பிற மாநிலங்களில் ஏகப்பட்ட வசதிகளுடன் எலெக்ட்ரிக் பஸ் சேவை; தமிழக அரசு தூக்கம்?

இந்தியா முழுவதும் பெட்ரோல், டீசலுக்கு மாற்றான எரிபொருளை பயன்படுத்தும் வாகனங்களை நோக்கி நகர துவங்கியுள்ளன. இந்த மாற்றுப்பொருளாக எலெக்ட்ரிக் மற்றும் ஹைட்ரஜன் பியூயல் செல் வாகனங்கள் இருக்கின்றன.

By Balasubramanian

மத்திய அரசு மக்கள் மத்தியில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க பல்வேறு வகையிலான சலுகைகளையும் வசதிகளையும் வழங்கி வருகிறது. புதிதாக எலெக்ட்ரிக் வாகனம் வாங்குபவர்களுக்கான மானியம், எலெக்ட்ரிக் வாகனம் பயன்படுத்துவதற்கான கட்டமைப்புகளான சார்ஜிங் ஸ்டேஷன், பேட்டரி ஸ்வாப்பிங் ஸ்டேஷன் ஆகியவற்றை கட்டமைக்க சலுகைகள் என ஏராளமான சலுகைகள் வழங்கப்படுகிறது.

பிற மாநிலங்களில் ஏகப்பட்ட வசதிகளுடன் எலெக்ட்ரிக் பஸ் சேவை; தமிழக அரசு தூக்கம்?

மக்கள் மத்தியில் இதை எடுத்து செல்ல திட்டமிட்டுள்ள அரசு முதலில் அரசு பயன்பாட்டிலும் எலெக்ட்ரிக் வாகனங்களை கொண்டுவர வேண்டும் என்ற முடிவை எடுத்துள்ளது. இதற்காக முதலில் அரசு அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாகனங்களை எலெக்ட்ரிக் வாகனங்களாக மாற்ற அரசு முடிவு செய்து அதற்காக டென்டரை மஹிந்திரா மற்றும் டாடா நிறுவனங்களுக்கு வழங்கியது.

பிற மாநிலங்களில் ஏகப்பட்ட வசதிகளுடன் எலெக்ட்ரிக் பஸ் சேவை; தமிழக அரசு தூக்கம்?

இந்நிலையில் அரசு சார்பில் பொது வாகனங்களாக இயக்கப்படும் பஸ்களை எலெக்டரிக் பஸ்களாக மாற்ற முடிவு செய்தது. ஆனால் பஸ்கள் எல்லாம் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால் அதற்கான முயற்சியை எடுக்குமாறு மாநில அரசிற்கு அறிவுறுத்தப்பட்டது.

பிற மாநிலங்களில் ஏகப்பட்ட வசதிகளுடன் எலெக்ட்ரிக் பஸ் சேவை; தமிழக அரசு தூக்கம்?

தற்போது பல்வேறு மாநிலங்களில் பல்வேறு மாதிரியான திட்டங்களின் படி எலெக்ட்ரிக் பஸ்கள் சோதனை செய்யப்படுகின்றன. அண்டை மாநிலகளான கர்நாடகாவில் பெங்களூருவிலும், கேரளாவில் திருவனந்தபுரத்திலும் ஏற்கனவே எலெக்ட்ரிக் பஸ்கள் சோதனை நடந்து வருகிறது. குறிப்பாக கேராளவில் இத்திட்டம் வெற்றி பெற்று அடுத்தகட்ட நகர்வுக்கான பணி நடந்துவருகிறது.

பிற மாநிலங்களில் ஏகப்பட்ட வசதிகளுடன் எலெக்ட்ரிக் பஸ் சேவை; தமிழக அரசு தூக்கம்?

இந்நிலையில் புதுச்சேரியில் தற்போது எலெக்ட்ரிக் பஸ்கள் இயக்கம் துவங்கப்பட்டுள்ளது. துவக்க முயற்சியாக புதுச்சேரியில் இருந்து கடலுருக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

பிற மாநிலங்களில் ஏகப்பட்ட வசதிகளுடன் எலெக்ட்ரிக் பஸ் சேவை; தமிழக அரசு தூக்கம்?

இந்த பஸ்ஸில் முழு ஏசி வசதியுள்ளது. மேலும் சிசிடிவி கேமரா, ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகளும் உள்ளது. முக்கியமாக இந்த பஸ்சில் வீல் சேரில் இருக்கும் ஊனமுற்றவர்களை ஏற்றவும் இறக்கவும் வசதிகள் உள்ளன.

பிற மாநிலங்களில் ஏகப்பட்ட வசதிகளுடன் எலெக்ட்ரிக் பஸ் சேவை; தமிழக அரசு தூக்கம்?

இந்த பஸ்சில் உள்ள பேட்டரியில் முழுமையாக சார்ஜ் செய்தால் 250 கி.மீ. தூரம் வரை பயணிக்கும். திறன் கொண்டதாக இருக்கும். மேலும் இந்த பஸ் அதிகபட்சமாக 80 கி.மீ. வேகம் வரை செல்லக்கூடியது.

பிற மாநிலங்களில் ஏகப்பட்ட வசதிகளுடன் எலெக்ட்ரிக் பஸ் சேவை; தமிழக அரசு தூக்கம்?

இது முற்றிலும் சுற்றுசூழலுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுத்தாது. அதே நேரத்தில் டீசல் இன்ஜின் உடன் ஒப்பிடும் போது இதற்காக ஆகும் செலவும் மிக குறைவு தான். புதுச்சேரியில் இயக்கப்படும் எலெக்ட்ரிக் பஸ் சோதனை ஓட்டமாக மட்டுமே தற்போது இயக்கப்படுகிறது.

பிற மாநிலங்களில் ஏகப்பட்ட வசதிகளுடன் எலெக்ட்ரிக் பஸ் சேவை; தமிழக அரசு தூக்கம்?

முன்னர் நாம் சொன்னது போல் கேரளாவில் இந்த எலெக்ட்ரிக் பஸ் சோதனை வெற்றி பெற்றுள்ளது. ஆனால் இந்த பஸ்ஸின் விலை அதிகமாக இருந்ததால் அரசு இதை வாங்க யோசித்ததது. அப்பொழுது சமயோஜிதமாக யோசித்த அம்மாநில போக்குவரத்து துறை அமைச்சர் புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளார்.

கேரளாவில் சில ஆண்டுகளுக்கு எலெக்ட்ரிக் பஸ்கள் இயக்கத்திற்கு தனியார் கம்பெனிகளுடன் கை கோர்ப்பது எனவும், தனியார் நிறுவனம் பஸ்களை அரசு அனுமதி வழங்ககும் ரூட்டில் அனுமதிக்கப்படும் நேரத்தில் செயல்படுத்த வேண்டும் என முடிவு செய்தது.

பிற மாநிலங்களில் ஏகப்பட்ட வசதிகளுடன் எலெக்ட்ரிக் பஸ் சேவை; தமிழக அரசு தூக்கம்?

இதில் பஸ்சில் கண்டெக்டரை மட்டுமே அரசு ஊழியராக நியமிக்கும். டிரைவர், பஸ்சிற்கான மெக்கானிக், பராமரிப்பாளர்கள் எல்லோரையும் தனியார் நிறுவனமே கவனித்துக்கொள்ள வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

பிற மாநிலங்களில் ஏகப்பட்ட வசதிகளுடன் எலெக்ட்ரிக் பஸ் சேவை; தமிழக அரசு தூக்கம்?

அரசு இந்த எலெக்டரிக் பஸ்சில் கண்டெக்டரை நிமித்து வசூல் நடவடிக்கையில் ஈடுபடும். பின் பஸ்சிற்கு தேவையான மின வசதியை வழங்கும். மற்ற அனைத்து பொறுப்புகளும் தனியார் நிறுவனமே பார்த்துக்கொள்ள வேண்டும் பஸ்சின் வருமானத்தின் ஒரு பங்கு தனியார் நிறுவனத்திற்கு செல்லும் இதில் பஸ் வாங்கும் செலவும் அந்த நிறுவனத்துடையது தான். மேலும் எலெக்ட்ரிக் பஸ்களை கட்டமைக்கும் நிறுவனங்களே இதில நேரடியாக இறங்கியுள்ளன.

அண்டை மாநிலங்கள் எல்லாம் இந்த எலெக்ட்ரிக் பஸ்களை இயக்குவதில் தீவிரமாக இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் அதற்கான அறிவிப்பு சட்டமன்றத்தில் ஓலித்ததே தவிர செயல்பாட்டிற்கு வரவில்லை. மற்ற மாநிலங்கள் எல்லாம் நஷ்டத்தில் ஓடும் போக்குவரத்து நிறுவனத்தை எப்படி லாபத்தை கொண்டு வருவது என பார்த்து கொண்டிருக்கும் போது தமிழக போக்குவரத்து துறை மட்டும் தூங்கி கொண்டிருக்கிறது.

source: Polimer News

டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Electric Bus from Puducherry to Cuddalore. Read in Tamil
Story first published: Monday, August 6, 2018, 17:22 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X