நீரவ் மோடிக்கே ஆப்பு வைக்கும் வங்கிகள்... எப்படி தெரிஞ்சா அதிர்ந்துபோவீங்க..!

வங்கி மோசடி மன்னான நீரவ் மோடிக்கு ஆப்பு வைக்கின்ற திட்டத்தில் அமலாக்கத்துறை செயல்பட்டு வருகின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

நீரவ் மோடிக்கே ஆப்பு வைக்கும் வங்கிகள்... எப்படி தெரிஞ்சா அதிர்ந்துபோவீங்க..!

பஞ்சாப் நேஷனல் வங்கியின் முறைகேடு விவகாரத்தில் முக்கிய குற்றவாளியாக நீரவ் மோடி கருதப்படுகின்றனர். இவர் முறைகேடான ஆவணங்களை சமர்பித்து ரூ. 13,570 கோடி வரை மோசடி செய்ததாகக் கூறப்படுகின்றது. ஆகையால், நீரவ் மோடி மற்றும் இந்த விவகாரத்தில் தொடர்புடைய மெகுல் ஷாக்ஸி (நீர்வ் மோடியின் உறவினர்) ஆகிய இருவர் மீதும் குற்றப்பத்திரிக்கைத் தாக்கல் செய்யப்பட்டு, தேடும் நபர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

நீரவ் மோடிக்கே ஆப்பு வைக்கும் வங்கிகள்... எப்படி தெரிஞ்சா அதிர்ந்துபோவீங்க..!

இவர்கள் இருவரும் தற்போது இந்தியாவில் இல்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. நாட்டில் இருந்து கள்ளத்தனமாக இங்கிலாந்திற்கு தப்பிச் சென்றுவிட்டதாக கூறப்படுகின்றது. இவர்களுடன் வங்கி மோசடியில் தொடர்புடைய மேலும் சிலரும் தப்பிச் சென்றிருப்பதாக கூறப்படுகின்றது.

நீரவ் மோடிக்கே ஆப்பு வைக்கும் வங்கிகள்... எப்படி தெரிஞ்சா அதிர்ந்துபோவீங்க..!

இதனால், அவர்களுக்கு கடனளித்த வங்கிகள் மிகுந்த இழப்பைச் சந்தித்தன. இந்த இழப்புகளை, அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து ஏலமிடுவதன்மூலம் ஈடுகட்டப்பட்டு வருகின்றது.

பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ள நிலையில், சொற்பளவிலான பணமே மீட்கப்பட்டுள்ளன. ஆகையால், நீரவ் மோடியின் சொத்துக்கள் பறிமுதல் செய்யும் நடவடிக்கை தொடர்ந்து வருகின்றது.

நீரவ் மோடிக்கே ஆப்பு வைக்கும் வங்கிகள்... எப்படி தெரிஞ்சா அதிர்ந்துபோவீங்க..!

அந்தவகையில், நீரவ் மோடிக்கு சொந்தமான ஆடம்பர கார்கள் மற்றும் பல பொருட்கள் தற்போது பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விடப்பட்டு வருகின்றது. இதற்கான அறிவிப்பினை அமலாக்கத்துறை தற்போது வெளியிட்டிருக்கின்றது.

இதனடிப்படையில், வருகின்ற 27ம் தேதி ஏல மையம் மூலமாக குறிப்பிட்ட பொருட்கள் விற்கப்பட உள்ளன. தொடர்ந்து, ஆன்லைன் மூலமாக மார்ச் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளிலும் நீரவ் மோடிக்கு சொந்தமான பொருட்கள் ஏலம் விடப்பட உள்ளன.

நீரவ் மோடிக்கே ஆப்பு வைக்கும் வங்கிகள்... எப்படி தெரிஞ்சா அதிர்ந்துபோவீங்க..!

ஏறத்தாழ 112-க்கும் மேற்பட்ட பொருட்கள் அமலாக்கத்துறை கைப்பற்றியிருப்பது குறிப்பிடத்தகுந்தது. இதில், ஏற்கனவே பொருட்கள் ஏலப்பட்டுள்ள நிலையில் மிஞ்சியிருக்கும் பொருட்கள் அனைத்தையும் மேற்குறிப்பிட்ட நாட்களில் ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.

நீரவ் மோடிக்கே ஆப்பு வைக்கும் வங்கிகள்... எப்படி தெரிஞ்சா அதிர்ந்துபோவீங்க..!

இந்த பொருட்களில் விலையுயர்ந்த போர்ஷே பனமெரா மற்றும் ரோல்ஸ் ராய்ல் கோஸ்ட் ஆகிய சொகுசு கார்களும் அடங்கும். இவ்விரு கார்களும் ஆன்லைன் மூலமாகவே ஏலம் விடப்படுகின்றது.

நீரவ் மோடிக்கே ஆப்பு வைக்கும் வங்கிகள்... எப்படி தெரிஞ்சா அதிர்ந்துபோவீங்க..!

இதற்கு முன்பாக நடைபெற்ற ஏலத்தில் ஒரு சில விலையுயர்ந்த கார்களை ஏலம் விட அமலாக்கத்துறை தவறிவிட்டது. மேலும், ஒரு சில கார்களுக்கு ஏலம் அறிவிக்கப்பட்டநிலையில், அதனை வாங்க யாரும் தயாராக இல்லலை. அவ்வாறு, மிஞ்சிய பொருட்கள் மீண்டும் ஏல விடப்பட உள்ளன. இதில், விடுபட்ட ரோல்ஸ் ராய்ஸ் காரும் அடங்கும் என கூறப்படுகின்றது.

நீரவ் மோடிக்கே ஆப்பு வைக்கும் வங்கிகள்... எப்படி தெரிஞ்சா அதிர்ந்துபோவீங்க..!

இதுகுறித்த லைவ்மின்ட் வெளியிட்டுள்ள தகவலின்படி, ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் 75 லட்சம் முதல் 95 லட்சம் ரூபாய் வரை ஏலம் விடப்பட இருப்பதாக தெரிவித்துள்ளது. முன்னதாக அதிக விலை நிர்ணயிக்கப்பட்டிருந்த காரணத்தினாலயே விற்பனையாகவில்லை என நம்பப்படுகின்றது. ஆகையால், இம்முறை குறைந்த விலையில் விற்பனைச் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நீரவ் மோடிக்கே ஆப்பு வைக்கும் வங்கிகள்... எப்படி தெரிஞ்சா அதிர்ந்துபோவீங்க..!

அதேசமயம், போர்ஷே காருக்கான தொகை நிர்ணயம் பற்றிய தகவல் வெளியிடப்படவில்லை. இவையிரண்டும் மிக அதிக விலைக் கொண்ட கார்களாகும். ஆகையால், நிர்ணயித்த இலக்கைக் காட்டிலும் அதிக விலையில் விற்பனைக்கு போகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நீரவ் மோடிக்கே ஆப்பு வைக்கும் வங்கிகள்... எப்படி தெரிஞ்சா அதிர்ந்துபோவீங்க..!

முன்னதாக, எம்.எஸ்.டி.சி., நடத்திய ஏலத்தில் ரூ. 37.3 லட்சம் என்ற அடிப்படை விலையில் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல் வகுப்பைச் சார்ந்த காரை அமலாக்கத்துறை வெற்றிகரமாக விற்றது. அதிக பணம் ஈட்ட வேண்டும் என்ற காரணத்திற்காக மற்ற ஏழு கார்களை ஏலம் விட அது ஒப்புதல் அளிக்கவில்லை.

நீரவ் மோடிக்கே ஆப்பு வைக்கும் வங்கிகள்... எப்படி தெரிஞ்சா அதிர்ந்துபோவீங்க..!

தொடர்ந்து, இழப்பு அதிகம் என்பதால் அடிப்படை விலையையும் அதிகமாக நிர்ணயிக்க அமலாக்கம் விரும்பியது. ஆனால், ஏலத்தை எடுக்க விரும்புவர்களுக்கு இது பெரிய தலை வலியாக அமைந்தது.

இதன்காரணமாக நீண்ட நாள் கழித்து தற்போது மீண்டும் ஏல அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நீரவ் மோடிக்கே ஆப்பு வைக்கும் வங்கிகள்... எப்படி தெரிஞ்சா அதிர்ந்துபோவீங்க..!

நீரவ் மோடியிடம் ரோல்ஸ் ராயஸ் கோஸ்ட் மாடலில் மட்டுமே இரு கார்கள் இருந்துள்ளன. அதில், வெள்ளை நிறம் கொண்ட கோஸ்டை கடந்த ஆண்டு ஏப்ரலில் அமலாக்கத்துறை அதிகபட்சமாக ரூ. 1.33கோடிக்கு விற்றது. இது நிர்ணயிக்கப்பட்ட விலையைக் காட்டிலும் வெறும் 10 ஆயிரம் ரூபாயே அதிகம். பேன்ஸி பதிவு எண்ணைக்கொண்ட அது 2010 மாடல் கார் ஆகும்.

நீரவ் மோடிக்கே ஆப்பு வைக்கும் வங்கிகள்... எப்படி தெரிஞ்சா அதிர்ந்துபோவீங்க..!

தொடர்ந்து, அந்த ஏலத்தில் இரண்டாவது அதிக தொகைக்கு விடப்பட்ட காராக மற்றுமொரு போர்ஷே பனமெரா இருக்கின்றது. பேன்சி நம்பரைக் கொண்ட அந்த கார் ரூ. 54 லட்சத்திற்கு விற்கப்பட்டது. இந்த விலையைதான் அமலாக்கத்துறை அடிப்படை விலையாக நிர்ணயித்திருந்தது குறிப்பிடத்தகுந்தது.

இந்த கார்களுடன், நீரவ் மோடியின் உறவினரான மொஹுல் சோக்சியின் கார்களும் ஏலம் விடப்பட்டன. அதில், பிஎம்டபிள்யூ மற்றும் டொயோட்டா இன்னோவா உள்ளிட்ட கார்கள் அடங்கும்.

Source: Cartoq

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
ED Will Be Auction Nirav Modi’s Porsche Panamera & Rolls Royce Ghost On Online. Read In Tamil.
Story first published: Saturday, February 22, 2020, 14:52 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X