குடிபோதையில் இளைஞர் அட்டகாசம்? வீட்டின் கதவுடன் சாலையில் வந்த ஆடி கார்... நடந்தது என்னனு தெரியுமா?

வீட்டின் கதவுடன் ஆடி காரை இளைஞர் ஒருவர் ஓட்டி வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

குடிபோதையில் இளைஞர் அட்டகாசம்? வீட்டின் கதவுடன் சாலையில் வந்த ஆடி கார்... நடந்தது என்னனு தெரியுமா?

உலகம் முழுவதும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான சாலை விபத்துக்கள் நடைபெற்று வருகின்றன. மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவது மற்றும் அதிவேகமாக வாகனம் ஓட்டுவது போன்ற விதிமுறை மீறல்களே இதற்கு மிக முக்கியமான காரணங்களாக உள்ளன. அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தும் சாலை விபத்துக்கள் உலகம் முழுக்க கவனம் பெற்று விடுகின்றன.

குடிபோதையில் இளைஞர் அட்டகாசம்? வீட்டின் கதவுடன் சாலையில் வந்த ஆடி கார்... நடந்தது என்னனு தெரியுமா?

இன்னும் சில விபத்துக்கள் உயிரிழப்புகளை ஏற்படுத்தாவிட்டாலும் கூட, வித்தியாசமான காரணங்களுக்காக உலக மக்களின் கவனத்தை பெறுகின்றன. அந்த வகையில் இங்கிலாந்தில் நடைபெற்றுள்ள ஒரு விபத்து, தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது. குறிப்பாக சமூக வலை தளங்களில், இந்த விபத்து பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

குடிபோதையில் இளைஞர் அட்டகாசம்? வீட்டின் கதவுடன் சாலையில் வந்த ஆடி கார்... நடந்தது என்னனு தெரியுமா?

இளம் வயது ஓட்டுனர் ஒருவர், ஆடி நிறுவனத்தின் கார் ஒன்றை, ஒரு வீட்டின் முன் பகுதியில் மோதியுள்ளார். அப்போது அந்த வீட்டின் கதவு எப்படியோ காரின் மேலே சிக்கி கொண்டது. ஆனால் அந்த காரின் ஓட்டுனர், அதை பொருட்படுத்தாமல் காரை தொடர்ந்து ஓட்டி சென்றுள்ளார். வீட்டின் கதவு காரில் சிக்கியிருந்த நிலையில், பல மீட்டர் தூரத்திற்கு அவர் காரை அப்படியே ஓட்டி சென்றுள்ளார்.

ராயல் என்பீல்டு ரசிகர்கள் எதிர்பார்க்கும் விஷயங்கள் மீட்டியோர் 350 பைக்கில் உள்ளதா? வீடியோ!

18 வயது மட்டுமே நிரம்பிய ஒருவர்தான் இந்த காரியத்தை செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது பெயர் விபரங்கள் வெளியாகவில்லை. வீட்டின் மீது மோதுவதற்கு முன்பாக, மற்றொரு வாகனத்தின் மீதும் அந்த ஆடி கார் மோதியுள்ளது. மேற்கு யார்க்ஸையரில் உள்ள ட்யூஸ்பரி என்னும் நகரில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு இந்த விபத்து நடைபெற்றதாக கூறப்படுகிறது.

குடிபோதையில் இளைஞர் அட்டகாசம்? வீட்டின் கதவுடன் சாலையில் வந்த ஆடி கார்... நடந்தது என்னனு தெரியுமா?

விபத்து நடைபெற்ற சமயத்தில் மது அருந்தியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், ஆடி காரின் ஓட்டுனரை காவல் துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதற்காக உடனடியாக மருத்துவமனைக்கு சென்று அவர் சிகிச்சை பெற்றுள்ளார். ஆனால் பெரிய அளவில் காயம் இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

குடிபோதையில் இளைஞர் அட்டகாசம்? வீட்டின் கதவுடன் சாலையில் வந்த ஆடி கார்... நடந்தது என்னனு தெரியுமா?

மேற்கு யார்க்ஸையர் காவல் துறையின் சாலைகளை கண்காணிக்கும் மற்றும் விதிமுறைகளை அமல்படுத்தும் பிரிவு இந்த விபத்தின் புகைப்படத்தை டிவிட்டரில் வெளியிட்டுள்ளது. மேல்பகுதியில் கதவு சிக்கியிருக்கும் நிலையில் கார் நின்று கொண்டிருக்குமாறு உள்ள அந்த புகைப்படம் தற்போது சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

குடிபோதையில் இளைஞர் அட்டகாசம்? வீட்டின் கதவுடன் சாலையில் வந்த ஆடி கார்... நடந்தது என்னனு தெரியுமா?

இந்த விபத்து ஆபத்தானது என்னும் நிலையிலும், சமூக வலை தளங்களில் ஒரு சிலர் இந்த சம்பவத்தை வேடிக்கையாக பேசி வருகின்றனர். நாம் ஏற்கனவே கூறியபடி, ஓட்டுனர் குடிபோதையில் இருந்த காரணத்தால் இந்த சம்பவம் நிகழ்ந்திருக்குமோ? என்ற சந்தேகம் உள்ளது. குடிபோதையில் வாகனங்களை ஓட்டுவது மிகவும் ஆபத்தானது என்பதை அனைவரும் உணர வேண்டும்.

குடிபோதையில் இளைஞர் அட்டகாசம்? வீட்டின் கதவுடன் சாலையில் வந்த ஆடி கார்... நடந்தது என்னனு தெரியுமா?

குடிபோதையில் இருக்கும்போது சிந்திக்கும் மற்றும் முடிவு எடுக்கும் திறனை இழந்து விடுவதால், அதிக விபத்துக்கள் நடைபெறுகின்றன. அத்துடன் விபத்து நடந்தவுடன் வாகன ஓட்டிகள் நிற்காமல், இதுபோல் ஏடாகூடமாகவும் சில காரியங்களை செய்து விடுகின்றனர். எனவே குடிபோதையில் வாகனம் ஓட்டும் பழக்கம் உடையவர்கள், இன்றே அதனை நிறுத்தி கொள்வது நல்லது.

Image Courtesy: WYP Roads Policing Unit

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
England: Man Smashes Audi Car Into House, Tries To Escape With Collapsed Door - Viral Pic. Read in Tamil
Story first published: Wednesday, November 25, 2020, 20:19 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X