற்றுள்ளது. காரில் செல்ல பிராணிகளை அழைத்து செல்பவர்கள் இந்த சம்பவங்களை ஒரு பாடமாக எடுத்து கொள்ள வேண்டும் என போலீசார் எச்சரித்துள்ளனர். காருக்குள் செல்ல பிராணிகளை விட்டு செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும் என அவர்கள் கூறியுள்ளனர்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Dog Shifts Hyundai Santa Fe SUV Into Reverse: Viral Video. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X