ஈரோடு டூ இமயமலை கர்துங்லா சிகரம்... அம்பாசடர் காரில் வாசகரின் சிலிர்க்க வைக்கும் பயண அனுபவம்!!

வாழ்வில் ஒருமுறையாவது இமயமலைக்கு பயணம் மேற்கொள்வதை வாகன பிரியர்கள் பலர் தங்களது வாழ்நாள் கனவாக வைத்திருக்கின்றனர். அவ்வாறு, இமயமலை பயணத்தை கனவாக கொண்டிருந்த ஈரோட்டை சேர்ந்த பிரபு தனது அம்பாசடர் காரில் நண்பர்களுடன் இமயமலைக்கு சவாலான பயணத்தை மேற்கொண்டு அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார்.

ஈரோடு டூ இமயமலை... அம்பாசடர் காரில் ஓர் சிலிர்க்க வைக்கும் பயண அனுபவம்!!

ஓல்டு இஸ் கோல்டு

அதிநவீன தொழில்நுட்பங்களும், சொகுசு வசதிகளும் கொண்ட இந்த கால கார்களுக்கு மத்தியில், இந்த சவால்கள் நிறைந்த பயணத்திற்கு பழைய அம்பாசடர் காரை பிரபு தேர்வு செய்ததான் பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. இந்த பயணத்தின்போது, பிரபு தனது அம்பாசடர் காரில் 8,516 கிமீ தூரம் பயணித்துள்ளார்.

ஈரோடு டூ இமயமலை... அம்பாசடர் காரில் ஓர் சிலிர்க்க வைக்கும் பயண அனுபவம்!!

பயணத் திட்டம்

இதுகுறித்து பிரபு கூறுகையில்," சிறு வயதில் இருந்தே கார்கள் மீது அதீத ஆர்வம் உண்டு. அண்மையில் லாங் டிரிப் அடிக்கலாம் என்று நினைத்தேன். அப்போது, எனது கனவாக இருந்த இமயமலை பயணத் திட்டத்தை கையில் எடுத்தேன். எனக்கு கிளாசிக் மற்றும் விண்டேஜ் அந்தஸ்தை பெற்ற அரிய கார்கள் மீது அதீத ஆர்வம் உண்டு. என்னிடம் 4 விண்டேஜ் கார்கள் உள்ளன. அந்த ஆர்வத்தில்தான் இந்த பயணத்திற்கு அம்பாசடர் காரை பயன்படுத்தலாம் என்று முடிவு செய்தேன்.

ஈரோடு டூ இமயமலை... அம்பாசடர் காரில் ஓர் சிலிர்க்க வைக்கும் பயண அனுபவம்!!

அம்பியின் மீதான நம்பிக்கை

அம்பாசடர் காரில் இமயமலை செல்லப் போகிறேன் என்றவுடன் பலரும் ஆச்சரியப்பட்டார்கள். சிலர், இந்த காரில் இமயமலைக்கு போகிறாயா? என்று கிண்டலாக கூட கூறினர். ஆனால், அம்பாசடரில் செல்வதில் உறுதியாக இருந்ததை பார்த்து, பல நண்பர்கள் ஊக்கப்படுத்தினர். மேலும், கடந்த 3 ஆண்டுகளாக இந்த அம்பாசடர் காரை தொடர்ந்து பயன்படுத்தி வருவதுடன், சிறந்த பராமரிப்பில் வைத்திருக்கிறேன். எனவே, என் அம்பாசடர் மீது அதிக நம்பிக்கை இருந்தது.

ஈரோடு டூ இமயமலை... அம்பாசடர் காரில் ஓர் சிலிர்க்க வைக்கும் பயண அனுபவம்!!

நண்பர்களின் ஆர்வம்

எனது திட்டத்தை கேட்டு, எனது சகோதரர் சிபியும் மற்றும் எனது நண்பர்கள் பிரவீன், செந்தில், ராகுல், ரகு, விஜய்சங்கர் என மொத்தம் 7 பேர் சேர்ந்து கொண்டனர். ஆனால், அம்பாசடரில் இத்தனை பேர் செல்வது ஆகாத காரியம் என்பதால், மஹிந்திரா தார் எஸ்யூவியையும் எடுத்துக் கொண்டோம். அம்பாசடர் மீது எனக்கு அதீத நம்பிக்கை இருந்தாலும், எனினும், அவசர சமயத்திற்கு உதவும் என்ற யோசனையின்படியும், தார் எஸ்யூவியையும் எடுத்துக் கொண்டோம்.

ஈரோடு டூ இமயமலை... அம்பாசடர் காரில் ஓர் சிலிர்க்க வைக்கும் பயண அனுபவம்!!

இடைநில்லா பயணம்

கார்களுக்கு மட்டும் குறிப்பிட்ட தூரத்திற்கு ஒருமுறை ஓய்வு கொடுத்து இடைநில்லாமல் பயணிக்க முடிவு செய்தோம். கடந்த ஆகஸ்ட் மாதம் 3ந் தேதி ஈரோட்டில் பயணத்தை துவங்கினோம். இந்த பயணத்தை துவங்கிய பின் வழியில் எங்கும் தங்கவில்லை. எங்களது குழுவில் இருந்த 7 பேரில் 5 பேருக்கு டிரைவிங் தெரியும். எனவே, மாற்றி மாற்றி ஓட்டினோம். ராஜஸ்தானில் உள்ள பாலி என்ற ஊரில்தான் முதல்முதலாக தங்கினோம். அங்கிருந்து அமிர்தசரஸ், பதான்கோட் வழியாக ஸ்ரீநகருக்கு சென்றடைந்தோம். இடையில் பனிகல் என்ற இடத்தில் மாலை 6 மணிக்கு மேல் வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டதால், வேறு வழியில்லாமல் அங்குள்ள ஒரு சிறிய விடுதியில் தங்க நேரிட்டது.

Most Read: இமயமலை பைக் பயணத்திற்கு தயாரானபோது... உங்களுக்கும் பயன்படும்!!

ஈரோடு டூ இமயமலை... அம்பாசடர் காரில் ஓர் சிலிர்க்க வைக்கும் பயண அனுபவம்!!

கனவு நனவானது

அங்கிருந்து புறப்பட்டு ஸ்ரீநகரை அடைந்து இரவு தங்கினோம். மறுநாள் காலை புறப்பட்டு மாலை கார்கிலை அடைந்தோம். எங்களது பயணத்தில் மிகவும் அபாயகரமான சாலையாக இதனை கூறலாம். அன்று இரவு கார்கில் ராணுவ முகாமில் ஹால்ட் அடித்தோம். அடுத்த நாள் காலை புறப்பட்டு லே பகுதியை அடைந்து அங்கிருந்து எங்களது கனவு இலக்காக இருந்த கர்துங்லா சிகரத்தை நோக்கி பயணித்தோம். பல்வேறு சவால்களை எதிர்கொண்டு ஒருவழியாக கர்துங்லாவை தொட்டுவிட்டோம். கர்துங்லாவை தொட்டபோது, உலகின் உச்சத்தை தொட்டது போன்ற உணர்வு. அதை வார்த்தைகளில் விவரிக்க முடியாது.

ஈரோடு டூ இமயமலை... அம்பாசடர் காரில் ஓர் சிலிர்க்க வைக்கும் பயண அனுபவம்!!

சவாலான சாலை

ஈரோட்டில் புறப்பட்டு 7வது நாள் கர்துங்லா சிகரத்தை அடைந்தோம். கர்துங்லாவில் ஆக்சிஜன் அளவு குறைவாக இருப்பதால், மூச்சுத் திணறல் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. இதற்காக, சிறிய ஆக்சிஜன் சிலிண்டரையும் எடுத்துச் சென்றிருந்தோம். அரை மணிநேரத்திற்கு மேல் அங்கு இருக்க வேண்டாம் என்று அங்கு எச்சரிக்கை பலகையும் இருக்கிறது. எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. ஆனால், அங்கு சுற்றுலா வந்த சில பெண்களுக்கு மூச்சு விடும் பிரச்னை எழுந்ததால், அவர்களுக்கு கொடுத்துவிட்டோம்.

ஈரோடு டூ இமயமலை... அம்பாசடர் காரில் ஓர் சிலிர்க்க வைக்கும் பயண அனுபவம்!!

மீதமான தொகை

கர்துங்லாவை தொட்ட மனநிறைவுடன், அங்கிருந்து புறப்பட்டு லே வந்து பின்னர் மணாலி நோக்கி பயணித்தோம். மணாலியிலிருந்து டெல்லி, ஜெய்ப்பூர் வழியாக புனே வந்து ஊர் திரும்பினோம். மொத்தம் 13 நாட்களில் எங்களது கனவு பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தோம்.

எரிபொருளுக்காக மட்டும் ஒரு காருக்கு தலா ரூ.70,000 வரை செலவானது. பயணம் முழுவதும் சைவ உணவை சாப்பிட்டோம். இருவேளை சப்பாத்தி மட்டுமே எடுத்துக் கொண்டதால் உடல்நல பிரச்னை எதுவும் இல்லை. எங்களது திட்டப்படி, செலவுக்கு எடுத்துச் சென்ற தொகையில், ரூ.11,000 மீதமானது. அதனை ஊர் திரும்பும்போது கிருஷ்ணகிரியில் இருக்கும் முதியோர் இல்லத்திற்கு கொடுத்துவிட்டு வந்தோம்.

ஈரோடு டூ இமயமலை... அம்பாசடர் காரில் ஓர் சிலிர்க்க வைக்கும் பயண அனுபவம்!!

வீண்போகாத நம்பிக்கை

இந்த பயணம் நிச்சயம் எங்களது வாழ்நாளின் மறக்கமுடியாத, பெரும் சாதனையாகவே இந்த பயணத்தை கருதுகிறோம். மேலும், இந்த சவால் நிறைந்த பயணத்தின்போது அம்பாசடர் காரில் சிறிய பிரச்னை கூட ஏற்படவில்லை என்பதும் பெருமிதம் கொள்ள வேண்டிய விஷயமாக கருதுகிறேன். நான் நினைத்துபோலவே, என் நம்பிக்கையை அம்பாசடர் வீணாக்கவில்லை," என்று பிரபு கூறினார்.

ஈரோடு டூ இமயமலை... அம்பாசடர் காரில் ஓர் சிலிர்க்க வைக்கும் பயண அனுபவம்!!

இதுவே பெரிய விஷயம்

பிரபு குழுவில் இடம்பெற்றிருந்த பிரவீன் கூறுகையில்," பயணத்தின்போது அவசரத்திற்கு தேவையான அனைத்து உபகரணங்களையும் எடுத்துச் சென்றிருந்தோம். ஆனால், ஒரு சிறிய பிரச்னை கூட இல்லாததால், அவற்றை வெளியே கூட எடுக்கவேண்டிய அவசியம் ஏற்படவில்லை. இதுவே பெரிய விஷயம். பெரும்பாலான உடைமைகளை தார் எஸ்யூவியில் வைத்திருந்தோம். மேலும், தார் எஸ்யூவியின் பின்புறத்தில் ஏர்பெட் போட்டு, தேவைப்படும்போது ஓய்வு எடுக்க வசதி செய்திருந்தோம்.

Most Read: இமயமலையில் பைக் பயணம் எனும் கனவு... தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்!!

ஈரோடு டூ இமயமலை... அம்பாசடர் காரில் ஓர் சிலிர்க்க வைக்கும் பயண அனுபவம்!!

எக்ஸ்பிரஸ் சாலையா?

ஈரோட்டிலிருந்து புறப்பட்டு பெங்களூர், புனே, நவி மும்பை வழியாக ஆமதாபாத் சென்றடைந்தோம். இதில், புனே - மும்பை இடையிலான எக்ஸ்பிரஸ் சாலையிலுள்ள சுங்கச் சாவடிகளில் நூற்றுக்கணக்கான டிரக்குகள் வரிசை கட்டிவிடுவதால், இதனை எக்ஸ்பிரஸ் சாலை என்று கூற முடியாத அளவுக்கு இருந்தது. அதேபோல, ஆமதாபாத் தாண்டிவிட்டால், நெடுஞ்சாலையில் ஆள் நடமாட்டமும், விலங்குகள் நடமாட்டமும் சர்வசாதாரணமாக இருப்பதால் மிக கவனமாக செல்ல வேண்டி இருக்கிறது.

ஈரோடு டூ இமயமலை... அம்பாசடர் காரில் ஓர் சிலிர்க்க வைக்கும் பயண அனுபவம்!!

த்ரில் அனுபவம்

எங்களது பயணத்தில் மிக சவாலான தருணம் என்றால், கர்துங்லாவை பார்த்துவிட்டு, லே-யிலிருந்து சர்ச்சூ என்ற பகுதி வழியாக மணாலி திரும்பியபோது சீதோஷ்ண நிலையும், சாலையும் மிக மிக மோசமாக இருந்தது. லே-யிலிருந்து 12 மணி நேர பயணத்தில் சர்ச்சூ என்ற இடம் உள்ளது. லே பகுதியிலிருந்து இந்த இடத்தை கடப்பதற்கு இரவு நெருங்கிவிடுவதால், இங்குதான் பலரும் தங்குகின்றனர். ஆனால், இரவு வேளையில் எதிரில் வரும் வாகனங்களின் முகப்பு விளக்குகளை வைத்து ஓட்ட முடியும் என்பதால், நாங்கள் பயணத்தை தொடர முடிவு செய்தோம்.

ஈரோடு டூ இமயமலை... அம்பாசடர் காரில் ஓர் சிலிர்க்க வைக்கும் பயண அனுபவம்!!

அசால்ட் காட்டிய அம்பாசடர்

சர்ச்சூ பகுதியை தாண்டி ஒரு இடத்தில் சாலை மிக மோசமாக இருந்தது. பனி உருகி சாலையில் ஆறுபோல கடந்து செல்கிறது. அந்த இடத்தை கடப்பதற்கு அங்கு அடிக்கடி வரும் உள்ளூர் டாக்சி டிரைவர்கள் கூட அஞ்சுகின்றனர். ஆனால், எங்களது அம்பாசடர் அசால்ட்டாக கடந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

ஈரோடு டூ இமயமலை... அம்பாசடர் காரில் ஓர் சிலிர்க்க வைக்கும் பயண அனுபவம்!!

அசத்திய அம்பாசடர்

ஆனால், எங்களுடன் தொடர்ந்து வந்த இரண்டு இன்னோவா கார்களில் ஒன்று அங்கு சிக்கிக் கொண்டது. அதில் பெண்களும் இருந்தனர். எனவே, அவர்களை எங்களது தார் ஜீப்பில் வைத்து இந்த பக்கம் அழைத்து வந்தோம். இன்னோவாவையும் டோ செய்து கொடுத்து விட்டு வந்தோம். அந்த இடத்தில்தான் தாங்க முடியாத அளவுக்கு மிக கடுமையான குளிர் நிலவியது.

ஈரோடு டூ இமயமலை... அம்பாசடர் காரில் ஓர் சிலிர்க்க வைக்கும் பயண அனுபவம்!!

மேகியின் மகிமை

இந்த வழியில் சாப்பிடுவதற்கு மேகி நூடூல்ஸ் மட்டுமே கடைகளில் கிடைக்கிறது. நாங்கள் கையில் அடுப்புடன் கூடிய சிறிய சிலிண்டரையும், மேகி நூடூல்ஸ் பாக்கெட்டுகளையும் வைத்திருந்ததால், வெளியில் சாப்பிடவில்லை. மேலும், சில டீ கடைகளில் படுக்கை வசதியும் உள்ளது. ஒரு இரவு தங்குவதற்கு 200 ரூபாய் கட்டணம் வசூலிக்கின்றனர்.

Most Read: இமயமலையில் ஏறிய முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒகினவா பிரெய்ஸ்!!

ஈரோடு டூ இமயமலை... அம்பாசடர் காரில் ஓர் சிலிர்க்க வைக்கும் பயண அனுபவம்!!

பாங்யாங் ஏரி

பெட்ரோல் நிலையங்கள் நூற்றுக்கணக்கான கிலோமீட்டருக்கு ஒன்று இருப்பதால், வழியில் உள்ள சில கடைகளில் அனுமதி இல்லாமல் பெட்ரோல், டீசலை கூட ரகசியமாக விற்பனை செய்கின்றனர். ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.140 விலையில் விற்கின்றனர். ஆனால், டீசலுக்கு லிட்டருக்கு 3 ரூபாய் கூடுதலாக வைத்து விற்பனை செய்கின்றனர். இந்த வழியில் பேங்காங் ஏரி முக்கிய சுற்றுலா பகுதியாக இருக்கிறது. இந்தியா, சீனா, திபேக் பகுதிகளை இணைக்கும் மிக பிரம்மாண்டமான இந்த ஏரியின் தண்ணீரில் உப்பு கரிப்பது இயற்கையின் விந்தை. இது சினிமா சூட்டிங் ஸ்பாட்டாகவும் இருக்கிறது," என்று தனது அனுபவத்தை எம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

ஈரோடு டூ இமயமலை... அம்பாசடர் காரில் ஓர் சிலிர்க்க வைக்கும் பயண அனுபவம்!!

அம்பாசடர் மாடல் விபரம்

1994ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட அம்பாசடர் காரை பிரபு வைத்திருக்கிறார். இந்த பயணத்திற்காக அம்பாசடர் காரின் அடிப்பாகத்தில் 14மிமீ தடிமன் கொண்ட வலிமையான தகடு பொருத்தியிருக்கின்றனர். கல் போன்றவற்றில் கார் இடித்தால் கூட கார் எஞ்சின் உள்ளிட்ட எந்த பாகத்திற்கும் பாதிப்பு ஏற்படாத வகையில், சேஸீயுடன் இந்த தகடு இணைத்து பொருத்தப்பட்டுள்ளது. அம்பாசடர் காரில் இசூஸு பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது.

ஈரோடு டூ இமயமலை... அம்பாசடர் காரில் ஓர் சிலிர்க்க வைக்கும் பயண அனுபவம்!!

டாப் ஸ்பீடு

முழுமையாக பெட்ரோல் நிரப்பினால் 400 கிமீ தூரம் வரை பயணித்துள்ளது. ஒவ்வொரு முறையும் ஃபுல் டேங்க் அடிப்பதற்கு ரூ.3200 வரை செலவிட்டுள்ளனர். இதே அளவுக்குத்தான் தார் எஸ்யூவியிலும் டீசல் நிரப்பியுள்ளனர். இந்த பயணத்தின்போது அம்பாசடர் கார் 160 கிமீ வேகம் வரையிலும், தார் எஸ்யூவி 140 கிமீ வேகம் வரையிலும் சென்றதாக தெரிவித்தனர். எனினும், விதிமீறாமல் சென்று வந்ததாகவும், பாதுகாப்பான பயணத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததாக பிரவீன் எம்மிடம் தெரிவித்தார்.

ஈரோடு டூ இமயமலை... அம்பாசடர் காரில் ஓர் சிலிர்க்க வைக்கும் பயண அனுபவம்!!

ஸ்பெஷல் தார்

2017ம் ஆண்டு தார் எஸ்யூவியை இந்த பயணத்திற்கு உடன் எடுத்துச் சென்றுள்ளனர். தார் எஸ்யூவியில் அனைத்து சாலைகளுக்கும் ஏதுவான MT ஆஃப்ரோடு டயர்களை பொருத்தியிருக்கின்றனர். மேலும், இரவு நேரத்திற்கு போதுமான வெளிச்சை வழங்க வல்ல கூடுதல் ஹெட்லைட்டுகள் மற்றும் கரடுமுரடான பகுதிகளை கடப்பதற்கான விசேஷ முகப்பு பம்பரும் தார் எஸ்யூவியில் பொருத்தி உள்ளனர்.

ஈரோடு டூ இமயமலை... அம்பாசடர் காரில் ஓர் சிலிர்க்க வைக்கும் பயண அனுபவம்!!

தன்னிகரில்லா அம்பாசடர்

இமயமலை பயணங்களுக்கு தார் எஸ்யூவி ஏற்றது என்பதால் அது பெரிய விஷயம் இல்லை. ஆனால், பழைய அம்பாசடர் காரை அவ்வாறு கருத முடியாது. பிரபு மற்றும் அவர்களது நண்பர்களின் நம்பிக்கையை மட்டுமல்ல, கடந்த 5 தசாப்தங்களில் பாமரன் முதல் பணக்காரர் வரையில் அதீத நம்பிக்கை கொண்டிருந்த சொகுசு வாகனமாக அம்பாசடர் விளங்கியது. கால ஓட்டத்தில் பல புதிய கார் மாடல்கள் வந்தாலும், எனக்கு நிகரில்லை என்று அம்பாசடர் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.

Most Read: அம்பாசடர் கார் பற்றி 9 சுவாரஸ்ய விஷயங்கள்!

ஈரோடு டூ இமயமலை... அம்பாசடர் காரில் ஓர் சிலிர்க்க வைக்கும் பயண அனுபவம்!!

கர்துங் லா-வின் சிறப்பு

இந்திய - சீன எல்லைப்பகுதியில் உள்ள கர்துங்லா சிகரம் கடல் மட்டத்திலிருந்து 18,380 அடி உயரத்தில் அமைந்துள்ளது. வாகன பிரியர்கள் மற்றும் சாகசப் பிரியர்களின் முக்கிய இலக்காக இந்த சிகரம் விளங்குகிறது. இமயமலையில் மோட்டார் வாகனங்கள் செல்லக்கூடிய உச்சிப் பகுதியாக இது கருதப்படுவதால், இதனை அடைந்தால் மோட்டார் வாகனத்தில் உலகின் உச்சியை தொட்டதற்கு சமமாக கருதுகின்றனர். சரி, ஈரோடு கடல் மட்டத்திலிருந்து எவ்வளவு அடி உயரத்தில் அமைந்துள்ளது தெரியுமா? கடல் மட்டத்திலிருந்து 557 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

கார்களை கவர்ந்திழுக்கும் காஷ்மீரின் காந்த மலை பற்றிய சுவாரஸ்யங்கள்

தனது காஷ்மீர் பயணத்தின்போது காஷ்மீரில் உள்ள காந்தமலை பகுதி வழியாக ஈரோடு பிரபுவும் அவரது நண்பர்களும் கடந்து சென்றுள்ளனர். கார்களை கவர்ந்து இழுக்கும் அந்த காந்த மலை பற்றிய ரகசியங்களை தொடர்ந்து படிக்கலாம்.

கார்களை கவர்ந்திழுக்கும் காஷ்மீரின் காந்த மலை பற்றிய சுவாரஸ்யங்கள்

மனிதனின் அசகாய மூளைக்கும், அறிவியலுக்கும் அப்பாற்பட்ட இயற்கை வினோதங்கள் உலகம் முழுவதும் பரவி கிடக்கின்றன. அவ்வாறான அதிசயங்களில் ஒன்றுதான் காஷ்மீரின் காந்த மலை. காஷ்மீரின், லே- லடாக் பகுதிகளுக்கு சாகச பயணங்கள் மற்றும் சுற்றுலா செல்வோர் இந்த காந்த மலையை தவறவிடுவதில்லை. அப்படி அங்கே என்ன அதிசயம் இருக்கிறது? ஆச்சரியத்தை அளிக்கும் விஷயங்களை தொடர்ந்து படியுங்கள்.

கார்களை கவர்ந்திழுக்கும் காஷ்மீரின் காந்த மலை பற்றிய சுவாரஸ்யங்கள்

காஷ்மீர் மாநிலம், லே மற்றும் லடாக் இடையிலான தேசிய நெடுஞ்சாலையில்தான் இந்த அதிசய காந்த மலை அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 11,000 அடி உயரத்தில் இந்த காந்த மலை அமைந்துள்ளது.

கார்களை கவர்ந்திழுக்கும் காஷ்மீரின் காந்த மலை பற்றிய சுவாரஸ்யங்கள்

காந்த மலைக்கு அருகேயுள்ள சாலையில் போடப்பட்டிருக்கும் கட்டத்திற்குள் கார் அல்லது இதர வாகனங்களை எஞ்சினை ஆஃப் செய்து, நியூட்ரல் கியரில் நிறுத்தும்போது, அது தானாகவே காந்த மலை நோக்கி தானாக நகர்கிறது.

MOST READ: வாடிக்கையாளர் சேவையை வேற லெவலுக்கு மாற்றிய மாருதி அரேனா கார் ஷோரூம்கள்...!!

கார்களை கவர்ந்திழுக்கும் காஷ்மீரின் காந்த மலை பற்றிய சுவாரஸ்யங்கள்

எடைக்கு தகுந்தாற்போல் கார்கள் மணிக்கு 10 கிமீ வேகம் முதல் 20 கிமீ வேகம் வரை மலை இருக்கும் திசையில் சாலையின் மேடான பகுதி நோக்கி நகர்கின்றன. இந்த வான் பகுதியில் பறக்கும் விமானங்களை கூட இந்த காந்த மலை கவர்ந்திழுக்கும் சக்தி கொண்டதாக கூறப்படுகிறது.

கார்களை கவர்ந்திழுக்கும் காஷ்மீரின் காந்த மலை பற்றிய சுவாரஸ்யங்கள்

அறிவிப்பு பலகை குறிப்பிட்ட இடத்தில் வாகனத்தை நிறுத்துவதற்காக சாலையில் குறியீடும் போடப்பட்டுள்ளதுடன், சாலையின் பக்கத்திலேயே அறிவிப்பு பலகையும் இருக்கிறது. கார் மட்டுமல்ல, எந்தவொரு வாகனத்தையும் இந்த காந்த மலை கவர்ந்து இழுக்கிறது.

கார்களை கவர்ந்திழுக்கும் காஷ்மீரின் காந்த மலை பற்றிய சுவாரஸ்யங்கள்

வாகனத்தின் எடைக்கு தகுந்தவாறு நகரும் என்று கூறப்படுகிறது.குறிப்பிட்ட மலையில் இருக்கும் அதிகப்படியான மின்காந்த ஈர்ப்பு சக்திதான் இதுபோன்று வாகனங்களை கவர்ந்திழுக்கிறது என்று ஒரு சாரார் கூறுகின்றனர்.

கார்களை கவர்ந்திழுக்கும் காஷ்மீரின் காந்த மலை பற்றிய சுவாரஸ்யங்கள்

அதெல்லாம் இல்லை, இது ஒளியியல் மாயை [Optical Illusion] என்று மற்றொரு தரப்பு விஞ்ஞானிகளும் கூறுகின்றனர். இந்த விந்தையான நிகழ்வு நமக்கு பெரும் ஆச்சரியத்தை தருவதாக இருக்கிறது. எனவேதான் இதனை இன்னும் புரியாத புதிராக குறிப்பிடுகின்றனர்.

Most Read: பெட்ரோல் பங்கில் மொபைலில் பேசியதால் பைக் தீப்பற்றி வாலிபர் படுகாயம் ... நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்!!

காஷ்மீரின் லே- லடாக் பகுதிகளுக்கு சுற்றுலா செல்வோர் இந்த காந்த மலையை காணத் தவறவிடாதீர்.

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
DriveSpark reader Erode Prabhu has shared his Himalayan road trip experience in Ambassador car. You can read his epic travel experience with pictures in this article.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more