சென்னை வாசிகள் இனி தயக்கம் இல்லாமல் மின்சார வாகனத்தை வாங்கலாம்... வெளியானது தரமான அறிவிப்பு!!

பிரபல இபைக்கோ நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல் சென்னை வாசிகள் மத்தியில் குஷியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

சென்னை வாசிகள் இனி தயக்கம் இல்லாமல் மின்சார வாகனத்தை வாங்கலாம்... வெளியானது தரமான அறிவிப்பு!!

மின் வாகன பயன்பாட்டை நோக்கி மக்களை நகரத்தும் முயற்சியில் உலக நாடுகள் பல ஈடுபட்டு வருகின்றன. உலக நாடுகளின் இதுமாதிரியான முயற்சி சற்றும் குறைச்சலின்றி இந்தியாவிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதனடிப்படையில், மானியம் மற்றும் வரிச் சலுகை என பல்வேறு சிறப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

சென்னை வாசிகள் இனி தயக்கம் இல்லாமல் மின்சார வாகனத்தை வாங்கலாம்... வெளியானது தரமான அறிவிப்பு!!

இருப்பினும், மின்வாகன பயன்பாடு என்பது இந்தியாவில் மிகக் குறைந்தளவிலேயே காணப்படுகின்றது. சொல்லப் போனால் இதன் விற்பனை குழந்தை பருவத்திலேயேக் காட்சியளிக்கின்றது. இந்த நிலைக்கு மின் வாகனங்களின் உச்சபட்ச விலை ஓர் காரணமாக இருந்தாலும், போதுமான கட்டமைப்பு வசதிகள் இல்லாததே மற்றுமொரு முக்கிய காரணமாக உள்ளது.

சென்னை வாசிகள் இனி தயக்கம் இல்லாமல் மின்சார வாகனத்தை வாங்கலாம்... வெளியானது தரமான அறிவிப்பு!!

ஆமாங்க, அரசின் மானியம் மற்றும் வரி சலுகை ஆகிய திட்டங்கள் மின் வாகனங்களின் விலையைக் கணிசமாக குறைய வைத்தாலும், மின் வாகனத்தைச் சார்ஜ் செய்வதற்கான நிலையங்கள் போதியளவில் பயன்பாட்டிற்கு வரவில்லை. எனவே சார்ஜ் இல்லாமல் இ வாகனம் நின்றுவிட்டால் அதை எப்படி தள்ளிக் கொண்டா வருவது என மக்கள் பலர் மின் வாகனத்தை வாங்க தயக்கம் காட்டுகின்றனர்.

சென்னை வாசிகள் இனி தயக்கம் இல்லாமல் மின்சார வாகனத்தை வாங்கலாம்... வெளியானது தரமான அறிவிப்பு!!

மக்களின் இந்த மன நிலையை அறிந்த அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் சில பொது மின் வாகன சார்ஜிங் மையங்களை நிறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. அந்தவகையில், பிரபல இபைக்கோ (eBikeGo) நிறுவனம், நாடு முழுவதும் சில குறிப்பிட்ட முக்கிய நகரங்களில் சார்ஜிங் மையங்களை நிறுவ இருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது.

சென்னை வாசிகள் இனி தயக்கம் இல்லாமல் மின்சார வாகனத்தை வாங்கலாம்... வெளியானது தரமான அறிவிப்பு!!

இதனால் நமக்கு என்ன பயன் என்று தானே கேட்குறீங்க?, இபைக்கோ தனது பொது சார்ஜிங் மையங்களை சென்னையிலும் நிறுவ இருப்பதாகக் கூறப்படுகின்றது. இத்துடன், பெங்களூரு, ஹைதராபாத், மும்பை மற்றும் டெல்லி/என்சிஆர் ஆகிய நகரங்களிலும் மின் வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்களை அது நிறுவ இருக்கின்றது.

சென்னை வாசிகள் இனி தயக்கம் இல்லாமல் மின்சார வாகனத்தை வாங்கலாம்... வெளியானது தரமான அறிவிப்பு!!

சார்ஜிங் மையங்களை நிறுவும் பணியை வருகின்ற டிசம்பர் 1ம் தேதியில் இருந்து இபைக்கோ தொடங்க இருக்கின்றது. முதலில் 3,000 சார்ஜிங் மையங்களையும், பின்னர் நாடு முழுவதும் 15,000 வரையிலான சார்ஜிங் மையங்களை இது நிறுவ இருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை வாசிகள் இனி தயக்கம் இல்லாமல் மின்சார வாகனத்தை வாங்கலாம்... வெளியானது தரமான அறிவிப்பு!!

இந்த புதிய சார்ஜிங் மையங்கள் ஐஓடி (IoT) எனப்படக்கூடிய இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் எனும் வசதியுடன் பயன்பாட்டிற்கு வரவிருக்கின்றன. இதன்மூலம், சார்ஜிங் மையங்களின் இடம் மற்றும் பிற அனைத்து தகவலையும் இணையம் மற்றும் தனித்துவமான செல்போன் செயலிகளின் மூலமே அதன் பயனரால் பெற முடியும்.

சென்னை வாசிகள் இனி தயக்கம் இல்லாமல் மின்சார வாகனத்தை வாங்கலாம்... வெளியானது தரமான அறிவிப்பு!!

இத்துடன், க்யூஆர் கோட் போன்ற ஆப்ஷன்களும் சார்ஜிங் மையங்களில் இடம்பெற இருக்கின்றன. இதன்மூலம் சார்ஜ் செய்வது, பயன்பாட்டிற்கு உரிய கட்டணத்தைச் செலுத்துவது உள்ளிட்டவை எளிதாக்கப்படும். இதுமாதிரியான வசதிகளைதான் இந்தியாவில் மின் வாகன பிரியர்கள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Most Read Articles
English summary
eBikeGo Plan To Install 3000 EV Charging Stations In Indias 5 Cities. Read In Tamil.
Story first published: Monday, November 23, 2020, 18:01 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X