நள்ளிரவில் நடந்த திக் திக் சம்பவம் இதுதான்... பயணி கூறிய புகாரால் டிரைவர் மீது ஓலா அதிரடி நடவடிக்கை

பயணி கூறிய புகார் காரணமாக டிரைவர் மீது ஓலா அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

நள்ளிரவில் நடந்த திக் திக் சம்பவம் இதுதான்... பயணி கூறிய புகாரால் டிரைவர் மீது ஓலா அதிரடி நடவடிக்கை

ஓலா மற்றும் உபேர் உள்ளிட்ட நிறுவனங்களின் கேப்ஸ்களை பயணிகள் தற்போது அதிகம் பயன்படுத்த தொடங்கி விட்டனர். குறிப்பாக சென்னை, பெங்களூர், ஐதராபாத், மும்பை, டெல்லி மற்றும் கொல்கத்தா போன்ற நகரங்களில், அனைத்து தரப்பு பயணிகள் மத்தியிலும், ஓலா மற்றும் உபேர் கேப்ஸ்கள் மிகவும் பிரபலமாக உள்ளன.

நள்ளிரவில் நடந்த திக் திக் சம்பவம் இதுதான்... பயணி கூறிய புகாரால் டிரைவர் மீது ஓலா அதிரடி நடவடிக்கை

இதுதவிர இந்தியாவின் இரண்டாம் கட்ட நகரங்களை சேர்ந்த பயணிகளும் கூட தற்போது ஓலா மற்றும் உபேர் கேப்ஸ்களில் அதிகமாக பயணிக்க தொடங்கியுள்ளனர். ஆனால் ஓலா, உபேர் டிரைவர்கள் மீது அவ்வப்போது ஒரு சில புகார்கள் எழுந்து வருகின்றன. பயணிகளிடம் அத்துமீறி நடந்து கொள்வது, தகராறுகளில் ஈடுபடுவது போன்ற புகார்களில் ஓலா, உபேர் டிரைவர்கள் அவ்வப்போது சிக்குகின்றனர்.

நள்ளிரவில் நடந்த திக் திக் சம்பவம் இதுதான்... பயணி கூறிய புகாரால் டிரைவர் மீது ஓலா அதிரடி நடவடிக்கை

இந்த சூழலில் ஓலா டிரைவர் ஒருவர் மீது தற்போது பயணி ஒருவர் புகார் தெரிவித்துள்ளார். இதனால் அந்த டிரைவர் மீது ஓலா நிறுவனம் அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளது. மஹாராஷ்டிரா மாநில தலைநகர் மும்பையில், கடந்த டிசம்பர் 15ம் தேதியன்று நள்ளிரவில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. சம்பவத்தன்று பிரசாந்த் ராவ் என்பவர் ஓலா கேப் ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்தார்.

நள்ளிரவில் நடந்த திக் திக் சம்பவம் இதுதான்... பயணி கூறிய புகாரால் டிரைவர் மீது ஓலா அதிரடி நடவடிக்கை

இவர் தானேவை சேர்ந்தவர். அந்தேரியில் உள்ள லோக்கண்ட்வாலாவில் இருந்து தானேவில் உள்ள தனது வீட்டிற்கு பிரசாந்த் ராவ் சென்று கொண்டிருந்தார். டிரைவர் ரசீத் அகமது சையத் என்பவர் அந்த வாகனத்தை ஓட்டி சென்றார். ஆனால் அவர் தூக்க கலக்கத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. எனவே பலமுறை மற்ற வாகனங்களுடன் மோதுவது போல் சென்றுள்ளார்.

நள்ளிரவில் நடந்த திக் திக் சம்பவம் இதுதான்... பயணி கூறிய புகாரால் டிரைவர் மீது ஓலா அதிரடி நடவடிக்கை

இதனால் பிரசாந்த் ராவ் அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், ''பயணம் தொடங்குவதற்கு முன்பாகவே டிரைவர் ரசீத் அகமது சையத் தூங்குவதை நான் கண்டேன். நான் டிரைவருக்கு அருகில் அமர்ந்திருந்தேன். அவர் அவ்வப்போது தூங்கி வழிந்தார். 2 அல்லது 3 முறை மற்ற வாகனங்களுடன் மோதுவது போல் அவர் சென்றார்.

நள்ளிரவில் நடந்த திக் திக் சம்பவம் இதுதான்... பயணி கூறிய புகாரால் டிரைவர் மீது ஓலா அதிரடி நடவடிக்கை

எனவே இது தொடர்பாக புகார் பதிவு செய்ய வேண்டும் என முடிவு செய்தேன். ஆனால் பயணம் முடிந்த பிறகு உடனடியாக ஓலா ஹெல்ப்லைனை என்னால் தொடர்பு கொள்ள முடியவில்லை. எனவே மறுநாள் இதுகுறித்து ஓலாவிடம் புகார் தெரிவித்தேன். ஆனால் அன்றைய தினம் அதிகாலை 4 மணி முதல் கேப் ஓட்டி வருவதாக அந்த டிரைவர் என்னிடம் கூறினார்'' என்றார்.

நள்ளிரவில் நடந்த திக் திக் சம்பவம் இதுதான்... பயணி கூறிய புகாரால் டிரைவர் மீது ஓலா அதிரடி நடவடிக்கை

இதனிடையே பிரசாந்த் ராவ் அளித்த புகார் காரணமாக டிரைவர் ரசீத் அகமது சையத்தை ஓலா நிறுவனம் அதிரடியாக சஸ்பெண்ட் செய்துள்ளது. ஆனால் ஒரு நாளைக்கு சுமார் 14-15 மணி நேரம் என ஒரு மாதத்திற்கு சுமார் 29 நாட்கள் வாகனங்களை இயக்க டிரைவர்கள் கட்டாயப்படுத்தப்படுவதாக ஓட்டுனர்களின் தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

நள்ளிரவில் நடந்த திக் திக் சம்பவம் இதுதான்... பயணி கூறிய புகாரால் டிரைவர் மீது ஓலா அதிரடி நடவடிக்கை

உலகிலேயே சாலை விபத்துக்கள் காரணமாக அதிக உயிர்களை பறிகொடுக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இதற்கு டிரைவர்கள் தூக்க கலக்கத்தில் வாகனங்களை ஓட்டுவதும் முக்கியமான காரணமாக இருக்கும் சூழலில், இவ்வாறான புகார்கள் தொடர்ச்சியாக எழுந்து வருவது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.

நள்ளிரவில் நடந்த திக் திக் சம்பவம் இதுதான்... பயணி கூறிய புகாரால் டிரைவர் மீது ஓலா அதிரடி நடவடிக்கை

தூக்க கலக்கம் ஏற்படுவதை தவிர்ப்பதற்கான சில எளிய வழிகள்:

பொதுவாக வாகனங்களை இயக்கும்போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். காலையில் வாகனங்களை இயக்க தொடங்குவதற்கு முன்பாக இரவில் 7 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை நன்றாக தூங்குவது அவசியம். இதன் மூலம் வாகனங்களை ஓட்டும்போது தூக்க கலக்கம் ஏற்படுவதை தவிர்க்க முடியும்.

இன்ஸ்டாகிராமில் எங்களை பின்தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்

நள்ளிரவில் நடந்த திக் திக் சம்பவம் இதுதான்... பயணி கூறிய புகாரால் டிரைவர் மீது ஓலா அதிரடி நடவடிக்கை

அதேபோல் காரில் நீண்ட தூர பயணம் செல்பவர்கள் வாகனம் ஓட்டுவதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். குறிப்பிட்ட இடைவெளியில் இரண்டு பேர் மாறி மாறி வாகனம் ஓட்டுவதன் மூலம் களைப்பு ஏற்படுவதை தடுக்க முடியும். நள்ளிரவு நேரங்களில் கார்களை இயக்குவதை முடிந்த வரைக்கும் தவிர்த்து விடுங்கள்.

நள்ளிரவில் நடந்த திக் திக் சம்பவம் இதுதான்... பயணி கூறிய புகாரால் டிரைவர் மீது ஓலா அதிரடி நடவடிக்கை

அதேபோல் அதிகாலை நேரங்களில் வாகனங்களை இயக்குவதை தவிர்ப்பதும் நல்லது. ஏனெனில் நள்ளிரவு நேரங்களிலும், அதிகாலை நேரங்களிலும்தான் அதிகப்படியான சாலை விபத்துக்கள் நடக்கின்றன. இது நாம் தூங்குவதற்கான நேரம். இதுதவிர மதிய நேரங்களில் வாகனங்களை இயக்கும்போது கூட தூக்க கலக்கம் ஏற்படலாம்.

நள்ளிரவில் நடந்த திக் திக் சம்பவம் இதுதான்... பயணி கூறிய புகாரால் டிரைவர் மீது ஓலா அதிரடி நடவடிக்கை

கொஞ்சம் வயதானவர்கள் மதிய நேரங்களில் தூக்க கலக்கத்தால் விபத்தில் சிக்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே இவற்றை மனதில் வைத்து வாகனங்களை இயக்கினால், நீங்கள் தூக்க கலக்கத்தால் விபத்தில் சிக்குவதை தவிர்க்க முடியும்.

Note: Images used are for representational purpose only.

கல்லூரி மாணவிகளை கியர் மாற்ற சொல்லி குதூகலித்த பஸ் ஓட்டுனர்... பின்னர் நடந்தது இதுதான்!

இந்தியாவை சேர்ந்த டிரைவர்கள் தொடர்ச்சியாக பல்வேறு தவறுகளை செய்து வருகின்றனர். இதன்படி தவறு செய்த ஓலா டிரைவர் மீது தற்போது அதிரடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் கடந்த ஒரு சில வாரங்களுக்கு முன்பு பஸ் டிரைவர் ஒருவர் பெரும் தவறை செய்தார்.

கல்லூரி மாணவிகளை கியர் மாற்ற சொல்லி குதூகலித்த பஸ் ஓட்டுனர்... பின்னர் நடந்தது இதுதான்!

கேரளாவை சேர்ந்த அந்த பஸ் ஓட்டுனர் கல்லூரி மாணவிகளை கியர் மாற்றுவதற்கு அனுமதித்து குதூகலித்தார். அந்த வீடியோவும் வெளியாகி சமூக வலை தளங்களில் வைரலாக பரவியது. அந்த வீடியோவையும், அதன் பின் நடந்த விஷயங்களையும் தொடர்ந்து பார்க்கலாம்.

கல்லூரி மாணவிகளை கியர் மாற்ற சொல்லி குதூகலித்த பஸ் ஓட்டுனர்... பின்னர் நடந்தது இதுதான்!

பொது போக்குவரத்து சாதனைங்களை இயக்குவோருக்கு அதிக பொறுப்பு இருக்கிறது. ஆனால், பொது போக்குவரத்தில் முக்கிய பங்காற்றி வரும் பஸ் ஓட்டுனர்களின் அஜாக்கிரதை, பொறுப்பற்ற தன்மை போன்றவற்றால் பல அப்பாவிகளின் உயிர் பறிக்கப்படுவது வாடிக்கையாவிட்டது.

கல்லூரி மாணவிகளை கியர் மாற்ற சொல்லி குதூகலித்த பஸ் ஓட்டுனர்... பின்னர் நடந்தது இதுதான்!

இதுபோன்ற அசம்பாவிதங்களை தவிர்க்க பஸ் ஓட்டுனர்கள் மிகுந்த கவனத்துடன் செயல்படுவது அவசியமாகிறது. இந்த நிலையில், கேரளாவை சேர்ந்த பஸ் ஓட்டுனர் ஒருவர் கல்லூரி மாணவிகளை கியர் மாற்ற அனுமதித்து குதூகலிக்கும் வீடியோ ஒன்று சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கல்லூரி மாணவிகளை கியர் மாற்ற சொல்லி குதூகலித்த பஸ் ஓட்டுனர்... பின்னர் நடந்தது இதுதான்!

கேரளாவிலிருந்து அந்த பஸ் கோவாவிற்கு கல்விச் சுற்றுலா சென்றுள்ளது. அதில், ஏராளமான கல்லூரி மாணவிகள் இருந்துள்ளனர். அப்போது மாணவிகள் சிலரை கியர் மாற்றுவதற்கு அவர் அனுமதித்து இருப்பதையும், அதனை மற்றொருவர் வீடியோ எடுத்துள்ளதும் தெரிகிறது.

கல்லூரி மாணவிகளை கியர் மாற்ற சொல்லி குதூகலித்த பஸ் ஓட்டுனர்... பின்னர் நடந்தது இதுதான்!

போக்குவரத்து நிலைக்கு ஏற்ப பஸ்சின் வேகத்தை வைத்து அவர் கியரை குறைக்கவும், கூட்டுவதற்கும் கூறுவதும், அதற்கு ஏற்ப இரண்டு மாணவிகள் கியர் லிவரை முன் பின் நகர்த்துவதும் அந்த வீடியோவில் பதிவாகி இருக்கிறது.

கல்லூரி மாணவிகளை கியர் மாற்ற சொல்லி குதூகலித்த பஸ் ஓட்டுனர்... பின்னர் நடந்தது இதுதான்!

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருக்கிறது. மாணவிகளை கியர் மாற்றுவதற்கு அனுமதித்த ஓட்டுனருக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது எவ்வளவு தூரம் அபாயகரமானது என்பதை கூட அறியாமல் கியர் மாற்ற அனுமதித்திருப்பது ஓட்டுனரின் அறியாமையை காட்டுவதாக இருக்கிறது.

கல்லூரி மாணவிகளை கியர் மாற்ற சொல்லி குதூகலித்த பஸ் ஓட்டுனர்... பின்னர் நடந்தது இதுதான்!

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து, ஆர்டிஓ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில், அந்த பஸ்சை இயக்கியது வயநாடு பகுதியை சேர்ந்த ஷாஜி என்பது தெரிய வந்தது. மேலும், அவருக்கு ஆர்டிஓ அதிகாரி நேரில் ஆஜராக சம்மன் அனுப்பினார்.

கல்லூரி மாணவிகளை கியர் மாற்ற சொல்லி குதூகலித்த பஸ் ஓட்டுனர்... பின்னர் நடந்தது இதுதான்!

இதையடுத்து, அவரிடம் அவர் விசாரணை நடத்தினார். இதில், மாணவிகளை கியர் மாற்ற அனுமதித்தை அவர் ஒப்புக் கொண்டதாக தெரிகிறது. விசாரணை முடிவில், ஓட்டுனர் ஷாஜியின் ஓட்டுனர் உரிமத்தை கல்பெட்டா வட்டார ஆர்டிஓ அதிகாரி ஆறு மாத காலத்திற்கு ரத்து செய்து அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

எந்த ஒரு வாகனத்தையும் ஓட்டுனர் மட்டுமே இயக்குவது உசிதம். ஓட்டுனர் இல்லாமல் அருகில் இருப்பவர்களை கியர் மாற்றுவது உள்ளிட்டவற்றிற்கு அனுமதிக்கும்போது வாகனம் எந்த நேரத்திலும் கட்டுப்பாட்டை இழக்கும் வாய்ப்புகள் அதிகம். விளையாட்டு வினையாகிவிடும். போன் பேசிக்கொண்டே பக்கத்தில் இருப்பவர்களை ஸ்டீயரிங் வீல் கட்டுப்பாட்டை கொடுப்பதும் பலரின் வழக்கமாகி இருக்கிறது.

கல்லூரி மாணவிகளை கியர் மாற்ற சொல்லி குதூகலித்த பஸ் ஓட்டுனர்... பின்னர் நடந்தது இதுதான்!

நொடியில் எல்லாம் முடிந்துவிடும் என்பதை உணர்ந்து கொண்டு சாலையில் முழு கவனத்தையும் ஓட்டுனர்கள் செலுத்துவதுடன், வாகனத்தின் முழுக்கட்டுப்பாட்டையும் அவர்கள் தங்கள் கையில் வைத்திருப்பது அவசியம்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Drowsy Driving: Ola Driver Suspended. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X