30 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்த கார்... விபத்திற்கு காரணம் தெரிந்தால் இனி இதை பயன்படுத்தவே மாட்டீர்கள்

கார் ஒன்று 30 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்து பெரும் விபத்தில் சிக்கியது. இந்த விபத்திற்கான காரணம் தெரிந்தால் இனி நீங்கள் நிச்சயமாக இதை பயன்படுத்தவே மாட்டீர்கள்.

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் வடக்கஞ்சேரி பகுதியை சேர்ந்தவர்கள் கோகுல்தாஸ் (23), ஈசாக் (29) மற்றும் முஸ்தபா (36). இவர்கள் மூவரும் மூணாறுக்கு சுற்றுலா செல்ல வேண்டும் என நீண்ட நாட்களாக திட்டமிட்டு கொண்டிருந்தனர்.

30 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்த கார்... விபத்திற்கு காரணம் தெரிந்தால் இனி இதை பயன்படுத்தவே மாட்டீர்கள்

கடந்த வியாழக்கிழமையன்றுதான் (6ம் தேதி) அதற்கான நேரம் கை கூடி வந்தது. எனவே உடனடியாக காரை எடுத்து கொண்டு மூணாறுக்கு சுற்றுலா புறப்பட்டு விட்டனர். மூணாறு அருகே உள்ள பாலமட்டம்-அவழிச்சல் சாலையில், நள்ளிரவு நேரத்தில் கார் சென்று கொண்டிருந்தது.

30 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்த கார்... விபத்திற்கு காரணம் தெரிந்தால் இனி இதை பயன்படுத்தவே மாட்டீர்கள்

ஆனால் அவழிச்சல் அருகே சென்றபோது, சாலையில் பெரிய பள்ளம் ஒன்று இருப்பதை கண்டு அவர்கள் திடுக்கிட்டனர். ஆனால் உடனடியாக சுதாரித்து கொண்டு நிறுத்த முயல்வதற்குள், கார் கட்டுப்பாட்டை இழந்து, பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்தது.

30 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்த கார்... விபத்திற்கு காரணம் தெரிந்தால் இனி இதை பயன்படுத்தவே மாட்டீர்கள்

காரில் இருந்த வாலிபர்கள் மூவரும் காருடன் பள்ளத்தில் கவிழ்ந்தனர். சுமார் 30 அடி ஆழம் கொண்ட அந்த பள்ளத்தில், 8 அடிக்கு தண்ணீர் நிறைந்து காணப்பட்டது. அதிர்ஷ்டவசமாக காரின் மேற்பகுதியை பிடித்து கொண்ட அவர்கள் மூவரும் உதவி கேட்டு கூச்சலிட்டனர்.

30 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்த கார்... விபத்திற்கு காரணம் தெரிந்தால் இனி இதை பயன்படுத்தவே மாட்டீர்கள்

அப்போது இரவு பணி முடித்த ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் சிலர் அவ்வழியாக வந்து கொண்டிருந்தனர். கூச்சல் கேட்டதையடுத்து, பள்ளத்தின் அருகே சென்று பார்த்தனர். அப்போதுதான் கார் ஒன்று தலைகீழாக கவிழ்ந்து கிடப்பதும், 3 வாலிபர்கள் உயிருக்கு போராடி கொண்டிருப்பதும் தெரியவந்தது.

30 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்த கார்... விபத்திற்கு காரணம் தெரிந்தால் இனி இதை பயன்படுத்தவே மாட்டீர்கள்

உடனடியாக தாங்கள் கட்டியிருந்த வேட்டியை கழற்றிய அவர்கள், அதனை கயிறு போல் மாற்றி, பள்ளத்தில் சிக்கி கொண்டிருந்த 3 வாலிபர்களையும் மேலே இழுத்தனர். சிறிது நேர போராட்டத்திற்கு பின் மூன்று வாலிபர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

30 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்த கார்... விபத்திற்கு காரணம் தெரிந்தால் இனி இதை பயன்படுத்தவே மாட்டீர்கள்

லேசான காயம் அடைந்திருந்தாலும் அதிர்ஷ்டவசமாக அவர்கள் மூவரும் உயிர் தப்பி விட்டனர். பின்னர் அவர்களுக்கு உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. முன்னதாக பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்து கிடந்த கார், கிரேன் மூலமாக மீட்கப்பட்டது.

30 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்த கார்... விபத்திற்கு காரணம் தெரிந்தால் இனி இதை பயன்படுத்தவே மாட்டீர்கள்

மாலைமலர் வெளியிட்டுள்ள செய்தியின்படி பார்த்தால், கார் விபத்தில் சிக்கியதற்கு தொழில்நுட்பம்தான் மிக முக்கியமான காரணம். ஆம், இன்று நாம் அனைவரும் சர்வ சாதாரணமாக பயன்படுத்தி வரும் கூகுள் மேப்ஸ்தான் (Google Maps), இந்த விபத்திற்கு மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.

30 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்த கார்... விபத்திற்கு காரணம் தெரிந்தால் இனி இதை பயன்படுத்தவே மாட்டீர்கள்

தொழில்நுட்பம் வெகுவாக வளர்ச்சியடைந்து விட்ட காலம் இது. இன்றைய சூழலில், ஒரு இடத்திற்கு செல்ல வேண்டுமானால், நாம் யாரிடமும் வழி கேட்டு கொண்டிருப்பதில்லை. நாம் செல்ல வேண்டிய இடத்திற்கான வழியை, மொபைல் போனில் உள்ள கூகுள் மேப்பே காட்டி விடுவதுதான் இதற்கு காரணம்.

30 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்த கார்... விபத்திற்கு காரணம் தெரிந்தால் இனி இதை பயன்படுத்தவே மாட்டீர்கள்

எந்த வழியாக செல்ல வேண்டும்? அதற்கு ஆகும் நேரம் எவ்வளவு? பயணம் செய்யும் வழியில் போக்குவரத்து நெரிசல் உள்ளதா? என்ற அத்தனை தகவல்களையும் கூகுள் மேப் வழங்குகிறது. எனவேதான் இன்று பெரும்பாலானோர் கூகுள் மேப்பை பயன்படுத்தி பயணம் செய்து கொண்டிருக்கின்றனர்.

30 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்த கார்... விபத்திற்கு காரணம் தெரிந்தால் இனி இதை பயன்படுத்தவே மாட்டீர்கள்

ஆனால் அனைத்து நேரங்களிலும் தொழில்நுட்பம் கை கொடுத்து கொண்டே இருக்காது. சில சமயங்களில் காலையே வாரி விட்டு விடும். இந்த 3 இளைஞர்களும் விபத்தில் சிக்கி கொண்ட சம்பவம் அதற்கு ஓர் உதாரணம் மட்டுமே.

30 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்த கார்... விபத்திற்கு காரணம் தெரிந்தால் இனி இதை பயன்படுத்தவே மாட்டீர்கள்

திருச்சூரில் இருந்து காரில் கிளம்பிய வாலிபர்கள் மூவருக்கும், மூணாறு செல்வதற்கான வழி தெரியவில்லை. எனவே கூகுள் மேப் பார்த்துதான் அவர்கள் காரை ஓட்டி சென்று கொண்டிருந்தனர். விபத்தில் சிக்கிய நேரத்திலும், கூகுள் மேப் வழிகாட்டுதலின்படிதான் கார் பயணித்து கொண்டிருந்தது.

30 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்த கார்... விபத்திற்கு காரணம் தெரிந்தால் இனி இதை பயன்படுத்தவே மாட்டீர்கள்

ஆனால் கூகுள் மேப் காட்டிய வழி அவர்களை 30 அடி பள்ளத்தில் தள்ளி விட்டுள்ளது. கூகுள் மேப் காட்டிய வழியில் வந்து, காருடன் சேர்த்து 3 வாலிபர்கள் பள்ளத்தில் விழுந்த பரபரப்பு அடங்குவதற்குள், அதே பாதையில் மற்றொரு கார் வந்து கொண்டிருந்தது.

30 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்த கார்... விபத்திற்கு காரணம் தெரிந்தால் இனி இதை பயன்படுத்தவே மாட்டீர்கள்

அந்த காரில் இருந்தவர்களும் கூகுள் மேப் பார்த்து கொண்டே மூணாறு நோக்கி சென்று கொண்டிருந்தனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக அப்பகுதி மக்கள் அந்த காரை தடுத்து நிறுத்தி, நடந்த சம்பவங்களை எல்லாம் தெரிவித்தனர். பின்னர் அந்த காரை மாற்றுப்பாதையில் திருப்பி விட்டனர்.

30 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்த கார்... விபத்திற்கு காரணம் தெரிந்தால் இனி இதை பயன்படுத்தவே மாட்டீர்கள்

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ''திருச்சூரில் இருந்து மூணாறு செல்ல கூகுள் மேப்பில் வழி தேடினால், இந்த பாதைதான் வரும். என்றாலும் இங்கு 30 அடி ஆழ பள்ளம் இருப்பது இங்கு வசித்து கொண்டிருக்கும் உள்ளூர் நபர்களுக்கு மட்டும்தான் தெரியும்.

30 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்த கார்... விபத்திற்கு காரணம் தெரிந்தால் இனி இதை பயன்படுத்தவே மாட்டீர்கள்

ஆனால் இதனை எச்சரிக்கும் விதமாக அறிவிப்பு பலகைகள் எதுவும் வைக்கப்படவில்லை. இனிமேலாவது எச்சரிக்கை பலகைகளை வைக்க நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றனர். ஆனால் இதுபோன்ற சம்பவம் நடைபெறுவது இது முதல் முறை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

30 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்த கார்... விபத்திற்கு காரணம் தெரிந்தால் இனி இதை பயன்படுத்தவே மாட்டீர்கள்

கடந்த சில மாதங்களுக்கு முன்பாக, ஆக்ரா-லக்னோ அதிவிரைவு சாலையில், கூகுள் மேப்-ஐ பின்தொடர்ந்து சென்ற கார் ஒன்று, 65 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்தது. அப்போது காரில் 4 பேர் இருந்தனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக அவர்கள் அனைவரும் உயிர் தப்பி விட்டனர்.

30 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்த கார்... விபத்திற்கு காரணம் தெரிந்தால் இனி இதை பயன்படுத்தவே மாட்டீர்கள்

ஆட்டோ டிரைவரான முகமது நவுசாத் என்பவர்தான் அந்த காரின் உரிமையாளர். தனது மனைவிக்கு பரிசாக வழங்குவதற்காக புதிய எஸ்யூவி வகை காரை வாங்கி கொண்டு அப்போதுதான் வீடு திரும்பி கொண்டிருந்தார். காரில் உடன் இருந்தது முகமது நவுசாத்தின் நண்பர்கள்.

30 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்த கார்... விபத்திற்கு காரணம் தெரிந்தால் இனி இதை பயன்படுத்தவே மாட்டீர்கள்

அந்த நேரத்தில்தான் புதிய கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இதனை தொடர்ந்து கடந்த சில வாரங்களுக்கு முன்பாக அமெரிக்காவில் நடைபெற்ற ஒரு சம்பவம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

30 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்த கார்... விபத்திற்கு காரணம் தெரிந்தால் இனி இதை பயன்படுத்தவே மாட்டீர்கள்

அமெரிக்காவின் பென்சில்வானியா (Pennsylvania) மாகாணத்தை சேர்ந்த பெண் ஒருவர் டக்யூன்ஸ் என்ற நகரில், கடந்த நவம்பர் மாதம் 21ம் தேதி காரை ஓட்டி சென்று கொண்டிருந்தார். அவர் ஜிபிஎஸ் வழிகாட்டுதலில் காரை ஓட்டி கொண்டிருந்தார்.

30 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்த கார்... விபத்திற்கு காரணம் தெரிந்தால் இனி இதை பயன்படுத்தவே மாட்டீர்கள்

அப்போது அங்கிருந்த ரயில்வே தண்டவாளத்தின் வழியாக செல்ல வேண்டும் என ஜிபிஎஸ் காட்டியுள்ளது. ஆனால் அந்த பெண் குடிபோதையில் இருந்த காரணத்தால், கொஞ்சமும் யோசிக்காமல் ரயில்வே தண்டவாளத்தின் வழியாகவே காரை செலுத்தி விட்டார்.

30 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்த கார்... விபத்திற்கு காரணம் தெரிந்தால் இனி இதை பயன்படுத்தவே மாட்டீர்கள்

அந்த நேரத்தில் கார் திடீரென தண்டவாளத்தில் சிக்கி கொண்டது. அந்த பெண்ணும் சுய நினைவை இழந்து மயங்கி விட்டார். அதிர்ஷ்டவசமாக ரயில் வருவதற்கு முன்பாக, அந்த பெண் மீட்கப்பட்டார். காரும் அங்கிருந்து அகற்றப்பட்டது. அப்பகுதியில் இருந்தவர்கள் இதற்கு உதவினர்.

30 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்த கார்... விபத்திற்கு காரணம் தெரிந்தால் இனி இதை பயன்படுத்தவே மாட்டீர்கள்

இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், முழுக்க முழுக்க கூகுள் மேப்பை மட்டுமே நம்பி, டூவீலர், கார் உள்ளிட்ட வாகனங்களை இயக்கி கொண்டிருக்கும் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Driver Follows Google Maps, Car Falls Into 30-ft Crater Near Munnar. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X