நீங்கள் அபராதம் கட்டி கொண்டிருப்பது உண்மையான போலீஸிடம்தானா? நடப்பது தெரிந்தால் அதிர்ந்து விடுவீர்கள்

அரசியல்வாதிகள், காவல் துறை ஆதரவுடன் களமிறங்கியுள்ள கும்பல் ஒன்று வாகன ஓட்டிகளிடம் இருந்து மிக நூதன முறையில் பணம் பறித்து வருகிறது. அவர்களிடம் இருந்து நீங்கள் தப்பிக்க இந்த செய்தி உதவும் என நம்புகிறோம்.

நீங்கள் அபராதம் கட்டி கொண்டிருப்பது உண்மையான போலீஸிடம்தானா? நடப்பது தெரிந்தால் அதிர்ந்து விடுவீர்கள்

இந்திய சாலைகளில் நீங்கள் பாதுகாப்பாக வாகனங்களை இயக்கி விட்டால், உங்களால் உலகின் வேறு எந்த பகுதியிலும் மிக எளிதாக வாகனம் ஓட்ட முடியும். இதை நாங்கள் வேடிக்கைக்காக சொல்லவில்லை. இதில், உண்மை இருக்கிறது. மிகவும் அபாயகரமான இந்திய சாலைகளில் வாகனங்களை ஓட்டுவது என்பது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது.

நீங்கள் அபராதம் கட்டி கொண்டிருப்பது உண்மையான போலீஸிடம்தானா? நடப்பது தெரிந்தால் அதிர்ந்து விடுவீர்கள்

இந்தியாவில் பெரும்பாலான வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிப்பது கிடையாது. அவர்களில் பலர் குடிபோதையில் வாகனங்களை ஓட்டுகின்றனர். இன்னும் சிலர் செல்போனில் பேசியபடி வாகனங்களை இயக்குகின்றனர். எனவே நீங்கள் போக்குவரத்து விதிமுறைகளை முறையாக மதித்து வாகனம் இயக்கினாலும், மற்றவர்களால் உங்களுக்கு பாதிப்பு ஏற்படலாம்.

நீங்கள் அபராதம் கட்டி கொண்டிருப்பது உண்மையான போலீஸிடம்தானா? நடப்பது தெரிந்தால் அதிர்ந்து விடுவீர்கள்

இதுதவிர இங்கே ஆடு, மாடு, நாய் போன்ற கால்நடைகள் வேறு திடீர் திடீரென குறுக்கே வரும். அத்துடன் பாதசாரிகளும் திடீர் திடீரென உங்கள் வாகனங்களின் குறுக்கே வருவார்கள். இதை எல்லாம் சமாளித்து இந்திய சாலைகளில் பாதுகாப்பாக வாகனங்களை ஓட்டுவது என்பது உண்மையில் மிகவும் சவாலான காரியம்தான்.

நீங்கள் அபராதம் கட்டி கொண்டிருப்பது உண்மையான போலீஸிடம்தானா? நடப்பது தெரிந்தால் அதிர்ந்து விடுவீர்கள்

இந்தியாவில் வாகன ஓட்டிகளுக்கு இவ்வாறு பல்வேறு அச்சுறுத்தல்கள் இருக்கும் நிலையில், தற்போது மெகா மோசடி ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. காவல் துறை என்ற போர்வையில் வாகன ஓட்டிகளிடம் இருந்து பணம் கறக்க கும்பல் ஒன்று களமிறங்கியுள்ளது. இதன் பின்னணி தகவல்களும், பணம் கறக்க அவர்கள் கையாளும் முறைகளும் மிகவும் அதிர்ச்சிகரமாக உள்ளன.

நீங்கள் அபராதம் கட்டி கொண்டிருப்பது உண்மையான போலீஸிடம்தானா? நடப்பது தெரிந்தால் அதிர்ந்து விடுவீர்கள்

'நோ பார்க்கிங்' ஏரியாவில் வாகனங்களை நிறுத்துபவர்களை குறி வைத்து தற்போது ஒரு மோசடி கும்பல் களத்தில் இறங்கியுள்ளது. அந்த கும்பலை சேர்ந்தவர்கள் வீல் ஜாமர்களுடன் (Wheel Jammers) உலாவி வருகின்றனர். 'நோ பார்க்கிங்' பகுதியில் ஏதேனும் வாகனம் நிறுத்தப்பட்டிருந்தால், வீல் ஜாமர் மூலம் சம்பந்தப்பட்ட வாகனங்களை 'லாக்' செய்வது அவர்களின் வாடிக்கையாக உள்ளது.

நீங்கள் அபராதம் கட்டி கொண்டிருப்பது உண்மையான போலீஸிடம்தானா? நடப்பது தெரிந்தால் அதிர்ந்து விடுவீர்கள்

அத்துடன் ஒரு சீட்டில் தங்கள் செல்போன் எண்ணை எழுதி, அதனை அந்த வாகனத்தின் விண்டுஷீல்டில் ஒட்டி விட்டு சென்று விடுகின்றனர். இதன்பின் வாகனத்தின் உரிமையாளர் திரும்பி வரும்போது, தங்கள் வாகனம் பூட்டப்பட்டிருப்பதை கண்டு அவர்கள் அதிர்ச்சியடைய நேரிடுகிறது. எனவே விண்டுஷீல்டில் ஒட்டப்பட்டிருக்கும் செல்போன் எண்ணை அவர்கள் தொடர்பு கொள்கின்றனர்.

நீங்கள் அபராதம் கட்டி கொண்டிருப்பது உண்மையான போலீஸிடம்தானா? நடப்பது தெரிந்தால் அதிர்ந்து விடுவீர்கள்

அப்போது அந்த கும்பல் ஸ்பாட்டிற்கு வந்து வாகனத்தின் உரிமையாளரை மிரட்டுகிறது. லைசென்ஸ் மற்றும் இதர முக்கிய ஆவணங்களை கேட்டு வாகன உரிமையாளர்கள் மிரட்டப்படுகின்றனர். இதில், முக்கியமான விஷயம் என்னவென்றால், அந்த கும்பலை சேர்ந்தவர்கள் தங்களை போலீஸ் போல் காட்டி கொள்கின்றனர்.

நீங்கள் அபராதம் கட்டி கொண்டிருப்பது உண்மையான போலீஸிடம்தானா? நடப்பது தெரிந்தால் அதிர்ந்து விடுவீர்கள்

வாகன உரிமையாளர்கள் நம்ப வேண்டும் என்பதற்காக, தாங்கள் அணிந்திருக்கும் சட்டையின் மீது டீ-சர்ட் ஒன்றை அவர்கள் அணிந்து கொள்கின்றனர். இதில், ''ஆன்-ட்யூட்டி டிராபிக் போலீஸ்'' என எழுதப்பட்டுள்ளது. எனவே இதனை பார்த்து வாகன உரிமையாளர்கள் பயந்து விடுகின்றனர். அத்துடன் அவர்கள் கேட்கும் பணத்தையும் கொடுத்து விடுகின்றனர்.

நீங்கள் அபராதம் கட்டி கொண்டிருப்பது உண்மையான போலீஸிடம்தானா? நடப்பது தெரிந்தால் அதிர்ந்து விடுவீர்கள்

ஆனால் உண்மையில் அவர்கள் காவல் துறையை சேர்ந்தவர்கள் கிடையாது. அவர்கள் வாகன ஓட்டிகளிடம் இருந்து பணம் பறிக்கும் மோசடி கும்பலை சேர்ந்தவர்கள். அதாவது போலீ போலீஸ். ஆனால் வாகன உரிமையாளர்கள் யாரேனும் சந்தேகம் அடைந்து, பணம் தர மறுத்தால் அவர்கள் உண்மையான போக்குவரத்து போலீசாரை சம்பவ இடத்திற்கு வரவழைத்து விடுவதாக கூறப்படுகிறது.

நீங்கள் அபராதம் கட்டி கொண்டிருப்பது உண்மையான போலீஸிடம்தானா? நடப்பது தெரிந்தால் அதிர்ந்து விடுவீர்கள்

நிலைமை தங்கள் கையை மீறி சென்று விட்டால், உண்மையான போலீசாரிடம் வாகன உரிமையாளர்களை அவர்கள் சிக்க வைத்து விடுகின்றனர். இந்த கும்பல் வாகன உரிமையாளர்களை இவ்வளவு துணிச்சலாக மிரட்டி பணம் பறிப்பது எப்படி? என்ற சந்தேகம் இயல்பாகவே எழுகிறது. எனவே இதன் பின்னணியில் அரசியல்வாதிகள், போலீசாரின் பங்கு இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

நீங்கள் அபராதம் கட்டி கொண்டிருப்பது உண்மையான போலீஸிடம்தானா? நடப்பது தெரிந்தால் அதிர்ந்து விடுவீர்கள்

இந்த புது விதமான மோசடியால் வாகன உரிமையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த அதிர்ச்சிகரமான சம்பவங்கள் குறித்து Our Ghodbunder Road என்ற பேஸ்புக் குழுவில் பதிவிடப்பட்டுள்ளது. மஹாராஷ்டிரா மாநிலம் தானே நகரில் இந்த சம்பவங்கள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீங்கள் அபராதம் கட்டி கொண்டிருப்பது உண்மையான போலீஸிடம்தானா? நடப்பது தெரிந்தால் அதிர்ந்து விடுவீர்கள்

இதுபோன்ற மோசடிகளில் இருந்து தப்ப வேண்டும் என்றால், எங்கள் வாசகர்களுக்கு சில விஷயங்களை கூற நாங்கள்கடமைப்பட்டுள்ளோம். பணம் கறக்கும் நோக்கத்துடன் உங்களை யாராவது அணுகினால், அவர்கள் மீது உங்களுக்கு சந்தேகம் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தை உதவிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

நீங்கள் அபராதம் கட்டி கொண்டிருப்பது உண்மையான போலீஸிடம்தானா? நடப்பது தெரிந்தால் அதிர்ந்து விடுவீர்கள்

அதே சமயம் 'நோ பார்க்கிங்' பகுதிகளில் எக்காரணத்தை கொண்டும் உங்கள் வாகனங்களை நிறுத்தாதீர்கள். அத்துடன் போக்குவரத்து விதிகள் அனைத்தையும் முறையாக பின்பற்றுங்கள். இதை நீங்கள் செய்தாலே இதுபோன்ற மோசடிகளில் இருந்து தப்பி விட முடியும். அத்துடன் சாலை விபத்துக்களில் இருந்தும் இது உங்களை பாதுகாக்கும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Fake Traffic Wardens Putting Jammers On Vehicles Parked In No Parking Zones. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X