29ம் தேதி வரை ஃபாஸ்ட்டேக் இலவசம்... தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிரடி...!

மின்னணு பண பரிவார்த்தனையை ஊக்குவிக்கும் விதமாக வருகின்ற 29ம் தேதி வரை ஃபாஸ்ட்டேக்கை கட்டணமில்லாமல் வழங்கவிருப்பதாக தேசிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

29ம் தேதி வரை ஃபாஸ்ட்டேக் இலவசம்... தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிரடி...!

சுங்கச் சாவடிகளில் கட்டணம் செலுத்த ஃபாஸ்ட் டேக் திட்டத்தை கட்டாயம் என மத்திய அரசு கடந்த 2019ம் ஆண்டு அறிவித்தது. இருப்பினும், பல காலக்கெடுக்கள் அளிக்கப்பட்டு நடப்பாண்டின் தொடக்கத்திலேயே (2020) அது முழுமையாக நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது.

29ம் தேதி வரை ஃபாஸ்ட்டேக் இலவசம்... தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிரடி...!

இதைத்தொடர்ந்து, தற்போது இந்த ஃபாஸ்ட்டேக்கின் பயன்பாட்டை ஊக்குவிக்கின்றன வகையிலான முயற்சிகளை தேசிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் மேற்கொண்டு வருகின்றது.

குறிப்பாக, ஃபாஸ்ட் டேக்கின் மூலம் மின்னணு பண பரிவார்த்தனையை ஊக்குவிக்கும் விதமாக வாகன ஓட்டிகளுக்கு குறிப்பிட்ட சலுகைகளை வழங்க அது திட்டமிட்டிருக்கின்றது.

29ம் தேதி வரை ஃபாஸ்ட்டேக் இலவசம்... தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிரடி...!

அதன்படி, இன்னும் ஃபாஸ்ட்டேக்கை பயன்படுத்த ஆரம்பிக்காத வாகன ஓட்டிகளை கவர்வதற்காக கட்டணில்லா ஃபாஸ்ட்டேக்கை வழங்க இருக்கின்றது. இதனை, குறிப்பிட்ட அங்கீகரிக்கப்பட்ட விற்பனை மையங்கள் மூலம் வாகன வழங்க இருப்பதாக தேசிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் கூறியிருக்கின்றது.

29ம் தேதி வரை ஃபாஸ்ட்டேக் இலவசம்... தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிரடி...!

இதற்கு வாகன ஓட்டிகள் ஆர்சி புத்தகத்தை மட்டுமே சான்றாக காண்பித்தால் போதும் என கூறப்பட்டுள்ளது. இந்த சலுகையை வருகின்ற 29ம் தேதி வரை வழங்க அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இத்திட்டம் நேற்று (பிப்ரவரி 12) முதல் நடைமுறையில் இருப்பது குறிப்பிடத்தகுந்தது.

29ம் தேதி வரை ஃபாஸ்ட்டேக் இலவசம்... தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிரடி...!

இத்துடன், ரூ. 100 வரையிலான ஃபாஸ்ட்டேக் கட்டணத்தை சலுகையாக வழங்க இருப்பதாக தேசிய நெடுஞ்சாலைத்துறை தெரிவித்துள்ளது. இச்சலுகை வருகின்ற பிப்ரவரி 15ம் தேதி முதல் 29ம் தேதி வரை மட்டுமே கிடைக்கும்.

29ம் தேதி வரை ஃபாஸ்ட்டேக் இலவசம்... தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிரடி...!

தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டோல் பிளாசாக்கள், ஆர்டிஓ அலுவலகங்கள், பொது சேவை மையங்கள், போக்குவரத்து மையங்கள் மற்றும் எரிபொருள் நிலையங்கள் உள்ளிட்ட ஒரு சில இடங்களில் மட்டுமே ஃபாஸ்ட்டேக் தற்போது விற்பனைக்குக் கிடைக்கின்றது.

29ம் தேதி வரை ஃபாஸ்ட்டேக் இலவசம்... தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிரடி...!

இதுபோன்ற இடத்திலேயே கட்டணில்லா இலவச ஃபாஸ்ட்டேக்குகள் வழங்கப்பட உள்ளன. இந்த ஃபாஸ்ட்டேக்குகள் ரொக்கமில்லா பண பரிவார்த்தனைச் செய்ய உதவும்.

ஆகையால், டோல் பிளாசாக்களில் காத்திருப்பு நேரம் குறையும் என்ற அதீத நம்பிக்கையில் ஃபாஸ்ட்டேக் திட்டத்தை மத்திய அரசு கட்டாயப்படுத்தும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகின்றது.

29ம் தேதி வரை ஃபாஸ்ட்டேக் இலவசம்... தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிரடி...!

ஆனால், இந்த ஃபாஸ்ட்டேக் பயன்பாட்டிற்கு வந்தும் டோல்பிளாசாக்களில் நிலவும் வாகன நெரிசல் குறையவில்லை என அதன் பயனர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதனை நிரூபிக்கும் வகையில் பல்வேறு சம்பவங்கள் நாள்தோறும் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கின்றன.

29ம் தேதி வரை ஃபாஸ்ட்டேக் இலவசம்... தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிரடி...!

குறிப்பாக கட்டணமாக செலுத்தப்பட்டு வந்ததைக் காட்டிலும் ஃபாஸ்ட்டேக் திட்டத்தினால் கட்டணம் செலுத்துவது கூடுதல் நேரத்தை எடுப்பதாக புகார்கள் எழும்பிய வண்ணம் இருக்கின்றது. இதனை மத்திய அரசும் சமீபத்தில் நடைபெற்ற பாராளுமன்ற அமர்வில் ஒப்புக்கொண்டது.

29ம் தேதி வரை ஃபாஸ்ட்டேக் இலவசம்... தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிரடி...!

ஃபாஸ்ட்டேக் திட்டம் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டபோது, அதனை தீவிரமாக கண்கானிக்கும் விதமாக "டோல் பிளாசா டிராபிக் மானிட்டரிங் அமைப்பை உருவாக்கியிருந்தது. தற்போது இந்த அமைப்பு வெளியிட்ட தகவலின்படி, வாகனங்களின் காத்திருப்பு நேரம் உண்மையில் 29 சதவீதம் அதிகரித்திருப்பது உறுதியாகியுள்ளது.

29ம் தேதி வரை ஃபாஸ்ட்டேக் இலவசம்... தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிரடி...!

இதனை ஒட்டுமொத்த டோல் வசூலை வைத்தே கூறப்பட்டுள்ளது. தற்போது, கட்டண வசலில் பாஸ்ட்டேக்கின் பங்களிப்பு 60 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்துள்ளது. இருப்பினும், வாகன நெரிசல் குறைந்தபாடில்லை. இத்தனைக்கும் ஃபாஸ்ட்டேக்கிற்கே பல லேன்கள் உருவாக்கப்பட்டுள்ளன. கட்டணமாக செலுத்த ஒரு லேனே பெரும்பாலான சுங்கச் சாவடிகளில் ஒதுக்கப்பட்டுள்ளது.

29ம் தேதி வரை ஃபாஸ்ட்டேக் இலவசம்... தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிரடி...!

அதிலும், நகரங்களுக்கு மிக அருகில் இருக்கும் டோல்பிளாசாக்களில் மிகவும் அதிகமான நெரிசல் ஏற்படும் சூழலே நிலவுகின்றது. இதனால், வெளி மாநிலங்களுக்கு செல்லும் சரக்கு வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் கடுமையான இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.

இந்த சுங்க கட்டணத்தை வசூலிப்பதற்காக நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின்கீழ் 527க்கும் மேற்பட்ட சுங்கச் சாவடிகள் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
FASTag Free Of Cost. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X