தயவு செஞ்சு வெள்ளை கலர் காரை வாங்கீராதீங்க... ஏன் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

வெள்ளை நிற காரை ஏன் வாங்க கூடாது? என்பதற்கான காரணங்களை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

தயவு செஞ்சு வெள்ளை கலர் காரை வாங்கீராதீங்க... ஏன் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

புதிய கார் வாங்குவதற்கு திட்டமிட்டுள்ளீர்களா? அப்படி என்றால், நிச்சயமாக ஒரு முடிவு எடுப்பதற்கு முன்பு கலர் பற்றி அதிகமாக பரிசீலனை செய்வீர்கள். இந்த செய்தியில் நாங்கள் வெள்ளை வண்ண கார்களை பற்றி பேச போகிறோம். இந்திய சாலைகளில் நாம் வெள்ளை வண்ண கார்களை மிகவும் அதிகமாக பார்க்க முடியும்.

தயவு செஞ்சு வெள்ளை கலர் காரை வாங்கீராதீங்க... ஏன் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

அதற்காக நீங்களும் வெள்ளை வண்ண காரையே வாங்குவது சிறப்பானதாக இருக்காது. வெள்ளை வண்ண கார்களை வாங்கும்போது நிறைய பலன்கள் கிடைக்கும் என்பதை யாராலும் நிச்சயம் மறுக்க முடியாது. குறிப்பாக வெள்ளை வண்ண கார்களுக்குதான் மறுவிற்பனை மதிப்பு (ரீசேல் வேல்யூ) மிகவும் அதிகமாக உள்ளது.

தயவு செஞ்சு வெள்ளை கலர் காரை வாங்கீராதீங்க... ஏன் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

அதே சமயம் வெள்ளை வண்ண கார்களில் ஒரு சில குறைபாடுகளும் இருக்கின்றன. அவற்றைதான் இந்த செய்தியில் நாங்கள் தொகுத்து வழங்கியுள்ளோம். வெள்ளை வண்ண கார்களை ஏன் வாங்க கூடாது? என்பதற்கான மிக முக்கியமான காரணங்களை இந்த செய்தியின் மூலமாக நீங்கள் தெரிந்து கொள்ள முடியும்.

தயவு செஞ்சு வெள்ளை கலர் காரை வாங்கீராதீங்க... ஏன் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

எல்லார்கிட்டயும் இருக்கே!

நீங்கள் சாலையில் செல்லும்போது அதிகமாக எந்த நிற கார்கள் இருக்கின்றன? என்பதை ஒரு சில நாட்கள் சோதித்து பாருங்கள். அது நிச்சயம் வெள்ளையாகதான் இருக்கும். ஏனெனில் இந்திய வாடிக்கையாளர்கள் வெள்ளை நிற கார்களைதான் அதிகம் வாங்குகின்றனர். அதிக வாடிக்கையாளர்கள் விரும்புவதன் காரணமாகதான் வெள்ளை நிற கார்களுக்கு மறுவிற்பனை மதிப்பு மிகவும் அதிகமாக உள்ளது.

தயவு செஞ்சு வெள்ளை கலர் காரை வாங்கீராதீங்க... ஏன் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

ஆனால் வெள்ளை நிற காரை வாங்கினால், நீங்களும் கூட்டத்தோடு கூட்டமாக சேர்ந்து விடுவீர்கள். சாலையில் பயணம் செய்யும்போது, உங்கள் கார் தனித்து தெரிய வேண்டும் என நீங்கள் விரும்பினால், நிச்சயமாக வெள்ளை நிறத்தை தேர்வு செய்ய கூடாது. நிறைய பேரிடம் வெள்ளை நிற கார்கள் இருப்பதால், அந்த வண்ணம் உங்கள் காரை தனித்து தெரிய செய்வது கடினம்தான்.

தயவு செஞ்சு வெள்ளை கலர் காரை வாங்கீராதீங்க... ஏன் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

திருடு போயிரும்!

இந்தியர்கள் வெள்ளை நிற கார்களை விரும்புகின்றனர் என்பது உண்மைதான். ஆனால் இங்கே முக்கியமான புள்ளி விபரம் ஒன்றை நீங்கள் கவனிக்க வேண்டும். இந்தியாவில் திருடப்படும் வாகனங்களில் 90 சதவீத வாகனங்கள் வெள்ளை நிறம் கொண்டவை என்பதை தேசிய குற்ற ஆவண காப்பகம் கண்டறிந்துள்ளது. இந்த விஷயம் பலருக்கும் தெரியாது.

தயவு செஞ்சு வெள்ளை கலர் காரை வாங்கீராதீங்க... ஏன் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

ஆனால் இதற்கான உண்மையான காரணத்தை நாங்கள் கூறுகிறோம். இந்தியர்கள் வெள்ளை நிற கார்களைதான் அதிகம் விரும்புகின்றனர். எனவே வெள்ளை நிற கார்களை திருடினால், அதனை உடனடியாக விற்பனை செய்து விட முடியும். அத்துடன் வெள்ளை நிற கார்களை ரீ-பெயிண்டிங் செய்வதும் மிக எளிமையான விஷயம்.

தயவு செஞ்சு வெள்ளை கலர் காரை வாங்கீராதீங்க... ஏன் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

திருடுபோன வெள்ளை நிற கார் ஒன்றை காவல் துறையினர் தேட தொடங்கினால், அது ஏற்கனவே கருப்பு நிறத்திற்கு மாற்றப்பட்டிருக்கும். எனவே சந்தையில் கிடைக்கும் வேறு எந்த நிற காரை காட்டிலும், வெள்ளை நிற கார்கள் திருடு போவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம். இந்த விஷயத்தை முக்கியமாக மனதில் வைத்து கொண்டு முடிவு எடுங்கள்.

தயவு செஞ்சு வெள்ளை கலர் காரை வாங்கீராதீங்க... ஏன் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

அழுக்கை ஈர்க்கும் காந்தம்!

வெள்ளை நிற கார் எப்போது வேண்டுமானாலும் ப்ரவுன் கலருக்கு மாறி விடும். இதற்கு அதிக நேரம் எல்லாம் ஆகாது. இன்னும் எளிமையாக சொல்ல வேண்டுமென்றால், வெள்ளை நிற கார்கள் அழுக்கை ஈர்க்கும் காந்தம் எனலாம். ஆம், வெள்ளை நிற கார்கள் எளிதாக அழுக்காகி விடும். எனவே நீங்கள் அடிக்கடி அவற்றை சுத்தம் செய்ய வேண்டியிருக்கும். வெள்ளை நிற கார்களுக்கு அதிக பராமரிப்பு தேவைப்படும் என்பது உண்மை.

தயவு செஞ்சு வெள்ளை கலர் காரை வாங்கீராதீங்க... ஏன் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

ஈஸியா காட்டி கொடுத்து விடும்!

கீறல்கள் விழாமல் உங்களால் எவ்வளவு நாட்களுக்கு காரை பராமரிக்க முடியும்? நிச்சயமாக இது மிகவும் கடினமான விஷயம். ஏனெனில் காரில் கீறல்கள் விழுவது மிக எளிதாக நடந்து விடக்கூடிய விஷயம். குறிப்பாக பார்க்கிங்கில் நிறுத்தியிருக்கும் சமயங்களில் காரில் கீறல்கள் விழுவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம்.

தயவு செஞ்சு வெள்ளை கலர் காரை வாங்கீராதீங்க... ஏன் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

வெள்ளை நிற காரில் கீறல்கள் விழுந்தால் அது தெளிவாக தெரியும். பெயிண்ட் சேதம் அடைந்தாலும், வெள்ளை நிற கார்களில் தெளிவாக தெரியும் என்பதை மனதில் கொள்ளுங்கள். எனவே வெள்ளை நிற காரை நீங்கள் வாங்கும்பட்சத்தில், அதை பார்த்து பார்த்து கவனமாக ஓட்ட வேண்டியிருக்கும். குறிப்பாக கீறல்கள் விழாமல் ஓட்டுவது மிகவும் கடினமான காரியம்.

தயவு செஞ்சு வெள்ளை கலர் காரை வாங்கீராதீங்க... ஏன் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

வெள்ளை வண்ண கார்களில் இப்படி ஏகப்பட்ட பிரச்னைகள் இருந்தாலும் கூட, மக்கள் அவற்றை அதிகம் விரும்பி வாங்குவதற்கு முக்கியமான காரணம் நாங்கள் ஏற்கனவே கூறியபடி ரீசேல் வேல்யூ. ஆனால் இதை காட்டிலும் மற்றொரு முக்கியமான காரணம் இருக்கிறது. பாதுகாப்புதான் அது. ஆம், வெள்ளை வண்ண கார்கள் இரவு நேரங்களில் விபத்தில் சிக்குவதற்கான வாய்ப்புகள் குறைவு.

தயவு செஞ்சு வெள்ளை கலர் காரை வாங்கீராதீங்க... ஏன் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

இரவு நேரங்களில் நெடுஞ்சாலை ஓரத்தில் நீங்கள் காரை நிறுத்தியிருந்தாலும் கூட, பின்னால் வரும் வாகன ஓட்டிகளுக்கு வெள்ளை நிறம் எளிதாக தெரியும். எனவே கார் விபத்தில் சிக்குவதற்கான வாய்ப்புகள் குறைவு. இந்த பாதுகாப்பு காரணத்தை மனதில் வைத்து பலர் வெள்ளை நிற கார்களை அதிகமாக வாங்கி வருகின்றனர்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Don't Buy A White Colour Car: Here Is The Reason. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X