விலை குறைவான மாடல்களில் கூட நடக்கும் மாயாஜாலம்! கீழே இறங்கியதும் காரே நமக்கு வழி காட்டும்! எப்படினு தெரியுமா?

விலை குறைவான கார்களில் கூட தற்போது தவறாமல் இடம்பெறும் ஃபாலோ மீ ஹோம் ஹெட்லைட்கள் வசதி குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

விலை குறைவான மாடல்களில் கூட நடக்கும் மாயாஜாலம்! கீழே இறங்கியதும் காரே நமக்கு வழி காட்டும்! எப்படினு தெரியுமா?

இன்றைய நவீன கார்களில் பாதுகாப்பு வசதிகளில் ஒவ்வொரு நாளும் மேம்பட்டு கொண்டே வருகின்றன. இந்த வகையில் கார்களுக்கு தேவையான மிக முக்கியமான வசதிகளில் ஒன்றாக ஃபாலோ மீ ஹோம் ஹெட்லைட்கள் (Follow Me Home Headlights) உருவெடுத்துள்ளன. இது நம் அனைவருக்கும் தேவையான பாதுகாப்பு வசதியாகும்.

விலை குறைவான மாடல்களில் கூட நடக்கும் மாயாஜாலம்! கீழே இறங்கியதும் காரே நமக்கு வழி காட்டும்! எப்படினு தெரியுமா?

பொதுவாக புதிய கார் அறிமுகங்கள் தொடர்பான செய்திகளில், ஃபாலோ மீ ஹோம் ஹெட்லைட்கள் வசதி இடம்பெற்றுள்ளது என்ற வாசகத்தை நீங்கள் படித்திருக்கலாம். ஆனால் ஃபாலோ மீ ஹோம் ஹெட்லைட்கள் என்றால் என்ன? அது எப்படி வேலை செய்கிறது? இதனால் நமக்கு என்ன பயன்? என்ற கேள்விகளுக்கு பலருக்கும் பதில் தெரிந்திருக்காது.

விலை குறைவான மாடல்களில் கூட நடக்கும் மாயாஜாலம்! கீழே இறங்கியதும் காரே நமக்கு வழி காட்டும்! எப்படினு தெரியுமா?

எனவே ஃபாலோ மீ ஹோம் ஹெட்லைட்கள் தொடர்பான உங்கள் அனைத்து சந்தேகங்களுக்கும் இந்த செய்தியில் விடை அளித்துள்ளோம். கைடு மீ ஹெட்லைகள் (Guide Me Headlights) என்ற பெயரிலும் இவை அழைக்கப்படுகின்றன. நீங்கள் காரில் இருந்து இறங்கிய பின் உங்களுக்கு வழிகாட்டும் பணியை இந்த ஹெட்லைகள் மேற்கொள்கின்றன.

விலை குறைவான மாடல்களில் கூட நடக்கும் மாயாஜாலம்! கீழே இறங்கியதும் காரே நமக்கு வழி காட்டும்! எப்படினு தெரியுமா?

வீடு அல்லது அலுவலகம் போன்ற இடங்களில் கார் பார்க்கிங் செய்யப்பட்டிருக்கும்போது, முன் பக்க ஹெட்லைட்கள் 10 முதல் 15 வினாடிகள் வரை தொடர்ந்து எரியும். எனவே காரில் இருந்து நீங்கள் இறங்கிய பின்னரும் உங்களுக்கு வெளிச்சம் கிடைக்கும். இந்த வெளிச்சத்தில் தெரியும் பாதையின் மூலம் நீங்கள் பாதுகாப்பாக செல்லலாம்.

விலை குறைவான மாடல்களில் கூட நடக்கும் மாயாஜாலம்! கீழே இறங்கியதும் காரே நமக்கு வழி காட்டும்! எப்படினு தெரியுமா?

பொதுவாக இருட்டான இடங்களில் காரை பார்க்கிங் செய்து விட்டு கீழே இறங்கும்போது ஹெட்லைட்கள் ஆஃப் ஆகி விடும். எனவே வெளிச்சம் இல்லாமல் நீங்கள் சிரமப்படுவீர்கள். இது எதிர்பாராத அசம்பாவிதங்களை கூட ஏற்படுத்தலாம். ஆனால் அத்தகைய சம்பவங்கள் நிகழ்வதை தடுப்பதற்காகவே ஃபாலோ மீ ஹெட்லைட்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

விலை குறைவான மாடல்களில் கூட நடக்கும் மாயாஜாலம்! கீழே இறங்கியதும் காரே நமக்கு வழி காட்டும்! எப்படினு தெரியுமா?

இந்த வசதியின் மூலம் 10 முதல் 15 வினாடிகள் வரை ஹெட்லைட்கள் தொடர்ந்து எரியும் என்பதால் உங்களுக்கு வெளிச்சமின்மை போன்ற சிரமங்கள் ஏற்படாது. இல்லாவிட்டால் செல்போன் டார்ச் வெளிச்சத்தில் நீங்கள் செல்ல வேண்டியிருக்கும். ஆனால் செல்போன் டார்ச் மூலம் கிடைக்கும் வெளிச்சம் குறைவாகவே இருக்கும். அதுவும் கையில் செல்போன் இல்லாவிட்டால் இன்னும் சிரமம்தான்.

விலை குறைவான மாடல்களில் கூட நடக்கும் மாயாஜாலம்! கீழே இறங்கியதும் காரே நமக்கு வழி காட்டும்! எப்படினு தெரியுமா?

ஆனால் இதுபோன்ற அசௌகரியங்கள் ஏற்படுவதை தவிர்த்து, ஃபாலோ மீ ஹெட்லைட்கள் உங்களுக்கு பாதுகாப்பை வழங்குகின்றன. முன்பெல்லாம் விலை உயர்ந்த கார்களில் மட்டுமே ஃபாலோ மீ ஹெட்லைட்கள் வசதி வழங்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது கிட்டத்தட்ட அனைத்து கார்களிலும் இந்த வசதி வழங்கப்படுகிறது.

விலை குறைவான மாடல்களில் கூட நடக்கும் மாயாஜாலம்! கீழே இறங்கியதும் காரே நமக்கு வழி காட்டும்! எப்படினு தெரியுமா?

அதாவது சாலையில் ஓடும் பட்ஜெட் கார்களில் கூட தற்போது ஃபாலோ மீ ஹோம் ஹெட்லைட்கள் வசதியை காண முடிகிறது. காரின் இக்னீஷன் (Ignition) நிறுத்தப்பட்டு, கதவுகள் மூடப்பட்ட உடன் இந்த வசதி வேலை செய்ய தொடங்கி விடும். காரின் கதவு மூடப்பட்ட பிறகு, இசியூ எனப்படும் எலெக்ட்ரான் கண்ட்ரோல் யூனிட் (ECU - Electronic Control Unit), முன் பக்க ஹெட்லைட்களுக்கு சிக்னலை அனுப்பும்.

விலை குறைவான மாடல்களில் கூட நடக்கும் மாயாஜாலம்! கீழே இறங்கியதும் காரே நமக்கு வழி காட்டும்! எப்படினு தெரியுமா?

இந்த சிக்னல் எலெக்ட்ரிக் பல்ஸ் (Electric Pulse) எனவும் அறியப்படுகிறது. இந்த செயல்முறையின் மூலம் ஃபாலோ மீ ஹோம் ஹெட்லைட்கள் வசதி தூண்டப்படும். அதாவது 10 முதல் 15 வினாடிகள் வரை முன் பக்க ஹெட்லைட்கள் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும். இதன்பின் பயிற்சியளிக்கப்பட்ட ப்ரோக்ராம் (Program) அல்லது மைக்ரோப்ராஸஸர் (Microprocessor) மூலம் ஹெட்லைட்கள் 'ஆஃப்' ஆகி விடும்.

விலை குறைவான மாடல்களில் கூட நடக்கும் மாயாஜாலம்! கீழே இறங்கியதும் காரே நமக்கு வழி காட்டும்! எப்படினு தெரியுமா?

நாங்கள் ஏற்கனவே கூறியபடி இந்த மிக முக்கியமான பாதுகாப்பு வசதி தற்போது விலை குறைவான கார்களிலும் பொதுவான ஒரு அம்சமாக மாறி விட்டது. இருட்டான இடங்களிலும் உங்களுக்கு பாதையை காட்டுகிறது என்பதால், அனைத்து கார்களிலும் ஃபாலோ மீ ஹோம் ஹெட்லைட்கள் இருப்பது மிகவும் அவசியமாகிறது.

விலை குறைவான மாடல்களில் கூட நடக்கும் மாயாஜாலம்! கீழே இறங்கியதும் காரே நமக்கு வழி காட்டும்! எப்படினு தெரியுமா?

ஃபாலோ மீ ஹோம் ஹெட்லைட்கள் தொடர்பான உங்கள் சந்தேகங்கள் தற்போது நிவர்த்தியாகி இருக்கும் என நம்புகிறோம். நீங்கள் புதிதாக கார் வாங்குவதாக இருந்தால், ஃபாலோ மீ ஹோம் ஹெட்லைட்கள் வசதி உள்ளதா? என்பதை பார்த்து வாங்குங்கள். இந்த தகவல்கள் பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களுக்கும் பகிருங்கள்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Everything you need to know about follow me home headlights
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X