திடீர் சேஞ்ச்... ட்ரம்ப்பை வரவேற்க ஜனாதிபதி மாளிகைக்கு மோடி வந்த கார் இதுதான்! டாப் சீக்ரெட் மேட்டர்

ட்ரம்ப்பை வரவேற்பதற்காக ஜனாதிபதி மாளிகைக்கு மோடி திடீரென வேறு காரில் வந்தார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

திடீர் சேஞ்ச்... ட்ரம்ப்பை வரவேற்க ஜனாதிபதி மாளிகைக்கு மோடி வந்த கார் இதுதான்! டாப் சீக்ரெட் மேட்டர்

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் (Donald Trump), 2 நாள் சுற்றுப்பயணமாக இந்தியாவிற்கு வருகை புரிந்துள்ளார். டொனால்டு ட்ரம்ப் குடும்பத்தினரும் மற்றும் அமெரிக்காவின் உயர் அதிகாரிகளும் அவருடன் வந்துள்ளனர். இந்திய சுற்றுப்பயணத்தின் முதல் நாளான நேற்று (பிப்ரவரி 24), குஜராத் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் டொனால்டு ட்ரம்ப் கலந்து கொண்டார்.

திடீர் சேஞ்ச்... ட்ரம்ப்பை வரவேற்க ஜனாதிபதி மாளிகைக்கு மோடி வந்த கார் இதுதான்! டாப் சீக்ரெட் மேட்டர்

இரண்டாவது மற்றும் கடைசி நாளான இன்று (பிப்ரவரி 25), தலைநகர் டெல்லியில் நடைபெற்று வரும் பல்வேறு நிகழ்ச்சிகளில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கலந்து கொண்டு வருகிறார். இதில், குடியரசு தலைவர் மாளிகையில் (Rashtrapati Bhawan) நடைபெற்ற நிகழ்ச்சி முக்கியமானதாகும். குடியரசு தலைவர் மாளிகையில், டொனால்டு ட்ரம்ப்பிற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

திடீர் சேஞ்ச்... ட்ரம்ப்பை வரவேற்க ஜனாதிபதி மாளிகைக்கு மோடி வந்த கார் இதுதான்! டாப் சீக்ரெட் மேட்டர்

இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை வரவேற்றனர். முன்னதாக பிரதமர் மோடி, பிஎம்டபிள்யூ 7-சீரிஸ் (BMW 7-Series), காரில் குடியரசு தலைவர் மாளிகைக்கு வந்தார். கருப்பு நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ள இந்த கார் செடான் மாடல் ஆகும்.

திடீர் சேஞ்ச்... ட்ரம்ப்பை வரவேற்க ஜனாதிபதி மாளிகைக்கு மோடி வந்த கார் இதுதான்! டாப் சீக்ரெட் மேட்டர்

மேலும் இது பாதுகாப்பு வசதிகள் நிறைந்த கவச கார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்திய பிரதமராக மோடி கடந்த 2014ம் ஆண்டு மே மாதம் பதவியேற்றார். அப்போது முதல் தனது அதிகாரப்பூர்வ காராக பிஎம்டபிள்யூ 7-சீரிஸ் செடானைதான் பிரதமர் மோடி பயன்படுத்தி வருகிறார். ஆனால் சமீப காலமாக அவரை வேறு ஒரு காரில் அடிக்கடி பார்க்க முடிகிறது.

திடீர் சேஞ்ச்... ட்ரம்ப்பை வரவேற்க ஜனாதிபதி மாளிகைக்கு மோடி வந்த கார் இதுதான்! டாப் சீக்ரெட் மேட்டர்

இது ரேஞ்ச் ரோவர் எஸ்யூவி (Range Rover SUV) கார் ஆகும். ரேஞ்ச் ரோவர் எஸ்யூவி காரில், பிரதமர் மோடி வருவது இன்றைய நாட்களில் அடிக்கடி பார்க்க கூடிய நிகழ்வாகி விட்டது. அவ்வளவு ஏன்? நேற்று கூட மோடி இந்த காரில்தான் அகமதாபாத் விமான நிலையத்திற்கு வந்தார். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அகமதாபாத் விமான நிலையத்தில் நேற்று காலை வந்திறங்கினார்.

திடீர் சேஞ்ச்... ட்ரம்ப்பை வரவேற்க ஜனாதிபதி மாளிகைக்கு மோடி வந்த கார் இதுதான்! டாப் சீக்ரெட் மேட்டர்

அப்போது அவரை வரவேற்பதற்காக ரேஞ்ச் ரோவர் எஸ்யூவி காரில் பிரதமர் மோடி வந்தார். இதுவும் கருப்பு நிற கவச கார்தான் என்பது குறிப்பிடத்தக்கது. 2017ம் ஆண்டு நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சிக்குதான் பிரதமர் நரேந்திர மோடி முதல் முறையாக ரேஞ்ச் ரோவர் எஸ்யூவி காரில் வந்தார். அதன்பின்பு அவரை அடிக்கடி ரேஞ்ச் ரோவர் எஸ்யூவி காரில் நம்மால் பார்க்க முடிந்தது.

திடீர் சேஞ்ச்... ட்ரம்ப்பை வரவேற்க ஜனாதிபதி மாளிகைக்கு மோடி வந்த கார் இதுதான்! டாப் சீக்ரெட் மேட்டர்

இந்த வகையில்தான் நேற்றும் டொனால்டு ட்ரம்ப்பை வரவேற்க அவர் ரேஞ்ச் ரோவர் எஸ்யூவி காரில் வந்தார். ஆனால் இன்று குடியரசு தலைவர் மாளிகைக்கு வர, பிஎம்டபிள்யூ 7-சீரிஸ் காரை பிரதமர் நரேந்திர மோடி பயன்படுத்தியுள்ளார். அவர் திடீரென காரை மாற்றியதற்கான காரணம் என்ன? என்பது தெளிவாக தெரியவில்லை.

திடீர் சேஞ்ச்... ட்ரம்ப்பை வரவேற்க ஜனாதிபதி மாளிகைக்கு மோடி வந்த கார் இதுதான்! டாப் சீக்ரெட் மேட்டர்

அனேகமாக பாதுகாப்பு காரணங்களுக்காகதான் அவர் காரை மாற்றியிருக்க கூடும் என தெரிகிறது. நாட்டின் மிக முக்கியமான நபர் என்பதால், பிரதமர் நரேந்திர மோடி உச்சகட்ட பாதுகாப்பு வளையத்தின் கீழ் உள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அவரது பிஎம்டபிள்யூ 7-சீரிஸ் மற்றும் ரேஞ்ச் ரோவர் எஸ்யூவி என இரண்டு கார்களிலும் ஏராளமான பாதுகாப்பு வசதிகள் இடம்பெற்றுள்ளன.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Donald Trump India Visit: Prime Minister Modi Arrives At Rashtrapati Bhavan In BMW 7-Series. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X