பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழும் இந்திய ராணுவத்தின் அதிநவீன ரோபோ..

பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி வரும் இந்திய ராணுவத்தின் அதிநவீன ரோபோ, வெகு விரைவில் போலீஸ் படையிலும் சேர்க்கப்படவுள்ளது.

பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி வரும் இந்திய ராணுவத்தின் அதிநவீன ரோபோ, வெகு விரைவில் போலீஸ் படையிலும் சேர்க்கப்படவுள்ளது. இந்த ரோபோ குறித்த மெய் சிலிர்க்க வைக்கும் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் இந்திய ராணுவத்தின் அதிநவீன ரோபோ..

மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது (Defence Research and Development Organisation-DRDO). இந்த நிறுவனமானது தமிழில் சுருக்கமாக டிஆர்டிஓ என அழைக்கப்படுகிறது.

பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் இந்திய ராணுவத்தின் அதிநவீன ரோபோ..

ஆயுதங்களை உற்பத்தி செய்வதில் உலக அளவில் முதன்மையான நிறுவனங்களில் ஒன்றாக இந்தியாவின் டிஆர்டிஓ திகழ்கிறது. இந்திய ராணுவம் அசூர பலம் பொருந்தி காணப்படுவதற்கு டிஆர்டிஓ நிறுவனமும் ஒரு காரணம் என்றால் மிகையல்ல.

பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் இந்திய ராணுவத்தின் அதிநவீன ரோபோ..

இந்த சூழலில் நாசவேலைகளில் ஈடுபடும் தீவிரவாதிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் தக்ஸ் (Daksh) என்ற அதிநவீன ரோபோக்களை டிஆர்டிஓ உருவாக்கியுள்ளது. வெடிகுண்டுகளை கண்டறிந்து செயல் இழக்க செய்யும் சவாலான பணியில் ஈடுபடுத்துவதற்காகவே தக்ஸ் ரோபோக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் இந்திய ராணுவத்தின் அதிநவீன ரோபோ..

உலகின் எவ்வளவு அதிசக்தி வாய்ந்த வெடிகுண்டு என்றாலும், தக்ஸ் ரோபோக்கள் அதனை மிக எளிதாக கண்டறிந்து விடும். அத்துடன் அந்த வெடிகுண்டை வெற்றிகரமாக செயலிழக்க செய்து விடும் ஆற்றலும் தக்ஸ் ரோபோக்களுக்கு உள்ளது.

பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் இந்திய ராணுவத்தின் அதிநவீன ரோபோ..

இப்படி சர்வ வல்லமை பொருந்திய ரோபோவாக திகழும் தக்ஸ், ஆர்ஓவி எனப்படும் ரிமோட்லி ஆபரேட்டட் வெய்கில் (Remotely Operated Vehicle-ROV) வகையை சேர்ந்தது. இந்த தக்ஸ் ரோபோக்களை, சுமார் 500 மீட்டர் தொலைவில் இருந்து ரிமோட் கண்ட்ரோல் மூலமாகவே கட்டுப்படுத்த முடியும்.

பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் இந்திய ராணுவத்தின் அதிநவீன ரோபோ..

தக்ஸ் ரோபோக்களை சுற்றிலும் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கேமராக்கள் எந்நேரமும் சுற்றுப்புறத்தை நோட்டமிட்டு கொண்டே இருக்கும். தக்ஸ் ரோபோக்களில் வெடிகுண்டுகளை கையாளும் மற்றும் செயலிழக்க செய்யும் உபகரணங்களும் பொருத்தப்பட்டுள்ளன.

பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் இந்திய ராணுவத்தின் அதிநவீன ரோபோ..

வெடிகுண்டு மட்டுமின்றி ரசாயன தாக்குதல்களை உளவு பார்க்கும் ஆற்றலும் தக்ஸ் ரோபோக்களுக்கு உள்ளது. இதுதவிர தக்ஸ் ரோபோக்களில் துப்பாக்கியும் பொருத்தப்பட்டிருக்கும். இந்த துப்பாக்கி பல்வேறு விதங்களில் பயன் உள்ளதாக இருக்கும்.

பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் இந்திய ராணுவத்தின் அதிநவீன ரோபோ..

சில சமயங்களில் கார் வெடிகுண்டு மூலம் பொதுமக்களை தாக்கும் கொடூர செயலில் தீவிரவாதிகள் ஈடுபடுகின்றனர். கார் வெடிகுண்டுகளை எளிமையாக கையாள தக்ஸ் ரோபோக்களுக்கு, இந்த துப்பாக்கிகள் உதவி செய்கின்றன.

பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் இந்திய ராணுவத்தின் அதிநவீன ரோபோ..

எவ்வாறெனில், இந்த துப்பாக்கிகளின் மூலம்தான் காரின் கண்ணாடிகளை தக்ஸ் ரோபோக்கள் உடைக்கின்றன. எனவே தக்ஸ் ரோபோக்களுக்கு துப்பாக்கி இன்றியமையாத ஒன்றாகவே உள்ளது. அத்துடன் பூட்டப்பட்டிருக்கும் கதவுகளையும் துப்பாக்கியால் சுட்டு தகர்க்க முடியும்.

பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் இந்திய ராணுவத்தின் அதிநவீன ரோபோ..

பொதுமக்கள் நிறைந்திருக்கும் பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களில் வெடிகுண்டு இருப்பதாக சந்தேகம் எழும் பட்சத்தில், அந்த வாகனத்தை அங்கிருந்து இழுத்து சென்று விடக்கூடிய திறனும் தக்ஸ் ரோபோக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் இந்திய ராணுவத்தின் அதிநவீன ரோபோ..

தக்ஸ் ரோபோக்களால், சமதளங்களில் மட்டுமல்லாது படிக்கட்டுகளிலும் எளிதாக ஏற முடியும். அத்துடன் செங்குத்தான சரிவுகளிலும் கூட மிக எளிமையாக சென்ற வரக்கூடிய ஆற்றல் தக்ஸ் ரோபோக்களுக்கு உள்ளது.

பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் இந்திய ராணுவத்தின் அதிநவீன ரோபோ..

இந்த ரோபோக்கள் முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்க கூடியவை. ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்து விட்டால், தக்ஸ் ரோபோக்கள் மூன்று மணி நேரம் இடைவிடாமல் செயல்படும். தக்ஸ் ரோபோக்கள் குறித்து Defence Squad வெளியிட்டுள்ள வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

மக்கள் தொகை அடிப்படையில் உலகின் 2வது மிகப்பெரிய நாடான இந்தியாவுக்கு நாலாபுறம் இருந்தும் அச்சுறுத்தல் உள்ளது. குறிப்பாக நமது நாட்டின் பரம எதிரியான பாகிஸ்தான் தீவிரவாதிகளினுடைய புகழிடமாக திகழ்ந்து வருகிறது.

பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழும் இந்திய ராணுவத்தின் அதிநவீன ரோபோ..

தீவிரவாதிகளுக்கு கடுமையான பயிற்சிகளை அளிக்கும் பாகிஸ்தான் அவர்களை இந்தியாவுக்குள் அனுப்பி நாச வேலைகளை அரங்கேற்ற எந்நேரமும் துடித்து கொண்டேதான் இருக்கிறது. இதுபோன்ற தீய சக்திகளை எல்லாம் முறியடிக்க வேண்டிய கட்டாயம் இந்திய ராணுவத்திற்கு உள்ளது.

பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழும் இந்திய ராணுவத்தின் அதிநவீன ரோபோ..

எனவே இந்திய ராணுவத்தின் பலத்தை உயர்த்தும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக எடுக்கப்பட்டு கொண்டேதான் வருகின்றன. இதன் ஒரு பகுதியாக டிஆர்டிஓ நிறுவனம் உருவாக்கியதுதான் தக்ஸ் ரோபோக்கள்.

பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழும் இந்திய ராணுவத்தின் அதிநவீன ரோபோ..

தற்போது இந்திய ராணுவத்தில் தக்ஸ் ரோபோக்கள் சேவையாற்றி வருகின்றன. இதுதவிர இந்தியாவின் பாரா மிலிட்டரி படைகளிடமும் தக்ஸ் ரோபோக்கள் உள்ளன. இந்த சூழலில் புனே போலீஸ் படைக்கும் தக்ஸ் ரோபோக்கள் வழங்கப்படவுள்ளன.

பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழும் இந்திய ராணுவத்தின் அதிநவீன ரோபோ..

இன்னும் 6 மாத காலத்திற்குள் புனே போலீஸ் படையில் தக்ஸ் ரோபோக்கள் சேர்க்கப்படும். பின்னர் அவை புனே போலீஸ் படையினுடைய வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழப்பு (Bomb Detection and Disposal Squad) பிரிவிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.

Most Read Articles

ராயல் என்பீல்டு கிளாசிக் 350 சிக்னல்ஸ் எடிசன் மோட்டார் சைக்கிளின் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம்.

மேலும்... #ஆஃப் பீட்
English summary
DRDO’s Bomb Detection Specialist Robo Daksh Will Be Inducted Into Pune Police Force. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X