சினிமா பாணியில் காரை விரட்டியதற்கு காரணம் இதுதான்... அமெரிக்க போலீஸை மிஞ்சிய இந்தியன் போலீஸ்...

சினிமா பாணியில் கார் ஒன்றை போலீசார் சேஸ் செய்து பிடிக்கும் வீடியோ காட்சி வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சினிமா பாணியில் காரை விரட்டியதற்கு காரணம் இதுதான்... அமெரிக்க போலீஸை மிஞ்சிய இந்தியன் போலீஸ்...

அமெரிக்கா போன்ற நாடுகளில், குற்றவாளிகளை போலீசார் காரில் துரத்தி செல்லும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கும். ஆனால் இந்தியாவை பொறுத்த வரை கார் சேஸிங் என்பது மிகவும் அரிதான விஷயமாகவே உள்ளது. சினிமாக்களில் மட்டுமே நம்மால் இதனை காண முடியும்.

சினிமா பாணியில் காரை விரட்டியதற்கு காரணம் இதுதான்... அமெரிக்க போலீஸை மிஞ்சிய இந்தியன் போலீஸ்...

கதாநாயகனும், போலீஸ் அதிகாரிகளும் வில்லன்களை காரில் துரத்தி செல்லும் காட்சிகள் இடம்பெறாத இந்திய சினிமாக்கள் அரிதிலும் அரிதுதான். ஆனால் இந்திய போலீசார் தற்போது உண்மையிலேயே ஒரு காரை அதிவேகத்தில் சேஸ் செய்து சென்று பிடித்துள்ளனர்.

சினிமா பாணியில் காரை விரட்டியதற்கு காரணம் இதுதான்... அமெரிக்க போலீஸை மிஞ்சிய இந்தியன் போலீஸ்...

தற்போது பொதுமக்கள் மத்தியில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் இந்த சம்பவம் கேரள மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. ஃபோர்டு அஸ்பயர் (Ford Aspire) காரைதான் போலீசார் சினிமா பாணியில் சேஸ் செய்து சென்றுள்ளனர்.

சினிமா பாணியில் காரை விரட்டியதற்கு காரணம் இதுதான்... அமெரிக்க போலீஸை மிஞ்சிய இந்தியன் போலீஸ்...

கேரள போலீசார் பயணம் செய்தது மஹிந்திரா டியூவி300 (Mahindra TUV300) காரில். காண்பவர்களை அதிர்ச்சியில் உறைய வைக்கும் இந்த சம்பவம், அங்கிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியிருந்தது. தற்போது அந்த வீடியோ வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

சினிமா பாணியில் காரை விரட்டியதற்கு காரணம் இதுதான்... அமெரிக்க போலீஸை மிஞ்சிய இந்தியன் போலீஸ்...

போலீசார் துரத்தியதால், ஃபோர்டு அஸ்பயர் கார் அதிவேகத்தில் பறந்தது. அப்போது திடீரென வளைவு ஒன்று வந்தது. ஆனால் அதிவேகத்தில் சென்றதால், ஃபோர்டு அஸ்பயர் காரின் டைரக்ஸனை குறிப்பிட்ட நேரத்திற்குள் மாற்ற முடியவில்லை.

சினிமா பாணியில் காரை விரட்டியதற்கு காரணம் இதுதான்... அமெரிக்க போலீஸை மிஞ்சிய இந்தியன் போலீஸ்...

இதனால் சாலையோரமாக பார்க்கிங் செய்யப்பட்டிருந்த மாருதி சுஸுகி ஆல்டோ கார் ஒன்றின் மீது ஃபோர்டு அஸ்பயர் அதிவேகத்தில் மோதியது. இதன் காரணமாக ஆல்டோ காரின் முன் பகுதி சேதமடைந்தது. என்றாலும் கூட ஃபோர்டு அஸ்பயர் கார் நிற்கவில்லை.

சினிமா பாணியில் காரை விரட்டியதற்கு காரணம் இதுதான்... அமெரிக்க போலீஸை மிஞ்சிய இந்தியன் போலீஸ்...

ஆனால் ஆல்டோ காரின் மீது மோதியதால், ஃபோர்டு அஸ்பயர் கார் தனது கட்டுப்பாட்டை இழந்தது. இதன் பின் அதிவேகத்தில் சென்று மற்றொரு வாகனத்தின் மீது மோதி ஃபோர்டு அஸ்பயர் கார் ஒரு வழியாக நின்றது.

சினிமா பாணியில் காரை விரட்டியதற்கு காரணம் இதுதான்... அமெரிக்க போலீஸை மிஞ்சிய இந்தியன் போலீஸ்...

ஆனால் அப்போது அங்கு பாதசாரி ஒருவர் சென்று கொண்டிருந்தார். அதிர்ஷ்டவசமாக அவர் மீது ஃபோர்டு அஸ்பயர் கார் மோதவில்லை. அவர் நூலிழையில் தப்பி விட்டார். ஃபோர்டு அஸ்பயர் டிரைவர் குடி போதையில் காரை ஓட்டியதாக கூறப்படுகிறது.

சினிமா பாணியில் காரை விரட்டியதற்கு காரணம் இதுதான்... அமெரிக்க போலீஸை மிஞ்சிய இந்தியன் போலீஸ்...

இதன் காரணமாகவே அவரை போலீசார் விரட்டி சென்றிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. குடி போதையில் வாகனம் இயக்குவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அத்துடன் வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்து விடுகின்றனர்.

சினிமா பாணியில் காரை விரட்டியதற்கு காரணம் இதுதான்... அமெரிக்க போலீஸை மிஞ்சிய இந்தியன் போலீஸ்...

எனவே இந்த நடவடிக்கைகளுக்கு பயந்து அந்த நபர் தனது காரை அதிவேகத்தில் ஓட்டி சென்றிருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் போலீசார் பிடித்த பின்பு ஃபோர்டு அஸ்பயர் காரின் டிரைவர் என்ன செய்யப்பட்டார்? என்பது உறுதியாக தெரியவில்லை.

சினிமா பாணியில் காரை விரட்டியதற்கு காரணம் இதுதான்... அமெரிக்க போலீஸை மிஞ்சிய இந்தியன் போலீஸ்...

குடி போதையில் வாகனங்களை இயக்குபவர்களுக்கு மேற்கண்ட தண்டனைகள் மட்டுமல்லாது சிறை தண்டனையும் வழங்கப்படுகிறது. ஆனால் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நபருக்கு என்ன தண்டனை வழங்கப்பட்டது? என்ற விபரம் வெளியாகவில்லை.

சினிமா பாணியில் காரை விரட்டியதற்கு காரணம் இதுதான்... அமெரிக்க போலீஸை மிஞ்சிய இந்தியன் போலீஸ்...

குடி போதையில் வாகனம் ஓட்டுவது சாலை விபத்துக்களுக்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக உள்ளது. எனவே குடி போதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சினிமா பாணியில் காரை விரட்டியதற்கு காரணம் இதுதான்... அமெரிக்க போலீஸை மிஞ்சிய இந்தியன் போலீஸ்...

இதன் ஒரு பகுதியாக போலீசார் ஆங்காங்கே வாகன தணிக்கை நடத்தி, Breathalyzers கருவிகளின் உதவியுடன் குடி போதையில் வாகனம் இயக்குபவர்களை கண்டறிந்து வருகின்றனர். ஆனால் சிலர் போலீசாரை கண்டால் வாகனத்தை நிறுத்துவதே இல்லை.

சினிமா பாணியில் காரை விரட்டியதற்கு காரணம் இதுதான்... அமெரிக்க போலீஸை மிஞ்சிய இந்தியன் போலீஸ்...

ஃபோர்டு அஸ்பயர் காரின் டிரைவர் கூட நிறுத்தாமல் வந்த காரணத்தால்தான் போலீசாரால் விரட்டி பிடிக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. சரத் சிவராமன் ஜி என்பவரால், பேஸ்புக் குழுவில் இந்த வீடியோ பதிவேற்றப்பட்டுள்ளது. அதனை நீங்கள் கீழே காணலாம்.

குடி போதையில் வாகனம் இயக்கினால் உங்களால் சரியாக முடிவெடுக்க முடியாது. சாலை விபத்து நடைபெறுவதற்கான வாய்ப்பை இது பல மடங்கு அதிகரித்து விடும். எனவே குடி போதையில் வாகனம் இயக்குவதை தவிர்த்து விடுங்கள்.

சினிமா பாணியில் காரை விரட்டியதற்கு காரணம் இதுதான்... அமெரிக்க போலீஸை மிஞ்சிய இந்தியன் போலீஸ்...

ஒரு வேளை முந்தைய நாள் இரவில் நீங்கள் மது அருந்தியிருந்தால், அதன் தாக்கம் மறு நாள் காலையும் கூட நீடிக்கும். எனவே அந்த சமயங்களிலும் வாகனங்களை இயக்காதீர்கள். ஆல்கஹால் உள்ளே சென்று விட்டால், உங்களின் செயல்பாடுகள் மந்தமாகி விடும்.

சினிமா பாணியில் காரை விரட்டியதற்கு காரணம் இதுதான்... அமெரிக்க போலீஸை மிஞ்சிய இந்தியன் போலீஸ்...

இதன் காரணமாகதான் குடி போதையில் வாகனங்களை இயக்குவது அபாயகரமானதாக உள்ளது. எனவே மது அருந்தியிருந்தால் ''கேப்'' மூலம் பயணம் செய்யுங்கள். அல்லது வாகனம் இயக்கும் பொறுப்பை மது அருந்தாத நபர்களிடம் ஒப்படைத்து விட்டு நீங்கள் ரிலாக்ஸாக பயணம் செய்யலாம்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Drunk Driver In A Ford Aspire Chased And Caught By Kerala Cops, Video Goes Viral. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X