டோல்கேட்டில் திடீரென அமலுக்கு கொண்டு வரப்பட்ட புதிய திட்டம்... அரசின் அதிரடிக்கு காரணம் இதுதான்...

டோல்கேட்டில் புதிய திட்டம் ஒன்று திடீரென அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டோல்கேட்டில் திடீரென அமலுக்கு கொண்டு வரப்பட்ட புதிய திட்டம்... அரசின் அதிரடிக்கு காரணம் இதுதான்...

உலகிலேயே சாலை விபத்துக்களால் அதிக உயிர்களை பறிகொடுக்கும் நாடு எது? எனக்கேட்டால், பச்சை குழந்தை கூட இந்தியா என அழகாக கூறி விடும். சாலை பாதுகாப்பு என்ற விஷயத்தில் இந்தியா மிகவும் மோசமான நிலையில் உள்ளது. வாகன ஓட்டிகளின் அலட்சியம் காரணமாக, இந்தியாவில் மிக அதிகப்படியான சாலை விபத்துக்கள் அரங்கேறுகின்றன.

டோல்கேட்டில் திடீரென அமலுக்கு கொண்டு வரப்பட்ட புதிய திட்டம்... அரசின் அதிரடிக்கு காரணம் இதுதான்...

இந்தியாவில் போக்குவரத்து விதிமுறைகள் அனைத்தையும் முறையாக கடைபிடிக்கும் வாகன ஓட்டிகளை விரல் விட்டு எண்ணி விடலாம். இந்தியாவில் இரு சக்கர வாகனங்களில் பயணிக்கும் இருவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பது விதி. இது அனைவருக்கும் தெரியும். ஆனால் நம்மில் எத்தனை பேர் டூவீலர் பயணங்களின்போது ஹெல்மெட் அணிகிறோம்?

டோல்கேட்டில் திடீரென அமலுக்கு கொண்டு வரப்பட்ட புதிய திட்டம்... அரசின் அதிரடிக்கு காரணம் இதுதான்...

காரில் பயணம் செய்யும்போது சீட் பெல்ட் அணிய வேண்டும் என்பதும் விதி. ஆனால் நம்மில் எத்தனை பேர் கார் பயணங்களின்போது சீட் பெல்ட் அணிகிறோம்? செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவது, குடிபோதையில் தாறுமாறாக வாகனங்களை இயக்குவது என இந்தியாவில் நடைபெறும் போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கு அளவே இல்லை.

டோல்கேட்டில் திடீரென அமலுக்கு கொண்டு வரப்பட்ட புதிய திட்டம்... அரசின் அதிரடிக்கு காரணம் இதுதான்...

இதே நிலை தொடர்ந்தால், நம் நாட்டு சாலைகள் தற்போது இருப்பதை விட இன்னும் அபாயகரமானவையாக மாறி விடும். இதனை புரிந்து கொண்ட மத்திய அரசு போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கான அபராத தொகையை பல மடங்கு உயர்த்துவதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளது. தண்டனை கடுமையானால்தான், தவறு செய்யும் எண்ணம் குறையும்.

டோல்கேட்டில் திடீரென அமலுக்கு கொண்டு வரப்பட்ட புதிய திட்டம்... அரசின் அதிரடிக்கு காரணம் இதுதான்...

யாரிஸ் — மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

இந்தியாவில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதற்கு மற்றொரு முக்கிய காரணம் ஓவர்லோடு. வாகனத்திற்கு மூச்சு திணறும் அளவிற்கு அதிக சரக்கை ஏற்றிச்செல்பவர்கள் இங்கு ஏராளம். ஒரே நடையில் சரக்கை இடம்மாற்றி விட்டால், கூடுதல் லாபம் கிடைக்கும் அல்லவா? எனவேதான் விதிமுறைகளை மீறி ஓவர்லோடுடன் வாகனங்கள் பயணம் செய்கின்றன.

டோல்கேட்டில் திடீரென அமலுக்கு கொண்டு வரப்பட்ட புதிய திட்டம்... அரசின் அதிரடிக்கு காரணம் இதுதான்...

ஓவர்லோடு வாகனங்கள் நிலைதடுமாறி அடிக்கடி விபத்துக்களில் சிக்கி வருகின்றன. இது எவ்வித தவறும் செய்யாத மற்ற வாகன ஓட்டிகளுக்கும் பிரச்னையை உண்டாக்குகிறது. போதாக்குறைக்கு ஓவர்லோடு வாகனங்கள் கவிழ்ந்து விட்டால், அதனை அப்புறப்படுத்துவதற்கும் சிரமப்பட வேண்டும். அதுவரை அந்த சாலையில் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்படும்.

டோல்கேட்டில் திடீரென அமலுக்கு கொண்டு வரப்பட்ட புதிய திட்டம்... அரசின் அதிரடிக்கு காரணம் இதுதான்...

ஓவர்லோடு வாகனங்களால் மற்றொரு பிரச்னையும் ஏற்படுகிறது. விரைவான போக்குவரத்திற்காக நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகள், எக்ஸ்பிரஸ்வேக்கள் மற்றும் பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. ஆனால் அதிகப்படியான லோடு ஏற்றி செல்லும் வாகனங்களால் இவை சேதமடைகின்றன. இதன் காரணமாக நெடுஞ்சாலைகள், எக்ஸ்பிரஸ்வேக்கள் மற்றும் பாலங்களின் ஆயுட்காலம் கணிசமாக குறைகிறது.

டோல்கேட்டில் திடீரென அமலுக்கு கொண்டு வரப்பட்ட புதிய திட்டம்... அரசின் அதிரடிக்கு காரணம் இதுதான்...

எனவே ஓவர்லோடு பிரச்னைக்கு முடிவு கட்டுவதற்காக, உத்தரபிரதேச எக்ஸ்பிரஸ்வேக்கள் தொழில்துறை மேம்பாட்டு ஆணையம் (Uttar Pradesh Expressways Industrial Development Authority - UPEIDA) அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது. இதன்படி ஆக்ரா-லக்னோ எக்ஸ்பிரஸ்வே டோல்கேட்டில், எலெக்ட்ரானிக் எடை இயந்திரங்கள் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளன.

டோல்கேட்டில் திடீரென அமலுக்கு கொண்டு வரப்பட்ட புதிய திட்டம்... அரசின் அதிரடிக்கு காரணம் இதுதான்...

வாகனங்களின் எடையை கணக்கிடுவதற்காக இந்த எலெக்ட்ரானிக் எடை மெஷின்கள் நிறுவப்பட்டுள்ளன. அதிகரித்து வரும் சாலை விபத்துக்களின் எண்ணிக்கையை குறைக்கும் முயற்சிகளில் இதுவும் ஒன்று எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த திட்டம் குறித்து UPEIDA தலைமை பாதுகாப்பு அலுவலர் ரமேஷ் சந்திர துபே விளக்கம் அளித்துள்ளார்.

டோல்கேட்டில் திடீரென அமலுக்கு கொண்டு வரப்பட்ட புதிய திட்டம்... அரசின் அதிரடிக்கு காரணம் இதுதான்...

இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ''ஓவர்வெயிட் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட வாகனத்தின் டிரைவரை அபராதம் கட்டும்படி வலியுறுத்துவோம். ஏனெனில் அவர்கள் சாலையை சேதப்படுத்துகின்றனர். அத்துடன் இது பாதுகாப்பானதும் அல்ல. ஒருவேளை அந்த டிரைவரிடம் அபராதம் கட்ட பணம் இல்லை என்றால், தபால் மூலமாக அவரது முகவரிக்கு நாங்கள் சலானை அனுப்பி வைப்போம்.

டோல்கேட்டில் திடீரென அமலுக்கு கொண்டு வரப்பட்ட புதிய திட்டம்... அரசின் அதிரடிக்கு காரணம் இதுதான்...

அதன்பின்பும் அபராதம் கட்டவில்லையென்றால், சம்பந்தப்பட்ட டிரைவர் தொடர்பாக தகவல்கள் ஆர்டிஓ அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். இதன்பின்பு அவரின் டிரைவிங் லைசென்ஸ் சஸ்பெண்ட் செய்யப்படும்'' என்றார். இந்த 302 கிலோ மீட்டர் நீளமுடைய எக்ஸ்பிரஸ்வே, மெயின்புரி, கான்பூர் மற்றும் உனோ வழியாக ஆக்ரா மற்றும் லக்னோ ஆகிய இரு நகரங்களையும் இணைக்கிறது.

ஆக்ராவிற்கு அருகே உள்ள எட்மாட்பூர் மத்ரா கிராமத்தில் இந்த எக்ஸ்பிரஸ்வே தொடங்குகிறது. அதே சமயம் லக்னோ மோகன் சாலைக்கு அருகே உள்ள சரோஷா பரோஷா கிராமத்தில் நிறைவடைகிறது. சாலை பாதுகாப்பை விரும்பும் வாகன ஓட்டிகள் UPEIDA செயல்படுத்தியுள்ள திட்டத்திற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர். UPEIDA என்பது உத்தரபிரதேச மாநிலத்தில் எக்ஸ்பிரஸ்வே திட்டங்களை டெவலப் செய்வதற்காக அம்மாநில அரசால் அமைக்கப்பட்ட ஓர் ஆணையம் என்பது குறிப்பிடத்தக்கது.

Image Courtesy: upeida

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Electronic Weighing Machines Installed At Agra-Lucknow Expressway Toll Gate. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X