கொரோனா மட்டுமில்லை அதோட அப்பனாலையே ஒன்னும் செய்ய முடியாது.. காவல்துறைக்கு ஸ்பெஷல் பாதுகாப்பு கவசம்..

கொரோனவிற்கு எதிரான போரில் அதோடைய அப்பனே வந்தாலும் ஒன்னும் செய்ய முடியாத அளவிலான பாதுகாப்பு அம்சத்தை தனியார் நிறுவனம் ஒன்று குருகிராம் காவல்துறைக்கு வழங்கி வருகின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

கொரோனா மட்டுமில்லை அதோட அப்பனாலையே ஒன்னும் செய்ய முடியாது.. காவல்துறைக்கு ஸ்பெஷல் பாதுகாப்பு கவசம்..!

மனித இனத்திற்கே பேராபத்தை விளைவிக்கும் வகையில் உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருக்கின்றது உயிர் கொல்லி கோரோனா வைரஸ். காட்டு தீயைவிட அதிகவேகமாக பரவிக் கொண்டிருக்கும் இந்த வைரசின் காரணமாக தினம் தினம் பல்லாயிரக் கணக்கான உயிர்கள் பாதிப்படைந்து வருகின்றன. மேலும், ஆயிரம் கணக்கானோர் தங்களின் இன்னுயிரை பறிகொடுத்து வருகின்றனர்.

கொரோனா மட்டுமில்லை அதோட அப்பனாலையே ஒன்னும் செய்ய முடியாது.. காவல்துறைக்கு ஸ்பெஷல் பாதுகாப்பு கவசம்..!

அறிவிக்கப்படாத திடீர் போரை தொடுத்திருக்கும் இந்த வைரஸ் உலகளவில் பெரும் பாதிப்பையும், அச்சத்யும் ஏற்படுத்தியுள்ளது. இதனால் உலக வல்லரசு நாடுகள்கூட, கண்களுக்கே புலப்படாத வைரசைக் கண்டு நடு நடுங்கிக் கொண்டிருக்கின்றன. அதேசமயம், வைரசுக்கு எதிரான போரையும் அவை தீவிரப்படுத்தி வருகின்றன.

கொரோனா மட்டுமில்லை அதோட அப்பனாலையே ஒன்னும் செய்ய முடியாது.. காவல்துறைக்கு ஸ்பெஷல் பாதுகாப்பு கவசம்..!

குறிப்பாக, இந்த போரில் வீரர்களாக மருத்துவர்கள், காவலர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோரே முன்னிறுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் தங்களின் குடும்பம் மற்றும் உறவினர்ளை மறந்து பொது பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனாலயே பெரும்பாலனோரின் கண்களுக்கு அவர்கள் ஹீரோக்களாக மாறியிருக்கின்றனர்.

கொரோனா மட்டுமில்லை அதோட அப்பனாலையே ஒன்னும் செய்ய முடியாது.. காவல்துறைக்கு ஸ்பெஷல் பாதுகாப்பு கவசம்..!

சில இடங்களில் தூய்மைப் பணியாளர்களை மலர்தூவி வரவேற்பதையும் நம்மால் காண முடிகின்றது. இந்நிலையில், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் சில ரியல் லைஃப் ஹீரோக்களாக மாறியிருக்கும் மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் காவலர்களை சிறப்பிக்ம் விதமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றன.

கொரோனா மட்டுமில்லை அதோட அப்பனாலையே ஒன்னும் செய்ய முடியாது.. காவல்துறைக்கு ஸ்பெஷல் பாதுகாப்பு கவசம்..!

அந்தவகையில், கொரோனாவிற்கு எதிரான போரில் களத்தில் இறங்கி பணி புரிந்து வரும் காவல்துறைக்கு கூடுதல் பாதுகாப்பை ஏற்படுத்தும் முயற்சியில் பிரபல ட்ரூம் நிறுவனம் களமிறங்கியிருக்கின்றது.

இந்நிறுவனம் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை செகண்ட் ஹேண்டில் வாங்கி விற்பனைச் செய்யும் பணியை இந்தியாவில் செய்து வருகின்றது.

கொரோனா மட்டுமில்லை அதோட அப்பனாலையே ஒன்னும் செய்ய முடியாது.. காவல்துறைக்கு ஸ்பெஷல் பாதுகாப்பு கவசம்..!

அவ்வாறு, பழைய வாகனங்களை விற்கும் போது கையாளும் சில பாதுகாப்பு தொழில்நுட்ப அம்சங்களைப் பயன்படுத்தி போலீஸார்களின் வாகனங்களைத் தூய்மைப்படுத்தும் பணியை அது தற்போது மேற்கொண்டு வருகின்றது.

கொரோனாவிற்கு எதிரான போரில் காவல்துறையினருக்கு அதிக சவால்கள் நிலவு வருகின்றது. இவர்கள் பல தரப்பட்ட மக்களை கையாள உள்ளது.

கொரோனா மட்டுமில்லை அதோட அப்பனாலையே ஒன்னும் செய்ய முடியாது.. காவல்துறைக்கு ஸ்பெஷல் பாதுகாப்பு கவசம்..!

ஆகையால், இவர்களுக்கான பாதுகாப்பு தற்போது கள்விகுறியாகவே உள்ளது. எனவே, இந்த நிலையைப் போக்கும் விதமாக தானே முன் வந்து போலீஸார்களின் வாகனங்களை சிறப்பு கிருமி நாசினிகளைக் கொண்டு சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டு வருகின்றது ட்ரூம். இந்த சிறப்பு சேவையை ஹரியானா மாநிலம் குருகிராமில் அந்நிறுவனம் செய்யத் தொடங்கியுள்ளது.

கொரோனா மட்டுமில்லை அதோட அப்பனாலையே ஒன்னும் செய்ய முடியாது.. காவல்துறைக்கு ஸ்பெஷல் பாதுகாப்பு கவசம்..!

பாதுகாப்பு ஷீல்டைப் போன்று செயல்படும் இந்த கிருமி நாசினி சார்ஸ் போன்ற கொடியை வைரஸைக் ��ூட அழித்துவிடும் தன்மையைக் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி, இந்த பாதுகாப்பு ஷீல்ட் மூன்று மாதங்கள் வரை வாகனங்கள்மீது கிருமி அண்டுவதைத் தவிர்க்கும் வல்லமைக் கொண்டது என கூறப்படுகின்றது.

கொரோனா மட்டுமில்லை அதோட அப்பனாலையே ஒன்னும் செய்ய முடியாது.. காவல்துறைக்கு ஸ்பெஷல் பாதுகாப்பு கவசம்..!

ட்ரூம் நிறுவனத்தின் இந்த நடவடிக்கையால் தன் நலம் மறந்து பொது நலத்திற்காக போராடி வரும் போலீஸாருக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்கும் நிலை உருவாகியிருக்கின்றது. மேலும், அதிக ஆரோக்கித்துடன் அவர்கள் கூடுதல் பணியை மேற்கொள்ளவும் இந்த சேவை உதவும். கார்கள் மற்றும் போலீஸார் பயன்படுத்தும் பைக்குகளுக்கு ட்ரூம் இந்த பாதுகாப்பு கவசத்தை வழங்கி வருகின்றது.

கொரோனா மட்டுமில்லை அதோட அப்பனாலையே ஒன்னும் செய்ய முடியாது.. காவல்துறைக்கு ஸ்பெஷல் பாதுகாப்பு கவசம்..!

கொரோனாவிற்கு எதிரான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றது. இதற்காக, ஒவ்வொரு நிறுவனமும் தங்களின் பங்காக சிறந்த உதவியை அளித்து வருகின்றன. குறிப்பாக, பல நிறுவனங்கள் நிதி மற்றும் மருத்துவ உகரணங்களை வழங்கி வருகின்ற நிலையில், ட்ரூம் இந்த சிறந்த உதவியை குருகிராம் போலீசுக்கு வழங்கியுள்ளது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Droom Used Special Sanitize For Gurugram Police Vehicles Fleet. Read In Tamil.
Story first published: Monday, April 6, 2020, 11:54 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X