மாருதி ஆல்டோ & புல்லட் பைக்கின் பாகங்களுடன் எலக்ட்ரிக் விண்டேஜ் கார்!! யார் வேண்டுமானாலும் வாங்கலாமாம்!

மாருதி சுஸுகி ஆல்டோ மற்றும் ராயல் என்பீல்டு புல்லட் பைக்கின் பாகங்களை கொண்டு பழமையான கார் ஒன்று எலக்ட்ரிக் வாகனமாக மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவினை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

மாருதி ஆல்டோ & புல்லட் பைக்கின் பாகங்களுடன் எலக்ட்ரிக் விண்டேஜ் கார்!! யார் வேண்டுமானாலும் வாங்கலாமாம்!

அங்கீகரிக்கப்படாத மெக்கானிக்குகளால் உருவாக்கப்பட்ட எலக்ட்ரிக் வாகனங்கள் சிலவற்றை இதற்குமுன் நமது செய்தியில் பார்த்துள்ளோம். இதில் சில வாகனங்கள் நீண்ட மாத கால முயற்சியாக ஒரே ஒரு முன்மாதிரியாக சொந்த பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்டவையாக இருந்துள்ளன. அதேநேரம் சில எலக்ட்ரிக் வாகனங்கள் விற்பனைக்காகவும் தயாரிக்கப்பட்டுள்ளன.

மாருதி ஆல்டோ & புல்லட் பைக்கின் பாகங்களுடன் எலக்ட்ரிக் விண்டேஜ் கார்!! யார் வேண்டுமானாலும் வாங்கலாமாம்!

இதில் இரண்டாவது வகையை சேர்ந்த எலக்ட்ரிக் மாடிஃபை வாகனத்தை பற்றிதான் இந்த செய்தியில் பார்க்கவுள்ளோம். ஏனெனில், மாருதி ஆல்டோ 800 கார் மற்றும் ராயல் என்பீல்டு புல்லட் பைக்கின் பாகங்களை கொண்டு எலக்ட்ரிக் வாகனமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த பழமையான தோற்றம் கொண்ட காரினை யார் வேண்டுமானாலும் வாங்கலாம் எனவும், உலகின் எந்த மூலையில் இருப்பவர்களுக்கும் இதனை டெலிவிரி செய்வதில் தாங்கள் தயாராக உள்ளதாகவும், மாடிஃபை செய்த மெக்கானிக்குகள் தெரிவித்துள்ளனர்.

இந்த எலக்ட்ரிக் வாகனம் தொடர்பாக ஹெர் கேரேஜ் என்கிற யுடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவினை தான் மேலே காண்கிறீர்கள். இந்த மாடிஃபிகேஷன் பணிகளை ஹரியானாவை சேர்ந்த க்ரீன் மாஸ்டர் என்கிற கஸ்டமைஸ்ட் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. சந்தையில் எளியதாக கிடைப்பதால் இதன் தயாரிப்பு பணிகளில் ஆல்டோ மற்றும் ராயல் என்பீடு பைக்கின் பாகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

மாருதி ஆல்டோ & புல்லட் பைக்கின் பாகங்களுடன் எலக்ட்ரிக் விண்டேஜ் கார்!! யார் வேண்டுமானாலும் வாங்கலாமாம்!

இந்த எலக்ட்ரிக் காரினை ஸ்டார்ட்/ ஸ்டாப் செய்வதற்கான பூட்டு & சாவி புல்லட் பைக்கில் இருந்து பெறப்பட்டுள்ளது. பழமையான தோற்றத்தில் காட்சியளிப்பினும், இந்த வாகனத்தின் முன்பக்கத்தில் எல்இடி ஹெட்லேம்ப்கள் பொருத்தப்பட்டுள்ளன. பைலட் விளக்குகள் புல்லட் பைக்கில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது என்றாலும், அவை ஹலோஜன் யூனிட்களாக இல்லாமல், எல்இடி யூனிட்களாக உள்ளன.

மாருதி ஆல்டோ & புல்லட் பைக்கின் பாகங்களுடன் எலக்ட்ரிக் விண்டேஜ் கார்!! யார் வேண்டுமானாலும் வாங்கலாமாம்!

காரின் தோற்றத்திற்கேற்ப இருக்க வேண்டுமென்பதற்காக, பின்புறத்தை காட்டும் பக்கவாட்டு கண்ணாடிகள் புல்லட் பைக்கில் இருந்து பகிரப்பட்டுள்ளன. காரின் முன்பக்க க்ரில் அமைப்பை ஓவல் மெஷ் பேட்டரினில் மெக்கானிக்குளே க்ரோம் ஃபினிஷிங்கில் உருவாக்கியுள்ளனர். க்ரில் அமைப்பிற்கு மேலே கஸ்டமைஸ் நிறுவனத்தின் லோகோ சுருக்கமாக 'GM' என பொருத்தப்பட்டுள்ளது.

மாருதி ஆல்டோ & புல்லட் பைக்கின் பாகங்களுடன் எலக்ட்ரிக் விண்டேஜ் கார்!! யார் வேண்டுமானாலும் வாங்கலாமாம்!

இந்த மாடிஃபை காரில் பொருத்தப்பட்டுள்ள 19-இன்ச் அலாய் சக்கரங்கள் ராயல் என்பீல்டு புல்லட் பைக்கிற்கான சக்கரங்களாக உதிரி பாக சந்தையில் கிடைக்கின்றன. சக்கரங்களின் எண்ணிக்கை 4ஆக அதிகரித்தாலும், இவற்றில் பைக்கின் டயர்களே பொருத்தப்பட்டுள்ளன. உட்புறத்தில், ஓட்டுனர் இருக்கைக்கு அருகே இரு கப்-வைப்பான்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த வாகனத்தின் வடிவமைப்பிற்கான காப்புரிமையை அஸ்ஸாம் கஸ்டமைஸ்ட் நிறுவனமான க்ரீன் மாஸ்டர் பதிவு செய்து கொண்டுள்ளது.

மாருதி ஆல்டோ & புல்லட் பைக்கின் பாகங்களுடன் எலக்ட்ரிக் விண்டேஜ் கார்!! யார் வேண்டுமானாலும் வாங்கலாமாம்!

இத்தகைய பழமையான கார்களில் சக்கர வளைவுகள் நன்கு பெரியதாக வழங்கப்பட்டன. இந்த வாகனத்திலும் சக்கர வளைவு முன்பக்கத்தில் இருந்து பின்பக்கம் வரையில் தகடு போல் காட்சியளிக்கிறது. பின்பக்கத்தில் கூடுதல் சக்கரம் மற்றும் அதற்கான கொக்கி வழங்கப்பட்டுள்ளது. இந்த உதிரி சக்கரத்தின் மத்தியில்தான் நம்பர் ப்ளேட்டை பொருத்தி கொள்ள வேண்டுமாம். பின்பக்கத்திற்கான டெயில்லேம்ப்கள் புல்லட் பைக்குகளில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன.

மாருதி ஆல்டோ & புல்லட் பைக்கின் பாகங்களுடன் எலக்ட்ரிக் விண்டேஜ் கார்!! யார் வேண்டுமானாலும் வாங்கலாமாம்!

எக்ஸாஸ்ட் வாகனத்திற்கு செங்குத்தாக, பெரிய அளவிலான ஆண்டென்னா போன்று பொருத்தப்பட்டுள்ளது. பின்பக்கத்தில் பொருட்களை வைக்க ட்ரங்க் பெட்டி ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. இது 70 லிட்டர்கள் கொள்ளளவு கொண்டதாக உள்ளது. இந்த கஸ்டமைஸ்ட் வாகனத்தின் ஒரே குறை என்னவென்றால், இதில் இருவர் மட்டுமே அமர முடியும். பின்பக்கத்தில் வழங்கப்பட்டுள்ள மேசை இருக்கை அமைப்பில் கூடுதலாக இருவர் அமர முடியும் என்றாலும், அது அவ்வளவு பாதுகாப்பானதாக இருக்காது.

மாருதி ஆல்டோ & புல்லட் பைக்கின் பாகங்களுடன் எலக்ட்ரிக் விண்டேஜ் கார்!! யார் வேண்டுமானாலும் வாங்கலாமாம்!

இந்த எலக்ட்ரிக் கஸ்டம் வாகனத்தின் சிறப்பம்சமாக சுமார் 400மிமீ அளவில் க்ரவுண்ட் க்ளியரென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. அப்படியே டேஸ்போர்டிற்கு வந்தோமேயானால், எளிமையாக 3-ஸ்போக் ஸ்டேரிங் சக்கரம் கொடுக்கப்பட்டுள்ளது. பழமையான தோற்றம் கொண்ட வாகனமாக இருப்பினும் இதில் ட்ரைவ் மோட்களை தேவைக்கேற்ப மாற்றி கொள்ளலாமாம். இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் பேட்டரியின் சார்ஜ் நிலையை காட்டுவதாக உள்ளது.

மாருதி ஆல்டோ & புல்லட் பைக்கின் பாகங்களுடன் எலக்ட்ரிக் விண்டேஜ் கார்!! யார் வேண்டுமானாலும் வாங்கலாமாம்!

எம்சிபி, டேஸ்போர்டிற்கு அடியில் முக்கிய ஆற்றல் வழங்கீடை ஆஃப்/ஆன் செய்வதாக உள்ளது. இந்த வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள 1200 வாட் எலக்ட்ரிக் மோட்டார் பின் சக்கரங்களை இயங்குகிறது. இதன் மூலமாக 1.5 எச்பி மற்றும் 2.2 என்எம் டார்க் திறனை பெறலாம். தற்கால மாடர்ன் எலக்ட்ரிக் கார்களுடன் ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவு. இதற்கேற்ப இதன் விலையை வெறும் ரூ.1.45 லட்சமாக நிர்ணயித்துள்ளனர்.

Most Read Articles
English summary
Electric vintage car made from parts of maruti alto and royal enfield bullet
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X