புதிய டோல் கட்டணம் பற்றி டுவிட்டரில் பகீர் புகார் அளித்த இளைஞர்... என்ன ஜி இதுலயும் பல்பா..!

டோல் கட்டணத்திற்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய கட்டண திட்டமும் சரிவர பயனளிக்கவில்லை என இளைஞர் ஒருவர் டுவிட்டரில் புகாரளித்துள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

புதிய டோல் கட்டணம் பற்றி டுவிட்டரில் பகீர் புகார் அளித்த இளைஞர்... என்ன ஜி இதுலயும் பல்பா..!

நாட்டின் அனைத்து முக்கிய நெடுஞ்சாலைகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு வரி என்ற பெயரில் கட்டணை கொள்ளை செய்யப்பட்டு வருகின்றது. முன்னதாக, நேரடியாக பணமாக வசூலிக்கப்பட்டு வந்த கட்டணம் தற்போது ஆன்லைன் வர்த்தகத்திற்கு மாற்றப்பட உள்ளது. இதற்காக, ஃபாஸ்ட் டேக் என்னும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.

புதிய டோல் கட்டணம் பற்றி டுவிட்டரில் பகீர் புகார் அளித்த இளைஞர்... என்ன ஜி இதுலயும் பல்பா..!

ஏற்கனவே, பயன்பாட்டிற்கு வந்துவிட்ட இத்திட்டத்தை கட்டாயம் அனைத்து வாகன ஓட்டிகளும் தங்களின் வாகனங்களிலும் பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், இத்திட்டம் டிசம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வரவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதில் மாற்றம் செய்யப்பட்டு டிசம்பர் 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. பின்னாளில், இந்த தேதியும் மாற்றப்பட்டது.

புதிய டோல் கட்டணம் பற்றி டுவிட்டரில் பகீர் புகார் அளித்த இளைஞர்... என்ன ஜி இதுலயும் பல்பா..!

நேரடியாக பணம் செலுத்துவதில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக அனைத்து தரப்பிலும் புகார்கள் கூறப்பட்டு வந்தநிலையில், இந்த ஃபாஸ்ட் டேக் முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, அரசின் இந்த அறிவிப்பை அடுத்து கோடிக்கணக்கான வாகன ஓட்டிகள் விரைந்து தங்களின் வாகனங்களில் ஃபாஸ்ட் டேக்கை பதிவு செய்ய ஆரம்பித்தனர்.

புதிய டோல் கட்டணம் பற்றி டுவிட்டரில் பகீர் புகார் அளித்த இளைஞர்... என்ன ஜி இதுலயும் பல்பா..!

பிரதமர் மோடி அரசு கொண்டுவந்த பல அதிரடி திட்டங்களில் இந்த ஃபாஸ்ட் டேக் திட்டமும் ஒன்று. ஆனால், இத்திட்டமும் முன்னதாகக் கொண்டுவரப்பட்ட திட்டங்களைப் போன்றே பல்பு வங்கியிருப்பதாக கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

குறிப்பாக, டோல்கேட்டுகளில் அரங்கேறும் முறைகேடுகள் மற்றும் நேர விரயத்திற்கு தீர்வு கட்டும் விதமாகவே, மத்திய அரசு ஃபாஸ்ட்டாக் திட்டத்தினை அறிமுகம் செய்தது.

புதிய டோல் கட்டணம் பற்றி டுவிட்டரில் பகீர் புகார் அளித்த இளைஞர்... என்ன ஜி இதுலயும் பல்பா..!

ஆனால், கர்நாடாக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த ஓர் இளைஞர், ஃபாஸ்ட் டேக் முறை சற்றும் உதவவில்லை என டுவிட்டர் பக்கத்தில் சாடியுள்ளார்.

பெங்களூருவில் அமைந்துள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலயைத்திற்கு சதஹல்லி டோல் பிளாசா வழியாக சென்ற அவர், ஃபாஸ்ட் டாக் மூலமாக பணம் செலுத்த 15 நிமிடங்களுக்கும் மேலாக காத்திருந்ததாக தெரிவித்துள்ளார்.

புதிய டோல் கட்டணம் பற்றி டுவிட்டரில் பகீர் புகார் அளித்த இளைஞர்... என்ன ஜி இதுலயும் பல்பா..!

இதுகுறித்து, விஷ்வேஷ்வர் பாத் என்ற அந்த இளைஞர், அவரது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, "நான் 15 நிமிடங்களுக்கும் மேலாக பெங்களூரு விமான நிலையத்திற்கு முன்பாக உள்ள டோல் கேட்டில் சிக்கி தவித்து வருகின்றேன். நிற்கும் கார்களின் வரிசையைப் பார்த்தால் அது மேலும் 20 நிமிடங்கள் பிடித்துக் கொள்ளலாம் என நினைக்கின்றேன். இதனால், பலர் தங்களின் விமானத்தை தவர நேரிடலாம். குழப்பமான சூழலே இங்கு நிலவுகின்றது. தினந்தோறும் நிகழும் இந்த பிரச்னையை யார் தீர்ப்பார்" என கேள்வியெழுப்பியிருந்தார்.

புதிய டோல் கட்டணம் பற்றி டுவிட்டரில் பகீர் புகார் அளித்த இளைஞர்... என்ன ஜி இதுலயும் பல்பா..!

தொடர்ந்து, கணேஷ் பாத் என்பவரும் இதுகுறித்து டுவிட் செய்திருந்தார். அதில், "விமான நிலையத்தை நோக்கி மற்றும் அங்கிருந்து வரும் பயணிகள் அருகில் உள்ள சதஹல்லி சுங்கச்சாவடியில் நீண்ட நேரம் காத்திருக்கும் சூழல் நிலவுகின்றது. இது விமானத்தை பிடிக்கச் செல்லும் பயணிகளுக்கு நரக உணர்வை ஏற்படுத்துகின்றது. குறைந்தது 45 நிமிடங்கள் காத்திருக்கும் சூழல் காணப்படுகின்று. இதன்மீது தேசிய நெடுஞ்சாலை ஆணையம் விரைவில் இவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என பதிவிட்டிருந்தார்.

புதிய டோல் கட்டணம் பற்றி டுவிட்டரில் பகீர் புகார் அளித்த இளைஞர்... என்ன ஜி இதுலயும் பல்பா..!

ஆனால், வாகன ஓட்டிகளின் இந்த குற்றச்சாட்டிற்கு மறுப்பு தெரிவித்துள்ள அதிகாரிகள், சதஹல்லி டோல் பிளாசாவில் 10 ஹைபிரிட் தடங்கள் இருப்பதாகவும், இதனை கடக்க வெறும் 3 விநாடிகளே போதும் என்றும் கூறியுள்ளனர்.

புதிய டோல் கட்டணம் பற்றி டுவிட்டரில் பகீர் புகார் அளித்த இளைஞர்... என்ன ஜி இதுலயும் பல்பா..!

மேலும், டிசம்பர் 15ம் தேதிக்கு பின்னர் சுங்கச் சாவடிகளில் காத்திருக்கும் நேரம் 3 முதல் 5 நிமிடங்களாக இருப்பதாக தேசிய நெடுஞ்சாலை தகவல் வெளியிட்டுள்ளது. குறிப்பாக ஹொஸ்கோட், நெலமங்களா, ஹர்வல் மற்றும் கண்ணோலே ஆகிய சுங்கச்சாவடிகள் விரைவாக செயல்படுவதாக கூறப்பட்டுள்ளது.

புதிய டோல் கட்டணம் பற்றி டுவிட்டரில் பகீர் புகார் அளித்த இளைஞர்... என்ன ஜி இதுலயும் பல்பா..!

ஆனால், வழிப் போக்கர்களோ முழுக்க முழுக்க இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். மேலும், அவர்கள் குறைந்தது ஒவ்வொரு டோல்பிளாசாக்களிலும் 10 முதல் 15 நிமிடங்கள் வரை காத்திருப்பதாக புகார் தெரிவிக்கின்றனர். அதிலும், சதஹல்லி போன்ற முக்கியமான டோல் பிளாசாக்களில் காத்திருப்பு நேரம் மிக கடுமையானதாக இருப்பதாக புலம்புகின்றனர்.

புதிய டோல் கட்டணம் பற்றி டுவிட்டரில் பகீர் புகார் அளித்த இளைஞர்... என்ன ஜி இதுலயும் பல்பா..!

ஃபாஸ்ட் டேக் என்பது ஸ்கேனிங் மூலம் கட்டணத்தைச் செலுத்தும் ஓர் சிறிய ஸ்டிக்கர். இது வாகனங்களின் வின்ட்ஷீல்ட் பகுதியில் ஒட்டப்படும். செல்போனுக்கு ரீசார்ஜ் செய்வதுபோல் இந்த கார்டின் பிரத்யேக கணக்கிற்கு ரீசார்ஜ் செய்தால் அது தானாகவே டோல்கேட்டைக் கடக்கும்போது பணத்தைச் செலுத்திவிடும்.

புதிய டோல் கட்டணம் பற்றி டுவிட்டரில் பகீர் புகார் அளித்த இளைஞர்... என்ன ஜி இதுலயும் பல்பா..!

ஆகையால், இம்முறையின் மூலம் வாகனங்கள் டோல் கேட்டில் காத்திருக்க வேண்டிய அவலநிலை ஏற்படாது என கூறப்பட்டது. மேலும், கட்டண முறைகேட்டிலும் டோல் ஊழியர்களால் ஈடுபட முடியாது என சொல்லப்பட்டது.

இந்நிலையில், ஃபாஸ்ட் டேக் கட்டண முறைகுறித்த அதிர்ச்சி தகவல் ஒன்றை கர்நாடக இளைஞர் ஒருவர் புகாராக டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
KIA Commuters says, FASTags Haven’t Reduced Waiting Time. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X