Just In
- 1 hr ago
ஸ்கோடா ஆக்டேவியாவில் புதிய ஸ்போர்ட்லைன் வேரியண்ட்!! புதுமையான தோற்றத்தில் கொண்டுவரப்பட்டது...
- 8 hrs ago
மொத்தமாக மின்சார வாகனங்களின் பக்கம் சாயும் சீனர்கள்!! இவி விற்பனை ஒரேடியாக 279% அதிகரிப்பு!
- 10 hrs ago
சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை மீண்டும் விற்பனைக்கு கொண்டுவரும் பஜாஜ்!! விலை உயரவுள்ளதா?
- 13 hrs ago
டோல்கேட் கட்டணம் செலுத்துவதை தவிர்க்க தனியாக சாலை அமைத்த மக்கள்!
Don't Miss!
- News
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு.. கேரள கவர்னர் ஆரிஃப் முகம்மது கான் தரிசனம்!
- Sports
எவ்வளவு திமிர்.. அவரை ஓரம்கட்டிட்டு இப்ப போய் புலம்பினா எப்படி? வார்னரை வறுத்தெடுக்கும் பேன்ஸ்!
- Finance
தொலைந்து போன ஏடிஎம்மினை எப்படி பிளாக் செய்வது.. கனரா வங்கியில் மிக எளிது..!
- Movies
'மாநாடு' சிம்பு, வெங்கட் பிரபுவுக்கு பெரிய மைக் கல்லா இருக்கும்...சொல்றது இவர் தான்
- Lifestyle
தமிழ் புத்தாண்டைப் பற்றிய வியப்பூட்டும் தகவல்கள்!
- Education
ரூ.68 ஆயிரம் ஊதியத்தில் மத்திய NPCIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
82 வயசானவரா இப்படி செய்தார்... ஒரே தள்ளாக தள்ளி திருடனை காலி செய்த முதியவர்... மெய்சிலிர்க்க வைக்கும் வீடியோ!!
82 வயதான முதியவர் ஒருவர் தன்னிடம் கை வரிசைக் காட்ட வந்த திருடனை ஒரே முட்டாக முட்டி தள்ளிய சம்பவத்தின் வீடியோ வைரலாகி வருகின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

திருடுவதற்கான பாடத்தைக் கற்று தரும் யுனிவர்சிட்டியில் நன்கு கற்று தேர்ந்ததுபோல் மிக நேர்த்தியான வகையில் திருட்டு சம்பவங்களை திருடர்கள் அரங்கேற்றி வருகின்றனர். இதற்காக அவர்கள் கையாளும் யுக்திகள், கைதேர்ந்த மோப்ப நாய் மற்றும் போலீஸார்களையே திணறடிக்கும் வகையில் இருக்கின்றன.

அதிலும், தொழில்நுட்பங்கள் வளர்ச்சியடைந்து வரும் இந்த காலகட்டத்தில், 'இப்படியும் திருட முடியுமா?', என கேட்குமளவிற்கு மிக நூதமான முறையில் திருடர்கள் தங்களின் கைவரிசையைக் காட்டி வருகின்றனர். குறிப்பாக, வாகனங்கள் சார்ந்து அரங்கேறும் திருட்டு சம்பவங்கள் ஒட்டுமொத்த காவல்துறையையுமே மிரட்டும் வகையில் அமைகின்றன.

இவ்வாறு, நூதமான திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வருகின்ற இந்த வேலையிலும் மிக பழைய ஸ்டைலிலான திருட்டு சம்பவங்கள் இந்த உலகில் அரங்கேறி வருகின்றன. திருடர்கள் பொதுவாக கையாளக்கூடிய மிக பழைய திருட்டு ஸ்டைல்களில், முடியாதவர்கள் மற்றும் வயது மூத்தவர்களிடத்தில் கை வரிசைக் காட்டுவதும் ஒன்றாகும்.

இதனைச் செய்த ஓர் இளம் திருடனே மிக மோசமான பின் விளைவுகளைச் சந்தித்திருக்கின்றார். பெட்ரோல் பங்கில் எரிபொருளை நிரப்புவதற்காக வந்த முதியவரிடத்திலேயே அந்த திருடன் தனது கை வரிசையைக் காட்டியிருக்கின்றனர். ஆளை பார்த்து, லேசாக எடைப்போட்ட அந்த இளம் திருடன், முதியவரிடத்தில் இருந்து காரை திருடுவது மிக சுலபம் நினைத்தார்.

ஆனால், சம்பவ இடத்தில் நடைபெற்றதோ வேறு. காரை சுற்றி சுற்றி வந்த திருடன், காருக்குள் முதியவர் நுழையும் நேரம் பார்த்து, அவரை வெளியே தள்ளிவிட்டு காரை எடுத்துச் செல்ல முயன்றான். ஆனால், முதியவரோ தனது போராடும் குணத்தால், திருடனை கட்டி தழுவி கீழே தள்ளினார். தொடர்ந்து, திருடனை சரமாரியாகத் தாக்கவும் தொடங்கினார்.

இருப்பினும், விடா முயற்சியாக முதியவரை கீழே தள்ளிய அந்த திருடன், காரை எடுத்துக் கொண்டு தப்பி செல்ல முற்பட்டான். மிக விரைவிலேயே கைக்கு கிடைத்த சில பொருட்களை மட்டுமே எடுத்துக் கொண்டு காரில் இருந்து கீழிறங்கி மாயமானான்.

முதியவரிடத்தில் மிக சுலபமாக கை வரிசையைக் காட்டி, காரை திருடிவிடலாம் என நினைத்து திருடனுக்கு பலத்த காயங்களும், வழக்கு பதிவுகள் மட்டுமே மிஞ்சியது. அமெரிக்காவின் முக்கியமான நகரங்களில் ஒன்றான ஜார்ஜியாவின் அட்லாண்டா பகுதியிலேயே இந்த திருட்டு சம்பவம் அரங்கேறியிருக்கின்றது.

இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீஸார், திருட்டுகுறித்த சிசிடிவி காட்சிகளையும் வெளியிட்டிருக்கின்றனர். தங்களுக்கு ஏதாவது இன்னல்கள் ஏற்படுமானால், பிறரின் உதவியை நாடி நேரத்தை வீணடிக்காமல், முதியவர் போன்று உடனுக்குடன் செயல்பட்டு தங்களை தாங்களே தற்காத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே இவ்வீடியோவை காவல்துறை வெளியிட்டுள்ளது.

மேலும், யாருடைய உதவியையும் எதிர்பார்க்காமல் தானே முன் நின்று தன் காரை முதியவர் மீட்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. போலீஸார் வெளியிட்ட தகவலின்படி, அந்த முதியவருக்கு வயது 82 என்று கூறப்படுகின்றது.
இவ்வளவு வயதான நபரா காரை திருடனிடம் இருந்து போராட்டி மீட்டார் என நெட்டிசன்கள் ஆச்சரியத்தை எழுப்பியிருக்கின்றனர். தொடர்ந்து, இவர் கிழவர் அல்ல மாவீரன் எனவும் அவரை சித்தரித்து வருகின்றனர். மேலும், முதியவரின் அச்சமில்லா செயலுக்கு தங்களின் பாராட்டையும், வாழ்த்துக்களையும் அவர்கள் பொழிந்து வருகின்றனர்.