ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளை மடக்க வேண்டாம்... போலீஸாருக்கு முதலமைச்சர் அதிரடி உத்தரவு!

ஹெல்மெட் அணியாமல் வரும் இருசக்கர வாகன ஓட்டிகளை மடக்க வேண்டாம் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளை மடக்க வேண்டாம்... போலீஸாருக்கு முதலமைச்சர் அதிரடி உத்தரவு!

இருசக்கர வாகன ஓட்டிகளின் பாதுகாப்பில், ஹெல்மெட் மிக முக்கிய பங்காற்றி வருகின்றது. இதன்காரணமாகவே, இந்தியாவில் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஏனென்றால், இருசக்கர வாகன விபத்தில் பெரும்பாலானோர் உயிரிழப்பதற்கு, ஹெல்மெட் அணியாமல் செல்வதே மிக முக்கிய காரணமாக இருக்கின்றது.

ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளை மடக்க வேண்டாம்... போலீஸாருக்கு முதலமைச்சர் அதிரடி உத்தரவு!

ஆகையால், இருசக்கர வாகனத்தை இயக்குபவரும், பின்னால் அமர்ந்து செல்லக்கூடியவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பது நாட்டில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த புதிய உத்தரவினை தீவிரப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.

ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளை மடக்க வேண்டாம்... போலீஸாருக்கு முதலமைச்சர் அதிரடி உத்தரவு!

ஆனால், இதனை பெரும்பாலான இருசக்கர வாகன ஓட்டிகள் பெரிதாக பொருட்படுத்திக் கொள்வதே இல்லை. ஆகையால், இதுபோன்று போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க, அரசு திட்டம் வகுத்து வருகின்றது.

ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளை மடக்க வேண்டாம்... போலீஸாருக்கு முதலமைச்சர் அதிரடி உத்தரவு!

இந்நிலையில், ஹெல்மெட் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளை மடக்கிப்பிடித்து அபராதம் விதிக்க வேண்டாம் என மஹாராஷ்டிரா மாநிலத்தின் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஷ், அம்மாநில காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். மாறாக, விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளை, சிசிடிவி கேமிரா மூலம் கண்டறிந்து அவர்களுக்கு இ-செலாண் மூலம் அபராதத் தொகையை அவர்களது வீட்டுக்கே அனுப்பி வைக்க அறிவுறுத்தியுள்ளார்.

ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளை மடக்க வேண்டாம்... போலீஸாருக்கு முதலமைச்சர் அதிரடி உத்தரவு!

இதுகுறித்து அவர் கூறியதாவது, "ஹெல்மெட் அணியவில்லை எனக் கூறி, மக்களை சாலையில் நிக்க வைத்து துன்புறுத்தக் கூடாது. மாறாக அவர்களைத் தண்டிக்க, போக்குவரத்து போலீஸார் சிசிடிவி கேமிராக்களை பயன்படுத்த வேண்டும்" என்றார்.

ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளை மடக்க வேண்டாம்... போலீஸாருக்கு முதலமைச்சர் அதிரடி உத்தரவு!

அண்மையில், முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஷை சந்தித்த புனே நகரத்தின் தொகுதி எம்எல்ஏ, கூறியதன் அடிப்படையில் இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளை மடக்க வேண்டாம்... போலீஸாருக்கு முதலமைச்சர் அதிரடி உத்தரவு!

அவ்வாறு, அவர்கள் (எம்எல்ஏ), "போக்குவரத்து பணியில் ஈடுபடும் போலீஸார், ஹெல்மெட் அணிந்து வருபவர்கள், அணியாமல் வருபவர்கள் என இரு தரப்பு வாகன ஓட்டிகளையும் சாலையில் மடக்கி வைத்து நீண்ட நேரம் அலை கழித்து அனுப்பி வைக்கின்றனர். இதனால், பணிக்கு செல்வோரின் நேரம் விரையமாவதுடன், அவர்கள் மன உலைச்சலுக்கு ஆளாக்கப்படுகின்றனர்" என தெரிவித்திருந்தனர்.

ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளை மடக்க வேண்டாம்... போலீஸாருக்கு முதலமைச்சர் அதிரடி உத்தரவு!

இதன்காரணமாக, மஹாராஷ்டிராவின் மும்பை மற்றும் நாக்பூர் பகுதியில் கடைப்பிடிப்பதைப் போன்றே, புனேவிலும், சிசிடிவி கேமிராக்களைப் பயன்படுத்தி, விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகள்மீது தக்க நடவடிக்கை எடுக்கும்படி முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஷ் அறிவுறுத்தியுள்ளார்.

ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளை மடக்க வேண்டாம்... போலீஸாருக்கு முதலமைச்சர் அதிரடி உத்தரவு!

இந்த புதிய உத்தரவினால், வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதற்கு விலக்களிக்கப்பட்டு என்ற எண்ணிக்கொள்ள தேவையில்லை என்றும், கட்டாயம் மாநிலத்தில் ஹெல்மெட் அணிந்தே இருசக்கர வாகனங்களை இயக்க வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டுள்ளார். அதேசமயம், சிசிடிவி மூலம் அதிரடி வேட்டையைத் தொடங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளை மடக்க வேண்டாம்... போலீஸாருக்கு முதலமைச்சர் அதிரடி உத்தரவு!

இதேபோன்று சமீபத்தில்கூட, வாகன ஓட்டிகளுக்கு ஆப்பு வைக்கும் வகையில், விதிமுறை மீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு வழங்கப்படும் அபராதத் தொகையை அதிகரிக்க இருப்பதாக மத்திய அரசு அறிவித்திருந்தது. இதன்மூலம், முறைகேட்டில் ஈடுபடும் வாகன ஓட்டிக்களுக்கு தற்போது விதிக்கப்படும் அபராதத் தொகை, பன்மடங்கு உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளை மடக்க வேண்டாம்... போலீஸாருக்கு முதலமைச்சர் அதிரடி உத்தரவு!

அந்தவகையில், காலாவதியான ஓட்டுநர் உரிமத்தை வைத்து வாகனத்தை இயக்குபவர்களுக்கு, முன்னதாக வசூலிக்கப்பட்டு வந்த ரூ. 500 அபராதம், தற்போது ரூ. 5 ஆயிரமாக மாற்றப்பட உள்ளது. இதேபோன்று, மது அருந்திவிட்டு பைக்கை இயக்கிவந்தால் ரூ. 2 ஆயிரத்திற்கு பதிலாக பத்தாயிரம் ரூபாய் வசூலிக்கப்பட உள்ளது.

ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளை மடக்க வேண்டாம்... போலீஸாருக்கு முதலமைச்சர் அதிரடி உத்தரவு!

இவ்வாறு, போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு விதிக்கப்பட்டு வரும் அபராதத் தொகை பத்து மடங்கு, புதிய விதியின்மூலம் உயர இருக்கின்றது. இதனால், வாகன ஓட்டிகள் தற்போது கலக்கத்தில் உரைய ஆரம்பித்துள்ளனர். இதுபோன்ற அதிரடி நடவடிக்கையால், சாலையில் தினமும் அரங்கேறும் முறைகேடுகள் தவிர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Source: theweek.in

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Don't Stop Riders For Without Helmets: Says Maharasta CM. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X