காரை முன்னும், பின்னும் சுற்றி வளைத்த யானைகள்... தமிழக வனப்பகுதியில் திக் திக் சம்பவம்... வீடியோ

தமிழக வனப்பகுதியில் யானைகளுக்கு நடுவே சிக்கி கொண்ட காரின் திக்... திக்.. வீடியோ வெளியாகியுள்ளது.

காரை முன்னும், பின்னும் சுற்றி வளைத்த யானைகள்... தமிழக வனப்பகுதியில் திக் திக் சம்பவம்... வீடியோ

இந்தியா முழுவதும் புதிய சாலைகளை கட்டமைக்கும் பணிகள் வேகமெடுத்துள்ளன. நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு புதிய சாலைகள் அமைக்கப்படுகின்றன. இந்தியாவில் பல்வேறு சாலைகள் வனப்பகுதிகளின் வழியாகவும் செல்கின்றன. வன விலங்குகளின் இருப்பிடமாக உள்ள அடர்ந்த காடுகளின் வழியாக செல்லும் ஏராளமான சாலைகளும் இந்தியாவில் உள்ளன.

காரை முன்னும், பின்னும் சுற்றி வளைத்த யானைகள்... தமிழக வனப்பகுதியில் திக் திக் சம்பவம்... வீடியோ

அடர்ந்த வனப்பகுதிகளின் ஊடாக செல்லும் சாலைகளில் பயணம் செய்யும்போது, சில சமயங்களில் வன விலங்குகளை வாகன ஓட்டிகள் நேருக்கு நேராக சந்திக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. ஆனால் இந்த சந்திப்பு அனைத்து நேரங்களிலும் இனிமையானதாக இருப்பதில்லை. வாகன ஓட்டிகள் செய்யும் சிறு தவறுகளால் வன விலங்குகள் ஆத்திரமடைந்து தாக்குதலை தொடுத்து விடுகின்றன.

காரை முன்னும், பின்னும் சுற்றி வளைத்த யானைகள்... தமிழக வனப்பகுதியில் திக் திக் சம்பவம்... வீடியோ

இந்த சூழலில் காரை முன்னும், பின்னும் அணை கட்டி நகர முடியாதபடி செய்த யானை கூட்டத்தின் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. தமிழகத்தின் கோவை மாவட்டம் பொள்ளாச்சிக்கு அருகே உள்ள ஆழியாறு அணை பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக தெரிகிறது. ஆழியாறு அணையையொட்டி அடர்ந்த வனப்பகுதிகள் அமைந்திருப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான்.

காரை முன்னும், பின்னும் சுற்றி வளைத்த யானைகள்... தமிழக வனப்பகுதியில் திக் திக் சம்பவம்... வீடியோ

சம்பவத்தன்று ஆழியாறு வனப்பகுதியில், பகல் நேரத்தில் சிலர் காரில் பயணித்து கொண்டிருந்தனர். அப்போது யானை கூட்டம் ஒன்று வனப்பகுதியை விட்டு வெளியேறி மெயின் ரோட்டை நோக்கி வந்து கொண்டிருந்தது. காரை பார்த்ததும் பிளிறிய அந்த யானை கூட்டம் உடனே காரை துரத்த தொடங்கி விட்டது. அதே சமயம் காருக்கு முன் பகுதியில், தாய் யானை ஒன்று தனது குட்டியுடன் சென்று கொண்டிருந்தது.

காரை முன்னும், பின்னும் சுற்றி வளைத்த யானைகள்... தமிழக வனப்பகுதியில் திக் திக் சம்பவம்... வீடியோ

எனவே கார் டிரைவரால் முன்னோக்கியும் செல்ல முடியவில்லை. யானை கூட்டத்திற்கு நடுவே கார் சிக்கி கொண்டது. எனினும் டிரைவர் சற்றே காரை முன்னோக்கி செலுத்தி பார்த்தார். ஆனால் முன்னால் நின்று கொண்டிருந்த தாய் யானையும், குட்டி யானையும் நகர்வதாக இல்லை. எனினும் சிறிது நேரம் போக்கு காட்டிய பின் அவை மீண்டும் காட்டிற்குள் சென்று விட்டன. இந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

யானைகள் ஒரு வாகனத்தை இவ்வாறு 'பிளாக்' செய்து விட்டால், கவனமாக இருப்பது அவசியம். ஏனெனில் யானைகள் ஆத்திரமடைந்து திடீரென தாக்க தொடங்கி விடக்கூடிய அபாயம் உள்ளது. எனவே வனப்பகுதி சாலைகளின் வழியாக வாகனங்களில் செல்லும்போது பாதுகாப்பிற்காக நீங்கள் ஒரு சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். அவை என்னென்ன? என்பதை இனி பார்க்கலாம்.

காரை முன்னும், பின்னும் சுற்றி வளைத்த யானைகள்... தமிழக வனப்பகுதியில் திக் திக் சம்பவம்... வீடியோ

வனப்பகுதிகளின் வழியாக பயணிக்கும்போது, யானைகள்தான் அதிகம் தென்படும் விலங்குகளாக உள்ளன. உண்மையில் யானைகள் மிகவும் அமைதியான விலங்குகள்தான். என்றாலும் நமக்கு அச்சுறுத்தல் என அவை நினைத்து விட்டால், உடனடியாக தாக்குதலை தொடங்கி விடும். யானை சாலையை அடைத்திருந்தால், நீங்கள் வாகனத்திலேயே அமர்ந்திருங்கள். அவை வழி கொடுக்கும் வரை காத்திருங்கள்.

காரை முன்னும், பின்னும் சுற்றி வளைத்த யானைகள்... தமிழக வனப்பகுதியில் திக் திக் சம்பவம்... வீடியோ

நீங்கள் ஒலி எழுப்பினால், அது யானைகளின் கவனத்தை உடனடியாக ஈர்த்து விடும். பின் அவை உங்களை அச்சுறுத்தலாக நினைத்து கொள்ளும். சாலையில் யானை கூட்டத்தை பார்த்தால், உடனே வாகனத்தை நிறுத்தி விடுங்கள். அவை அந்த பகுதியை கடந்து செல்ல அனுமதி கொடுங்கள். இங்கே உங்களின் பொறுமைதான் மிகவும் முக்கியமானது. எதற்காகவும் அவசரப்பட வேண்டாம்.

காரை முன்னும், பின்னும் சுற்றி வளைத்த யானைகள்... தமிழக வனப்பகுதியில் திக் திக் சம்பவம்... வீடியோ

அவை வசிக்கும் பகுதிக்குதான் நீங்கள் சென்றுள்ளீர்கள் என்பதையும் உணர வேண்டும். 2 அல்லது அதற்கும் மேற்பட்ட யானைகளிடம் நீங்கள் சிக்கி கொண்டால், பொறுமையாக இருப்பதுடன், சூழ்நிலைக்கு தக்கவாறு செயல்படுங்கள். எக்காரணத்தை கொண்டும் வாகனத்தை விட்டு வெளியே வர வேண்டாம். அத்துடன் வாகனத்தின் மியூசிக்கையும் ஆஃப் செய்து விடுங்கள்.

யானை உங்களை அச்சுறுத்தலாக நினைக்கவில்லை என்றால், அதுவாக ஒதுங்கி உங்கள் வாகனத்திற்கு வழி கொடுத்து விடும். ஆனால் ஹாரன்களை ஒலிப்பது, மியூசிக் சிஸ்டத்தின் வால்யூமை கூட்டுவது, பிரகாசமாக ஒளி எழுப்புவது உள்ளிட்ட சேட்டைகளை நீங்கள் செய்தால், யானைகள் உங்களிடம் வேலையை காட்டி விடும்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Elephants Blocks A Car In Tamil Nadu Forest: Video. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X