இந்தியாவில் களமிறங்கும் சீனாவின் எலக்ட்ரிக் ரிக்‌ஷா... எப்படியுள்ளது பார்த்தீர்களா...

இந்திய பேட்டரி தயாரிப்பு நிறுவனமான எக்ஸிடே இண்டஸ்ட்ரீஸ் நியோ எலக்ட்ரிக் ரிக்‌ஷா என்கிற மூன்று சக்கர வாகனத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது. இதன் முதற்கட்டமாக மேற்கு வங்காளம், உத்தரபிரதேசம் உள்பட வடக்கிழக்கு மாநிலங்களில் இந்த ரிக்‌ஷாவை விற்பனைக்கு கொண்டுவரவுள்ளது.

இந்தியாவில் களமிறங்கும் சீனாவின் எலக்ட்ரிக் ரிக்‌ஷா... எப்படியுள்ளது பார்த்தீர்களா...

வடக்கிழக்கு மாநிலங்களில் முதலில் விற்பனையை தொடங்குவதற்கு முக்கிய காரணம், அம்மாநிலங்களை ஒட்டியுள்ள சீனாவில் தான் இத்தகைய எலக்ட்ரிக் ரிக்‌ஷாக்களின் தொழிற்சாலைகளை எக்ஸிடே நிறுவனம் நிறுவியுள்ளது. மேலும் இந்த ரிக்‌ஷாக்களின் தொழிற்சாலைகளை இன்னும் சில நாட்களில் இந்தியாவில் தொடங்கவும் இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் களமிறங்கும் சீனாவின் எலக்ட்ரிக் ரிக்‌ஷா... எப்படியுள்ளது பார்த்தீர்களா...

தற்சமயம் சீனாவில் தயாரிக்கப்படும் இந்த ரிக்‌ஷாக்களுக்கு 15-20 சதவீத தயாரிப்பு பொருட்கள் இந்தியாவில் இருந்து தான் கொண்டு செல்லப்படுகின்றன. இந்த இந்திய அறிமுகம் குறித்து எக்ஸிடே இண்டஸ்ட்ரீஸின் எம்டி மற்றும் சிஇஓ கௌதம் சாட்டர்ஜி கூறுகையில், கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் எலக்ட்ரிக் ரிக்‌ஷாக்களின் விற்பனை ஆச்சர்யப்படத்தக்க வகையில் முன்னேற்றம் கண்டுள்ளது.

நாங்கள் இத்தகைய எலக்ட்ரிக் ரிக்‌ஷாக்களை தயாரிக்க துவங்கியதில் இருந்தே அடர்த்தியான ஈயம்-அமிலம் கலவையால் தான் பேட்டரியை தான் அதில் பயன்படுத்தி வருகிறோம். ஆனால் தற்போது இந்த பேட்டரியுடன் நவீன தொழிற்நுட்பத்தை சேர்த்து பயன்படுத்த தீர்மானித்துள்ளோம். இதனால் பேட்டரியின் சார்ஜ் காலத்தை அதிகரிக்கலாம் என கூறினார்.

இந்தியாவில் களமிறங்கும் சீனாவின் எலக்ட்ரிக் ரிக்‌ஷா... எப்படியுள்ளது பார்த்தீர்களா...

இந்தியாவில் இந்த நியோ எலக்ட்ரிக் ரிக்‌ஷாக்களை தயாரிக்கும் தொழிற்சாலை விரைவில் கொல்கத்தாவிற்கு அருகேயுள்ள டன்குனி ப்ளான்ட்டில் துவங்கவுள்ளது. இந்த தொழிற்சாலையின் மூலம் ஒரு வருடத்திற்கு சுமார் 15,000 யூனிட் எலக்ட்ரிக் ரிக்‌ஷாக்களை தயாரிக்க முடியுமாம்.

இந்தியாவில் களமிறங்கும் சீனாவின் எலக்ட்ரிக் ரிக்‌ஷா... எப்படியுள்ளது பார்த்தீர்களா...

இந்த தொழிற்சாலையில் தயாரிக்கப்படவுள்ள ரிக்‌ஷாக்களின் பேட்டரி குறித்த தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை. நமக்கு தெரிந்த வகையில், இந்த பேட்டரி லித்தியம்-இரும்பு கலவையில் தான் தயாரிக்கப்படும். எக்ஸிடே நிறுவனம் இந்த எலக்ட்ரிக் ரிக்‌ஷாக்களுக்கு சுலப மாத தவணையின் மூலம் எளிய வகையில் ரிக்‌ஷாக்களுக்கு உரிமையாளர் ஆகும் திட்டத்தையும் அறிமுகப்படுத்தவுள்ளது.

இந்தியாவில் களமிறங்கும் சீனாவின் எலக்ட்ரிக் ரிக்‌ஷா... எப்படியுள்ளது பார்த்தீர்களா...

இத்தகைய ரிக்‌ஷாக்களில் பின்புறத்தில் நடக்கும் விஷயங்களை பார்பதற்கு கேமிராவையும் பாதுகாப்பிற்காக வழங்கப்பட்டுள்ளது. இதற்கு கூடுதலாக கண்ணாடி இருந்தாலும் எல்சிடி திரையுடன் கூடிய கேமிராவையும் கூடுதல் அம்சமாக எக்ஸிடே நிறுவனம் வழங்கியுள்ளது.

Most Read:தமிழகத்தின் இந்த நகரங்களை சேர்ந்தவர்கள் இனி ஆம்பியர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை எளிதாக வாங்கலாம்!

இந்த சிறப்பம்சத்துடன் எல்சிடி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், எஃப்எம் ரேடியோ டிரான்ஸ்மிட்டர், மொபைல் போனை சார்ஜ் செய்வதற்காக யூஎஸ்பி போன்ற தொழிற்நுட்பங்களும் வழங்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு விஷயங்களாக, உயர்தர இரும்பால் உருவாக்கப்பட்ட ரிக்‌ஷாவின் முன்புறம், வலுமையான ஏபிஎஸ் ரூஃப் அமைப்பு போன்றவை உள்ளன.

இந்தியாவில் களமிறங்கும் சீனாவின் எலக்ட்ரிக் ரிக்‌ஷா... எப்படியுள்ளது பார்த்தீர்களா...

எக்ஸிடே இண்டஸ்ட்ரீஸின் இயக்குனர் அருண் மிட்டால் இதுபற்றி கூறுகையில், எங்களது எலக்ட்ரிக் ரிக்‌ஷா தயாரிக்கும் கம்பெனியில் உள்ள இ-ரிக்‌ஷா ஆப்ரேட்டர்ஸ் பல ஆண்டுகளாக எங்களுடன் பணியாற்றி வருகின்றனர். அவர்களின் அறிவுரையின்படியே இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற வகையில் இந்த இ-ரிக்‌ஷாக்கள் தயாரிக்கப்படவுள்ளன.

இந்த ரிக்‌ஷாக்களில் உள்ள பின்புறத்தை பார்க்கும் வகையிலான கேமிரா, எல்சிடி இன்ஸ்ட்ருமெண்ட் அமைப்பு மற்றும் பாதுகாப்பிற்காக கொடுக்கப்பட்டுள்ள ஏபிஎஸ் ரூஃப், ரிக்‌ஷாவின் முன்புற பகுதியை தயாரிக்க பயன்படும் உயர்தர இரும்பு போன்றவை முழுக்க முழுக்க எக்ஸிடே நியோ நிறுவனத்தால் தான் தயாரிக்கப்படுகிறது என கூறினார்.

Most Read:எம்ஜி ஹெக்டர் காரை வாங்கிய பிரபல பழம் பெரும் நடிகை... யார் என தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

இந்தியாவில் களமிறங்கும் சீனாவின் எலக்ட்ரிக் ரிக்‌ஷா... எப்படியுள்ளது பார்த்தீர்களா...

மூன்று சக்கர வாகன ரிக்‌ஷாவில் இத்தனை அம்சங்களை முதன்முதலாக பொருத்தியுள்ள நிறுவனம் எக்ஸிடே நிறுவனம் தான். இந்தியா சிறுக சிறுக பெட்ரோல் இயக்கத்தில் இருந்து சுற்றுசூழலுக்கு ஏற்ற வகையில் பசுமை வாகனத்திற்கு மாறி வருகிறது. எக்ஸிடே நிறுவனத்தை போல் மேலும் பல நிறுவனங்களும் தங்களது எலக்ட்ரிக் வாகனங்கள் மூலம் இவி ஆட்டோமொபைல் மார்கெட்டிற்கு மாறி வருகின்றன என்பது நல்ல விஷயமே.

Most Read Articles

English summary
Exide Neo Electric Rickshaw Unveiled In India: Will Feature Rear-View Camera
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X