இமயமலை பைக் பயணத்திற்கு தயாரானபோது... உங்களுக்கும் பயன்படும்!!

இமயமலையில் பைக் பயணம் என்பது பலருக்கும் கனவாக இருந்து வருகிறது. ஆனாலும், அதிக பொருட்செலவு, கால அவகாசம், உடல்நிலை போன்ற காரணங்களில் பலருக்கும் இந்த பயணம் கைகூடுவதில்லை. இந்தநிலையில், சிறு வயது முதலே பைக்குகள் மீது தீராத காதல் கொண்டிருக்கும் டிரைஸ்பார்க் எடிட்டர் ஜோபோ குருவில்லாவும் பைக் பயண விரும்பிதான். அவரது கனவு நனவாகியுள்ளது.

வாழ்நாள் சாதனையாக பைக் பிரியர்களால் கருதப்படும், இந்த பயணத்திற்காக ஜோபோ குருவில்லா மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து தயாரான விதம் குறித்த தகவல்களை இங்கே வழங்கியிருக்கிறோம். இது இமயமலை பைக் பயணம் செல்ல விரும்புவோர் மற்றும் தயாராகி வருவோர்க்கு பயனுள்ளதாக அமையும் என நம்புகிறோம்.

பயணக் குழு...

பயணக் குழு...

இந்த பைக் பயணத்தில் ஜோபோ குருவில்லா மற்றும் கத்தார் நாட்டில் பணிபுரிந்து வரும் ஜார்ஜி மேத்யூ மற்றும் வினோத் ஈசவ் ஆகியோர் உடன் பயணிக்கின்றனர். இவர்கள் கூடுதல் சிறப்பம்சங்களுடன் மாறுதல்கள் செய்யப்பட்ட இரண்டு கேடிஎம் டியூக் 390 பைக்குகளிலும், யமஹா ஃபேஸர் பைக்குகளிலும் சென்றுள்ளனர். அத்துடன், ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு 500 மோட்டார்சைக்கிள்களில் மனூஜ் மற்றும் மற்றொரு வினோத் செல்கின்றனர்.

உதவிக் குழு...

உதவிக் குழு...

இவர்களுக்கு உறுதுணையாகவும், பைக்குகளுக்கு தேவையான கூடுதல் எரிபொருள் மற்றும் கூடாரம், உணவுப் பொருட்களுடன் நார்த் பை நார்த்ஈஸ்ட் பயண ஏற்பாட்டு நிறுவனத்தின் ரோஹின் பிரவுனி மற்றும் எழில் வசந்தன் ஆகியோர் பிக்கப் டிரக்கில் பயணிக்கின்றனர். இவர்கள் இருவரும் இமயமலை பைக் பயணத்தில் நிரம்பிய அனுபவம் வாய்ந்தவர்களாவர்.

 கேடிஎம் டியூக் 390...

கேடிஎம் டியூக் 390...

இமயமலையின் மோசமான சாலைகளை எதிர்கொள்ளும் விதத்தில், ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே சிறு சிறு மாறுதல்கள் மற்றும் கூடுதல் ஆக்சஸெரீகளுடன் இரண்டு கேடிஎம் டியூக் 390 பைக்குகள் தயாராகின. இந்த பைக்குகளுக்கான ஆக்சஸெரீகள் Big Bad Bikes.com மற்றும் பெங்களூரில் இயங்கி வரும் Sean என்ற பைக் ஆக்சஸெரீ விற்பனை நிலையத்திலிருந்தும் வாங்கப்பட்டன.

முன்புற டயர்

முன்புற டயர்

கேடிஎம் டியூக் 390 பைக்குகளில் ஆஃப்ரோடு டயர்கள் மாற்றப்பட்டன. இரண்டு கேடிஎம் டியூக் 390 பைக்குகளின் முன்புறத்தில் மிச்செலின் சிராக் 100/90/17 ட்யூப்லெஸ் டயர் பொருத்தப்பட்டிருக்கிறது. பின்புற டயர் விபரம் அடுத்த ஸ்லைடில்...

 பின்புற டயர்

பின்புற டயர்

பின்புறத்திலும் எம்ஆர்எஃப் மோக்ரிப் மீட்டியோர் 120/80/17 டியூப்லெஸ் டயர் மாற்றப்பட்டது.. இதில், முன்புற டயர் ரூ.2,400 விலையில் வாங்கப்பட்டது. பின்புற டயர் ரூ.2,700 விலையில் ஸ்நாப்டீல் தளத்தில் ஆர்டர் செய்யப்பட்டு வாங்கப்பட்டது.

குறிப்பு: ட்யூப்ட்யூப்லெஸ் டயர்கள் கொண்ட மாடலில் ட்யூப் டயர்களை பொருத்துவது பரிந்துரைக்க இயலாது என்பதை நினைவில் கொள்க.

ட்யூப் சீலன்ட்

ட்யூப் சீலன்ட்

டயர்களை பஞ்சரிலிருந்தும், சிறு கற்களின் பாதிப்புகளிலிருந்து தவிர்க்க உதவும் ஸ்லிம் பஞ்சர் சீலண்ட் ரூ.1,100 விலையில் வாங்கி எடுத்துச் சென்றனர்.

நேவிகேஷன் சாதனம்

நேவிகேஷன் சாதனம்

SW Motech ஆக்சஸெரீகள் விற்பனை நிலையத்திலிருந்து நேவிகேஷன் சாதனம் வாங்கப்பட்டது. இந்த நேவிகேஷன் சாதனத்தை சொந்த முயற்சியிலேயே பொருத்தினர். மேலும், அங்கு பயன்படுத்துவதற்கான முழு காலணிகள் Decathlon தளத்தில் ஆர்டர் செய்து வாங்கப்பட்டது. மேலும், நீரோடைகளை கடக்கும்போது சாதாரண காலணிகளே சிறந்தது என்பதால், அதுவும் ஒரு ஜோடி கைவசம் எடுத்துச் சென்றுள்ளனர்.

 ஏர்ஹாக் இருக்கை

ஏர்ஹாக் இருக்கை

மோட்டார்சைக்கிளில் அதிக நாட்கள் ஓட்டுவதற்கு ஏதுவாகவும், சொகுசான உணர்வையும் தரும் ஏர்ஹாக் இருக்கைகளும் வாங்கி பயன்படுத்துகின்றனர். இதனை BigdaddyBikes.com என்ற தளத்திலிருந்து ஆர்டர் செய்து வாங்கினர்.

எல்இடி ப்ளாஷ் லைட்

எல்இடி ப்ளாஷ் லைட்

இரவில் அதிக பிரகாசமான ஒளி வெள்ளத்தை வழங்கும் டெனாலி டி4 பிராண்டின் எல்இடி ப்ளாஷ்லைட்டுகளும் இந்த கேடிஎம் டியூக் 390 பைக்குகளில் பொருத்தப்பட்டு இருக்கின்றன. அத்துடன் மொபைல்சார்ஜர், டார்ச்லைட் போன்றவையும் சேர்த்து வாங்கினர்.

ஆக்சிஜன் சிலிண்டர்

ஆக்சிஜன் சிலிண்டர்

அதிக உயரமான மலைப் பிரதேசங்களில் ஆக்சிஜன் குறைபாடு இருக்கும் என்பதை மனதில் கொண்டு, O2 Pure பிராண்டின் 2.2 லிட்டர் கலன் கொண்ட ஆக்சிஜன் சிலிண்டரும் வாங்கினர்.

பைக்குகளில் சோதனை

பைக்குகளில் சோதனை

ஆக்சஸெரீகள் அனைத்தும் பொருத்திய பின்னர், பெங்களூரிலிருந்து மைசூர் வரை சென்று பைக்குகளின் செயல்திறன் பரிசோதிக்கப்பட்டது. அத்துடன், ஹெட்லைட் ஒளி மற்றும் மைலேஜ் ஆகியவையும் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது, ஒருமுறை முழுமையாக பெட்ரோல் நிரப்பி சென்று சோதனை செய்ததில், கேடிஎம் டியூக் 390 பைக் 220 கிமீ வரை சென்றது.

இதர முக்கிய அம்சங்கள்

இதர முக்கிய அம்சங்கள்

பயணத்திற்கு தேவையான உடைகள், பாதுகாப்பு உபகரணங்களுக்கான பிரத்யேக பைகள் மற்றும் உணவுப் பொருட்கள் என அனைத்து பொருட்களுடன் தயாராகினர். மேலும், செல்லும் வழியில் பள்ளி மாணவர்களுக்கான பேனா உள்ளிட்ட பரிசுப் பொருட்களும் வாங்கி தங்களது ஷாப்பிங்கை நிறைவு செய்தனர்.

 எரிபொருள்

எரிபொருள்

இமயமலையில் செல்லும்போது வழியில் பெட்ரோல் நிலையங்களின் எண்ணிக்கை குறைவு என்பதால், உதவிக்கு வந்த ஜீப்பில் 150 லிட்டர் பெட்ரோல் கொண்ட பேரலும் எடுத்து வரப்பட்டது.

 சிரமம்

சிரமம்

அதிக ஆச்ஸெரீகள் பொருத்தப்பட்ட இந்த பைக்குகள் பாதுகாப்பாக கவர் செய்யப்பட்டு ரயில் மூலமாக டெல்லி எடுத்துச் செல்லப்பட்டது. அங்கிருந்து பயணத்தை துவங்கினர்.

ஆவணங்கள்

ஆவணங்கள்

பைக் மற்றும் ஓட்டுனர் உரிமங்கள் அவசியம். அத்துடன், நண்பர் அல்லது வாடகை மோட்டார்சைக்கிள் என்றால், உரிமையாளரிடம் கைப்பட எழுதி ஒப்பம் இட்ட கடிதமும் எடுத்துச் செல்ல வேண்டும்.

வழித்தடம்

வழித்தடம்

டெல்லியிலிருந்து சண்டிகர், சிம்லா மற்றும் ஸ்பித்தி பள்ளத்தாக்கு வழியாக லே பகுதியை சென்றடையும் வகையில் பயணத் திட்டத்தை வகுத்து தற்போது பயணத்தில் உள்ளனர். ஆஃப்ரோடு, நீரோடைகள் என சாகச அனுபவத்திற்கு பஞ்சமில்லாத இந்த வழித்தடத்தில் பயணம் சென்று கொண்டிருக்கிறது. பயண அனுபவம் குறித்த பிரத்யேக செய்தித் தொகுப்பை விரைவில் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் படிக்கலாம்.

பயணம் தொடரும்...

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
The Himalayas are calling and Drivespark is answering that call, which can be heard only by people with adventure fused in their DNA. And such DNA is very much present as Jobo Kuruvilla-Chief Editor, DriveSpark has geared up to head to the mountains on a motorcycle.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X