குடிக்கும்போது செல்போன் பயன்படுத்தாதீர்கள்... போலீஸாரின் அறிவிப்பால் நகைப்பு...!

போலீஸாரின் அறிவிப்பு பலகையால் நகைப்பு அலை... டிரைவிங் பதிலாக டிரிங்கிங் எனப் எழுதியதால் விமர்சனத்திற்குள்ளான ஜம்மு போலீஸார்கள். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த செய்தியில் காணலாம்.

குடிக்கும்போது செல்போன் பயன்படுத்தாதீர்கள்... போலீஸாரின் அறிவிப்பால் நகைப்பு...!

சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு தகவல் வழங்கும் விதமாக சாலையோரங்களில், அறிவிப்பு பதாகைகள் வைக்கப்படுவது வழக்கம். அவ்வாறு, வைக்கப்படும் அறிவிப்பு பலகைகளில், சாலை குறித்தும், வாகன ஓட்டிகள் கடைபிடிக்க வேண்டிய விதிகள் குறித்தும், அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் வாசகங்கள் எழுதப்படுகின்றன.

குடிக்கும்போது செல்போன் பயன்படுத்தாதீர்கள்... போலீஸாரின் அறிவிப்பால் நகைப்பு...!

இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முகல் சாலையில், போலீஸாரால் வைக்கப்பட்டுள்ள ஓர் அறிவிப்பு பலகையால் நகைப்பு அலை உருவாகியுள்ளது. இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. வாகன ஓட்டியின் பாதுகாப்பு குறித்து போக்குவரத்து போலீஸார் வைத்துள்ள அந்த பலகையில் எழுதியிருக்கம் வாசகமே அதற்கு காரணமாக இருக்கின்றது.

குடிக்கும்போது செல்போன் பயன்படுத்தாதீர்கள்... போலீஸாரின் அறிவிப்பால் நகைப்பு...!

அந்தவகையில், போக்குவரத்து போலீஸார் அந்த பலகையில், குடிக்கும்போது செல்போன் பயன்படுத்த வேண்டாம் என எழுதி வைத்துள்ளனர். பொதுவாக, வாகனம் ஓட்டும்போது செல்போனை பயன்படுத்த வேண்டாம் எனதான் கூறுவார்கள். ஆனால், இங்கு மாறாக குடிக்கும்போது செல்போனைப் பயன்படுத்த வேண்டாம் என எழுதப்பட்டுள்ளது.

குடிக்கும்போது செல்போன் பயன்படுத்தாதீர்கள்... போலீஸாரின் அறிவிப்பால் நகைப்பு...!

மேலும், இந்த வாசகத்திற்கு கீழாக டிராஃபிக் போலீஸ் ரூரல் ஜம்மு என்றுவேறு எழுதியுள்ளனர். அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சிலர், அவர்கள் பார்த்து சிறித்தது மட்டுமின்றி, நாடே சிரிக்கும் வகையில் அதனை இணையத்தில் பதிவிட்டுள்ளனர். தற்போது, இந்த புகைப்படம் இணையத்தில் காட்டு தீயாய் பரவி வருகின்றன.

குடிக்கும்போது செல்போன் பயன்படுத்தாதீர்கள்... போலீஸாரின் அறிவிப்பால் நகைப்பு...!

பொதுவாக சாலையோரங்களில் வைக்கப்படும் இதுபோன்ற அறிவிப்பு பலகைகள், வேகத்தடை, யு டர்ன், நோ வே, ஒன் வே, ஹெல்மெட் அணிந்து பயணியுங்கள், காரில் சீட் பெல்ட் அணிந்து செல்லுங்கள், குடித்துவிட்டு வாகனத்தை இயக்க வேண்டாம் உள்ளிட்டவைப் போன்ற வாசகங்கள் எழுதப்பட்டு வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கையும், தகவலும் அளிக்கப்பட்டு வருகின்றது.

குடிக்கும்போது செல்போன் பயன்படுத்தாதீர்கள்... போலீஸாரின் அறிவிப்பால் நகைப்பு...!

இந்நிலையில், குடிக்கும்போது செல்போனை பயன்படுத்த வேண்டாம் என ஜம்மு ரூரல் பகுதி போலீஸார் எழுதியிருப்பது ட்விட்டர் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக வலைதளப்பக்கத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது. அந்தவகையில், அம்மாநிலத்தின் முதலமைச்சரான ஓமர் அப்துல்லா இதுகுறித்த பதிவு ஒன்றை, கிண்டலடிக்கும் வகையில் பதிவிட்டுள்ளார்.

குடிக்கும்போது செல்போன் பயன்படுத்தாதீர்கள்... போலீஸாரின் அறிவிப்பால் நகைப்பு...!

அவரது ட்வீட்டில், மது அருந்திவிட்டு வாகனத்தை இயக்கக் கூடாது. வாகனத்தை இயக்கும்போது செல்போன் பயன்படுத்தக் கூடாது. இவற்றைப்ப் போன்ற புதிய ஆலோசனைதான் இது என பதிவிட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து அறிந்த ரூரல் ஜம்மு பகுதியின் எஸ்எஸ்பி மோஹன் லால் கெய்த், "அந்த பலகையை உடனடியாக அகற்றவும், மேலும், அந்த பலகை குறித்து விசாரணை மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளார்.

அறிவிப்பு பதாகைகள், பெரும்பாலும் வாகன ஓட்டிகளுக்கு தகவல் அளிக்கும் விதமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில், எழுதப் படிக்க தெரியாத வாகன ஓட்டுநர்கள்கூட எளிதில் அறிந்துகொள்ளும் வகையில், வடிவங்கள் (குறிகள்) மூலம் அவை நிறுவப்படுகின்றன. அவ்வாறு வழங்கப்படும் ஒவ்வொரு குறிகளுக்கும் ஒவ்வொரு அர்த்தம் இருக்கின்றன.

குடிக்கும்போது செல்போன் பயன்படுத்தாதீர்கள்... போலீஸாரின் அறிவிப்பால் நகைப்பு...!

அவற்றை ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் தெளிவாக விளக்குகின்றன. அவசரமாக சாலையில் சென்றுக் கொண்டிருக்கும்போது, வாகனத்தை நிறுத்தி பதாகைகளை படிக்க முடியாத என்ற காரணத்தாலேயே வடிவங்கள் பொறித்த பலகைகள் சாலைகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அந்தவொரு வடிவமே, வாகன ஓட்டிக்கு தேவையான தகவலை வழங்கிவிடும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Source: polimernews

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
‘Driving’ Changed To ‘Drinking’ On Police Signboard. Read In Tamil.
Story first published: Friday, June 21, 2019, 15:26 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X