Just In
- 1 hr ago
இந்தியாவின் மலிவான க்ரூஸர் மோட்டார்சைக்கிள், பஜாஜ் அவென்ஜெர்ஸின் விலை அதிகரிப்பு!!
- 9 hrs ago
எக்ஸ்ட்ரா பம்பர் வரிசையில் அடுத்த அதிரடி! இனி இது இல்லாமல் டூவீலர் ஓட்டி பந்தா காட்ட முடியாது! என்ன தெரியுமா?
- 10 hrs ago
2021 சஃபாரியின் வருகையில் எந்த தாமதமும் இல்லை!! மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தும் டாடா மோட்டார்ஸ்
- 11 hrs ago
2021 ஸ்கோடா சூப்பர்ப் செடான் கார் இந்தியாவில் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.31.99 லட்சம்
Don't Miss!
- News
கொரோனா தடுப்பூசி யாருக்கெல்லாம் போடப்படும்?.. பக்க விளைவுகள் என்ன?.. முழு விவரம்!
- Movies
சத்தியமங்கலத்தில் ஷுட்டிங்.. வெற்றிமாறன் இயக்கும் படம்.. சூரி ஜோடியாக இவர்தான் நடிக்கிறாராமே?
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 16.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் அவசர முடிவுகள் எடுக்காமல் இருப்பது நல்லது…
- Sports
அடுத்தடுத்த இடத்துல இருக்கற அணிகள் மோதும் 59வது போட்டி... வெற்றி யாருக்கு.. ரசிகர்கள் ஆர்வம்
- Finance
கலவரத்திற்கு முன் பிட்காயின் மூலம் பேமெண்ட்.. அமெரிக்காவில் நடந்த கொடூரம்..!
- Education
ரூ.1.13 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
காலி கேன்களை இப்படியும் செய்யலாமா?.. இதை உருவாக்கியவர் யார் என தெரிஞ்சா மெர்சலாயிடுவீங்க..!
டின் பீரின் காலி கேன்களைக் கொண்டு வியத்தகு காரியத்தை முதியவர் ஒருவர் செய்துள்ளார். இதுகுறித்த தகவலை சுவாரஷ்ய தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

தற்போதும் தீவிரம் குறையாமல் உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றது கொரோனா வைரஸ். கடந்த காலங்களில் ஒட்டுமொத்த உலகையே இந்த வைரஸ் இயங்க விடாமல் முடக்கிப்போட்டது. அதிலும், வைரஸ் பரவலின் ஆரம்ப காலமான மார்ச் மற்றும் ஏப்ரல் ஆகிய மாதங்கள் பலருக்கு நரக வேதனையைக் கொடுக்கும் வகையில் அமைந்தது.

இந்த காலக்கட்டத்தில் வைரஸ் பரவல் மிக தீவிரமாக காணப்பட்டது. ஆகையால், மக்களே தங்களை வீட்டுக்குள் சிறை வைத்துக்கொண்டனர். இதுபோதாதென்று ஒவ்வொரு நாட்டின் அரசும் மக்களின் நடமாட்டத்திற்கு முழுமையாக தடைவிதித்தன. இதனால், வெளியில் வர முயற்சித்தவர்களும் தலை காட்ட முடியாத நிலை உருவாகியது.

இந்த நிலை, இந்தியா போன்ற ஒரு சில குறிப்பிட்ட நாடுகளில் மாதக் கணக்கில் நீடித்தது. அவ்வாறு வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்த ஓர் நபர், காலியான கூல்ட் ட்ரிங்க் அலுமினிய பாட்டில்களைக் கொண்டு கார் மற்றும் ரயில் எஞ்ஜின் போன்றவற்றை உருவாக்கியிருக்கின்றார்.

இதற்காக, அவர் கோககோலா மற்றும் காலி டின் பீர் கேன்களைப் பயன்படுத்தியிருக்கின்றார். கேன்களால் அவர் உருவாக்கியிருக்கும் ஒவ்வொரு வாகனங்களும் நிஜ கார்களின் டம்மிகளைப் போன்று காட்சியளிக்கின்றன. அந்தளவிற்கு மிக துள்ளியமாகவும், நேர்த்தியாகவும் சிறிய ரக வாகனங்களை காலி கூல் ட்ரிங்க் அலுமினியக் கேன்களின் மூலம் அவர் உருவாக்கியிருக்கின்றார்.

இங்கிலாந்து நாட்டில் உள்ள கோட்டிங்ளேவின், வேக்ஃபீல்டு பகுதியைச் சேர்ந்தவர் லிண்ட்ஸே கிர்க். 57 வயதான இந்த முதியவரே நூற்றுக்கும் மேலான காலி குளிர்பான அலுமினியக் கேன்களைப் பயன்படுத்தி சிறிய வாகனங்களை வடிவமைத்திருக்கின்றார். ரயில் எஞ்ஜின், கார் மற்றும் எஃப்1 பந்தயங்களில் பயன்படுத்தப்படும் ரேஸ் வாகனங்களையும் அவர் உருவாக்கியிருக்கின்றார்.

தன்னுடைய வீட்டில் இருந்த காலி பாட்டில்கள் மட்டுமின்றி தன்னுடைய பக்கத்து வீட்டுக்காரர்களிடத்தில் இருந்தும் சில கேன்களை கடன் பெற்றே இந்த முயற்சியில் அவர் ஈடுபட்டிருக்கின்றார். இதனால், கொரோனா பொதுமுடக்கம் தனக்கு சுவாரஷ்யமானதாகவும், பயனுள்ளதாகவும் அமைந்ததாக அவர் கூறியுள்ளார்.

Fox News And Yorkshire Evening Post
முன்னதாக சிறியளவில் வீட்டை அலங்காரம் செய்வதற்காக மட்டுமே இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வந்த லிண்ட்சே முதல்முறையாக பல மணி நேரங்களைச் செலவிட்டு மிக அதிகளவில் கைவினைப் பொருட்களை உருவாக்கியிருக்கின்றார். இந்த லாக்டவுண் தன்னை வீட்டுக்குள்ளேயே முடக்கிப் போட்டதன் காரணத்தினாலேயே முழு வேலையாக பல டம்மி வாகனங்களை காலி கேன்கள் மூலம் உருவாக்கியதாக அவர் கூறுகின்றார்.
இதுபோன்று கைவினைப் பொருட்களை உருவாக்கும் பணியை அவர் கடந்த நான்கு வருடங்களாகவே மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகின்றது. இவரின் இந்த வியத்தகு செயலைக் கண்டு அக்கம் பக்கத்தினர் சிலர் வியப்பில் ஆழ்ந்திருக்கின்றனர். அதிலும், லாக்டவுணில் உருவாக்கிய கார்கள் பலரின் கவனத்தை ஈர்க்கத் தொடங்கியுள்ளது.